இந்த படத்த பத்தி சொல்லனும்னா கதைய சொல்லித்தான் ஆகணும், அப்பத்தான் உங்களுக்கு புரியும், நான் எப்படி ஒரு ரிஸ்க் எடுத்து இருக்கேன்னு, சூரியாவோட அப்பா, விவேக் ஓபராயோட அப்பாவை கொன்னுடராரு, பதிலுக்கு விவேக் ஓபராய் சூரியாவோட அப்பாவை கொன்னுடராரு, பதிலுக்கு சூரியா விவேக் ஓபராயை கொன்னுடராரு, பதிலுக்கு விவேக் ஓபராயோட பையன்...........இல்ல இல்ல இதுவரைக்கும்தான் காட்டுராங்க,
படத்தோட ஆரம்பமே காந்தி சிலைக்கு முன்னாடி நாலஞ்சு பேர வெட்டி சாய்க்கரதுல இருந்து தொடங்குது, படம் முடியரதுக்குள்ள கொறஞ்சது முன்னூறு பேரயாவது கொன்னுடராங்க, வெட்டராங்க, வெட்டராங்க வெட்டிக்கிட்டே இருக்குராங்க, துப்பாக்கி கிடைச்சா சரமாரியா சுட்டுகிட்டே இருக்குராங்க, ஒவ்வொரு சீனுலயும் ரத்தம் ரத்தம் ரத்தம் மட்டுமே, அது சரி ரத்த சரித்திரம்னு பேர மட்டும் வச்சா போதுமா? ரத்தத்த காட்ட வேண்டாமானு டைரக்டர் நினைச்சு இருப்பாரு போல, நாந்தான் பயந்துகிட்டு இருந்தேன், ஒருவேளை ஆள் கிடைக்கலீனா ஸ்கீரன விட்டு கீழ இறங்கி நம்மளை வெட்டிடுவாங்களோன்னு.
திரைக்கதை எல்லாம் ரொம்ப சுவாரஸ்ஸமாகத்தான் இருக்குது, எல்லாரும் படம் முடிஞ்சதுக்கு அப்புறம் எ பிலிம் பைன்னு போடுவாங்க, இதுல முதல்ல எழுத்து போட்டு முடிச்சவுடனே இது ஒரு ராம் கோபால் வர்மா படம்னு போடராங்க, நான் முன்ன பின்ன இந்தி படம் எதுவும் பார்க்காததால்ல, அவரு என்ன பெரிய அப்பாடாக்கரான்னு நினைச்சுகிட்டேன், படம் பார்ததுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது இவரு ஒரு ஆளு 10 பேரரசு, 20 ஹரிக்கு சமம்னு, வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இவரையும் வாழ வைக்கட்டும்.
அப்புறம் முக்கியமா ஒருத்தரை பத்தி சொல்லணும், அவரு சூர்யா, படத்தோட இடைவெளி பக்கத்துலதான் வர்ராரு, வெட்டு குத்துன்னு போகுற படத்துல, பாடி லேங்குவேஜ், உணர்ச்சிகள் எல்லாத்தையும் முகத்தில காட்டுறாரு, இந்திக்காரனுங்க இங்கயும் நம்ம தமிழன ஏமாத்திட்டானுங்க, விவேக் ஓபராய் முன்னூறு கொலை அசால்ட்டா பண்ணும் போது, சூர்யாவுக்கு ரெண்டே ரெண்டு கொலை மட்டும் கொடுத்து ஏமாத்திட்டானுங்க, படத்துல சூர்யாவை விட விவேக் ஓபராய்க்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்காங்க, பாவம் சூர்யாவோட ரசிகர்கள், நேத்து படம் ரிலீசானதுனால, நிறைய சூர்யா ரசிகர்கள் வந்திருந்தாங்க, சூர்யா ஒவ்வொரு பில்டப் கொடுக்கும் போதும் இவங்க உய், உய்ய்ய்ன்னு விசில் அடிச்சி கத்திக்கிட்டு இருந்தானுங்க, ஆனா எல்லாம் புஷ்சுன்னு போகுரதால, இவங்க மண்ட காஞ்சி உக்காந்து இருக்குறத பாக்க ரொம்ப வேடிக்கையா இருந்துச்சி.
