Wednesday, December 15, 2010

விருதகிரி - எ பிலிம் பை விஜயகாந்த்



ரிட்டயர்ட் ஆகாத போலீஸ், புதிய டாக்டர், புரட்சி கலைஞர், கேப்டன், தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் விருதகிரி, அப்பாடா சொல்லி முடிக்கவே மூச்சு வாங்குது, படத்தோட கதை என்னன்னா இத்தனை நாளா உள்ளூர் அரசியல்வாதி, பாகிஸ்தான் தீவிரவாதிகள வேட்டையாடிட்டு இருந்த கேப்டன் இண்டர்நேஷனல் தீவிரவாதிகள், கிரிமினல்களை எப்படி வேட்டையாடி அழிக்கறாரு அப்படிங்கரதுதான் கதை, அதுக்கு ஒரு லாஜிக் வேணும்கறதுக்காக பொண்ண தேடி போற மாதிரி கதையை கொண்டு போறாங்க,
சும்மா சொல்லக்கூடாது ந்ம்ம கேப்டன அவருக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு பாரேன்னு சொல்ல வச்சிருக்காரு, வேற எந்த டைரக்டரும் யோசிக்காத அரவாணிகள் பிரச்சனையையும், ஆஸ்திரேலியா இனவெறி பிரச்சனையையும் கையில் எடுத்ததுக்காகவே கேப்டன பாராட்டலாம்,

கேப்டனோட அறிமுகம் சீனே பயங்கர டெரரா இருக்கு, அறிமுக காட்சியிலேயே ஸ்காட்லாந்து யார்டு போலீஸ்சுக்கே பாடம் நடத்துராறு, டிரைனிங் போன இடத்துல டிரைனிங் கொடுத்தவங்களுக்கே டிரைனிங் கொடுக்குறாரு, படம் புல்லா மலேசியாவில எடுத்துட்டு ஆஸ்திரேலியான்னு பிலிம் காட்டுராங்க, படம் புல்லா வெளிநாட்டுல நடக்குதுங்கறதால இங்கிலீஸ்ல பேசற வசனங்கள் எல்லாம் தமிழ்லயே டிரான்ஸ்லேட் பண்ராங்க, நம்ம கேப்டனோட இங்கிலீஸ் பத்திதான் உங்களுக்கு எல்லாம் தெரியுமே, அவரு WHERE IS, WHEN IS னு ஆரம்பிக்கரதுக்குள்ளயே தமிழ்லயே வசனம் போட்டுராங்க, இதிலே வெள்ளக்காரனுங்கள்ளாம் தமிழ்ல பேசி ஒரே காமெடியா இருக்கு, இத சமாளிக்க டைட்டில்லயே ஆங்கில வசனங்கள் எளிதில் புரிந்து கொள்ள மொழி பெயர்க்கப்பட்டுள்ளதுன்னு போட்டுடுராங்க.

படம் இண்டர்வெல் வரைக்கும் எடிட் பண்ணாத கோலங்கள் சீரியல் மாதிரியே போகுது, நம்ம பொறுமைய ரொம்பவே சோதிக்குறாங்க, டெம்ப்ளேட் வசனங்கள் மாதிரி, டெம்ப்ளேட் செண்டிமெண்ட், டெம்ப்ளேட் பாசம்னு சீரியல் காட்டுராங்க, அதுவும் முதல்வன் படத்துல அர்ஜீனுக்கு அம்மாவா வருவாங்களே அவங்கதான் இதுலயும் கேப்டனுக்கு அம்மா, சொல்லவா வேணும் ஆ வூன்னா கேப்டன் புகழ் பாடுராங்க, ஆனா இண்டர்வெல்லுக்கு அப்புறம் படம் ரொம்ப நல்லா இருக்கு, ரொம்ப ஸ்பீடா ரசிக்கற மாதிரி பண்ணி இருக்காரு,  



