Thursday, December 9, 2010

குழந்தைய பெக்கச் சொன்னா குட்டி சாத்தானை ...




நேத்து என்னோட பிரண்டுக்கு போன் பண்ணினேன், அவனோட பையன் போன எடுத்தான், பையனுக்கு இப்ப 3 1 /2  வயசு ஆகுது, எடுத்தவுடனே யாருடா பேசறதுன்னு கேட்டான், இது என்னடா வம்மா போச்சுன்னு தம்பி நாந்தான் பேசறேன், உன்னோட அப்பாகிட்ட கொடுடான்னு கேட்டேன், அதுக்குள்ள என் பிரண்டும் பையன் போன் பேசறத பார்த்து வந்திருக்கான், வந்தவன் அப்படி எல்லாம் பேசக் கூடாதுன்னு சொல்லுவான்னு தான நினைக்கிறீங்க, அதுதான் இல்லை மவனே நீ திட்டுடா அவனன்னு கிளப்பி விட்டுட்டான், அந்த பையன் என்னை மானாவாரியா நாயே, பேயே, என்னடா பண்ணுவே, அடிச்சனான்னு எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேசறான், என் பிரண்டும் பக்கத்துல உட்காந்து கெக்கேபிக்கேன்னு சிரிச்சிட்டு இருக்கான், எனக்கு வந்த கோபத்துக்கு கையில கிடைச்சான் அவனோட அவன் பையனையும் சேர்த்து கொன்னுடலாம்னு முடிவு பண்ணிட்டேன், நானும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது, புள்ளய பெக்கச் சொன்னா தொல்லைய பெத்து வச்சிருக்கான்.



என் பிரண்டு மட்டும் இல்லைங்க, நானும் நிறைய இடத்துல பார்த்திருக்கேன், நிறைய சில்வண்டுக போறவங்க, வர்றவங்க, வயசானவங்க, பெரியவங்க எல்லாத்தையும் டா போட்டுதான் கூப்பிடும், அவங்க அப்பா, அம்மாவையே பேரு சொல்லி கூப்பிடும், இல்லைன்னா என்னடா, என்னடீன்னு கூப்பிடும், அதுகளை பெதத்ததுகளும் கொஞ்சம் கூட வியாக்கியானமே இல்லாம சிரிச்சிகிட்டு நிற்பாங்க, என் பையன் எப்படி பேசரான் பார்த்தியான்னு பெருமைபீத்தகளையங்களா வேற சொல்வாங்க, இதுவா பெருமை? இவங்களை எல்லாம் பார்த்தா வாயில உரலை விட்டு குத்தலாம்னு தோணுது, இன்னும் கொஞ்சம் பேரு இருக்காங்க, யாராவது குழந்தைய பார்க்க போனா மாமாவுக்கு ஒரு முத்தம் கொடு, பிளையிங் கிஸ் கொடு, ஷேக் கேண்ட்ஸ் கொடுன்னு சொல்ரது, இவங்க எல்லாம் குழந்தைய வளர்க்கறாங்களா நாய்க்குட்டிய வளர்க்கறாங்களான்னே தெரியல, இந்த காலத்து சில்வண்டுக பிஞ்சிலயே பழுத்துருதுங்க, அட்லீஸ்ட் குழந்தையா இருக்கும் போதாவது விட்டு வைப்பாங்களான்னு பார்த்தா பேரண்ட்ஸே கிஸ் கொடுக்கரதுக்கு டிரைனிங் கொடுக்குறாங்க, இதுக எல்லாம் வளர்ந்தா குட்டி சாமியார் ஆகாம வேற என்ன ஆகும்?

அப்புறம் இன்னொன்னு கேட்கறது, இவரு யாருன்னு தெரியுமான்னு கேட்டா? அந்த குழந்தை சொல்லும் இந்த மாமான்னு, அது என்னங்க எல்லாருக்கும் நாமதான் மாமாவா? இத இங்கிலீசுல சொன்னாக்கூட பரவாயில்லை ஒன்னும் தெரியாது, சித்தப்பா, பெரியப்பா, அட அண்ணான்னு கூப்பிட்டாக்கூட நல்லா இருக்கும், இனிமே குழந்தைங்க கூப்பிடுறதுக்கே தனியா ஏதாவது உறவுமுறை கண்டுபிடிக்கணும், அப்படி யாராவது கண்டுபிடிச்சிருந்தீங்கண்னா தயவு செஞ்சு பின்னூட்டத்துல தெரிவியுங்க, உங்களுக்கு புண்ணியா போகும்.


