Friday, March 25, 2011

அரசியல் கமர்சியல் பக்கங்கள் - 25/03/2011


எலக்சன் வரதுக்குள்ள வாக்காளர் பட்டியல்ல உங்க பேரு இருக்குதான்னு எல்லாரும் செக் பண்ணிக்கோங்க, நம்ம திரட்டியில ஓட்டு போடாட்டியும் பரவாயில்லை, கண்டிப்பா எலக்சன்ல ஓட்டு போட்டுட்டுங்க, ஏன்னா மறுபடியும் அஞ்சு வருசம் கழிச்சுதான் இந்த மாதிரி கூத்தெல்லாம் பார்க்க முடியும், அரசாங்கமும் உங்களோட ஜனநாயக கடமையை நீங்க தவறாம நிறைவேத்தனும்னுதான் லீவெல்லாம் கொடுக்கறாங்க, ஒரு மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை, ஒருநாள் லீவு கிடைக்குதேன்னு சரக்கடிக்கற பரவசத்துல ஓட்டு போடறதை மறந்துறாதீங்க, ஓட்டு போட்டுட்டு அப்புறம் போய் சரக்கடிங்க. 


இந்த லிங்கிலயும் செக் பண்ணி பார்க்கலாம், என்ன பாண்ட் சேர்க்க வேண்டி வரும், போன எலக்சன்ல பணம் வாங்கிட்டு ஓட்டு போடாதீங்கன்னு சத்தியாகிரக அமைப்பினர் மக்களோட கால்ல விழுந்து கேட்டுட்டு இருந்தாங்க, இந்த வருசம் அவங்க சத்தியமா அத செய்யக்கூடாதுன்னு நான் விரும்பறேன், பாவம் மக்கள், இருக்கற பாவத்தோட இன்னொரு பாவத்த ஏன் சேர்க்கிறீங்க? உங்க நல்லெண்ணத்துக்கும், சேவைக்கும் என்னோட நன்றி கலந்த வணக்கங்கள்.


திமுக தேர்தல் அறிக்கையில மிக்சி அல்லது கிரைண்டர் எல்லாம் கொடுக்கறாங்களாம், இப்ப அதுக்கு போட்டியா அதிமுகாவும் மிக்சி, கிரைண்டர், பேன் எல்லாமும் கொடுக்கறாங்களாம், இப்படியே எல்லாத்தையும் கொடுத்தா அடுத்த எலக்சனுக்கு கொடுக்கறதுக்கு என்ன இருக்க போகுது, இன்னும் வாசிங் மெசினும், பிரிட்ஜும்தான் பாக்கி இருக்கு, எலக்சனுக்குள்ள அதையும் கொடுக்கறேன்னு சொல்லிட்டா புண்ணியமா போகும், அப்படியே செல்போனும் கூடவே இரண்டு சிம்கார்டும், இரண்டு நம்பருக்கு சியூஜி பண்ணி மெரினா பிச்சுல இருக்கற ஜோடிகளுக்கு எல்லாம் ஒன்னொன்னு கொடுத்தீங்கன்னா லவ்வர்ஸ் ஓட்டு உங்களுக்கு கன்பர்ம், லவ் பண்ணாத பொண்டு புள்ளக யாரு இருக்கா?

அதே மாதிரிதான் டாஸ்மாக்குல ரேசன் கார்டுக்கு மாசம் 30 பாட்டில் சரக்கு இலவசம்னு சொல்லிட்டீங்கன்னா போதும் கண்டிப்பா மெஜாரிட்டி கிடைச்சிரும், அரிசி மட்டும்தான் 15 கிலோ, 30 கிலோன்னு கொடுப்பீங்களா?

யாரு ஜெயிச்சா என்னங்க, மிக்சி, கிரைண்டரு கன்பர்ம், என்ன கிரைண்டர் ஆட்டும் போதும், மிக்சி ஆட்டும் போதும், இல்லைன்னா பேன் போடும் போதும், தமிழக அரசு சிம்பலோட சுத்தும், அதுதான் ஒருமாதிரியா இருக்கும், சரி என்ன பண்றது, ஓசின்னு வந்துட்டா இதயெல்லாம் பார்க்க முடியுமா?


திக வீரமணி சாரு வைகோவ இங்க வாங்க இங்க வாங்கன்னு கூப்பிடறாராம்!
பாவம்க புரட்சிபுயல் வைகோ, அம்மா வச்ச ஆப்புல ஏற்கனவே அவரு நொந்து நூடுல்ஸ் ஆகி கிடக்காரு, மறுபடியும் மறுபடியும் போய் இங்க வாங்க, எங்களுக்கு ஆதரவு குடுங்க, இவங்களுக்கு ஆதரவு குடுங்கன்னு டார்ச்சர் பண்ணிகிட்டு, அதான் ரெண்டு கூட்டணிலயும் தொகுதி பங்கீடு முடிஞ்சிருச்சுல்ல, அப்புறம் எதுக்கு அறிக்கை விட்டு கூப்பிட்டுட்டு இருக்கீங்க, இதயத்துல இடம் கொடுக்கவா? கடுப்புகள கிளப்பிகிட்டு!


நம்ம உணவுத்துறை அமைச்சர் வேலுவோட சொத்து மதிப்பு போன எலக்சன்ல ஒரு லட்ச ரூவாயாம், ஆனா இப்ப மூணரை கோடி ரூபாக்கு பக்கமா இருக்குதாம்,கிட்டத்தட்ட 780 மடங்கு ஜாஸ்தியாகிருச்சாம், தலைவரு அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி பால் வியாபாரியா இருந்தவராம், அதனாலதான் என்னவோ பழக்கதோசத்துல மக்களோட பணத்தயும் கறந்துட்டாரு போல :-)

எலக்சன் வந்தாலும் வந்தது, எந்த டிவிய பார்த்தாலும், எந்த பேப்பர பார்த்தாலும், எந்த பிளாக்க பார்த்தாலும் ஒரே எலக்சன் நியூஸ்தான், அவங்கவங்க அவங்களோட கருத்துக்களை எல்லாம் பகிர்ந்துக்கறாங்க, எல்லார் மனசிலயும் ஒரு ஆதங்கம், இந்த தடவையாவது மாற்றம் வராதான்னு, நல்லது நடக்காதான்னு, இங்க நம்ம நாட்டோட இளைஞர்கள் அவங்க கருத்துக்கள சொல்றாங்க, என்னன்னு நீங்களும் கொஞ்சம் கேளுங்களேன்...மச்சி நீ கேளேன்.




சும்மா சட்டசபைய மட்டும் என் ஜினியரிங் காலேஜ், மெடிக்கல் காலேஜ் மாதிரி ஜிகுஜிகுன்னு கட்டி வச்சா மட்டும் போதுமா? உள்ள இருக்கறவங்க எல்லாம் கிழடுகட்டைகளா வயசானவங்களா இருந்தா எப்படி? இந்த மாதிரி பசங்க எல்லாம் அரசியலுக்கு வரணும் சார், எனக்கும் ஆசைதான், ஆனா முதல்வன் படத்துல வர மாதிரி ஓட விட்டு பெட்ரோல் ஊத்திடுவாங்களோன்னு பயமா இருக்குது:-)))

மாற்றம் ஒன்றே மாறாததுன்னு சொல்றாங்க, பண பலம், படைபலம் இப்படி சகல சவுபாக்கியங்களோட இருக்குற இப்ப இருக்குற அரசியல்வியாதிகள எதிர்த்து என்ன சார் பண்ண முடியும், நடக்கும் ஒருநாள் இல்லைன்னா ஒருநாள் நல்லது நடக்கும், நம்பிக்கைதான் வாழ்க்கைன்னு வாழ வேண்டியதுதான் போல, ஒவ்வொரு மாற்றமும் மெதுவாவே நிகழுது..!


இந்த வாரம் முழுக்க கொஞ்சம் வேலை பிசி, கோயம்புத்தூருக்கும், திருப்பூருக்கும் அலைஞ்சிட்டு இருக்கேன், அதனால நண்பர்கள் பிளாக்குக்கு வரமுடியல, முந்தாநாள் டிராப்ட்ல இருந்த பதிவு ஒன்ன போட்டு அதுக்கு வந்த கமெண்டுக்கு கூட ரிப்ளை பண்ண முடியல, மன்னிக்கவும்.
நாளைக்கு சென்னை போறேன், திரும்பிவர 4 நாள் ஆகும், அதனால மறுபடியும் 4 நாளைக்கு நம்ம கடை லீவு, மறுபடியும் மீண்டும் சந்திப்போம், நன்றி..!

அன்புடன்
இரவுவானம்



34 comments:

  1. யாரு ஜெயிச்சா என்னங்க, மிக்சி, கிரைண்டரு கன்பர்ம், என்ன கிரைண்டர் ஆட்டும் போதும், மிக்சி ஆட்டும் போதும், இல்லைன்னா பேன் போடும் போதும், தமிழக அரசு சிம்பலோட சுத்தும்//
    இந்த கொடுமை வேறயா

    ReplyDelete
  2. இந்த வாரம் முழுக்க கொஞ்சம் வேலை பிசி, கோயம்புத்தூருக்கும், திருப்பூருக்கும் அலைஞ்சிட்டு இருக்கேன்,// ..ஈரோடு வந்தா சொல்லுங்க..சந்திப்போம்

    ReplyDelete
  3. கலக்கல் பக்கங்கள் நன்றி

    ReplyDelete
  4. நண்பா லவர் செட்டாகாதவுங்களுக்கு ஏதாவுது இலவசம் குடுத்த நல்லா இருக்கும் ,ம்ம்ம்ம் அதலாம் குடுக்க மாட்டானுங்க ,

    ReplyDelete
  5. போங்க போயி பிள்ளை குட்டிங்களை படிக்க வையுங்க....

    ReplyDelete
  6. //அதே மாதிரிதான் டாஸ்மாக்குல ரேசன் கார்டுக்கு மாசம் 30 பாட்டில் சரக்கு இலவசம்னு சொல்லிட்டீங்கன்னா போதும் கண்டிப்பா மெஜாரிட்டி கிடைச்சிரும், அரிசி மட்டும்தான் 15 கிலோ, 30 கிலோன்னு கொடுப்பீங்களா?// நச்-னு கேட்டீங்க.

    ReplyDelete
  7. @ஆர்.கே.சதீஷ்குமார்

    வெறும் சிம்பலோட விட்டாங்கன்னா பரவாயில்லை சதீஷ் சார், ஒருவேளை கலைஞர் படமோ புரட்சிதலைவி படமோ போட்டாங்கன்னு வைங்க, அப்புறம் தூங்கலாமான்னு படுத்து விட்டத்தை பார்த்தா சுத்தற பேனுல இவங்க முகத்த பார்த்தா தூக்கம் வருமா?

    ReplyDelete
  8. @ஆர்.கே.சதீஷ்குமார்

    / ..ஈரோடு வந்தா சொல்லுங்க..சந்திப்போம்//

    கண்டிப்பா சார்...

    ReplyDelete
  9. @நா.மணிவண்ணன்

    நண்பா இன்னுமா பீல் பண்ணிட்டு சட்டுபுட்டுன்னு ஏதாவது கரக்ட் பண்ணுங்க

    ReplyDelete
  10. @MANO நாஞ்சில் மனோ

    யாரோட புள்ள குட்டிகள மனோ சார் :-)

    ReplyDelete
  11. @செங்கோவி

    ஆமா நண்பா, சும்மா அரிசியும் பருப்பும் கொடுப்பேன்னு மட்டும் சொல்லிட்டிருந்தா போதுமா? இப்ப மக்களோட அடிப்படை தேவையில முக்கியா இருக்கறதே டாஸ்மாக்தானே...

    ReplyDelete
  12. என்னங்க அரசியல் பதிவுகளை நீங்களும் தொடங்கிட்டீங்க? விடியோக்கள் அருமை.

    ReplyDelete
  13. அதே மாதிரிதான் டாஸ்மாக்குல ரேசன் கார்டுக்கு மாசம் 30 பாட்டில் சரக்கு இலவசம்னு சொல்லிட்டீங்கன்னா போதும் கண்டிப்பா மெஜாரிட்டி கிடைச்சிரும்,


    ......இது ஒண்ணுதான் இன்னும் நடக்கல. நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. :-(

    ReplyDelete
  14. //அதே மாதிரிதான் டாஸ்மாக்குல ரேசன் கார்டுக்கு மாசம் 30 பாட்டில் சரக்கு இலவசம்னு சொல்லிட்டீங்கன்னா போதும் கண்டிப்பா மெஜாரிட்டி கிடைச்சிரும்,
    // போகின்ற போக்கைப்பார்த்தால் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் இதுதான் கண்டிப்பா சொல்லுவார்கள்

    ReplyDelete
  15. That video about Indian youth and politics is an eye-opener.

