லவ் பண்றாங்களாம் லவ்வு, நானும் பார்த்துட்டுதாங்க இருக்கேன் இப்ப லவ் பன்றோம்கற பேர்ல நடக்கற கூத்தை, எத்தனை நாள்தான் சும்மா இருக்குறது, பொறுத்து பொறுத்து பார்த்தாச்சு, அதனால இன்னைக்கு ஒரு முடிவு பண்ணிட்டேன், நான் படிக்கும் போது இந்த லவ்வு கிவ்வெல்லாம் எப்படி இருந்த்து, என்னோட வாழ்கையில வந்த லவ்வு அதனோட விளைவு என்னங்கறத எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன், இது முழுக்க முழுக்க என்னோட சொந்த வாழ்க்கையில நடந்தது சுயசொறிதல் இல்லைன்னா சுயசரிதம் மாதிரி, படிக்க புடிக்காதவங்க இப்பவே வெளியேறிடலாம், படிச்சிட்டு திட்டாதீங்க, இந்த பதிவில ஆரம்பிக்கிறேன், வரவேற்பு இருந்தா தொடருவேன், இல்லைன்னா நிறுத்திக்கிறேன், டெய்லி சொந்தகதையை போட்டு உங்களை நொந்தகதை ஆக்கிருவனோன்னு நினைக்காதீங்க, வாரத்துல ஒரு நாள் மட்டும் போடறேன்..
நான் ஸ்கூல்ல படிக்கும் போதோ காலேஜ் படிக்கும் போதோ இப்ப இருக்குற மாதிரி எல்லாம் கிடையாது, ரொம்ப கண்டிப்பா இருப்பானுங்க வாத்தியாருங்க, பொண்ணுங்கள எல்லாம் பார்க்கவும் முடியாது, பார்த்தாலும் பேசவும் முடியாது, இப்படி ஒரு காலமான்னு 30 வருசத்துக்கு முன்னாடி நினைச்சு பார்க்காதீங்க ஜஸ்ட் 7 அல்லது 8 வருசத்துக்கு முன்னதான், படிப்பு உண்டு இல்லைன்னா விளையாட்டு உண்டுன்னுதான் இருக்க முடியும்,
சைட் அடிக்க போனாலும் பொண்ணுங்க ஸ்கூல் விட்டு வரும்போதோ இல்லை டியூசன் போயிட்டு வரும்போது மட்டும்தான் பார்க்க முடியும், அப்பக்கூட புள்ளைங்க கண்டுக்காதுங்க, மீறி பையன புடிச்சி போச்சுன்னா ஓரக்கண்ணால மட்டும் லேசா பார்க்கும்பாருங்க சும்மா ஜிவ்வுன்னு இருக்கும், அப்பவெல்லாம் எனக்கும் என்னொட பிரண்டுக்கும் பெரிய போட்டியே நடக்கும் யாருக்கு அதிக லவ்வர்னு, லவ்வர்னதும் உண்மையிலேயே லவ் பண்ணுவாங்கன்னு நினைக்காதீங்க தெருவுல போகுற பொண்ணுங்கள்ள யாரு அழகான பொண்ணோ அது எல்லாத்தையும் லவ் பண்னுவோம், இதில யாருக்கு அதிக லவ்வர்னு பெரிய போட்டியே நடக்கும், நான் கூட 14 பொண்ணுங்கள லவ் பண்னேன், ஒன்னுகூட செட் ஆகல,
ஏன்னா 14 பொண்ணுகளையும் எப்படி டெய்லி பாலோ பண்ண முடியும்? ஒரு பொண்ண பாலோ பண்ணி இன்னைக்கு போனா இன்னொரு பொண்ண மிஸ் பண்ணிருவோம், இன்னொரு பொண்ணு பின்னாடி போனா வேறொரு பொண்ண மிஸ் பண்ணிருவோம், ஸ்கூலல கொடுக்குற டைம் டேபிள்ள குறிச்சி வச்சி பாலோ பண்ணுவோம், அப்ப்டியும் ஒன்னு ரெண்டு புள்ளக மிஸ் ஆயிரும், பேரு வேற தெரியாது, ஏன்னா பார்க்குற புள்ளயெல்லாம் லவ் பண்ணுனா பேரு எப்படி தெரிஞ்சுக்க முடியும்? எந்த வீதி பொண்ணு, எந்த டியூசன் செண்டர் பொண்ணு, எந்த ஏரியால பார்த்தோம் இப்படி கணக்கு வச்சுதான் பாலோ பண்ணிட்டு இருந்தேன், ஏன் அப்படி கஷ்ட்டபட்டு பாலோ பண்ணனும் ஒன்னு ரெண்டோட விட்டுட வேண்டியதுதானேன்னு கேட்குறீங்களா? அப்படி எல்லாம் விட்டுட முடியாதுங்க ஏன்னா ஒன்னொன்னும் அம்புட்டு அழகா இருக்கும், விட்டுட்டா மனசு கேட்காதுல்ல, இப்படி ஒன்சைடு ஆம்லெட்டாவோ நிறைய காதல்கள் வேகாம போன காலத்துல தான் நான் படிச்சேன்,
இவ்வளவு கஷ்ட்டப்பட்டு டிரை பன்ணியும் ஒன்னும் செட்டாகல்ல, அப்படியே போயிட்டு இருக்குற காலத்துலதான் ஒரு ஐயரு பொண்ண பார்த்தேன்...
தொடரும் ...
[டிஸ்கி:- நண்பர்களே இந்த பதிவை தொடரலாமா வேண்டாமா என பின்னூட்டம் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்]
ஆரம்பிச்சுட்டீங்க.. அப்புறம் பாதியில விட்டால் எப்படி..
ReplyDeleteகண்டிப்பாகத் தொடருங்க..
ஒரே நேரத்துல 14 பேர்.. ம்ம்ம்ம்...
பதிவுலகில் பாபு said...
ReplyDeleteஅப்படி எல்லாம் இல்லை நண்பா உங்களுக்கு உண்மையிலேயே பிடித்திருந்தால் மட்டுமே தொடருவேன், அது அறியாத வயசு, புரியாத மனசு.
நண்பா நீங்க ஒரே நேரத்துல பதினாலு பாத்திருக்கீங்க .நா ஜஸ்ட் 4 தான் பார்த்தேன் . . ஆனாலும் கடைசிவரைக்கும் ஒண்ணுமே செட் ஆகல . அதை பற்றி பதிவாக போடலாம் . நல்ல காமெடி யா இருக்கும் . பார்ப்போம்
ReplyDeleteநா.மணிவண்ணன் said...
ReplyDeleteகண்டிப்பா போடுங்க நண்பா, அப்புறம் தொடரலாமா வேண்டாமான்னு சொல்லலியே?
கண்டிப்பாக தொடரவும்
ReplyDeleteஅப்பறம் அந்த லாஸ்ட் போட்டோ சூப்பருங்க
ReplyDeleteஅது அறியாத வயசு, புரியாத மனசு///
ReplyDeleteசரி விடுங்க விடுங்க இதெல்லாம் இருக்கறதுதான்.... எழுதுங்க எழுதுங்க..
நா.மணிவண்ணன் said...
ReplyDeleteரொம்ப தேங்ஸ்சுங்க, ஹி ஹி அந்த போட்டோல இருக்கற பிகர் எனக்கும் ரொம்ப புடிச்சு போச்சுங்க அதான் போட்டேன்
karthikkumar said...
ReplyDeleteமாம்சு தேங்ஸ்சு, எல்லாரும் என்னோட இனமாத்தான் இருக்கிறீங்க :-)
என்னுடைய 50 ஆவது பாலோயர் தமிழன் என்று சொல்லடாவிற்கு நன்றி
ReplyDeleteதொடருங்க ..படிக்க சிரிப்பா இருக்கு..:))) அப்புறம் உங்க வலைப்பூவில் ஓபன் பண்ணும்போது இந்த youtube collection of songs சூப்பர்...:)
ReplyDeleteஆனந்தி.. said...
ReplyDeleteநன்றி ஆனந்தி மேடம் உங்களின் வருகைக்கும், கருத்துக்கும், பாட்ட கேளுங்க என்ஜாய் பண்ணுங்க.
உங்க அறிவுக்கும் திறமைக்கும் ஒரு ஃபிகர் கூட செட் ஆகலியா????? ஓ மை காட். நீங்க இரவு வானத்தில் ஃபாலோ பண்ணியிருப்பீங்கன்னு நினைக்கிறேன். பகல் வானத்துல தேடியிருந்தா உங்களுக்கு செட் ஆயிருக்கும்.
ReplyDeleteDing Dong said...
ReplyDeleteவாங்க சார் உங்களைதான் ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்தேன், உங்க அளவுக்கு நமக்கு டேலண்ட் பத்தாதுங்க, இது எல்லாம் பிளாஸ்பேக்குங்க, அப்படித்தான் இருக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க
This comment has been removed by a blog administrator.
ReplyDelete//மீறி பையன புடிச்சி போச்சுன்னா ஓரக்கண்ணால மட்டும் லேசா பார்க்கும்பாருங்க சும்மா ஜிவ்வுன்னு இருக்கும்//
ReplyDelete"சிறு பொன்மணி அசையும் " பாடல் பின்னணியில் ஒலித்ததா?
அயர் பொண்ணா, அப்ப "மாடத்தில கன்னி மாடத்தில" பாடல் ஒலிக்குமா?
எப்பூடி.. said...
ReplyDeleteவாங்க தல, ஐயர் பொண்ணுனதும் உங்க கற்பனை போறது புரியுது ஆனா? அது இப்ப வேணாம், நீங்க தொடரலாமான்னு சொல்லுங்க அடுத்த வாரம் வரும். மலைக்கோவில் வாசலில்தான் அந்த நேரத்துல பேக்ரவுண்ட் மியூசிக் :-)
தொடரவும்.