டைம் பாஸ் ஆகலண்ணாலோ, இல்ல வீட்டுல பொண்டாட்டியவோ, இல்ல வேற யாரையாவது அடிக்கனும்னு தோணிருச்சுன்னா படம் பார்த்து வெறி ஏத்திக்கோங்க, அதே சமயம் அவங்களும் இந்த படம் பார்த்திருந்தாங்கன்னா நான் பொறுப்பில்லை, தயவு செய்து குழந்தை, குட்டியோட படம் பார்த்திராதீங்க, அப்புறம் நாளைக்கு பென்சில், பழப்பம் வாங்கி தரலேண்ணு உங்க குழந்தையே உங்கள போட்டு தள்ளிட வாய்ப்பிருக்கு.
எது எப்படியோ, ரத்த சரித்திரம் படத்தை அழகிரி சார் பையன் தயாநிதி வெளியிடரது ரொம்ப பொருத்தமா இருக்கு, ஒரு வேளை சேம் பின்ஞ்சா?
மொத்தத்துல ரத்த சரித்திரம் - குடும்பத்தோட பார்க்க கூடாத படம்.
ரொம்ப நல்ல விமர்சனம் பல இடங்களில் சிரிச்சிட்டேன்!:-)
ReplyDeleteஎஸ்.கே said...
ReplyDeleteநன்றி எஸ்.கே சார்.
விமர்சனத்திற்கு நன்றி அன்பரே
ReplyDeleteசம்பத்குமார் said...
ReplyDeleteவாங்க சம்பத்குமார் சார், உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஒரு terror படத்துக்கு காமெடியா விமர்சனம் பண்ணிர்க்கீங்க.
ReplyDeleteஒருவேளை ஆள் கிடைக்கலீனா ஸ்கீரன விட்டு கீழ இறங்கி நம்மளை வெட்டிடுவாங்களோன்னு.
ReplyDelete...me the escappu!
ஓகே அன்பரே
ReplyDeleteஅருமையான விமர்சனம்.. நல்ல நகைச்சுவையோட விமர்சனம் பண்ணியிருக்கீங்க..
ReplyDeleteசின்ன சின்ன வார்த்தைகளால் நிறைய இடங்களில் ரசிக்க வைத்தது உங்கள் எழுத்து நடை...
ReplyDeleteஉதாரணங்கள்:
// பதிலுக்கு விவேக் ஓபராயோட பையன்...........இல்ல இல்ல இதுவரைக்கும்தான் காட்டுராங்க //
// அவரு என்ன பெரிய அப்பாடாக்கரான்னு நினைச்சுகிட்டேன் //
// இந்திக்காரனுங்க இங்கயும் நம்ம தமிழன ஏமாத்திட்டானுங்க, விவேக் ஓபராய் முன்னூறு கொலை அசால்ட்டா பண்ணும் போது, சூர்யாவுக்கு ரெண்டே ரெண்டு கொலை மட்டும் கொடுத்து ஏமாத்திட்டானுங்க //
// ரத்த சரித்திரம் படத்தை அழகிரி சார் பையன் தயாநிதி வெளியிடரது ரொம்ப பொருத்தமா இருக்கு, ஒரு வேளை சேம் பின்ஞ்சா? //
இந்த படத்த எடுக்காமலே இருந்திருக்கலாம். விமர்சனத்துக்கு நன்றி
ReplyDeleteநா.மணிவண்ணன் said...
ReplyDeleteநன்றி மணிவண்ணன் சார்
Chitra said...
ReplyDeleteகவலைப்படாதீங்க உங்களுக்காகவே வரப்போகுது லத்திகா படம் சித்ரா மேடம்
சம்பத்குமார் said...
ReplyDeleteமீண்டும் உங்களின் வருகையை எதிர்பார்க்கிறேன் சம்பத் சார்
பதிவுலகில் பாபு said...
ReplyDeleteநன்றி பாபு சார்
philosophy prabhakaran said...
ReplyDeleteநன்றி பிரபாகரன் சார், முந்தைய பதிவுக்கு ஆளையே காணோம்?
THOPPITHOPPI said...
ReplyDeleteநீங்க வந்ததுக்கு மிகவும் நன்றி சார்
thank u boss. can u send ur email id to sgramesh1980@gmail.com
ReplyDeletereview payamaakeeethu
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteThanks Boss
parattugal nanbare nalla aakkam
ReplyDeletepolurdhayanithi said...
ReplyDeleteஉங்களின் முதன்முதலான வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே