கட் கட் கம்மர் கட் கருணாநிதியை ஒழிச்சு கட்
போடுங்கம்மா ஓட்டு ரெட்டலைய பார்த்து
இந்த மாதிரி நிறைய பாட்டுக, டயலாக்குக எல்லாத்தையும் சின்ன வயசா இருக்கும் போது நிறைய கேட்டுருக்கேன்
அப்பயெல்லாம் அரசியலும் தெரியாது, தலைவருங்களும் தெரியாது, எனக்கு நினைவு தெரிஞ்சு அரசியல்வாதிகள்னு நான் முதமுதலா பார்த்த்து ஜெயலலிதா அம்மையாரத்தான், நான் ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்கும் போது ஒருநாள் ஜெயலலிதா எங்க ஊரு வழியா போறாங்கன்னு கட்சி ஆளுங்க எல்லாம் எங்கள ரோட்டுல இரண்டு சைடும் கட்சி கொடியோட நிக்க வச்சிட்டானுங்க
நானும் எப்படியோ டீச்சர் பாடம் நடத்துர கொடுமையில இருந்து தப்பிச்சிரலாம்னு போய் நின்னுட்டேன், இதோ இப்ப வந்துட்டாரு, ஒருநிமிசத்துல வந்துருவாரு, இரண்டு நிமிசத்துல வந்திருவாருன்னு ஒரு அல்லக்கை மைக்ல கூவிட்டே இருந்த்து, காலையில பன்னண்டு மணிக்கு வந்துருவாங்கன்னு சொன்ன மேடம் எப்படியோ ஒருவழியா நாலுமணிக்கு வந்தாங்க
வந்தாங்கன்னா, வந்தாங்கன்னு அர்த்தம் இல்ல, போனாங்க, சும்மா சர்ரு சர்ருன்னு ஒரு நாப்பது காரு அட்டெண்ட் டைம்ல பறக்குது, அதுல ஒரு காருல இருந்து அம்மையார் சிரிச்சிட்டே இரண்டு விரல காட்டிட்டு போனாங்க, அத என்னால சரியா பார்க்க கூட முடியல, சரியான பசி, மயக்கமா வேற இருந்த்து, காலையில இருந்து நின்னதுல கால் வேற பயங்கரமா வலிச்சது, இந்த கொடுமைக்கு பேசாம பாடத்தயே கவனிச்சிருக்கலாம்
அதுக்கப்புறம் அரசியலும் சரி அரசியல்வாதிகளும் சரி அவங்க சங்காத்தமே வேணாம்னு இருந்தேன், அதுக்கப்புறம் ஒரு அஞ்சாறு வருசத்துக்கு ஒன்னும் பிரச்சனை இல்லாம நல்லாத்தான் இருந்த்து, கொஞ்சம் கொஞ்சமா அரசியல் பிடிபட ஆரம்பிச்ச போது என்னடா அரசியலு இப்படி இருக்குது, இதெல்லாம் ஒரு பொழப்பான்னு கேவலமா இருந்த்து
அப்ப ஒரு எலக்சன் வந்த நேரம், ஊரெல்லாம் ஒரே பரபரப்பு, போட்டோ டிவின்னு அந்த ஊழல், இந்த ஊழல், வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்துட்டாங்கன்னு ஒரே நியூசு, போட்டோவுல வேற அம்மாவும் தோழியும் ஓய்வுக்கு முதுமலை போன யானைக்குட்டியாட்டம் உடம்பு புல்லா நகைய போட்டுட்டு நிக்குறாங்க, அட இவங்களுக்கா நாள் முழுக்க கால் வலியோட காத்துகிட்டு இருந்தேன்னு ஒரே ஷேமா போயிருச்சு, அப்பவே முடிவு பண்ணேன், நாம ஓட்டு போடும் போது மொத ஓட்டு திமுகவுக்குதான்னு