படத்தோட சண்டை காட்சி பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகணும், ரொம்ப நாளா தமிழக மக்கள் மறந்திருந்த பறந்து பறந்து அடிக்கறது, கயிறு கட்டி இழுத்து சண்டை போடுறது, வானத்துல பறந்து அஷ்டகோணலாக பறந்து அடிக்கறது, கிளைமேக்ஸ்ல இரும்பு சங்கிலிய அத்துட்டு வந்து அடிக்கறது, அப்புறம் கேப்டன் ஸ்பெஷல் லெப்ட் லெக்ல உதைக்குறது அப்படின்னு நிறைய இருக்கு, அதுவும் கேப்டன் உதைக்குறதுக்காகவே பின்னாடி திரும்பி நிக்குறாங்கன்னா பார்த்துக்குங்களேன், அதுவும் ஒவ்வொரு சண்டைலயும் வில்லனுங்க சட்டையை கிழிச்சிட்டு சண்டைக்கு வராங்க, நாந்தான் பயந்துகிட்டே இருந்தேன் நம்ம கேப்டனும் சட்டையை கழட்டி பாடி பில்டிங் காட்டிடுவாரோன்னு, நல்லவேளை அந்த அசம்பாவிதம் நடக்கலை, அப்புறம் முழங்கால் வரைக்கும் கோட் போட்டுட்டு சண்டை போடுராரே, சண்டை போடும் போது தடுக்காது? இன்னொரு டெம்ப்ளேட் காட்சியா கிளைமேக்ஸ்ல வில்லன் கதாநாயகன கட்டிப்போட்டுட்டு ஒப்புதல் வாக்குமூலம் தருவாரு அதுவும் தவறாம இருக்கு, இப்படி பல காட்சிகள நீங்களே ஊகிக்கலாம், கேப்டன் ரொம்ப சிரமப்பட வேண்டாம்னு நினைச்சிட்டாரு போல.

அப்புறம் படத்தோட வசனங்கள் பத்தி சொல்லணும், படத்துல ஏதோ ஒரு சீன்ல பைலை தொலச்சா கூட கலைஞர் ஆட்சியில அப்படித்தான் இருக்கும்னு ஆரம்பிச்சுர்ராங்க, கிடைக்குற கேப்புல எல்லாம் கழக ஆட்சிய வாரு வாருன்னு வாருராரு, அட வில்லன கொல்ல கரண்ட் ஷாக் வக்கிறாரு, அப்பக்கூட அடிக்கடி கரண்ட் கட்டாக இது என்ன தமிழ்நாடா, ஆஸ்திரேலியாடான்னு பஞ்ச் அடிக்குறாரு, அவரு அடிக்கற பஞ்ச் டயலாக்குல வெள்ளக்காரனே ஷாக் ஆகுரான்னா பார்த்துக்கங்களேன், அடிக்கடி அடிக்கர பஞ்சுல காதுல பஞ்சு வெச்சாலும் ரத்தம் போறத யாராலும் தடுக்க முடியாது,
எனக்கு புடிச்ச வசனம் ‘அடிமாடு காணாம போனா கூட தேட ஆள் இருக்கும், ஆனா அரவாணிங்க காணாம போனா கேட்க யாரும் இல்லை’’ இந்த மாதிரி நிறைய வசனங்கள் நல்லா இருக்கு.

அடிக்கடி பாராட்டு விழா நடக்கரதையும், குடும்ப ஆட்சி நடக்கரதையும் படத்துல வர்ர எல்லா வசனத்துலயும் வாருராரு, ஆனா படம் புல்லா எல்லாரும் கேப்டன் புகழ் பாடிக்கிட்டே இருக்குராங்க, அட பாட்டுல கூட கேப்டன் புகழ் பாடிக்கிட்டே இருக்குராங்க, ஒவ்வொரு சீன்லயும் கேப்டன் கூட வர்ரவங்க கேப்டன புகழ்ந்துகிட்டே இருக்குராங்க, அத மட்டும் ஒன்னும் சொல்ல மாட்டேங்குறாரு, குடும்ப அரசியல் பத்தி சொல்ராரு, ஆனா இவரு குடும்பத்துலேயே அண்ணி, அண்ணன், மச்சான்னு குடும்ப அரசியலா இருக்கு, கேப்டனுக்கு ரெண்டு புள்ளக வேற இருக்கு அதுக நாளைக்கு அரசியலுக்கு வந்தா கட்சி பதிவி கொடுக்க மாட்டாரான்னு தெரியல, சரி நமக்கு எதுக்கு பொல்லாப்பு, தேமுதிக ரத்தத்தின் ரத்தங்கள் யாராவது இருந்தால் மன்னிக்க.

