Friday, December 17, 2010

சபரிமலைக்கு போறவங்களுக்கு சில டிப்ஸ்




சபரிமலை சீசன் ஆரம்பிச்சாச்சு, பல பேர் மாலை போட்டு சாமியார் ஆகி இருப்பாங்க, இதுல உங்களுக்கு தெரிஞ்சவங்களோ, நண்பர்களோ, சொந்தகாரங்களோ இருப்பாங்க, நானும் இரண்டு வருஷம் மாலை போட்டு இருக்கேன்கறதால  எனக்கு தெரிஞ்ச டிப்ஸ்ஸ சொல்றேன் கேட்டுகோங்க, இது தவிர வேற ஏதாவது டிப்ஸ் உங்ககிட்ட இருந்தா பின்னூட்டத்துல பகிர்ந்துக்கோங்க, சபரிமலைக்கு போறவங்களுக்கு உபயோகமா இருக்கட்டும்.


முதல்ல மாலை போட முடிவு பண்ணிட்டீங்கன்னா ஒரு மண்டலம் அதாவது 48 நாள் முழுசா போடரமாதிரி பார்த்துக்கோங்க, இந்த ஒரு நாள் சாமி, மூணு நாள் சாமி வேண்டாமே, மாலை போடுரதே அந்த 48 நாள் கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாம நல்லபடியா இருக்கணும்கறதுக்காகத்தான், அப்பத்தான் நல்ல பழக்கங்களை தொடர முடியும், 2 நாள், 3 நாள்னா அப்புறம் பழைய குருடி கதவை தொறடி கதைதான் ஆகும்.

அப்புறம் குருசாமி தேர்ந்தெடுக்கும் போது நல்ல வயதானவரா இருந்தாலும் அனுபவசாலியா பாருங்க, ஏன்னா பாதிப்பேரு முழு குடிகாரனுங்களா இருந்துட்டு இந்த சீசன்ல மட்டும் சாமியாரா மாறிடுவாங்க, இது என்னோட அனுபவத்துல நடந்தது, நான் ரெண்டாவது வருஷம் மாலை போடும்போது எங்க குருசாமி திரும்பி வரும்போது வேனுக்கு கொடுக்க வேண்டிய காசு எல்லாத்துக்கும் சரக்கு அடிச்சிட்டு மட்டை ஆகிட்டாரு, வேன் டிரைவர் அவங்க ஓனர் தோட்டத்துல கொண்டு போய் கட்டி வச்சிட்டாரு, நாங்களும் ஹவுஸ் அரஸ்ட்ல இருந்தோம், அப்புறம் எங்க ஊரு ஆளுக வந்துதான் மீட்டுட்டு போனாங்க

மலைக்கு போக வேனோ, பஸ்ஸோ புடிக்கும் போது நல்ல வண்டியா பார்த்து புடிங்க, முடிஞ்ச அளவுக்கு வருசா வருசம் ஒரே டிராவல்ஸ்ல வண்டி எடுத்தா நல்ல வண்டியா கிடைக்கும், ஏன்னா சீசன் டைம்கறதால அவனவன் இந்தியன் படத்துல வர மாதிரி டப்பா பஸ்ஸ எல்லாம் பெயிண்ட் அடிச்சி வச்சிருப்பானுங்க, இல்லைன்னா சபரிமலை சீசனுக்கு 3 மாசம் முன்னாடியே யாரெல்லாம் மலைக்கு போறதுன்னு முடிவு பண்ணி வண்டி புக் பண்ணி வச்சிடுங்க, இது சின்ன வண்டி கார், மாருதி வேனுக்கும் பொருந்தும்

பெரும்பாலும் சபரிமலைக்கு போறவங்க தரிசனம் முடிஞ்சதும் கேரளா டூர் அடிக்க விரும்புவாங்க, அதனால ஐடியா, வோடபோன் சிம்மு ஒன்னு வாங்கிக்கோங்க, அதான் ஓசியிலயே நிறைய கிடைக்குதே ஏன்னா கேரளாவுல எங்க போனாலும் ஓரளவு நெட்வொர்க் கிடைக்கிறது இந்த இரண்டுலதான், பிஎஸ் என் எல், ஏர்செல் வச்சிருந்தீங்கண்ணா வேஸ்ட்.