ReplyDeleteஜோதிஜி said...
ReplyDeleteசார் நீங்க வந்ததே பெரிய சந்தோசம், நன்றிங்க சார்.
தொடருங்க! :-)
ReplyDeleteஜீ... said...
ReplyDeleteநன்றி ஜீ, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், தொடரலாம்னுதான் நினைக்கிறேன்
தொடருங்க :-)
ReplyDeleteதொடருங்க பாஸ்..எங்களுக்கும் டைம் பாஸா இருக்கும்ல!
ReplyDeleteதாராளமாக தொடருங்கள்... ஆனால் உங்கள் எண்ணங்களை உங்கள் எண்ணங்களாக மட்டும் வெளிப்படுத்துங்கள்... லவ்வுன்னாலே இப்படித்தான், லவ் பண்றவங்க எல்லோருமே அசிங்கம் பிடித்தவர்கள் என்ற ரீதியில் எழுத வேண்டாம்...
ReplyDeleteகண்டிப்பாகத் தொடருங்கள்...
ReplyDeleteகிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
அடடா மாட்டிட்டாரே நமக்கு எதும் கிடைக்கலியே... பொறாமையா இருக்கே
ReplyDeleteகடமையை செய்ங்க பலன எதிர்பார்காதீங்க அது தானா வரும்.
ReplyDelete\\\\சில நேரங்களில் நட்சத்திர கூட்டமாகவும், சில நேரங்களில் ஒற்றை நிலவாகவும், பல நேரங்களில் இரவு நேர வானத்தை போல மர்மமாகவும் நகருகிறது என் வாழ்க்கை பயணம்/////
ReplyDelete---ஏங்க நீங்க குடுகுடுப்பைக்காரரா ?
ஐயோ என்னங்க பதிவு படிக்கிறப்ப ஷகிலா படப் பாட்டெல்லாம் கேட்குது.
தாராளமா லவ் பண்ணலாம் பலரையும்
ReplyDeleteமனதளவில்
எப்பூடி.. said... நன்றி தல
ReplyDeleteசெங்கோவி said... நன்றி செங்கோவி சார்
philosophy prabhakaran said... தப்பா புரிஞ்சிட்டீங்கன்னு நினைக்கிறேன் பிரபா, நான் மத்தவங்க லவ்வ பத்தி எழுத வரல, என்னுடைய அனுபவங்களை மாட்டுமே, மத்தபடி தப்பான விஷயம்னா தப்புன்னுதானே சொல்லனும்?
பிரஷா said... நன்றி மேடம் உங்களுக்கும் வாழ்த்துக்கள்
சி.பி.செந்தில்குமார் said... பாஸ் நாந்தான் உங்களை பார்த்து பொறாமைபடனும்
இனியவன் said... ஹா ஹா ஹா சரிங்க சார்
சிவகுமாரன் said... ஐயையோ எப்படி எழுதினாலும் குத்தம் கண்டிபிடிக்கறங்களே? இது ஷகிலா பாட்டா உங்களுக்கு அதே நினைப்பாவே இருக்கறது?
Meena said... நன்றி மீனா மேடம் இது எல்லாம் நான் சின்ன பையனா இருந்தப்ப நடந்த்து, என்ன எல்லாரும் இதே மாதிரி பண்ணி இருப்பாங்க, வெளியில சொல்ல மாட்டாங்க நான் சொல்ல்றேன் அவ்வளவுதான்
தொடராலாமே...! நல்லாதானே இருக்கு..! எல்லாம் பழைய ஞாபகத்தை கொண்டு வருது...!
ReplyDeleteதங்கம்பழனி said...
ReplyDeleteநன்றி சார், கண்டிப்பா தொடருகிறேன்
தொடரவும்.
ReplyDelete// நான் மத்தவங்க லவ்வ பத்தி எழுத வரல, என்னுடைய அனுபவங்களை மாட்டுமே //
ReplyDeleteஅப்படியா... தாராளமா எழுதுங்க.... எனது வாழ்த்துக்கள்...
THOPPITHOPPI said... நன்றி சார்
ReplyDeletephilosophy prabhakaran said... சரி நண்பா, புரிதலுக்கு நன்றி
14 புள்ளைங்கன்னு சொல்லிட்டு தொடரட்டுமான்னு ஒரு கேள்வி வேற... தாராளமா தொடருங்க...
ReplyDeleteJust now I read the LOVE-(Bio)-Graphy-(
ReplyDeleteIravu Vaanam-Autograph),
Interesting..,
Be sure to copyright the story!
otherwise..,
U also in the Q ...of Storytheft by Tamil Cinema Directors!
My vote for the post and recommend to continue..,
Sai Gokula Krishna said... நன்றி நண்பா நம்ம டைரக்டருகளுக்கு வெளிநாட்டு படத்த காப்பி அடிக்கவே நேரம் போதாது, அப்புறம் எங்க என்னோட கதையை காப்பி அடிக்க போறாங்க, நன்றி நண்பா கண்டிப்பா தொடரப் போறேன்.
ReplyDelete