நான் நினைச்சது மாதிரியே ஒரு பஞ்சாயத்து எலக்சனும் வந்த்து, ஆளாளுக்கு ஓட்டு போடறது எப்படின்னு பாடம் எடுத்தானுங்க, முத்திரை குத்தணும்கறாங்க, சீட்ட மடிக்கனும்கறாங்க, மை வப்பாங்கங்கராங்க, எனக்கு என்னன்னு சரியா புரியலன்னாலும் ஏனோ ஒரு மாதிரி எக்சைட்டிங்கா இருந்த்து, ஆகா மொத மொதலா ஓட்டு போட போறோம்னு சந்தோசத்துல முந்துன நாள் சரியா தூங்கவே இல்லை,
அதனால காலையில பத்து மணிக்குதான் எந்திரிச்சேன், அவசர அவசரா கிளம்பி பூத்துக்கு போனா அந்த ஏரியாவோ சும்மா ஜே ஜேன்னு கிடக்கு, நம்ம ஊரு பாசக்கார பயலுக எல்லாம் மறக்காம எங்களுக்கு போட்டுடு, எங்களுக்கு போட்டுடுங்கறாங்க, நானும் சரி சரின்னு தலையாட்டிட்டே நடந்தேன், ஸ்கூல் வரைக்கும் போய் என்ன பண்ரதுன்னு தெரியல, ஏதோ ஸ்லிப் வாங்கணும்னு சொன்னாங்க, சரி திமுக காரங்க எங்க இருக்காங்கன்னு கண்டுபுடிச்சு ஸ்லிப் வாங்கலாம்னு கிளம்புனேன்
நான் திமுக பூத்காரங்கள கண்டுபுடிக்கரதுக்குள்ள, அதிமுக குரூப்புல இருந்து நம்ம பிரண்டு ஒருத்தர், டேய் இங்க வாடான்னு கூப்பிட்டாரு, என்ன பண்றதுன்னு தெரியாம போய் நின்னேன், ஏண்டா உனக்கு ஓட்டு இருக்குதா? போட்டுட்டியான்னு கேட்டாரு, இல்லைண்ணே எனக்கு ஓட்டு இருக்குதுன்னு சொன்னாங்க, இப்பத்தான் பர்ஸ்ட் டைம் ஓட்டு போட போறேன், என்ன பண்றதுன்னு தெரியல
அப்படியா இரு நான் ஸ்லிப் எழுதி கொடுக்குறேன்னு டெலிபோன் டைரக்டரி மாதிரி ஒரு புக்க வச்சிட்டு தேட ஆரம்பிச்சிட்டாரு, சரி எப்படியோ ஸ்லிப் வாங்கிட்டு போய் ஓட்டு போட்டுட வேண்டியதுதான்னு நினைச்சிட்டிருந்தேன், அவரும் தேடி தேடி பார்த்தாரு, கடைசியா என் மூஞ்சிய பார்த்து உன்னோட ஓட்டு போட்டாச்சு தம்பின்னாரு, நான் அப்படியே ஷாக்காயிட்டேன்
என்னன்னே சொல்றீங்க, நான் இப்பத்தான வந்தேன், அதுக்குள்ள எப்படி ஓட்டு போட முடியும்னு கேட்டுட்டு இருந்தேன், அப்பத்தான் சொண்டி வந்தான், அவன் பேரு கார்த்தி, அவன சொண்டி சொண்டின்னுதான் கூப்பிடுவோம், என்ன விட அஞ்சு வயசு கம்மி, சாரின்னா நாந்தான் உங்க ஓட்ட போட்டுட்டேன்னான், அடப்பாவி மொதமொதலா ஓட்டு போடாலாம்னு வந்தா என்னோட ஒட்ட திருட்டுதனமா போட்டுட்டியே, நீ நல்லா இருப்பியாடா? உன்ன எப்படிடா நாந்தான்னு நம்புனாங்கன்னு கேட்டேன்
அதுக்கு அவன், நீங்க வேறன்னா நான் காலையில இருந்து எட்டு ஓட்டு போட்டுட்டேன், அதுல உங்களுதும் ஒன்னு, சரி சரி மன்னிச்சிக்கோங்க, தெரியாம போட்டுட்டேன் அடுத்த எலக்சன்ல பார்த்துக்கலாம்கறான், எனக்கு வந்த கோபத்துக்கு அவன நாலு சாத்து சாத்தனும்னு இருந்த்து, ரொம்ப தெரிஞ்ச பையன்னால விட்டுட்டேன்