அப்புறம் கேரளாவுல எங்க போனாலும் இருக்குறட் ஏ டி எம் ஸ்டேட் பாங்க் ஏடிஎம் தான், அதனால உங்ககிட்ட ஸ்டேட் பாங்க் அக்கவுண்ட் இருந்ததுன்னா அதுல கணிசமா பணம் போட்டு வச்சிருங்க, யூஸ் புல்லா இருக்கும், இல்லைன்னா மாஸ்ட்ரோ, சிரஸ் இருக்குற டெபிட் கார்டு இருந்தாலும் பரவாயில்லை.


அப்புறம் குழந்தைகள சபரிமலை கூட்டிட்டு போறவங்க, கடையில விக்கிற ஐ டி கார்டு ஒன்ன வாங்கி பேரு அட்ரஸ் போன் நம்பர் எல்லாம் எழுதி கழுத்துல மாட்டி விட்டுடுங்க, ஏன்னா சரங்கொத்தியில கூட்டம் அதிகமா இருக்கும், காணாம போனா கூட தொடர்பு கொள்ள ஈசியா இருக்கும், முடிஞ்சா உங்க போன் நம்பர குழந்தைகளுக்கு மனப்பாடம் பண்ணி விட்டுடுங்க, அதே மாதிரி நீங்களும் ஐ டி கார்டு யூஸ் பண்ணலாம் தப்பில்ல, உங்க பர்ஸ்ல விசிட்டிங் கார்டு எப்பவும் இருக்கட்டும், பம்பை நதியில் குளிக்கும் போதும் குழந்தைகளின் மேல் ஒரு கண் இருக்கட்டும்.


அப்புறம் கூடவே சின்னதா ஒரு குடை, மப்ளர், இதயெல்லாம் தவறாம ஒன்னு வாங்கி வச்சிருங்க, ஏன்னா கேரளாவுல மழை எப்ப பெய்யும், எப்படி பெய்யும்னு யாராலயும் சொல்ல முடியாது

சுகர், பிபி உள்ளவங்க மலைக்கு போறதுக்கு முந்தியே டாக்டர பார்த்து சரியான மருந்து, மாத்திரைகள வாங்கி தயாரா வச்சிருங்க, மறக்காம அத எப்போ, எந்த நிலையில சாப்பிடனும்னு கவர்ல எழுதி வச்சிருங்க, ஒரு வேளை உங்களுக்கு முடியாம போனா மத்தவங்க பார்த்து உங்களுக்கு உதவ கூடும், முடிஞ்சா இங்கிலீஸ், மலையாளத்துலயும் எழுதலாம், அதுல கண்டிப்பா உங்க டாக்டரோட போன் நம்பர், கிளீனிக் பேர் இருக்கட்டும்.

கடைசியா எப்படா மாலையை கழட்டுவோம் சரக்கு அடிக்கலாம்னு இருக்காதீங்க, சில பேரு மலையை விட்டு இறங்குணதுமோ வீட்டுக்கு போன் பண்ணி சிக்கன் மட்டன்னு ஆர்டர் பண்ணுறது, குவாட்டரு கோழி பிரியாணின்னு இறங்கிடுவாங்க, முடிஞ்ச அளவுக்கு தண்ணி அடிக்கரது, பீடி, சிகரட் குடிக்கரது, அசைவ உணவு சாப்பிடரதை தவிருங்க, சாமி பீலிங்க கண்டினியூ பண்ணி பாருங்க,எந்தளவு கண்டினியூ பண்ணுறீங்களோ அந்தளவு உங்க மனசும் உடம்பும் நல்லா இருக்கும், இப்படியாவது தமிழ்நாட்டுல மது விற்பனை குறையட்டும், அப்படியே உங்க வீட்டு பட்ஜெட்டும் குறையட்டும்


சபரிமலைக்கு போகும் ஐயப்ப பக்தர்களே, உங்களின் பயணம் இனிதாகவும், பாதுகாப்பாகவும் அமையட்டும், உங்களுக்கு ஐயப்பனின் அருள் நீங்காமல் கிடைக்கட்டும், சுவாமியே சரணம் ஐயப்பா, நன்றி.
  
