முதலில் இந்த மாபெரும் கலைகாவியத்தை படைத்து சமர்பித்த எங்கள் அண்ணன் பவர் ஸ்டார் என்கிற யூத் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து தொடங்குகிறேன்.
அடுத்தபடியாக 6 மணிக்கு போட வேண்டிய திரைப்படத்தை 6.30 மணி வரை காத்திருந்தும் யாரும் வராததால் தியேட்டரில் கூடி குழுமியிருந்த 6 பேருக்காக (அதில் நானும் ஒருவன்) திரையிட்ட நடராஜ் தியேட்டர் உரிமையாளருக்கு மிகவும் நன்றி, ஒருவேளை படம் போடாமல் அனுப்பிவிடுவார்களோ அண்ணனை தரிசிக்க முடியாதோ என்று நான் தவித்த தவிப்பு எனக்குதான் தெரியும், இருந்தாலும் முதல்வகுப்பில் நான் ஒருவன் மட்டும் தனியே உட்கார்ந்து இருக்க பயமாகத்தான் இருந்த்து, நல்லவேளை படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் தியேட்டரில் டிக்கட் கிழிப்பவரும் வந்து அமர்ந்தார், ஆனால் சிறிது நேரத்திலேயே ஓடி விட்டார், மீண்டும் தனியனானேன், சரி படத்திற்கு போவோம்.
ஒருவழியாக 6 மணி படத்தை 6.30க்கு ஆரம்பித்தார்கள், முதலிம் கியூப் டிஜிட்டல் சினிமா – என்சாய் தி எக்ஸ்பீரியன்ஸ் சிலைடு போட்டார்கள், என்சாய் தி எக்ஸ்பீரியன்சா அந்த கருமத்துக்குதானே வந்திரிக்கிறோம், சீக்கிரம் படத்தை போடுங்கப்பா, முதலில் விடுதலை சிறுத்தைகள் தொல். திருமாவளவனுக்கு நன்றி என காட்டினார்கள், சரி தலைவரோட தலைவராச்சேன்னு நினைத்து கொண்டேன், அடுத்து அய்யன் திருவள்ளுவருக்கு நன்றின்னு போட்டாங்க, இது என்ன அதிசயம், திருவள்ளுவர் கூட நடிச்சிருக்காரா? மனதில் ஆச்சரியம் தொற்றிக் கொண்டது, இருக்காது ஒருவேளை அது நம்ம பவர் ஸ்டாரா இருக்கும் என்று மனதை தேற்றிக் கொண்டேன்.
துப்பாகியிலிருந்து குண்டுகள் சிறீ பாய்ந்து லத்திகா என டைட்டில் கார்டு போட்டனர், அதே துப்பாக்கி குண்டுகளால் பவர் ஸ்டார் பெயரும் திரையிடபட்டது, பிறகு எழுத்து போட ஆரம்பித்தார்கள், கருப்பு டிரஸ் அணிந்த ஒர் உருவம் கட்டி கொண்டிருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தின் படிகளில் ஏறி கொண்டிருப்பதை போல காண்பித்து எழுத்து போட்டு கொண்டிருந்தார்கள், பயங்கர திகில் இசையோடு அந்த உருவம் சுமார் 10 நிமிடம் ஏறி கொண்டிருந்தது,
எழுத்து போட்டு முடியும் போது மொட்டைமாடி வரை ஏறிவிட்டது, எழுத்து போட்டு முடிந்தவுடன் இறங்கிவிட்டது, அடுத்த சீன் அதே கருப்பு உடை அணிந்தவன் ஒரு காட்டுக்குள் நடந்து போய் கொண்டிருந்தான், அதே பயங்கர பேக்கிரவுண்ட் மியூசிக், மீண்டும் பத்து நிமிடம் நடந்து நடந்து..............................................நடந்து போய் கொண்டிருந்தான், பிறகு ஒருவழியாக ஒருவனிடம் துப்பாக்கி வாங்கி, அதே துப்பாக்கியால் அவனை சுட்டு கொல்கிறான்,
அடுத்த சீன் கதாநாயகி இரவில் படுத்து தூங்கி கொண்டிருக்கிறாள், நடுராத்திரி வீட்டு கதவு தட்டப்படுகிறது, இந்நேரத்தில் யார் கதவை தட்டுகிறார்கள், என்ற பயத்தோடு ஒவ்வொரு படியாக கீழே இறங்கி இறங்கி இறங்கி......................................................... இறங்கி ஒரு பத்து நிமிடம் இறங்கி வந்து மிகுந்த பயத்தோடு கதவை திறந்து பார்க்கிறாள், வெளியே யாருமில்லை, ஆனால் ஒரு உருவம் அவளுக்கு தெரியாமல் வீட்டுக்குள்ளே நுழைகிறது.
