Friday, March 18, 2011

பவர் ஸ்டார் டாக்டர் S. சீனிவாசனின் லத்திகா படம் (மீள்பதிவு)
இன்னைக்கு காலையில தினத்தந்தி பேப்பர் பார்த்தப்ப ஒரு இன்ப அதிர்ச்சி என்னை தீண்டியது, அதுதான் நம்ம தலைவரோட ஆனந்த தொல்லை படத்தோட இசை வெளியீட்டு விழா விரைவில்னு போட்டிருந்தது, கேவலம் ஸ்பெக்ட்ரம் ஊழல் எல்லாம் ஒரு நியூசா சார், இதுதான் சார் நியூசு, நம்ம தலைவரோட படத்தோட இசை வெளியீட்டு விழான்னதும் எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை, நம்ம தலைவரோட படமே தொல்லைதான், ஐ மீன் ஆனந்த தொல்லைதான், இதுல இசை வெளியீடு வேறயான்னு டவுட் வேற ஆயிருச்சு, சரி அப்படியே பதிவுலகத்துக்கு நம்ம தலைவரோட அடுத்தடுத்த உலக படங்களை அறிமுகம் செய்யலாம்னு இந்த பதிவு.

முதன் முதலா வரப் போறது லத்திகா படம் தான், அந்த படத்த பத்தி தெரிஞ்சுக்கனும்னா இங்க கிளிக்குங்க                             அடுத்து வரப் போற படம்தான் ஆனந்த தொல்லை


                           விரைவில் இசை தொல்லை ஆரம்பிக்கப் போகுது


விசயகாந்துக்கு அப்புறம் போலீஸ் வேஷங் கட்டறதுக்கு நம்ம தல சீனிய வுட்டா ஆளில்லை


பார்த்தீங்களா போலீஸ்னா அது நம்ம சீனிதான், இந்த படத்த பார்க்கறதுக்கு ஸ்காட்லாண்டு யார்டு போலீஸ் காரங்களே வெயிட் பண்ணிட்டு இருக்காங்களாம், அந்தளவுக்கு போலீஸ்காரங்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்க போற படம் இது, சூர்யா கூட அடுத்த படம் போலீசா நடிக்கப் போரதுக்கு முன்னாடி தலைவர் கிட்ட டிரைனிங் எடுக்கனும்னு நிமிசக்கணக்கா காத்துகிட்டு இருக்காராம்.இந்த படத்துல நம்ம தலைவரு வில்லனா வரப்போராரு, படம் பார்த்துட்டு யாருக்கும் மூலம் வராம இருந்தா சரி


நம்ம தலைவரோட பாதையே தனிதான்
இதப்பத்தி சொல்ல ஒன்னும் இல்லை, அதுதான் படத்தோட தலைப்புலேயே இருக்கே


அப்புறம் நீங்க நம்ம தலைவரோட ஒரு முகத்த தான் பார்த்திருப்பிங்க, இன்னொரு முகத்த பார்த்திருக்க மாட்டீங்க, இதுக்கு மேல பார்க்காதீங்க, தாங்க மாட்டீங்க, நொந்துருவீங்க......


தலைவருகிட்ட எனக்கு புடிச்சதே அந்த சிரிப்புதான், அட அட அட கண்ண மூடிட்டு எப்படி சிரிக்கராறு பாருங்க, கண்ணுபட போகுதுங்க சார், வீட்டுல சொல்லி சுத்தி போடுங்கசூட்டிங் ஸ்பாட்டுல ஒரு போஸ்என்னா லுக்கு, என்னா ஸ்டைலு


இத நினைச்சாதான் பயமா இருக்கு, தலைவரு விடுதலை சிறுத்தையிலேயே பெரிய சிறுத்தையாம், கடிச்சிருவாரோ


ஒரு வேளை வெட்டிடுவாரோ
எப்பூடி, நாங்கெல்லாம் யாரு தெரியுமா? விசய் தம்பி நடிக்க வந்ததுக்கு அப்புறம் தான் டாக்டரு, நாங்கெல்லாம் பொறந்ததுல இருந்தே டாக்டருஅப்ப எல்லாரும் மறக்காம படத்துக்கு வந்துருங்க

தலைவரோட லத்திகா படம் இன்னைக்கு ரிலீசாகிருச்சு, விசயத்த கேள்விபட்டதுல இருந்து கையும் ஓடல, காலும் ஓடல,  பதிவு எழுத நேரம் இல்லாததால இந்த மீள்பதிவு, இன்னைக்கு படம் பார்க்க போறேன், உயிரோட இருந்தேன்னா நாளைக்கு விமர்சன்ம் எழுதறேன், என்னை வாழ்த்தி வழியனுப்புங்கள் நண்பர்களே, நன்றி, வணக்கம்..! 


14 comments:

 1. இன்னைக்கு படம் பார்க்க போறேன், உயிரோட இருந்தேன்னா நாளைக்கு விமர்சன்ம் எழுதுறேன், என்னை வாழ்த்தி வழியனுப்புங்கள் நண்பர்களே, நன்றி, வணக்கம்..!
  ................................................
  சென்று வாருங்கள் சகோ வாழ்த்துக்கள் :))) படங்களை பார்க்கும் போதே தெரிகின்றது காமடி படம் போல இருக்கு... வடிவாக பார்த்து விட்டு வந்து விமர்சனத்தை தாருங்கள்.

  ReplyDelete
 2. நண்பா ,படம் பார்த்துட்டு திரும்பி வருவீங்களா

  ReplyDelete
 3. ஆகா.... நடத்துங்க..நடத்துங்க..

  ReplyDelete
 4. டாக்டர் விஜய் நடிக்க வந்த பிறகு நாம் கூட சினிமாவில் ஹீரோவாகலாம் என்று பல பேர் தன்னம்பிக்கையுடன் திரிகிறார்கள். நன்றி விஜய். தன்னம்பிக்கை ஊட்டியதற்கு

  ReplyDelete
 5. திரும்பி வருவீங்களா :)

  ReplyDelete
 6. //தலைவருகிட்ட எனக்கு புடிச்சதே அந்த சிரிப்புதான், //

  hehehehehe..................

  ReplyDelete
 7. ஹலோ..சுரேஷ்..காலைல தினத்தந்தி பார்த்த அதிர்ச்சில இருக்கேன். இப்ப நீங்க வேறயா. தயவு செஞ்சி அந்த கடைசி ஸ்டில்ல எடுத்துருங்க..சொல்லிட்டேன்!

  ReplyDelete
 8. லத்திகா படம் பார்க்க சென்றுவா வென்றுவா என்று வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 9. @தோழி பிரஷா
  உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி போல

  ReplyDelete
 10. யார் சாமி இவன்? எந்த category லேயும் சேர்க்க முடியாது போல.
  (இவன்னு சொல்லிபுட்டேன் யாராவது வெட்டிடுவாங்களோ???)

  ReplyDelete
 11. அய்யய்யோ அப்போ ரஜினிகாந்த் அவ்வளவுதானா? சே இப்படி ஒருத்தர் இருக்கார்னு தெரிஞ்சிருந்தா நான் ரஜினி ரசிகனாகவே ஆகி இருக்க மாட்டேன். இனி உடல் மண்ணுக்கு, உயிர் பவர் ஸ்டாருக்கு.

  ஒயிட் அண்ட் ஒயிட்ல கடைசியா ஒரு ஸ்டீல் இருக்கு பாருங்க... அட்டகாசம் அஜீத் தோத்தாறு போங்க.

  ReplyDelete
 12. சென்று வென்று வருக!

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!