எந்த நேரத்துல டாக்டர் பட்டம் கொடுத்தாங்களோன்னு தெரியல, போதை ஊசி போட்டு இருக்குற பொண்ணுக்கு, குளூகோஸ் ஏத்துறாரு, அதுக்கு போதை தெளிஞ்சிடுது, டாக்டர்னு நிரூபிக்க வச்ச சீன் போல, ஒரு பாட்டு சீன்ல மினி ஆட்டோ கொண்டு வந்து நடமாடும் ரேஷன் கடைன்னு போர்டு மாட்டி காட்டுராங்க, அவரு ஆட்சிக்கு வந்தா நடைமுறை படுத்த போகும் திட்டமாம், ஏங்க இதுக்கு எத்தனை மினி ஆட்டோங்க வாங்குறது? கேப்டனுக்கு இருக்குற தகுதிக்கும், திறமைக்கும் சி.எம் போஸ்ட் எல்லாம் பத்தாது, பேசாம நேரா பிரதமர் பதவிக்கே போட்டி போடலாம், தமிழ்நாட்டுல ஏற்கனெவே இருக்குற கலைஞர் போதாதா? இன்னொரு கலைஞர் வேணுமா அதுவும் புரட்சி கலைஞர், வேணாங்க விட்டிடுங்க தமிழ்நாடு தாங்காதுங்க, அதுக்கும் மீறி நீங்க ஜெயிக்கணும்னு நினைச்சீங்கன்னா ஒரு அறிக்கை விடுங்க, மக்களே ஓட்டு போடுங்க இல்லைன்னா வருஷத்துக்கு மூணு படம் ரிலீஸ் பண்ணுவேண்ணு, அப்புறம் பாருங்க ஜனங்க துண்டை காணோம் துணிய காணோம்னு வந்து ஓட்டு போட்டு சி.எம் ஆக்கிருவாங்க



நேத்தைக்கே இந்த படத்த பார்த்துட்டு எழுதுவோம்னு நினைச்சேன், ஆனா அதுக்குள்ள எடிட்டர் சலீம் வேற இறந்துட்டாருன்னு பீதிய கிளப்பி விட்டுட்டாங்க, கூகிள் பஸ்ல கார்த்திக்குனு ஒரு நண்பர் வேற பிளாக் உயிரோட இருக்கணுமா இல்லை நீங்க உயிரோட இருக்குணுமான்னு வேற பயமுறுத்திட்டாரு, ஆனா படம் அப்படி ஒன்னும் பயங்கரமா இல்லை, இடைவேளை வரைக்கும் பொறுமையா இருந்தீங்கண்ணா இடைவேலைக்கு அப்புறம் நல்லா இருக்கும்.

அப்புறம் எடிட்டர் சலீம் இறந்ததுக்கு தட்ஸ்தமிழ் வாசகர்கள் போட்ட கமெண்ட்ஸ் கீழே போட்டு இருக்கேன், கொஞ்சம் படிச்சி பார்த்து உங்க கருத்த சொல்லுங்க.

பதிவு செய்தவர்: எடிட்டரின் உதவியாளர்
பதிவு செய்தது: 13 Dec 2010 4:24 pm
அன்னைக்கு அவரு விருத்தகிரி படத்தை எடிட் பண்ணிக்கிட்டு இருந்தார். விசயம் தெரிஞ்சு எல்லாரும் அந்த எடத்த விட்டு ஓடிட்டாங்க. அவரால வசனத்த சகிச்சுக்க முடியல. என்கிட்டே பஞ்சு வாங்கி காதுல வச்சுக்கிட்டு வேலை பார்த்தார்.
பதிவு செய்தவர்: எடிட்டரின் உதவியாளர்
பதிவு செய்தது: 13 Dec 2010 4:25 pm
அவரு கண்ணுல கண்ணீர் நிக்காம வழிஞ்சது. கிளைமேக்ஸ் டயலாக்க எடிட் செய்யுறப்போ அவரு மூக்கில ரத்தம் வழிய ஆரம்பிச்சது.
பதிவு செய்தவர்: எடிட்டரின் உதவியாளர்
பதிவு செய்தது: 13 Dec 2010 4:28 pm
நிலைமை ரெம்ப மோசமாகி கீழே விழுந்து வலிப்பு வர ஆரம்பிச்சுட்டது. அந்த நேரம் பார்த்து கரண்ட் போனதால. பாத்ரூம்ல ஒழிஞ்சிருந்த நான் ஒடி வந்து பார்த்தேன்.
பதிவு செய்தவர்: எடிட்டரின் உதவியாளர்
பதிவு செய்தது: 13 Dec 2010 4:32 pm
கடசியா டாக்டர்ட போனப்ப அவர் சொன்னார். இடைவேளைக்குள்ள கொண்டு வந்தா காப்பாத்திர்கலாம் இவரு முழுப் படத்தையும் பாத்திட்டாரு இனி ஒன்னும் செய்ய முடியாதுன்னுட்டாரு.
 பதிவு செய்தவர்: சலீம் ஆவி
பதிவு செய்தது: 13 Dec 2010 2:19 pm
மக்கா...மனுஷன வச்சி படம் பண்ணா எடிட் பண்ணலாம். ஆனா ஒரு காட்டெருமையை வச்சி எப்புட்ரா...எப்புடி...அதான்..முடியல..ஒரேடியா போய் சேர்ந்துட்டேன்...ஜக்ராதடா...தியேட்டர் பக்கம் போயிடாதிஈங்க...அப்புறம் உங்க வுயிருக்கு நான் கியரண்டீ இல்ல.




