Wednesday, March 23, 2011

விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி..!


நம்ம ஊருலங்க நிறைய புது போலீஸ்காரங்கள போட்டு இருக்காங்க, எல்லாரும் சின்ன சின்ன பசங்களா இருக்காங்க, டிஎஸ்பின்னு சொல்றாங்க அப்படின்னா தமிழ்நாடு ஸ்பெசல் போலீசாம், இவங்க அப்படி என்ன வேலை செய்றாங்கன்னா, ரோட்டுல காலையிலயும் சாயங்காலமும் அங்கங்க நின்னுகறாங்க, இல்லைன்னா எதாவது சிக்னல்ல நின்னு டிராபிக்க கிளியர் பண்ணுராங்க, அதுவும் இல்லைன்னா மொபைல காதுல வச்சு கடலை போட்டுட்டு இருக்காங்க, இப்ப அது இல்லைங்க மேட்டரு

இந்த ஸ்பெசல் போலீஸ்ல பொண்ணுங்களும் இருக்காங்க, பாதி பொண்ணுங்க ரொம்ப அழகாவே இருக்காங்க, இவங்களும் மத்த போலீசுக்காரங்க மாதிரியேதான் காலையில கொஞ்ச நேரம் மாலையில கொஞ்ச நேரம்முன்னு அங்கங்க பஸ் ஸ்டாப்புக்கு பஸ் ஸ்டாப்பு நின்னுகிட்டு போறாங்க, இவங்க எல்லாருக்கும் பர்டிகுலரா என்ன வேலைன்னு எனக்கு தெரியல, இந்த ரெண்டு போலீஸ்காரங்களும் மத்த நேரத்துல எங்க இருப்பாங்கன்னு எனக்கு தெரியாது

இப்ப என்ன பிரச்சனையின்னா இந்த லேடி போலீஸ்காரங்க இருக்காங்கள்ள பாவம்க சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்ட்டபடுவாங்க போலருக்கு, எலும்பு கூடு மாதிரி இருக்காங்க, சில பொண்ணுங்கள பார்த்தா எப்படித்தான் இவங்களை போலீஸ் வேலைக்கு செலக்ட் பண்ணாங்களோங்கற மாதிரி இருக்காங்க, இவங்க இப்படி ரொம்ப அப்பாவியா இருக்கறதால நம்ம ஆளுங்க இவங்கள போலீசாவே மதிக்க மாட்டேங்குறாங்க

அப்படித்தாங்க ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு கார்காரன் பஸ் ஸ்டாண்டுக்கு முன்னாடி கார நிறுத்திட்டு டிராபிக் ஜாப் பண்ணிட்டிருந்தான், அங்க இருந்த ஒரே ஒரு பெண் போலீஸ் போய் அவன்கிட்ட இங்க வண்டிய நிறுத்தாதீங்க, எடுங்க டிராபிக் ஜாம் ஆகுதுல்லன்னு சொன்னாங்க, அவன் வண்டிய எடுக்கவே மாட்டேனுட்டான், அதுவுமில்லாம, வண்டிய எடுக்க முடியாது என்ன பண்ணுவ, பண்றத பண்ணிக்கோ அப்படின்னு சொல்றான், அந்த பெண் போலீசும் அவன எவ்வளவோ எச்சரிக்கை பண்ணி பேசினாலும் அவன் கடைசி வரைக்கும் மதிக்கவே இல்லை, நான் என் வேலை முடிஞ்சாதான் வண்டிய எடுப்பேன்னு சொல்லி அதே மாதிரி அவன் வேலை முடிஞ்சதுக்கப்புறம்தான் வண்டிய எடுத்தான்.

அதே மாதிரி சிக்னல்ல நிக்குற பெண் போலீஸ் பாடும் அதே மாதிரிதான் இருக்கு, அவங்க நிக்க சொன்னா பாதி பேரு நிக்கவே மாட்டேங்குறாங்க, இன்னும் கொஞ்ச பேர் இருக்காங்க, அவங்க போக சொல்றதுக்கு முன்னாடியே கிளம்பற மாதிரி டுர்ரு டுர்ருன்னு கிளம்புறானுங்க, இதே ஆம்பிளை போலீசா இருந்தா பண்ண முடியுமா? ஒரு பயம் இருக்குமில்ல.