அண்ணா நான் ஓட்டு போட்டதே இல்லைன்னா, நாளைக்கு பசங்க கூட போனா ஓட்டு போட்டியான்னு கைல மை இருக்குதான்னு பார்ப்பாங்க, இல்லைன்னா கேவலா இருக்கும்னான்னு புலம்புனேன், என்னோட பரிதாப நிலைய பார்த்த அந்த அண்ணன் சரிடா நீ வேண்ணா நாராயணசாமியோட ஓட்டு போடறியா, அவங்க ஊருல இல்லை, நான் ஸ்லிப் தர்றேன், நீ போய் ஓட்டு போட்டுட்டுன்னாரு
சரிண்ணான்னேன், சொண்டியே எட்டு ஓட்டு கள்ள ஓட்டு போட்டிருக்கான், நான் ஒன்னு போட முடியாதா? தைரியமா போய் ஓட்டு போட்டுடலாம், எப்படியோ திமுகவுக்கு போட்டா சரின்னு முடிவு பண்ணேன், அந்த அண்ணன் ஸ்லிப் எழுதி கொடுத்தாரு, டேய் தம்பி பேரு ஞாபகம் வச்சுக்கோ, உன் பேரு நாராயணசாமி, அப்பா பேரு வெங்கடேசப்பெருமாள், அங்க போனதும் ஸ்லிப் கொடுத்துரு, உன் பேரயும் அப்பா பேரயும் கேட்பாங்க கரக்டா சொல்லிரு, மாத்தி சொல்லிராதன்னாரு, நானும் சரின்னு தலையாட்டினேன்
தம்பி மறக்காம எலைக்கு போட்டுடுடான்னாரு, நானும் சரி சரின்னு தலையாட்டிகிட்டே கிளம்புனேன், மனசுக்குள்ள எலைக்காமுல்ல, ஆசைய பாரு, நான் சூரியனுக்குதான் ஓட்டு போடுவேன்னு நினைச்சுகிட்டேன், பேரு மறந்துட கூடாதுன்னு நாரயணசாமி, வெங்கடேச பெருமாள், நாரயணசாமி, வெங்கடேச பெருமாள்னு மனப்பாடம் பண்ணிகிட்டே நடந்தேன்
ஓட்டு போடற ஸ்கூலுக்குள்ள பார்த்தா எல்லாரும் லைனா நின்னுகிட்டு இருந்தாங்க, போலீஸ்கார் கைல லத்திய வச்சிகிட்டு வரிசைய ஒழுங்குபடித்திகிட்டு இருந்தாரு, நானும் போய் கியூவுல நின்னேன், ஒவ்வொருத்தரா உள்ள போய் வந்திட்டு இருந்தாங்க, சைடுல நின்னு ரவுசு பண்ணிட்டு இருந்த ஒருத்தர போலீஸ்கார் புடிச்சு சாத்து சாத்துன்னு சாத்துனாரு
அதுவரைக்கும் தைரியமா இருந்த எனக்கு அந்த நிமிசத்துல இருந்து பயமாயிருச்சு, இருந்தாலும் மனச தைரியமா வச்சுகிட்டு காத்திருந்தேன், ஒவ்வொருத்தரா உள்ள போய்கிட்டு இருந்தாங்க, என்னோட டர்னும் வந்தது, உள்ள போய் அங்க உட்கார்ந்திருந்த அம்மாகிட்ட என்னோட ஸ்லிப்ப கொடுத்தேன்
அவங்க அத வாங்கிட்டு ஒரு பெரிய புஸ்தகத்துல பேர தேட ஆரம்பிச்சாங்க, எனக்கு மனசுக்குள்ள ஒரு பயம் துடிச்சிட்டு இருந்த்து, அடுத்து இன்னொருத்தர் உட்கார்ந்திருந்தாரு,
உன்னோட பேர் என்ன?
நா நா நாராயணசாமிங்க
உன் அப்பா பேரு
அப்பா பேரு அப்பா பேரு அய்யோ மறந்து போச்சே, அது என்ன பெருமாளு யோசிட்டிருக்கும் போதே
உன் அப்பா பேரு என்ன தம்பி? மறுபடியும் கேட்டாரு
பெருமாளுங்க
வெங்கடேச பெருமாளா?
அட ஆமாம்ல, ஆமாங்க வெங்கடேச பெருமாள்தான்
அவரு சீட்ட எடுக்க ஆரம்பிச்சாரு, அப்ப பார்த்து பூத் ஏஜெண்டா இருந்தவரு என்ன குருகுருன்னு பார்த்தாரு, யாருன்னு பார்த்தா எங்க பக்கத்து வீட்டுக்காரரு, எனக்கு தெரிஞ்சவரு, அவரு டிஎம்கே பூத் ஏஜெண்டா அங்க இருந்தாரு
தம்பி உன் பேரு நாராயணசாமி இல்லையே, இதுதான்ன்னு என் பேரை சொன்னாரு, அடப்பாவி போட்டு கொடுத்துட்டானே, இல்லைங்க என் பேரு நாராயணசாமிதான்னு சொன்னேன், அப்படியா அப்ப உன் அப்பா பேரு என்னன்னு கேட்டாரு, என் அப்பாவ எல்லாருக்கும் தெரியும், பொய் சொன்னாலும் மாட்டிக்குவோம், உண்மைய சொன்னாலும் மாட்டிக்குவோம், என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன்
அதுக்குள்ள அவரே நீ ........ அவரு பையன்தானே கேட்டாரு, நான் பேய் முழி முழிச்சேன், உடம்பெல்லாம் வேர்த்து போச்சு, அடப்பாவி உன் கட்சிக்குதானே ஓட்டு போட வந்தேன், மாட்டி விட்டுட்டியேடா பாவின்னு மனசுக்குள்ள அந்தாள திட்டினேன்
எலக்சன் ஆபிசரு, தம்பி கள்ள ஓட்டு போட வந்தியா? உன்னயெல்லாம் ஜெயில்லதான் போடனும்னு சொல்லி போலீஸ் போலீஸ்னு கூப்பிட்டாரு
நான் ஆகா நல்லா மாட்டிகிட்டோம்டா சிக்குனா சங்குதான்னு மனசுக்குள்ள நினைக்கும் போதே ஒரு போலீஸ்கார்ர் வந்தார், இதுக்கு மேல இங்க நின்னா அவ்வளவுதான்னு புடிச்சேன் பாருங்க ஓட்டம்
அந்த போலீஸ்காரரும் டே நில்லுடா நில்லுடான்னு தொறத்திட்டு வந்தார், சிக்குனா தான, எங்க ஊரு பத்தி எனக்கு தெரியாதா? ஒரே ஓட்டமா ஓடி நான் எஸ்கேப் ஆகிட்டேன்
வீட்டுல போய் ரெஸ்ட் எடுத்துட்டு மத்தியானமா கிளம்பி வேடிக்கை பார்க்க போனேன், அந்த அதிமுக பூத் ஏஜெண்ட் அண்ணன் இருந்தாரு, ஏண்டா ஓட்டு போட்டியானு கேட்டாரு, அட நீங்க வேறண்ணே விட்டா ஜெயில்லயே போட்டிருப்பானுங்க, அந்த ...................... கெடுத்துட்டாருன்னே, மாட்டி விட்டுட்டாரு
அப்ப பார்த்து சொண்டி வந்தான், என்ன்ன்னே மாட்டிட்டீங்களாமா? போலீசெல்லாம் தொறத்துச்சுன்னு கேள்விபட்டேன்னு நக்கலா சிரிச்சேன், எனக்கு அவமானமா போச்சு, ஆமாண்டா அதுக்கென்ன இப்ப?