பதிவு செய்தவர்: நல்லவன்
பதிவு செய்தது: 13 Dec 2010 12:57 pm
யோவ் சென்சார் நாய்களா இந்த படத்துக்கு ஓகே பண்றதுக்கு பதில் ஒரு அணுகுண்டு போடா அனுமதி அளித்திருக்கலாமே


பதிவு செய்தவர்: விஜயகாந்த்
பதிவு செய்தது: 12 Dec 2010 12:41 am
இப்படத்தை என்னுடைய எதிர் கட்சிகளுக்காக சமர்பிக்கிறேன். மவனே என்னிடம் இருந்து யாரும் தப்ப முடியாது. படாத டெஸ்ட் பண்ணி பார்த்தேன், ரிசல்ட் ஓகே..




பதிவு செய்தவர்: கண்ணன்
பதிவு செய்தது: 11 Dec 2010 11:40 pm
என்ன சார் படத்தை முழுசா ஒரு தடவை தவறி எடிட் பண்ணும் போது பார்த்துடீங்களா????




பதிவு செய்தவர்: சாம்
பதிவு செய்தது: 11 Dec 2010 10:45 pm
அடடா... கேப்டன் டாக்டரா நடிச்சிருந்தா செல்போன் வெளிச்சத்திலேயே மூளை ஆபரேசன் பண்ணியிருப்பார். போலீஸ் வேஷம் போட்டதால காஷ்மீர் தீவிரவாதியா மட்டும்தான் பிடிக்க முடியும்.




 பதிவு செய்தவர்: நடந்தது என்ன
பதிவு செய்தது: 11 Dec 2010 6:16 pm
குறிப்பிட்ட நடிகருடன் பணியாற்றிய விஜி,சவுந்தர்யா,பிரதியுஷா,திருப்பதிசாமி மற்றும் சலீம் என தொடர மரணங்கள்.காரணம் என்ன இடைவேளைக்குப்பின்.காத்திருக்கவும்.




பதிவு செய்தவர்: பண்டா கரடி
பதிவு செய்தது: 11 Dec 2010 6:05 pm
காண்டா மிருகத்தைஎல்லாம் நடிக்க வச்சி வேடிக்கை பாத்தா இப்படித்தான்~.




 பதிவு செய்தவர்: gujilipa
பதிவு செய்தது: 11 Dec 2010 3:23 pm
மூஞ்சிக்கி ரோஸ் பவுடர் போடாமா ஒரு சீன்ல நடிசிருக்கிராராம் அதை பாது செத்துட்டானோ என்னவோ




 பதிவு செய்தவர்: நண்பன்டா
பதிவு செய்தது: 11 Dec 2010 4:36 pm
ரோஸ் பவுடர் போட்டாலும் சரி போடட்டியும் சரி அவனை பார்த்தாலே மரணம் வரும்




 பதிவு செய்தவர்: கிரிக்கெட்
பதிவு செய்தது: 11 Dec 2010 12:13 pm
சலீமின் உடல் தகனம் செய்யப்பட்டதா? அடக்கம் செய்யப்பட்டதா?
பதிவு செய்தவர்: வெட்டியான்
பதிவு செய்தது: 11 Dec 2010 12:14 pm
ஏன் பண்ணலைனா நீ பண்ண போறியா?





தியேட்டர் கிடைக்கலே... ரிலீஸ் பண்ண நான் பட்டபாடு....! - குமுறும் 'கேப்டன்'

பதிவு செய்தவர்: பக்கிரி
பதிவு செய்தது: 13 Dec 2010 5:17 pm
இந்த படத்த தீவிரவாதி கசபுக்கு போட்டு காண்பிச்சிருக்காங்க !படத்த பார்த்துட்டு என்னை தூக்குல போடுருங்க ,தூக்குல போடுருங்க ன்னு கதறி அழுதிருக்கான் !