யாருமே காணாத்தால் கதாநாயகி உள்ளே நுழைந்து கதவை தாளிட்டு விட்டு செல்கிறாள், பின்னால் இருந்து ஒரு கை அவளை திருப்பி சுழற்றி விடுகிறது, கதாநாயகி ஒரு பத்து நிமிடம் சுத்தி சுத்தி சுத்தி ........................ சுத்தி கீழே விழப்போகிறாள், அப்பொழுது ஒரு முரட்டுகரம் அவள் இடுப்பை சுற்றி வளைத்து கீழே விழாமல் தாங்கி பிடிக்கிறது, அது யாரென பார்த்தால் அகில உலக சூப்பர்ஸ்டார், வைஸ்கேப்டன், புதியதளபதி, பவர்ஸ்டார், யூத்ஸ்டார், டாக்டர், தலைவர் சீனிவாசன் அவர்கள், என்னப்பா சும்மா படிச்சிட்டு இருக்கீங்க, கை தட்டுங்கப்பா, டப் டப் டப் டப் விசில் சத்தம் காதை பிளக்கிறது (அப்படின்னு கற்பனை பண்ணிக்கோங்க)
தலைவர் சும்மா செமையா இருக்காருங்க, அதுக்கு அடுத்த சீன்ல நிறைய ஜோடிக்கு கல்யாணம் பண்ணி வைக்கறாரு, பேக்கிரவுண்ட்ல, வள்ளல் தலைவருன்னு பிளக்ஸ் போட்டு வைச்சு, ஓப்பனிங் சாங் வேற, விசயகாந்துக்கு அப்புறம் அந்த ஓப்பனிங் சீன் சாங் நம்ம தலைவருக்கு மட்டும்தான் சூட் ஆகுது, எனக்கு விருதகிரி பார்த்த ஞாபகம், என்ன அவரு கருப்பா இருப்பாரு, இவரு செகப்பா இருக்காரு, அவ்வளவுதான் வித்தியாசம், பயபுள்ளக ரெண்டயும் பார்த்தா பயமாதான் இருக்கு.
இதுவரைக்கும் நான் சொன்னது மொத மூனு சீனு மட்டும்தான், இதுக்கு மேலயும் சொல்லனும்னா ஒரு பிளாக்கு போதாது, ஒவ்வொரு சீனயும் பத்து பத்து நிமிசம் போட்ட்டு காட்டி விளக்கு விளக்கு விளக்குன்னு விளக்கறாங்க, தலைவரு எம்ஜியார் ரசிகராம், வண்டில போகும் போது பாட்டு கேட்டுட்டு போவாரு, மத்த படத்துலன்னா ஒரு ரெண்டு வரி போட்டுட்டு கட் பண்ணிடுவாங்க, ஆனா இங்க முழு எம்ஜியார் பாட்டையும் போடறாங்கப்பா, அத கூட சகிச்சுக்கலாம், ஆனா அதுக்கு தலைவரு கொடுக்கற எக்ஸ்பிரசன் இருக்கே.. அத வார்த்தையால சொல்ல முடியாது, கரும்ம்டா சாமி..
