Wednesday, March 9, 2011

கமர்சியல் பக்கங்கள் - 09/03/2011


காங்கிரஸ் 63 சீட் கேட்குதுன்னும் அதுவும் அவங்க கேட்குற சீட்டே கொடுக்கனும்னும் சொல்லி டார்ச்சர் பண்றாங்கன்னும் கூட்டணியை விட்டு வெளியேற போறதா திமுக கட்சி தலைவர் சொன்னாரு, நான் கூட 63 சீட்ல நிக்க கூடவே ஆளும் வேணும்னு கேட்டாங்க போலன்னு நினைச்சுட்டு இருந்தேன், இப்ப பார்த்தா 63 சீட்டையே காங்கிரசுக்கு கொடுக்கறதா ஒத்துகிட்டு மறுபடியும் கூட்டணி வெச்சுகிட்டாங்க, அந்தளவு ஸ்பெக்ட்ரம்மால பாதிக்கப்பட்டுட்டாங்க போல, இரண்டு கட்சியோட தொண்டர்கள்தான் பாவம், கூட்டணி முறிஞ்சு போச்சுன்னு நினைச்சு பட்டாசெல்லாம் வெடிச்சு காச கரியாக்கிட்டாங்க, இப்ப அவங்கவங்க கட்சி தலைமை தொண்டர்கள் மூஞ்சில கரியப்பூசிட்டாங்க, இதயெல்லாம் பார்க்கும் போது மெளனம் பேசியதே படத்துல சூரியா ஒரு டயலாக் பேசுவாரு, ’’எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்புன்னு’’ அதுதான் ஞாபகத்துக்கு வருது :-))))

போன வருசம் சட்டசபைக்கு ஜெயலலிதா 50 நாளும் விஜயகாந்த் 10 நாள் மட்டும் வந்தாங்களாம், ஜனங்க இவங்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து அனுப்புறது மக்கள் பிரச்சனையை பேசவா இல்லை தங்களோட பிரச்சனைய பார்த்துக்கறதுக்கா? இவங்க ஜெயிச்சா அவரு உள்ள வரமாட்டாரு, அவங்க ஜெயிச்சா இவங்க உள்ள வரமாட்டாங்க, இப்படியே போனா எப்படிங்க? இந்த லட்சணத்துல அம்மா ஜெயிச்சா அய்யா கட்டுன சட்டசபைக்கு போக மாட்டாங்களாம், அப்ப அவ்வளவு பணம் போட்டு கட்டுன சட்டசபையை என்ன பண்ண போறாங்கன்னு தெரியல, ஸ்கூல் பசங்களுக்கு கூட குறிப்பிட்ட அளவுக்கு அட்டனன்ஸ் இல்லைன்னா தேர்வு எழுத முடியாதுங்கறாங்க, ஆனா இந்த அரசியல்வியாதிகள் மட்டும் சட்டசபைக்கே வரலைன்னாலும் அடுத்த தேர்தல்ல நிக்கிறாங்க, இது என்னங்க நியாயம், வளர்ற புள்ளைங்களை ரூல்ஸ் போட்டு கொல்லுங்க, நீங்க மட்டும் கொடநாடு ஏற்காடுன்னு போய் ரெஸ்ட் எடுங்க, கடுப்புக்ள கிளப்பிக்கிட்டு...
                                      
கேபிள் சங்கர் சார் கொத்து புரோட்டா பதிவில பார்த்தேன், அவரோட பதிவை காப்பி பண்ணி போட்டு இருக்கறதை பத்தி எழுதி இருந்தார், அதனால எனக்கு தெரிஞ்சதையும் சொல்லனும்னு நினைக்கிறேன், நானே எனக்கு தெரிஞ்சத ஏனோ தானோன்னு கிறுக்கிட்டு இருக்கேன், இதுவரைக்கும் பெரிசா ஹிட்சோ இல்லை பாப்புலரோ ஆனதில்லை, ஆனா என்னோட பதிவையும் காப்பி அடிச்சு ஒருத்தர் போட்டு இருக்காரு, நான் அவருக்கு மெயிலோ இல்லை பின்னூட்டமோ எதுவும் அனுப்பலை, எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் தாம்தூம்னு குதிச்சு என்ன பிரயோஜனம் ஆகப்போகுது,  
பதிவுதிருட்டை ஒழிக்க முடியாது, ஒரு தளத்துல இருந்து எடுத்து போடும்போது லிங்க் கொடுக்கலைன்னாலும் குறைந்தபட்சம் நன்றியாவது தெரிவிக்கலாமில்லையா? அவரோட தளத்துல நிறைய பதிவுகள் இருக்கு, உங்களோடது ஏதாச்சும் இருக்கான்னு செக் பண்ணி பார்த்துக்கோங்க..,

என்னுடைய ஒரிஜினல் பதிவு...

திருடப்பட்ட பதிவின் லிங்க்...

தலைப்ப மட்டும் மாத்தி இருக்காங்க, ஆனா பாருங்க எனக்கே தோணலை இப்படி ஒரு தலைப்பு வைக்கலாமான்னு :-))))))))



தானைதலைவர், பவர் ஸ்டார், டாக்டர் எல்.சீனிவாசன் அவர்களோட லத்திகா படம் ரிலீசுக்கு தயாராகிருச்சாம், வர்ற 18ம் தேதி ரிலீசாகுது, கோடம்பாக்கமே கதிகலங்க போகுது, அய்யோ டிக்கெட் கிடைக்குமான்னு தெரியலியே, என்ன ஆனாலும் சரி முதல் ஷோ கண்டிப்பா பார்த்துடனும, படத்த பத்தி மேலும் தெரிஞ்சுக்கணும்னா கீழ இருக்குற லிங்க்ல பார்த்துக்கோங்க

என்ன பார்த்துட்டீங்களா? சும்மா அதிருதுல்ல...

தமிழ் சினிமா ஸ்டார்களோட காமெடி

கமல் - எனக்கு பொண்ணுங்கனாலே புடிக்காது
ரஜினி - எனக்கு 20 வயசுதான் ஆகுது
பாக்கியராஜ் - நான் சூப்பரா டான்ஸ் ஆடுவேன்
தனுஷ் - நான் தமிழ்சினிமாவோட அர்னால்டு
ராஜ்கிரண் - எனக்கு ஜீன்ஸ்சுன்னா உயிரு
சூர்யா - என்னோட உயரம் 6.2
சிம்பு - நான் ஒரே ஒரு பொண்ணைத்தான் காதலிக்கிறேன்
விஷால் - நான் பொறக்கும் போதே வெள்ளைதான்

கடைசியாக

விஜய் - டேய் எங்க அம்மா சத்தியமா நான் நடிகண்டா

நன்றி - இந்த ஜோக்க அனுப்புனது நம்ம மெட்ராஸ்பவன் சிவக்குமார்

கவிதை

வெட்கப்பட தெரியுமா
என் கேள்விக்கு
வெட்கத்தைப் பதிலாக
தரும் உன்னிடம்
ஈர உதடுகளை 
ஈரப்படுத்திக் கொண்டு
கேட்கத் துடிக்கிறேன்
முத்தமிடத் தெரியுமா?

நன்றி - ரமேஷ்
                                       

இந்த வீடியோவை பாருங்க, நானும் விஜய் டிவி, கலைஞர் டிவின்னு நிறைய மானாட மயிலாட பாத்திருக்கேன், அதுல கோரியோகிராபி, கோரியோகிராபின்னு பறந்து பறந்து விழுகறது, அழுகறதுன்னு காமிப்பாங்க, ஆனா இந்த மாதிரி ஒரு கோரியோகிராபியை பார்த்ததில்லை, ரொம்ப அருமையா பண்ணி இருக்காங்க, எத்தனை நாள் பிராக்டிஸ் பண்ணி இருப்பாங்கன்னு தெரியல, அவங்களோட உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட்..



அன்புடன்
இரவுவானம்


31 comments:

  1. பதிவு திருட்டு தினமும் நடந்துக்கொண்டுத்தான் இருக்கிறது ஒன்னும் செய்யமுடியாது

    ReplyDelete
  2. இன்று பட்டியலிட்ட அனைத்து விஷயங்களும் சுவாரஸ்யமாக இருக்கிறது . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. /////
    வெட்கப்பட தெரியுமா
    என் கேள்விக்கு
    வெட்கத்தைப் பதிலாக
    தரும் உன்னிடம்
    ஈர உதடுகளை
    ஈரப்படுத்திக் கொண்டு
    கேட்கத் துடிக்கிறேன்
    முத்தமிடத் தெரியுமா?////



    இதற்கு நீங்க முத்தத்தையே நேரடியா கேட்டிருக்கலாம்..