இன்னொரு ஸ்டாப்புல அழகான பெண் போலீஸ் ஒன்னு டிராபிக் கிளியர் பண்ணிட்டிருந்தது, பைக்ல வந்த பசங்க அந்த பெண் போலீச பார்த்து சைட்டடிச்சிட்டு இருந்தாங்க, அப்பப்ப கமெண்ட் வேற, கடைசியா அவங்கள கிளம்ப சொல்லி சிக்னல் கொடுத்தும் கிளம்பாம நின்னுகிட்டு இருக்கானுங்க, அவங்களும் வண்டிய எடுங்க போங்கன்னு சொன்னாங்க, இவனுங்க ஹி ஹி நாங்க அடுத்த சிக்னல் வரைக்கும் வெயிட் பண்ணிட்டு போறோம்னு சொல்ரானுங்க, இத வேடிக்கை பார்க்கிறவங்களுக்கு விளையாட்டா காமெடியா இருந்தாலும், அந்த பொண்ணோட நிலைமையை பார்த்தா  பரிதாபமா இருந்தது.

சாதாரண மத்த வேலையை காட்டிலும் போலீஸ் வேலைக்கு வரவங்களுக்கு கண்டிப்பா மனதைரியம் அதிகம் இருக்கனும், பாதி பொண்ணுங்க, எவனாவது சத்தமா பேசுனா பயந்துடரமாதிரிதான் இருக்காங்க, குடும்ப கஷ்ட்டத்துக்காகவும், எப்படியோ இந்த அரசாங்க வேலையாவது கிடைச்சதேன்னும்தான் பாதி பேரு போலீஸ் வேலையில சேர்ந்திருப்பாங்க போல, மத்தவங்க கிண்டல் பண்ணினா போலீஸ் கிட்ட சொல்லலாம், இங்க போலீசயே கிண்டல் பண்றானுங்க, அவங்க யாருகிட்ட சொல்லறது,

இதுக்கு என்ன பண்ணலாம்னா, இந்த டிஎஸ்பி போலீஸ் காரங்களோட ரெண்டு மூனு சீனியர் போலீஸ்காரங்களையும், கூடவே சில ஜெண்ட்ஸ் போலீஸ்காரஙக்ளையும் சேர்த்து சிக்னல்லயும், டிராபிக்லயும் விட்டா இந்த மாதிரி போலீச மதிக்காதவங்களை புடிச்சு மிதிக்கலாம், ஏற்கனவே எங்க ஊருல ஒருத்தனை அப்படித்தான் மிதிச்சாங்க.
அப்படியே அழகான பெண் போலீச லுக்கு விடறவங்க, சைட்டடிக்கறவங்க எல்லாருக்கும் ஒருதடவை மண்டகப்படி நடத்துனா அடுத்ததடவை பசங்க கொஞ்சம் யோசிப்பாங்க.

அப்படியே டிரைனிங்ல என்னத்த சொல்லி கொடுக்கறாங்களோ இல்லையோ, கொஞ்சம் நல்ல சாப்பாடா போட்டு உடம்ப வளர்த்துவிட்டாங்கன்னா பாதிபிரச்சனைய அவங்களே பார்த்துக்குவாங்க, பாதி பொண்ணுங்க எலும்பும் தோலுமா இருக்குது.

நீதி : நம்ம ஊருல புதுசா போட்டு இருக்குற பெண் போலீஸ் எல்லாம் அழகா இருக்காங்க, தெரியாம சைட் அடிச்சு மாட்டிக்காதீங்க! 

பொதுநலன் கருதி வெளியிடுவது நானேதான்...!


48 comments:

 1. /நம்ம ஊருல புதுசா போட்டு இருக்குற பெண் போலீஸ் எல்லாம் அழகா இருக்காங்க, தெரியாம சைட் அடிச்சு மாட்டிக்காதீங்க!//

  அனுபவஸ்தர் சொன்னா சரிதான். திருப்பூர் மகளிர் காவல் நிலையத்துல உங்கள தேடிக்கிட்டு இருக்காங்க.

  ReplyDelete
 2. //விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி..!//


  உங்கள மாதிரி சில பெரியவங்க அனுபவ அறிவோடு சொல்லும் போது கேட்டுக்கணும்...

  ReplyDelete
 3. உண்மையில் போலீசாக இருப்பது கொடுமையான விஷயம் தான். அதிலும் அடி மட்டத்தில் இருக்கக்கூடிய போலீசாரின் வாழ்க்கை நாய் பொழப்பு அப்படினு சொல்லுவாங்க.
  பெண் போலீஸ் என்றால் கேட்கவே வேணாம்.