சத்தியமா இந்த படத்த என்ன தவிர யாருமே பார்க்க மாட்டீங்க, அதனால கதைய சொல்ரேன் கேட்டுக்கோங்க, தலைவரு பில்டிங் கன்ஸ்ரக்சன் கம்பெனி வச்சிருக்காரு, அங்க வேல பார்க்குற மேஸ்திரி, தொழிலாளர்கள் எல்லாரும் புகழோ புகழோன்னு புகழ்றாங்க தலைவர, அன்பான அழகான(?) பொண்டாட்டி, ஒரு குழந்தையோட சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கராரு, ஒருநாள் அவரோட குழந்தை லத்திகாவ யாரோ கடத்திட்டு போயிடராங்க, கடத்திட்டு போனவன் குழந்தைய வச்சுகிட்டு பிளாக்மெயில் பண்றான்.
பயங்கரமா டார்சர் பண்றான், அங்க வா இங்க வான்னு அலைய விடறான், தலைவரும் குழந்தைய காப்பாத்தறதுக்காக ஓடு ஒடு ஒடுன்னு ஓடிக்கிட்டே இருக்கறாரு, கொன்னுட்டேனும் சொல்றான், யாரு குழந்தைய கடத்துனது, ஏன் கடத்துனான், குழந்தை கிடைச்சதா இல்லியா அப்படிங்கறத எல்லாம் தியேட்டருக்கு போய் பாருங்க தைரியம் இருந்தா.
ஒருத்தர் உண்மையிலேயே தைரியசாலியா பொறுமைசாலியான்னு பார்க்க ஆசைப்பட்டீங்கன்னா தைரியமா லத்திகா படத்துக்கு கூட்டிட்டு போகலாம், படத்துலேயே உருப்படியான ஒரு விசயம்னா அது இசைதான், டப்பா படத்துக்கு இங்கிலீஸ் பட ரேஞ்சுக்கு மியூசிக் பண்ணியிருக்காரு, யாருன்னு கேட்குறீங்களா அவருதான் பட்த்தோட அசிஸ்டெண்ட் டைரக்டர், ரெண்டு மூணு பாட்டு கொஞ்சம் மெனக்கெட்டுருந்தா கண்டிப்பா ஹிட் ஆகி இருக்கும்(?), கொஞ்சம் மிஸ் ஆகிருச்சு
படத்துல காமெடி இல்லைங்கற குறை எல்லாம் நம்ம தலை சீனி பார்த்துக்கராரு, அதுக்கு பதிலா ரெண்டு மூணு பைட்டு இருக்கு, இவரு குளோஸ் அப்புல முகத்த காட்டி கத்துறப்பவெல்லாம் அடிவாங்குற ஸ்டன்ட் நடிகர்கள் முகத்துல மரண பீதி தெரியுதுங்கறது, அவங்க பயந்து கத்துறதுலேயே தெரியுது, படத்தோட ஒரே குறை என்ன்ன்னா தலைவருக்கு டப்பிங் வாய்ஸ் போட்டதுதான், சே தலைவரோட ஒரிஜினல் குரலை கேட்க முடியலைன்னு ரொம்ப வருத்தம் எனக்கு, (சொந்த குரல்லயே டப்பிங் பண்ணியிருந்தா நல்லா சிரிச்சிருக்கலாம்)
படத்துல உருப்படியா இருக்கற இன்னொரு விசயம் ரெண்டு பாட்டு சீனுதான், மொக்கை பிகரா இருந்தாலும் காட்டு காட்டுன்னு காட்டுராங்கப்பா, ஆனா என்ன கூடவே தலைவரு சேர்ந்து டான்ஸ் ஆடுறதால, சிரிச்சி சிரிச்சி வகுறு நோகுதப்பா, ரெண்டு கதாநாயகில ஒன்னு பரவாயில்லை, இன்னொன்னு குரூப் டான்சர் பொண்ணு மாதிரி இருக்கு, ஆனா அந்த குருப் டான்சர் பொண்ணுதான் கதாநாயகி, என்ன சீனி உங்க டேஸ்டு இப்படி ஆகிப்போச்சு?