    ReplyDelete
  16. கார்டூன் சூப்பர்! video வும் நல்லா இருக்கு!

    ReplyDelete
  17. இப்படியே எல்லாத்தையும் கொடுத்தா அடுத்த எலக்சனுக்கு கொடுக்கறதுக்கு என்ன இருக்க போகுது, இன்னும் வாசிங் மெசினும், பிரிட்ஜும்தான் பாக்கி இருக்கு//

    என்னங்க இப்படி சொல்லிட்டீங்க..... கக்கூஸ் கழுவ ப்ளீச்சிங் பவுடர், தியேட்டர் இடைவேளையில் சாப்பிட இலவச பாப்கார்ன்..எவ்ளோ இருக்கு.

    ReplyDelete
  18. அதே மாதிரிதான் டாஸ்மாக்குல ரேசன் கார்டுக்கு மாசம் 30 பாட்டில் சரக்கு இலவசம்னு சொல்லிட்டீங்கன்னா போதும் கண்டிப்பா மெஜாரிட்டி கிடைச்சிரும், ///
    உங்க கவலை உங்களுக்கு ஹ்ம்ம் ....:))

    ReplyDelete
  19. @ சுரேஷ் // மாம்ஸ் எந்த நேரத்துலயா நீங்க சாட் MSG அனுப்பிசீங்க..?... அப்போ ஒரு விபத்துல அடிபட்டு ரேவதி HOSPITALLA இருந்தேன்... எல்லாம் உங்களால்தான்.. எங்க ஏரியா சைடு வருவீங்கல்ல .. வாங்க உங்களுக்கு இருக்கு.... :))

    ReplyDelete
  20. உங்களவிற்கு அரசியல்வாதிகளுக்கு யோசிக்கத் தெரியல,எவ்வளவு புதுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கீங்க,மிக ரசித்தேன்.

    ReplyDelete
  21. @Chitra

    உண்மைதான் சித்ரா மேடம், கருத்துக்கு நன்றி...

    ReplyDelete
  22. @ஸாதிகா

    கண்டிப்பாக சொல்லுவார்கள் மேடம்...

    ReplyDelete
  23. @! சிவகுமார் !

    அதெல்லாம் விலை கம்மிங்க, ஜனங்களே வாங்கிக்குவாங்க, விலை ஜாஸ்தியா இருந்தாதான் கெத்தா இருக்கும் :-)

    ReplyDelete
  24. @karthikkumar

    ஏன் மச்சி உனக்கு கவலை இல்லையா? இந்த மாதிரி லொள்ளு பேசித்தான் அடிபட்டு கிடக்கற, திருந்த மாட்டியா நீ?

    ReplyDelete
  25. @thirumathi bs sridhar

    இதுக்கு பேரு திட்டங்கள்னு நினைச்சிட்டீங்களா? சரிதான் போங்க, இதயெல்லாம் திட்டமா அறிவிச்சாங்கன்னா ஜனங்க கொந்தளிச்சிருவாங்க :-))))

    ReplyDelete
  26. புதுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கீங்க,மிக ரசித்தேன்.

    ReplyDelete
  27. @ MALATHI IN SINTHANAIKAL

    நன்றி மாலதி மேடம்...

    ReplyDelete
  28. அண்ணன் அரசியல் பக்கம் போய்ட்டாரே

    ReplyDelete
  29. அப்புறம் பவர்ஸ்டாரை பாத்தீங்களா.....?

    ReplyDelete
  30. @ சி.பி.செந்தில்குமார்

    ஹி ஹி ஹி எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான் தல

    ReplyDelete
  31. @ பன்னிக்குட்டி ராம்சாமி

    என்ன சார் இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க, அவரு என்ன சாதாரண ஆளா? அவர பார்க்குறதுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவே ஆறுமாசம் ஆகுமாம்:-) அப்புறம் எங்க பாக்குறது?

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!