நீங்க போடப்போன ஓட்டயும் நானே போட்டுட்டேன்னான்
அடப்பாவிகளா ஒரு சின்ன பையன் வளைச்சி வளைச்சி எல்லார் ஓட்டயும் போட்டுட்டு இருக்கான், அவன புடிக்க துப்பில்ல, ஆசை ஆசையா மொத தடவை ஓட்டு போட போன என்ன புடிங்கடா வெண்ணெய்களான்னு மனசுல நினைச்சுகிட்டே வீடு வந்து சேர்ந்தேன்
அடுத்த நாள் காலையில நான் நடந்து போகும் போது என்ன மாட்டிவிட்ட அந்த பூத் ஏஜெண்ட் அண்ணன் எதிர்ல வந்தாரு, டேய் நில்லுடா, இந்த வயசில கள்ள ஓட்டு போடறியா? என்ன தைரியம்டா உனக்குன்னு திட்ட ஆரம்பிச்சாரு
[அட கேணப்பயலே உன்னோட கட்சிக்குதானடா ஓட்டு போட வந்தேன், என்ன போய் புடிச்சு கொடுத்திட்டியேடா, அவனுங்க வளைச்சு வளைச்சு கள்ள ஓட்டு போட்டுட்டு இருந்தானுங்களே, அவங்கள எல்லாம் விட்டுட்டியேடான்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு இருந்தேன்]
என்னடா நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன், பேசாம அமைதியா இருக்க, ஒன்னு விட்டன்னா செவுனி கிழிஞ்சு போயிரும், உன்னயெல்லாம் போலீசுல புடிச்சு கொடுக்கனும், ஓடியா போயிட்ட, இரு இன்னைக்கு போலீசுல கம்ளைண்ட் பண்ணி புடிச்சு கொடுக்கறேன், எங்க உங்க அப்பா? பேசிக்கொண்டே போனார்
எனக்கு போபம் தலைக்கேறியது, வந்த கோபத்தில் ஒரு கத்து கத்தினேன்
சரிதான் போடா@#$%^&*(!@#$$ - என்று திட்டிவிட்டு ஒரே ஓட்டம்
எங்கள் ஊரில் இருந்தவர்களிலேயே அந்த அண்ணன் மிக நல்லவர், கூட்டுறவு வங்கியில் நல்ல வேலையில் இருந்தார், எந்த கெட்டபழக்கங்களும் இல்லாதவர், அனைவருடனும் அன்புடன் பேசுபவர், அவரும் அவருடைய குடும்பத்தார் மீதும் ஊரில் உள்ள அனைவரும் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர், அந்த சம்பவத்திற்கு பிறகு அவர் என்னுடன் பேசவே இல்லை, நான் திட்டியதை என் வீட்டிலும் சொல்லி கொடுக்கவில்லை, எப்பொழுது நேரில் பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் சென்று விடுவார், ஒவ்வொரு எலக்சன் வரும்போதும் அவர் நினைவு வரும், கண்டிப்பாக அவரை பூத்தில் பார்ப்பேன், தலைகுனிந்து கொள்வேன், அவரை கோபத்தில் திட்டிவிட்டேனே தவிர மனசுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த்து, ஆனால் கடைசிவரை அவரிடம் நான் மன்னிப்பு கேட்கவே இல்லை, ஆம் இப்பொழுது அவர் உயிரோடு இல்லை எட்டு மாதங்களுக்கு முன்பு மாரடைப்பில் காலமகிவிட்டார், இதோ எலக்சன் வர போகிறது, இந்த முறை அவர் வரப்போவதில்லை, இந்த பதிவில் மூலம் அவரிடம் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், மன்னித்துவிடுங்கள் சார்.
முதல் காதலை போலவே, முதல் தேர்தலும் இனிமையானதுதான், சாகும்வரை மறக்காது..!
கடைசியா புது டிசைன் கிடைச்சிருச்சி போல.
ReplyDelete/நானும் எப்படியோ டீச்சர் பாடம் நடத்துர கொடுமையில இருந்து தப்பிச்சிரலாம்னு போய் நின்னுட்டேன்//
இதுக்கு நீங்க வகுப்புலயே இருந்துருக்கலாம்.
அசத்தல் பதிவு..
ReplyDelete//
ReplyDeleteமுதல் காதலை போலவே, முதல் தேர்தலும் இனிமையானதுதான், சாகும்வரை மறக்காது..! //
தலைவரே பின்னிடீங்க !!!
ஆஹா நீங்க ரொம்ப பேட் பாயா இருப்பீங்க போலேயே,கள்ள ஓட்டுலாம் போட முயற்சி பண்ணிருக்கீங்க .சரிதான்
ReplyDeleteகள்ள வோட்டு போட போனதும் இல்லாம அதை பதிவா வேற எழுதுறீங்களா..... :))
ReplyDeleteசொண்டியே எட்டு ஓட்டு கள்ள ஓட்டு போட்டிருக்கான், நான் ஒன்னு போட முடியாதா?////
ReplyDeleteஅந்த சொண்டி எந்த வூருன்னு சொல்லி இருக்கலாம்ல... இவ்ளோ சொல்லிட்டீங்க.:))
@ ! சிவகுமார் !
ReplyDeleteவாங்க சிவா, இன்னும் டியூட்டிக்கு கிளம்பலியா?
@ !* வேடந்தாங்கல் - கருன் *!
ReplyDeleteநன்றி கருன் சார்...
@ Nagasubramanian
ReplyDeleteநன்றி நாகசுப்ரமணியம் சார்...