இந்த படத்துக்காக தலைவருக்கு கண்டிப்பா தேசியவிருது கொடுக்கலாம், அதுலயும் ஒரு சீன்ல, என் பொண்டாட்டி புள்ளய கொடுத்துடுடா கொடுத்துடுடான்னு முகத்துல அடிச்சுகிட்டு அழறாரு பாருங்க, பார்க்கிற எனக்கே அழுகை வந்திருச்சு, இப்படி கொல்றியேடான்னு, நானும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது, ஆனா ஒன்னு சொல்லிகறேன்க, தலைவரோட நடிப்பு ஆஸ்கார் நடிப்பு,
ஆஸ்கார் லட்சியம், இந்த வருட கலைமாமனி நிச்சயம்.
தலைவர சத்தியமா தப்பு சொல்ல முடியாதுங்க, உண்மையிலேயே நல்ல அருமையான கதை ஒன்னைதான் சொல்லனும்னு நினைச்சு படம் எடுத்திருக்காரு, புருசன் பொண்டாட்டிக்குள்ள சந்தேகம் வந்துட்டா அது அவங்களையும் பாதிச்சு மத்தவங்களையும் பாதிக்கும், கொலை பண்ற அளவுக்கு போயிரும்கற கருத்தைதான் இப்படி கொலையா கொன்னு படமா எடுத்து வச்சிருக்காரு.
பதிவுலகத்துல சிபி சாருக்கு முன்னமே படம் பார்த்த்தால எனக்கு யாராச்சும் சேவை செம்மல் பட்டம் குடுத்தா ஏத்துக்க நான் தயாரா இருக்கேன், அவரு சொல்ற மாதிரியே நானும் சொல்ரேன்,
குமுதம், ஆனந்த விகடன்ல விமர்சனம் போட மாட்டாங்க, மீறி போட்டா கர்ர்ர்ர்ர்ர்ர். த்த்தூதூதூ,
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் = 5 (ரெண்டு குத்து பாட்டுக்காக)
ஏ செண்டர்ல இரண்டு ஷோ ஓட்டுனாலே பெரிய விசயம்
பி மற்றும் சி செண்டர் ஆறு ஷோ ஓடும்
நானும் என்னடா படம் இப்படின்னு கிழிக்கலாம்னு நினைச்சுதான் எழுத ஆரம்பிச்சேன், ஆனா மனசு கேட்கலை, எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு தலைவரு மேல, கவலை படாத தலைவா, லூஸ்ல விடு தலைவா, அடுத்து ஆனந்த தொல்லை வருதல்ல, அப்ப பார்த்துக்கலாம்...!
வந்தேன் படித்தேன்..
ReplyDelete//////
ReplyDeleteசிபி சாருக்கு முன்னமே படம் பார்த்த்தால எனக்கு யாராச்சும் சேவை செம்மல் பட்டம் குடுத்தா ஏத்துக்க நான் தயாரா இருக்கேன், அவரு சொல்ற மாதிரியே நானும் சொல்ரேன், ////
பதிவுக்கு இல்லன்னாலும்..
இந்த படத்தை பார்த்ததுக்கு தரலாம் போலிருக்கே..
Good review....
ReplyDelete////
ReplyDeleteங்கள் அண்ணன் பவர் ஸ்டார் என்கிற யூத் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து தொடங்குகிறேன்./////
இந்த ஆண்டு தேசிய விருது..
ஆஸ்கார் எல்லாம் பவர் ஸ்டாருக்குதானா...
நல்ல வேளை என்ன காப்பாத்திட்டே...
ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி ....பரவில்லையே ..சிபி அவர்களை முந்திடீங்க ...
ReplyDeleteலூஸ்ல விடு தலைவா, அடுத்து ஆனந்த தொல்லை வருதல்ல, அப்ப பார்த்துக்கலாம்...!///
ReplyDeleteஇதுக்காச்சும் தியேட்டர் கெடைச்சிருக்கு... ஆனந்ததொல்லை பாக்கணும்னு ஆசப்பட்டீங்க்னா நீங்களே சொந்தமா ஒரு தியேட்டர் கட்டி அந்த படத்த ரிலீஸ் பண்ணி பாத்துக்குங்க.....:))
பல படம் பார்க்க தான் நல்லா இருக்காது,இந்த படம் கேட்கவே நல்லா இல்லையே....!!
ReplyDeleteமொக்கை பிகரா இருந்தாலும் காட்டு காட்டுன்னு காட்டுராங்கப்பா,
ReplyDeleteவார்த்தைகள் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்.
நண்பா படத்தை பார்த்து விட்டு உயிருடன் மீண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள் , பவர் ஸ்டார் வாழ்க
ReplyDeleteஅடா பாவி நீ மனுஷனே இல்ல தெரியுமா............................
ReplyDeleteஅடுத்த படம் வேறயா?
காலை வாரிட்டியலேய் மக்கா அவ்வ்வ்வ்வ்வ்வ்....
ReplyDelete@!* வேடந்தாங்கல் - கருன் *!
ReplyDeleteநன்றி கருன் சார்...
@கோவை நேரம்
ReplyDeleteஆமாம் சார் இப்பத்தான் தெரியுது மொக்கை படம் பார்க்குற தெய்வங்களோட நிலைமை :-)
@karthikkumar
ReplyDeleteஇல்ல மச்சி என்ன ஆனாலும் சரி ஆனந்த தொல்லை பார்த்துர வேண்டியதுதான், அதுதான் இருக்கவே இருக்கே ராம்லட்சுமன் :-)
@buhari ( Muthu Wappa )
ReplyDeleteஅப்ப கண்டிப்பா நீங்க படம் பார்த்திராதீங்க :-)
@ஜோதிஜி
ReplyDeleteபுரிந்தது சார், அடுத்த முறையில் இருந்து திருத்திக் கொள்கிறேன்...
@நா.மணிவண்ணன்
ReplyDeleteநன்றி மணி, நீங்களும் போய் பாருங்க :-)
@அஞ்சா சிங்கம்
ReplyDeleteஎன்னப்பா நீயி பேருல அஞ்சா சிங்கம்னு வெச்சுட்டு பயப்படலாமா? என்னா ஆனாலும் சரி, கண்ணுல தெரியுற மரண பீதியை மறைச்சிட்டு படம் பாருங்க :-)
@MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteஎன்ன மனோ சார், படம் சூப்பரா இருக்கும்னு நினைச்சீங்களா?
best comedy film.ah!ha!ha!....
ReplyDeleteபடத்தோட விமர்சனத்த படிச்சதுக்கே சிரிப்பு தாங்கல! இதுல வேற நீங்க அகில உலக சூப்பர் ஸ்டார் படத்த வேற நடுவுல போட்டு வச்சிருக்கீங்க.
ReplyDeleteஹிஹிஹி.............ஹிஹிஹி............
முடியலடா! சாமி.
ஹா ஹா படத்தை விடுங்க.. உங்க எழுத்து நடை கலக்கல் காமெடி.. சூப்ப்பர்
ReplyDelete@thirumathi bs sridhar
ReplyDeleteநன்றி ஆச்சி மேடம்...
@தமிழ் 007
ReplyDeleteநன்றி 007 சார்...
@சி.பி.செந்தில்குமார்
ReplyDeleteநன்றி தல, நீங்களும் சீக்கிரம்மே படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதுவீங்கன்னு நம்புறேன் :-)
ஹா ஹா ஹா.. நண்பா.. நிஜமாவே இவர் ஹீரோவா.. இல்லை ஏதாவது காமெடியா.. :-)..
ReplyDeleteஸ்டில்ஸ் பார்க்கவே பயமா இருக்கு.. எப்படி 3 மணிநேரம் பார்த்தீங்க.. நீங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவீங்க போல.. :-)
இன்ட்லி ஓட்டுப் பெட்டியைக் காணோம்.. தமிழ் மணத்துல போட்டாச்சு..
ReplyDeleteஹே..ஹி..ஹே..ஹி...அருமை அருமை..உங்கள நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு...
ReplyDeleteநண்பா... சிலபல காரணங்களால் படத்தை திரையரங்கம் சென்று பார்க்க முடியவில்லை... ஏதேனும் தளத்தில் திருட்டு டி.வி.டி வெளிவந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்...