  ReplyDelete
 4. நடைமுறையில் உள்ள போலீசுக்கும் உள்ள வேறுபாடுகள் அதிகம் தான்.ஒரு வேளை இந்த கடுப்பையெல்லாம் பொதுமக்கள் மீது காட்டுகிறார்களோ என்னவோ.

  ReplyDelete
 5. போலீசாரை களமாக கொண்ட இந்த பதிவுக்கு ஸ்பெஷல் பாரட்டுக்களும், வாழ்த்துக்களும்..
  சரியான அலசல்.

  ReplyDelete
 6. பாரத் பாரதி அடிவாங்கி இருப்பாரோ!
  உணமையிலேயே! பெண் போலீஸ் வேலை சிரமம்; ஆமாம்,சில சமயம் 'செல்போனை' மறந்து டூட்டி பார்க்க வேண்டியிருக்கு

  ReplyDelete
 7. 402 இந்த ஆள அரஸ் பண்ணுயா நம்ம டிப்பார்மென்ட் பத்தி கேவலமா எழுதி இருக்கிறாரு(ஹிஹிஹி...ஹிஹிஹி...)

  ReplyDelete
 8. நானும் சில பெண் போலீஸார் கஷ்டப்படுவதை பார்த்துள்ளேன். ஆனாலும் போலீஸா இருந்தா எனக்கென்னனு கிண்டல் செஞ்சிகிட்டுதான் இருக்காங்க!

  ReplyDelete
 9. ஒரு வேளை home guardச பார்த்து போலீசுன்னு நினைசுட்டீங்களோ ?

  ReplyDelete
 10. பெண் போலீஸ் மீது இவ்வளவு அக்கறை எடுத்துகிட்டு பதிவு போட்ட உங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. >>நீதி : நம்ம ஊருல புதுசா போட்டு இருக்குற பெண் போலீஸ் எல்லாம் அழகா இருக்காங்க, தெரியாம சைட் அடிச்சு மாட்டிக்காதீங்க!


  இதுவரைக்கும் தெரியாம இருந்தேன்.. நல்வழி காட்டிய நல்லவரே வாழ்க நீவிர்... ஹி ஹி

  ReplyDelete
 12. //

  கொஞ்சம் நல்ல சாப்பாடா போட்டு உடம்ப வளர்த்துவிட்டாங்கன்னா பாதிபிரச்சனைய அவங்களே பார்த்துக்குவாங்க, பாதி பொண்ணுங்க எலும்பும் தோலுமா இருக்குது.///

  கலைஞர் தேர்தல் வாக்குறுதியில இதையும் சேர்க்க சொல்லுங்கப்பா....பிள்ளை பொலம்புது......

  ReplyDelete
 13. உங்கள் பதிவு மிகவும் ரசிக்கும் படியாக இருக்கிறது. கொஞ்சம் நாட்களாக நானும் அதை கவனித்தேன். என்ன செய்வது? நம்ம ஊரில் மகளிர் தினத்திற்கும் கோலப்போட்டி தான் நடக்கிறது...

  ReplyDelete
 14. திடீர்னு பெண் போலிஸ் மேல .. அதுவும் அழகான பெண் பொலிஸ் மேல அக்கரை... எதுனா போலிஸ் பிகர் செட் ஆய்டுதா?

  ReplyDelete
 15. என்ன மாம்ஸ் யாருக்கு பயந்து டிஸ்கிய எடுத்தீங்க...?......:))

  ReplyDelete
 16. நீதி : நம்ம ஊருல புதுசா போட்டு இருக்குற பெண் போலீஸ் எல்லாம் அழகா இருக்காங்க, தெரியாம சைட் அடிச்சு மாட்டிக்காதீங்க! ///

  யோவ் மாம்ஸ் அதை நீங்க மொதல்ல கடைபிடிங்க....:))

  ReplyDelete
 17. /////நீதி : நம்ம ஊருல புதுசா போட்டு இருக்குற பெண் போலீஸ் எல்லாம் அழகா இருக்காங்க, தெரியாம சைட் அடிச்சு மாட்டிக்காதீங்க! ///////

  ஏண்ணே இதுல மாட்டுறதுக்கு என்னண்ணே இருக்கு?

  ReplyDelete
 18. சினேகா மாதிரி ஒரு போலீசு கெடச்சா ரெண்டு அடிகூட சேத்து வாங்கிக்கலாம்ணே........

  ReplyDelete
 19. /////////karthikkumar said...
  நீதி : நம்ம ஊருல புதுசா போட்டு இருக்குற பெண் போலீஸ் எல்லாம் அழகா இருக்காங்க, தெரியாம சைட் அடிச்சு மாட்டிக்காதீங்க! ///

  யோவ் மாம்ஸ் அதை நீங்க மொதல்ல கடைபிடிங்க....:))//////////

  என்ன போட்டிய குறைச்சுக்கலாம்னு பாக்குறீயா...?

  ReplyDelete
 20. போலீசுக்கே ஃபுல் மீல்ஸ் ஆர்டர் பண்ணுன நைட் வாழ்க!

  ReplyDelete
 21. // மத்தவங்க கிண்டல் பண்ணினா போலீஸ் கிட்ட சொல்லலாம், இங்க போலீசயே கிண்டல் பண்றானுங்க, அவங்க யாருகிட்ட சொல்லறது,//

  இது பழைய சிவாஜி பட டயலாக் மாதிரி இருக்கே.ஹி. ஹி..

  இருந்தாலும் நீங்க சொல்வதும் சரிதான்.

  ReplyDelete
 22. நண்பா நானும் அவுங்கள அப்பப்ப சைட் அடிச்சிருக்கேன் ,இனிமே சைட் அடிக்காம இருக்க முயற்சி பண்றேன்

  ReplyDelete
 23. @ பன்னிகுட்டி
  என்ன போட்டிய குறைச்சுக்கலாம்னு பாக்குறீயா...?////

  ஆத்து தண்ணிக்கு எதுக்கு மாம்ஸ் போட்டி எல்லாம்........:)) .........(சைடு கேப்புல நீங்களும் போட்டிய குறைச்சுக்கலாம்னு பாக்குறீங்களா )...:))

  ReplyDelete
 24. //அனுபவஸ்தர் சொன்னா சரிதான்.//

  - 100% Correct!!!!

  //திடீர்னு பெண் போலிஸ் மேல .. அதுவும் அழகான பெண் பொலிஸ் மேல அக்கரை... எதுனா போலிஸ் பிகர் செட் ஆய்டுதா?//--Best of Luck

  //கொஞ்சம் நல்ல சாப்பாடா போட்டு உடம்ப வளர்த்துவிட்டாங்கன்னா பாதிபிரச்சனைய அவங்களே பார்த்துக்குவாங்க, பாதி பொண்ணுங்க எலும்பும் தோலுமா இருக்குது.///

  கலைஞர் தேர்தல் வாக்குறுதியில இதையும் சேர்க்க சொல்லுங்கப்பா//
  //போலீசுக்கே ஃபுல் மீல்ஸ் ஆர்டர் பண்ணுன (SKY NIGHT) நைட் வாழ்க! - Therthal Vaakkuruthi & Kosam- Be careful!

  //என்ன போட்டிய குறைச்சுக்கலாம்னு பாக்குறீயா...? //--Too much Competetion

  //நண்பா நானும் அவுங்கள அப்பப்ப சைட் அடிச்சிருக்கேன் ,இனிமே சைட் அடிக்காம இருக்க முயற்சி பண்றேன்// - Vaakku Moolam.

  Pathivum Super!!!
  athukku Commentsum supero super!!!
  Chemistry workout ayiduchaa??????

  ReplyDelete
 25. ஆம்பள பொம்பளன்னு இல்லை. அடிமட்ட போலீஸ்காரர்களை தற்போது யாருமே மதிப்பதில்லை. கெடுத்துக்கொண்டு விட்டார்கள்.

  ReplyDelete
 26. நண்பா.. புதுசா வேலைக்கு சேர்ந்திருக்காங்கல்ல.. அப்படித்தான் இருக்கும்.. கொஞ்ச நாள்ல வெளுத்துவாங்க ஆரம்பிச்சிடுவாங்க.. எதுக்கும் கொஞ்சம் உஷாராக இருங்க..

  ReplyDelete
 27. @! சிவகுமார் !

  //அனுபவஸ்தர் சொன்னா சரிதான். திருப்பூர் மகளிர் காவல் நிலையத்துல உங்கள தேடிக்கிட்டு இருக்காங்க//

  அது பாராட்டுறதுக்கா இருக்கும் சிவா :-)

  ReplyDelete
 28. @பாரத்... பாரதி...