@ நா.மணிவண்ணன்
ReplyDeleteஅப்பயெல்லாம் பஞ்சாயத்து எலக்சன் புல்லா கள்ள ஓட்டுதான் போட்டுருக்காங்க போல, நான் என்னோட ஓட்டு கிடைக்காததால இன்னொரு ஓட்டு போடலாம்னு முயற்சி பண்னேன், அதுவும் பெயிலியரா போச்சு, அவ்வளவுதான் நண்பா :-)
@ karthikkumar
ReplyDeleteஅந்த பையன் எங்க ஊரேதான், இப்பவும் அவன டெய்லியும் பார்ப்பேன், பேசுவேன் :-)
சரி சரி.. உங்க முதல் காதல். 2 வது காதல் நு எல்லா காதலை பற்றியும் சொல்லுங்க
ReplyDeleteசெமயா இருக்குங்க........... கிட்டத்தட்ட இதே மாதிரி அனுபவம் எனக்கும் இருக்கு, ஆனா அது சென்னை க்வுன்சிலர் தேர்தல்ல..........
ReplyDelete@ சி.பி.செந்தில்குமார்
ReplyDeleteஅந்த கதையதான் ஏற்கனவே எழுதியிருக்கேனே தல...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
ReplyDeleteநன்றி ராம்சாமி சார், நீங்களும் எழுதுங்க சார் உங்க கதைய படிக்க ஆவலா இருக்கேன்..
நம்ம கடமைய செய்ய விட மாட்டாங்களே!
ReplyDeleteஅடடா காதல், அரசில் தருணத்திற்கேற்றற் போல் புகுந்து விளையாடுதோ
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...
அட்டகாசமான பதிவு இது....
ReplyDeleteஎன்னடா இது அநியாயமா இருக்கு கள்ள ஒட்டு போடுறது தப்பா ?
ReplyDeleteஎனக்கு இதுவரை தெரியாதே ..............ஹி ஹி ஹி ...........
ஒவ்வொரு எலக்சன் வரும்போதும் அவர் நினைவு வரும், கண்டிப்பாக அவரை பூத்தில் பார்ப்பேன், தலைகுனிந்து கொள்வேன், அவரை கோபத்தில் திட்டிவிட்டேனே தவிர மனசுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த்து, ஆனால் கடைசிவரை அவரிடம் நான் மன்னிப்பு கேட்கவே இல்லை, ஆம் இப்பொழுது அவர் உயிரோடு இல்லை எட்டு மாதங்களுக்கு முன்பு மாரடைப்பில் காலமகிவிட்டார், இதோ எலக்சன் வர போகிறது, இந்த முறை அவர் வரப்போவதில்லை, இந்த பதிவில் மூலம் அவரிடம் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், மன்னித்துவிடுங்கள் சார்.
ReplyDelete....very touching. உங்கள் உண்மையான உணர்வுகளை படம் பிடித்து காட்டுகிறது. அருமை.
சூப்பரா கதை மாதிரி சொல்லி இருக்கீங்க..டச்சிங்!
ReplyDeleteஅடடே காமெடியா ஆரம்பிச்சு கடைசில கண்கலங்க வச்சிட்டீங்களே...
ReplyDeleteஉங்கள் வாக்கு பெற முடியாமல் போய்விட்டது சுரேஷ்
ReplyDeleteஇந்த தில்லாலங்கடி வேலையெல்லாம் நானும் செஞ்சுருக்கேன் தல...
ReplyDelete@ thirumathi bs sridhar
ReplyDeleteஅதேதான் மேடம், நன்றி
@ ♔ம.தி.சுதா♔
நன்றி சார்
@ MANO நாஞ்சில் மனோ
நன்றி மனோ சார்
@ அஞ்சா சிங்கம்
எனக்கே அன்னைக்குதான் தெரிஞ்சது :-)
@ Chitra
நன்றி சித்ரா மேடம்
@ செங்கோவி
நன்றி நண்பா
@ Philosophy Prabhakaran
நன்றி பிரபா
@ ஜோதிஜி
கேள்விபட்டேன் சார், அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் சார்
@ கே.ஆர்.பி.செந்தில்
நீங்களும் எழுதுங்க சார், முதன்முதலான உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்
பாருய்யா இந்த புள்ளயோட ஹிஸ்டரிய ஹிஹி சும்மா தமாசு ஹிஹி!
ReplyDelete