ReplyDelete'பவர் ஸ்டாரின் பினாமி', 'திருப்பூர் சுனாமி' அண்ணன் சுரேஷ்..வாழ்க.வாழ்க.
ReplyDelete@பதிவுலகில் பாபு
ReplyDeleteகேட்குற உங்களுக்கே இப்படி இருந்தா பார்த்த எனக்கு எப்படி இருந்திருக்கும் :-)))
@ஜெட்லி...
ReplyDeleteநன்றி தலைவா...
@Philosophy Prabhakaran
ReplyDeleteதிருட்டு டிவிடியா? இத எவனாவது திருட்டு டிவிடி போட்டு வித்தானா அவனுக்கு கோவில் கட்டிதான் கும்பிடனும், நீங்க பேசாம தியேட்டருக்கு போயே பார்த்துக்கோங்க நண்பா :-)
@! சிவகுமார் !
ReplyDeleteஹி ஹி வாழ்க வாழ்க, நன்றி சிவக்குமார்...
பட் உங்க தைரியம் புடிச்சிருக்கு :)
ReplyDeleteஇந்தக் கரடிய எங்கண்ணே புடிச்சீங்க?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆனாலும் உங்க பவர்ஸ்டார் ரொம்ப பவர்ஃபுல்ணே.... ஸ்டில்ல பாத்த உடனேயே புடிங்கிருச்சுண்ணே......
ReplyDelete////////Philosophy Prabhakaran said...
ReplyDeleteநண்பா... சிலபல காரணங்களால் படத்தை திரையரங்கம் சென்று பார்க்க முடியவில்லை... ஏதேனும் தளத்தில் திருட்டு டி.வி.டி வெளிவந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்... ////////
பிரபா.., பவர்ஸ்டாரோட பவர்ஃபுல் ஸ்டில்ச பாத்தும் கொஞ்சம் கூட அசராம திருட்டு டீவிடி கேக்குறீங்களே இது அடுக்குமா?
யோவ் இதெல்லாம் ஒரு படம்னு பாத்துட்டு வந்ததும் இல்லாம, கொஞ்சம் கூட இரக்கமில்லாம இத்தனை ஸ்டில்லு போட்டு விமர்சனம் வேற எழுதியிருக்கீங்களே.... நாங்க அப்படி என்னய்யா தப்பு பண்ணோம்?
ReplyDeleteஇந்த ஸ்டில்சை பயன்படுத்திக்கலாம்னு இருக்கேன், உங்க அனுமதி தேவை...... ஹி..ஹி.... (பவர் ஸ்டாரோட பவரை நாமளும் கொஞ்சம் பயன்படுத்திக்கலாம்னுதான்)
ReplyDelete@Nagasubramanian
ReplyDeleteஹி ஹி ரொம்ப நன்றிங்க தலைவா...
@பன்னிக்குட்டி ராம்சாமி
ReplyDelete//இந்தக் கரடிய எங்கண்ணே புடிச்சீங்க//
எல்லா கரடியும் தமிழ்நாட்டுக்குள்ளதான் சுத்திகிட்டு இருக்குதுங்க ராம்சாமி சார்..
@பன்னிக்குட்டி ராம்சாமி
ReplyDelete//யோவ் இதெல்லாம் ஒரு படம்னு பாத்துட்டு வந்ததும் இல்லாம, கொஞ்சம் கூட இரக்கமில்லாம இத்தனை ஸ்டில்லு போட்டு விமர்சனம் வேற எழுதியிருக்கீங்களே.... நாங்க அப்படி என்னய்யாதப்பு பண்ணோம்?//
பவர் ஸ்டாரயே கிண்டல் பண்ணி பேசுறீங்களா? ஏற்கனவே புடுங்குனது பத்தாதா ராம்சாமி சார், மேற்கொண்டும் வேணுமா அடுத்து ஆனந்த தொல்லை ஸ்டில் இருக்கு, பாக்குறீங்களா? :-)