  

23 comments:

  1. சாமியே.... சரணம் ஐயப்பா...

    ReplyDelete
  2. மாலை போட்டிருக்கும் போது கடைப்பிடிக்கும் விஷயங்கள், மாலை கழட்டிய பின் தொடரவேண்டும் என்பதே தமிழக தாய்மார்களின் விருப்பமாகவும் உள்ளது

    ReplyDelete
  3. பாரத்... பாரதி... said...

    உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாரதி, என்னுடைய எண்ணமும் அதுதான்.

    ReplyDelete
  4. Chitra said...

    நன்றி சித்ராக்கா

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு..

    ReplyDelete
  6. ஒரு நாள், இரண்டு நாள் சாமி அல்ல, நேராக சென்று பம்பையில் மாலை போட்டு சபரி சென்று திரும்பி அதே பம்பையில் மாலை கழட்டி ஆசாமிகளாக வருபவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்

    ReplyDelete
  7. பதிவுலகில் பாபு said...

    நன்றி பாபு சார்

    ReplyDelete
  8. KUPPURAJ said...

    அப்படி மாலை போடுறதுக்கு போடாமலேயே இருக்கலாம், உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்

    ReplyDelete
  9. சபரிமலைக்கு இங்கிருந்து பஸ் சேவை இல்லையாம்ப்பா :-)

    ReplyDelete
  10. எப்பூடி.. said...

    விமான சேவையாவது இருங்குங்களா இல்லை அதயும் நிறுத்திபுட்டாங்களா?

    ReplyDelete
  11. இதில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண் அழைத்து சங்கடப்பட்டு விட்டேன். மின் அஞ்சல் முகவரி அந்த நண்பருடையது தான்போல.

    ஏனிந்த குழப்பம் நண்பரே,

    ReplyDelete
  12. என்ன திடீர்னு இந்த மாதிரி ?

    ReplyDelete
  13. THOPPITHOPPI said...

    யாருக்காவது பயன்படட்டுமே என்ற எண்ணம்தான், உங்கள் வருகைக்கு நன்றி தொப்பி சார்.

    ReplyDelete
  14. ரஹீம் கஸாலி said...

    நண்பரே உங்களுக்கு பதிலளித்துள்ளேன்

    ReplyDelete
  15. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  16. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  17. ரஹீம் கஸாலி said...

    பரவாயில்லை நண்பா, நான் எதுவும் தவறாக நினைக்கவில்லை

    ReplyDelete
  18. அற்புதமான ஆன்மீக பதிவு..இரவு வானம்!! மிக்க நன்றி!

    ReplyDelete
  19. உங்க தளத்திற்கு வரும்போதெல்லாம் அந்த மலையாள பாட்டு அருமை.

    படம் பெயர்?

    ReplyDelete
  20. சிவகுமார் said...

    நன்றி சிவக்குமார், இது ஆன்மீக பதிவு எல்லாம் இல்லை, எனக்கு தெரிஞ்ச சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளேன் அவ்வளவுதான்

    ReplyDelete
  21. THOPPITHOPPI said...

    வாங்க தொப்பி தொப்பி சார், அந்த படத்தின் பெயர் நீலத்தாமரா, அந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒருநாளைக்கு பத்து இருபது தடவை கூட கேட்பேன், அது நம்ம வித்தியாசாகர் இசையமைத்தது, ஏனோ வேறு பாடலை மாற்ற தோணவில்லை,அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!