  //உங்கள மாதிரி சில பெரியவங்க அனுபவ அறிவோடு சொல்லும் போது கேட்டுக்கணும்//

  சந்து கேப்புல என்னை பெரியவனாக்கிட்டீங்களே பாரதி :-)
  சரி சரி லூஸ்ல விடுங்க,

  ReplyDelete
 29. @நையாண்டி மேளம்

  நீங்க வேற செல்போன் இல்லைன்னா சிலபேர் வேலைக்கே போறதில்லை :-)

  ReplyDelete
 30. @தமிழ் 007

  ஆமாங்கய்யா துணைக்கு இவரையும் சேர்த்து கூட்ட்டிட்டு வாங்கய்யா :-)

  ReplyDelete
 31. @எஸ்.கே

  கரக்டா சொன்னீங்க எஸ்.கே சார்

  ReplyDelete
 32. @ஆகாயமனிதன்..

  என்னங்க சார், ஹோம் கார்டுக்கும் போலீசுக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது, இது உண்மையிலுமே போலீச பத்தினதுதான்...

  ReplyDelete
 33. @தமிழ் உதயம்

  நன்றி தமிழ் உதயம் சார்...

  ReplyDelete
 34. @MANO நாஞ்சில் மனோ

  அதுதான் அரிசி ப்ரீயாமில்ல மனோ சார்

  ReplyDelete
 35. @வினோத்

  என்னயும் சேர்த்து உதை வாங்க வெக்காம போக மாட்டீங்க போல:-)

  ReplyDelete
 36. @karthikkumar
  என்ன மாம்ஸ் யாருக்கு பயந்து டிஸ்கிய எடுத்தீங்க...?......:

  ஹி ஹி என்ன பண்ரது மச்சி, அந்த பிரபல பதிவர் போன போட்டு கொலைமிரட்டல விடுறாரு, அதுக்கு பயந்துதான் டிஸ்கிய எடுத்தேன், என்ன பண்றது புகழ்ச்சி புடிக்காதாம்பா :-)

  ReplyDelete
 37. @karthikkumar
  யோவ் மாம்ஸ் அதை நீங்க மொதல்ல கடைபிடிங்க....:)

  இந்த கேள்விக்கு பன்னிக்குட்டி சார் பதில் சொல்லி இருக்கார் பாருங்க...

  ReplyDelete
 38. @பன்னிக்குட்டி ராம்சாமி
  ஏண்ணே இதுல மாட்டுறதுக்கு என்னண்ணே இருக்கு

  அதானே இதுல மாட்டுறதுக்கு என்ன இருக்கு, தெரியாம எழுதிட்டனோ??

  ReplyDelete
 39. @பன்னிக்குட்டி ராம்சாமி

  சினேகா மாதிரி ஒரு போலீசு கெடச்சா ரெண்டு அடிகூட சேத்து வாங்கிக்கலாம்ணே.

  சினேகா மாதிரி ஒரு போலீசு கெடச்சாவா? எதுக்குன்னே???

  ReplyDelete
 40. @செங்கோவி

  ஹி ஹி ரொம்ப தேங்ஸ்சு நண்பா

  ReplyDelete
 41. @நா.மணிவண்ணன்

  ஆமா நண்பா, பழக்க தோசத்துல சைட் அடிச்சி மாட்டி பிரிச்சுட்டாங்கன்னா என்ன பண்றது? கேர்புல்லா இருக்கனும் :-)

  ReplyDelete
 42. @karthikkumar

  ஆத்து தண்ணிக்கு எதுக்கு மாம்ஸ் போட்டி எல்லாம்........:)) .........(சைடு கேப்புல நீங்களும் போட்டிய குறைச்சுக்கலாம்னு பாக்குறீங்களா )...:)

  யோவ் போலீஸ்காரங்க உனக்கு ஆத்துதண்ணியா, மாட்டுன கிணத்துதண்ணி கூட கிடைக்காம பண்ணிருவாங்க

  ReplyDelete
 43. @Sai Gokula Krishna

  நண்பா உங்களுக்கு ஏன் இந்த கொல்வெறி? ஆளாலுக்கு ஓட்டறாங்கன்னா நீங்களுமா? சரி சரி விடுங்க, எப்படி இருக்கீங்க, அம்மா எப்படி இருக்காங்க?

  ReplyDelete
 44. @பாலா

  உண்மைதான் பாலா, அதுதான் ஏன் என்று தெரியவில்லை?

  ReplyDelete
 45. @பதிவுலகில் பாபு

  சொல்லிட்டீங்கல்ல பாபு, உசாராயிக்கிறேன் :-)))))))

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!