 பதிவு செய்தவர்: விஜயகாந்த்
பதிவு செய்தது: 13 Dec 2010 10:48 am
கருணாநிதி கொடுமைய சகிஜிகிறீங்க என்னோட படத்தின் கொடுமைய ஏ சகிஜிக்க மாட்டேங்கிறீங்க




பதிவு செய்தவர்: வெறுத்தகிரி
பதிவு செய்தது: 13 Dec 2010 10:44 am
நீ பட்ட கஷ்டத்த சொல்லிட்ட இனி இந்த படத்த பாக்கபோற மக்கள் கஷ்டத்த யார்கிட்ட சொல்றது...கொடுமைடா சாமி குடிகார மாமிச மல அரசியல் பேசுது.




பதிவு செய்தவர்: மனிதன்
பதிவு செய்தது: 13 Dec 2010 10:44 am
ஏன்டா நீ திருந்த மாட்டியாடா பொறம்போக்கு தியேட்டர்ல எத்தனை பேர் இருக்காங்கனு எண்ணிட்டு வந்து பேசுடா




பதிவு செய்தவர்: கருத்து கந்தசாமி
பதிவு செய்தது: 13 Dec 2010 10:41 am
இந்த படம் பார்த்து முடிக்கிறதுக்குள்ள தியேட்டர்ல நாங்க பட்ட பாடு ..........செம ரம்பம் கேப்டன்
பதிவு செய்தவர்: நொந்த சாமி
பதிவு செய்தது: 13 Dec 2010 10:50 am
அதனால கந்த சாமி இனி நொந்த சாமி என்றே அழைக்கப் படுவார்





நண்பர் எப்பூடி ஜீவதர்ஷன் அவர்கள் டெரராக விமர்சனம் எழுத சொன்னார், நான் சீரியசாக விமர்சனம் எழுத முயற்சி செய்ததால், அவருக்காக ஒரு டெரர் வீடியோவை சமர்பிக்கிறேன்.


                         இந்த வீடியோவை பார்க்க ஸ்பீக்கர் தேவையில்லை

மொத்தத்தில் விருதகிரி - பாதி வேகாத வறுத்த கரி, இந்த பதிவிற்கு ஓட்டு போடாதவர்களுக்கு விருதகிரி ஒரிஜினல் சி.டி அல்லது தேமுதிக உறுப்பினர் அட்டை இலவசமாக வழங்கப்படும், தாங்களுக்கு எது தேவையோ அதை தாங்களே தேர்வு செய்து கொள்ளவும்.

23 comments:

  1. உங்க விமர்சனம் செமையா இருக்கு, கேப்டனையும் விருத்தகிரியையும் அப்பப்ப பாராட்டீற்று ரொம்பவும்தான் ஓட்டியிருக்கிறீங்க, உங்களுக்கு டாக்டரின் சார்பில் கண்டனங்கள் :-)

    நிறைய இடங்களை மாக் பண்ணி நல்லா இருக்கின்னு சொல்லணுமின்னு நினைச்சன், மொத்தத்தில எல்லாமே நல்லாயிருக்கு என்கிறதால உங்க விமர்சனம் 'A to Z' எல்லாமே சூப்பர்.

    அந்த வீடியோவை பாத்ததுக்கப்புறம்............. எதுவுமே சொல்ல முடியலிங்க வார்த்தை முட்டுது :-)

    ReplyDelete
  2. எப்பூடி.. said...

    நன்றி சார், எல்லாமே உங்க ஆசிர்வாதம்தான்.

    ReplyDelete
  3. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    இவரும் பாதிக்கப்பட்டு இருக்காரு

    ReplyDelete
  4. மச்சி கலக்குறீங்க போங்க.

    ReplyDelete
  5. karthikkumar said...

    மாப்ளே உண்மையாவா சொல்றீங்க?

    ReplyDelete
  6. இந்த பதிவிற்கு ஓட்டு போடாதவர்களுக்கு விருதகிரி ஒரிஜினல் சி.டி அல்லது தேமுதிக உறுப்பினர் அட்டை இலவசமாக வழங்கப்படும், ////

    இப்படியெல்லாம் அவசரப்பட்டு முடிவு பண்ணலாமா.. ஓட்டுப் போட்டாச்சுங்க.. நான் எஸ்கேப்..

    ReplyDelete
  7. அந்த chat history ஸ்டைல்...... கலக்கல்! இந்த வார்னிங் போதுமே! மி த எஸ்கேப்பு!

    ReplyDelete
  8. // படம் இண்டர்வெல் வரைக்கும் எடிட் பண்ணாத கோலங்கள் சீரியல் மாதிரியே போகுது //
    செம லைன்...

    அரவாணிகள் பற்றி என்ன சொல்லியிருக்கார்...

    ReplyDelete
  9. பதிவுலகில் பாபு said...

    தப்பிச்சிட்டீங்க பாபு, கொ.ப.செ போஸ்ட் ஒன்னு காலியா இருக்காம் டிரை பண்ணுறீங்களா?

    ReplyDelete
  10. எப்பூடி.. said...

    நன்றி சார், கண்டிப்பா எழுதறேன்.

    ReplyDelete
  11. Chitra said...

    நீங்களும் தப்பிச்சிட்டீங்களா, நான் யாருக்குதான் கொடுக்கறது உறுப்பினர் அட்டையை?

    ReplyDelete
  12. philosophy prabhakaran said...

    படத்தோட முக்கிய சீனே அரவாணிகள் பத்தியதுதான், அத சொன்னா படம் பார்க்குறவங்களுக்கு இண்ட்ரஸ்ட் போயிரும், அதனால படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க

    ReplyDelete
  13. ஹலோ, ஓட்டும் போட்டாச்சு..பின்னூட்டமும் போட்டாச்சு..சி.டி.யை கண்டு அனுப்பித் தொலையாதீங்க!.அப்புறம் அந்த வேட்டியோட தாவுற போட்டோ டெரரா இருக்கே..இன்னும் கொஞ்சம் லேட்டா எடுத்திருந்தாங்கன்னா............

    ReplyDelete
  14. செங்கோவி said...

    வாங்க செங்கோவி ஓட்டு போட்டதுக்கு நன்றி, லேட்டா எடுத்திருந்தா உங்க கண்ணு அவிஞ்சிருக்கும் அவ்வளவுதான்

    ReplyDelete
  15. உங்க அட்ரஸ் தேவை .நண்பர் ஒருவர் விஜயகாந்த் வெறியர் .அவர் உங்களை நேரில் சந்திக்க ஆசைபடுகிறார்

    ReplyDelete
  16. பேசாம நேரா பிரதமர் பதவிக்கே போட்டி போடலாம்,////

    naanga universal varaikkum think pannikkittu irukkom .... neenga avara oru chinna koottukkula adaikka paakkuringalaa ????

    ReplyDelete
  17. நா.மணிவண்ணன் said...

    ஏங்க அதுதான் பதிவிலேயே ரத்தத்தின் ரத்தங்கள் மன்னிச்சிருங்கன்னு சொல்லியிருக்கேனுல்ல, அப்புறம் எதுக்குங்க கொலவெறி? உங்க நண்பர்கிட்ட சொல்லிடுங்க, அப்புறம் கண்டிப்பா அட்ரஸ் வேணும்னா நம்பர் 6, கோயிந்தா ஸ்ட்ரீட், கோயிந்தாபுரம், கோயம்புத்தூர் - 176000000

    ReplyDelete
  18. மங்குனி அமைச்சர் said...

    அமைச்சரே நீங்க யுனிவர்சல் வரைக்கும் திங்க் பண்ணாலும், அவரு திங்க் பண்ரது தமிழ்நாடு அளவுக்குதான இருக்கு?

    ReplyDelete
  19. சனி மாலை விருதகிரி பார்த்த பாதிப்பில் இருந்து மீளவில்லை. இங்கயுமா நண்பா ?? சிவா, எட்ரா ஓட்டம்......எஸ்கேப்........

    ReplyDelete
  20. நா.மணிவண்ணன்said...
    உங்க அட்ரஸ் தேவை .நண்பர் ஒருவர் விஜயகாந்த் வெறியர் .அவர் உங்களை நேரில் சந்திக்க ஆசைபடுகிறார் //

    அது யாரு என்ன விட கொல வெறியர் மணி.

    ReplyDelete
  21. சிவகுமார் said...

    நீங்க எல்லாம் ரொம்ப லேட்டு நாங்க எப்பவோ படம் பார்த்து ஆஸ்பத்தியில அட்மிட் ஆகி இப்பதான் டிஸ்சார்ஜ் ஆகி இருக்கோம், எங்க கிட்டயேவா?

    ReplyDelete
  22. boss... virthakiri.... oru hollywood pada remake....... "TAKEN" is a 2008 French action thriller film

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!