    ReplyDelete
  4. இன்றை தொகுப்பும் அருமை..

    ReplyDelete
  5. வருகை பதிவு..

    ReplyDelete
  6. நண்பா அந்த வீடியோ கிராபிக்ஸ்ஸா இருக்குமோ


    //வெட்கப்பட தெரியுமா
    என் கேள்விக்கு
    வெட்கத்தைப் பதிலாக
    தரும் உன்னிடம்
    ஈர உதடுகளை
    ஈரப்படுத்திக் கொண்டு
    கேட்கத் துடிக்கிறேன்
    முத்தமிடத் தெரியுமா//

    அதலாம் கேக்ககூடாதுங்க ........செய்.........னும்

    ReplyDelete
  7. பதிவு திருட்டு கட்டாயம் கண்டிக்க வேண்டிய விஷயம்..குறைந்த பட்சம் ஒரு நன்றி சொல்வதில் என்ன குறைந்து விட போகிறது.

    ReplyDelete
  8. சட்டமன்றத்திலும் வருகைப்பதிவு உண்டு, அதன் அடிப்படையிலும் பதவி நீக்கம் செய்யமுடியும். ஜெயலலிதா அனுதாபம் பெற்று விடுவார் என்னும் அரசியல் காரணங்கள் தி.மு.க. அரசு செய்யவில்லை.

    ReplyDelete
  9. பதிவு திருட்டு இப்போதெல்லாம் சாதாரணம் ஆகிருச்சு...

    எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
    கலைஞரின் ராஜினாமா நாடகமும், அழகிரியின் மனசாட்சியும்

    ReplyDelete
  10. ஊழலையும் அரசியல்வாதிகளையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதே போல் பதிவையும், பதிவுலக திருட்டையும் பிரிக்க முடியாது போலும்.

    ReplyDelete
  11. கவிதை, நகைச்சுவை, பதிவ திருட்டு நல்ல கமர்சியலாத் தான் போட்டிருக்கீங்க..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

    ReplyDelete
  12. @ வேடந்தாங்கல் - கருன்

    நன்றி கருன் சார்

    @ THOPPITHOPPI

    உண்மைதான் நண்பா, அதனால்தான் நானும் விட்டுவிட்டேன் :-)

    @ # கவிதை வீதி # சௌந்தர்

    அது என்னுடைய கவிதை இல்லை செளந்தர் சார், எங்கோ படித்தது, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

    @ பாரத்... பாரதி..

    நன்றி பாரதி சார், நீங்கள் கூறிய தகவல்கள் எனக்கு புதிது, நன்றி சார்..

    ReplyDelete
  13. @ நா.மணிவண்ணன்

    அது கிராபிக்ஸ் போல தெரியவில்லையே நண்பா, உண்மையாகத்தான் இருக்கும் என நினைக்கிரேன்

    @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

    நன்றி போலீஸ் சார்

    @ ரஹீம் கஸாலி

    நன்றி நண்பாஅ

    @ தமிழ் உதயம்

    உண்மைதான் தமிழ் உதயம் சார், குறைந்தபட்சம் ஒரு சிறிய நன்றியாவது தெரிவிக்கலாம் இல்லையா, அதைகூட செய்வதில்லை சார்...

    @ ♔ம.தி.சுதா♔

    நன்றி சார்

    ReplyDelete
  14. //இதுவரைக்கும் பெரிசா ஹிட்சோ இல்லை பாப்புலரோ ஆனதில்லை, ஆனா என்னோட பதிவையும் காப்பி அடிச்சு ஒருத்தர் போட்டு இருக்காரு,//

    ஆங்கிலத்துலே சொல்லுவாங்க: Imitation is the best way of flattery.
    உங்க பதிவைக் காப்பியடிச்ச புண்ணியவான், உங்களை மறைமுகமா ஒரு படி தூக்கி விட அவரால் ஆன உதவியைப் பண்ணியிருக்காரு! டேக் இட் ஈஸி! :-)

    ReplyDelete
  15. பதிவு எப்போதும் போல சூப்பர்
    சில வலைதளத்தில் பாத்திருக்கிறேன் காப்ப்பியடிக்க முடியாதபடி செய்வதற்கான வழிமுறைகளை நீங்களும் இணைத்துக் கொள்ளுங்கள்,

    ReplyDelete
  16. That video is simply superb. Thank you for sharing it.

    ReplyDelete
  17. ஹை.. அது என்னோட கவிதை.. எங்கே இருந்து எடுத்தீங்கன்னு நீங்க சொல்லி இருக்கணும், இல்லையா? :)

    ReplyDelete
  18. Here you go!!

    http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_22.html

    ReplyDelete
  19. கலக்கல்..பதிவுத் திருட்டா..அப்போ பிரபலம் ஆகிட்டீங்கன்னு சொல்லுங்க!

    ReplyDelete
  20. @ சேட்டைக்காரன்

    நான் பெரிதாக எதுவும் நினைக்கவில்லை சார், கேபிள் சார் பதிவ பார்த்தவுடன் சொல்லனும்னு தோணுச்சு அதான், கருத்துக்கு நன்றி சார்

    ReplyDelete
  21. @ thirumathi bs sridhar

    அப்படி செய்வதால் சில அசெளகரியங்களும் இருக்கிறது மேடம், அதற்குமேல் நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா என்ன?

    ReplyDelete
  22. @ சி.பி.செந்தில்குமார்

    விட்டுட்டேன் தல :-)

    ReplyDelete
  23. @ Chitra

    நன்றி சித்ரா மேடம்

    ReplyDelete
  24. @ கணேஷ்

    கணேஷ் சார், எனக்கு ஒரு பழக்கம் உண்டு, நான் படிக்கும்போது பிடிக்கும் கவிதைகள், கட்டுரைகளில் எனக்கு பிடித்தமானவைகளை குறிப்பு எடுத்து வைத்து கொள்வதுண்டு, நீங்கள் கூறிய கவிதையை நான் பதிவுலகிற்கு வராத போது ஏதோ ஒரு தளத்தில் படித்திருக்கிறேன், ஆனால் கண்டிப்பாக உங்களது தளத்தில் இல்லை, ஆனால் அதனை எழுதியவர் பெயர் ரமேஷ் என்றுதான் போட்டு இருந்தது, அதனால் ரமேஷ்க்கு நன்றி என்று போட்டு உள்ளேன், எனக்கு ஞாபகம் இருந்தால் கண்டிப்பாக தளத்தின் பெயரை போட்டு இருப்பேன், அதற்கு மேல் உள்ள ஜோக் கூட எனக்கு எஸ்.எம்.எஸ்ஸாக வந்ததுதான், அத்ற்கும் நன்றி என போட்டு உள்ளேன், நீங்கள் கூறியபடி பார்த்தால் இந்த கவிதைக்கு யார் உரிமையாளர் என தெரியவில்லை, எதற்கும் கூகிளில் சர்ச் பண்ணி பார்க்கிறேன், கண்டுபிடித்தவுடன் உங்களுக்கு தெரிவிக்கிறேன், நான் இந்த கமர்சியல் பக்கங்கள் ஆரம்பித்ததே எனக்கு வந்த எஸ்.எம்.எஸ் களையும் ஜோக்குகளையும், கவிதைகளையும் பகிர்ந்து கொள்ளத்தான், அதை பற்றி முன்பே எழுதி உள்ளேன், என்னுடைய பிற கமர்சியல் பக்கங்களையும் படித்து பாருங்கள், உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி, புரிதலுக்கும் நன்றிகள் :-)))

    ReplyDelete
  25. @ செங்கோவி

    பிரபலமா? ஆளைவிடுங்க சாமி :-)

    ReplyDelete
  26. எல்லா ஐட்டங்களையும் மிக்சு பண்ணி ஒரு மசாலா படமே போட்டுகாட்டிடீங்க.. சூப்பர்யா..
    விஜய் காமெடி சூப்பர். ஆனா விஜய பத்தி இது போதாது இன்னும் எதிர்பாக்குரம்.
    :அஷ்வின் அரங்கம்:
    ஆண் விடுதலை வேண்டும்- சீரியஸ் பாஸ்

    ReplyDelete
  27. பாஸ், ஃப்ரீயா விடுங்க.. கூகிள்ல ஸர்ச் பண்ணி யாரு எழுதுனதுன்னு கண்டுபிடிக்கிறதுக்கு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  28. @ Ashwin-WIN

    நன்றி அஸ்வின் சார்

    @ கணேஷ்

    புரிதலுக்கு நன்றி கனேஷ், நீங்களும் பிரியா இருந்தா சர்ச் பண்ணி பாருங்க, உங்க கவிதை இன்னும் எங்க எல்லாம் இருக்குதோ :-))

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!