அதனால நான் கடைசியா என்ன சொல்ல வர்றேன்னா, குழந்தைகள வளர்க்கும் போது நல்ல பழக்க வழக்கங்கள மட்டுமே சொல்லி கொடுங்க, யாராவது வீட்டுக்கு வந்தாலோ இல்ல போன் பண்ணினாலே, வாங்க, நல்லா இருக்கீங்களா, வீட்டுல அங்கிள் ஆண்ட்டி எல்லாரும் நல்லா இருக்காங்களா, சாப்பிட்டீங்களா, உட்காருங்க, இப்படி நல்ல வார்த்தைகள சொல்லி கொடுங்க, கிஸ் பண்றது, பிளையிங் கிஸ் கொடுக்கரது, கை கொடுக்கரது, இத எல்லாம் சொல்லி கொடுக்கறதுக்கு பதிலா பிரஸ் பண்றது எப்படி, பாத்ரூம் போறது எப்படி, டிரஸ் பண்றது எப்படி, அவங்களோட வேலையை அவங்க்ளே பண்றது எப்படின்னு சொல்லி கொடுங்க, ஏன்னா தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைன்னு பழமொழியே இருக்குது, குழந்தை பருவத்துல எப்படி இருக்கோ அத பொறுத்துதான் பெரிசானாலும் இருக்கும், இந்த காலத்துல கெட்ட விஷயங்களை கத்துக்கறது ரொம்ப ஈசி, ஆனா நல்ல பழக்கங்கள் நாமதான் கத்து தரணும், குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள பழக்குங்க கொஞ்சநாள்ள அவங்களே அதை வழக்கப்படுத்திப்பாங்க, அப்புறம் அதுவே பழக்கவழக்கம் ஆகிறும், அதனால இந்த மாதிரி யாராவது குழந்தைய வளர்த்தாங்கண்ணா கண்டிப்பா என்கிரேஜ் பண்ணாதீங்க, உங்க தெரிஞ்சவங்ககிட்டவும் சொல்லுங்க,

எனக்கு ஏதாவது கஷ்ட்டமோ, இல்லை கவலையோ வந்ததுன்னா என் பிரண்டோட அக்கா குழந்தை ஒன்னு இருக்குது,  இரண்டு வயசுகிட்ட ஆகப் போகுது, அத தூக்கிட்டு போய் என்னோட கவலை எல்லாம் சொல்லுவேன், அது என்ன கண்டுக்காது, அது பாட்டுக்கு விளையாடும் இல்லன்ன மூஞ்சிய மூஞ்சிய பார்த்துட்டு திரும்பிக்கும், நான் மண்டை காஞ்சி இப்ப என் பிரச்சனைய கேட்க போறியா இல்லையான்னு புடிச்சி ஒரு ஆட்டு ஆட்டுனா வீன்னுனு அழுகும், அப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கும், அப்பாடா என்னோட பிரச்சனைய கேட்டுதான் குழந்தை அழுகுதுன்னு, இது ஒரு தப்புங்களா? எங்க அக்கா ஏண்டா குழ்ந்தைய அழ வைக்கிறேன்னு திட்டுறாங்க, நீங்களே சொல்லுங்க?



(படங்களுக்கும், பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, படங்கள் உதவி நன்றி கூகிள்)



14 comments:

  1. படங்கள் அருமை..... சுட்டிகள் பற்றி வாசிக்க நல்லா இருந்தது .

    ReplyDelete
  2. //குழந்தைகள வளர்க்கும் போது நல்ல பழக்க வழக்கங்கள மட்டுமே சொல்லி கொடுங்க, யாராவது வீட்டுக்கு வந்தாலோ இல்ல போன் பண்ணினாலே, வாங்க, நல்லா இருக்கீங்களா, வீட்டுல அங்கிள் ஆண்ட்டி எல்லாரும் நல்லா இருக்காங்களா, சாப்பிட்டீங்களா, உட்காருங்க, இப்படி நல்ல வார்த்தைகள சொல்லி கொடுங்க//

    மிகச்சரியா சொன்னீங்க

    ReplyDelete
  3. ஆரோக்கியமான் விடயத்தை சொல்லி இருகிறீங்க. நன்றி. அப்படியே அத்தனை குழந்தை தேர்வுகளும் அருமை.

    ReplyDelete
  4. பதிவிற்கு படங்கள் பொருத்தமாத்தான் இருக்கு நண்பரே...

    ReplyDelete
  5. ஒரு சிறிய வேண்டுகோள்... உங்கள் தளத்தின் ஓரத்தில் ஓடும் யுடியூப் வீடியோவை தயவு செய்து எடுத்துவிடுங்கள்... பதிவை படிக்கும்போது உறுத்தலாக இருக்கிறது...

    ReplyDelete
  6. நன்றி சித்ரா மேடம், அன்பரசன், பதிவுலகில் பாபு, நிலாமதி மேடம், பிலாசபி பிரபாகரன், உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி

    ReplyDelete
  7. philosophy prabhakaran said...

    பிரபாகரன் சார் நான் வேறு டெம்ப்ளேட் மாற்றலாம் என்றிருக்கிறேன், மாற்றும் போது வீடியோவை எடுத்து விடுகிறேன், அதுவரை நீங்கள் படிக்கும் போது பாஸ் பட்டன் கொடுத்து நிறுத்தி விடுங்கள், உங்களின் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  8. என்னா மாதிரி பச்ச குழந்தைங்க கொஞ்சம் அப்படி இப்படிதான் இருப்போம் அதெல்லாம் உங்களமாதிரி பெரியவங்கதான் பொறுத்துக்கணும் :)

    ReplyDelete
  9. Venkat Saran. said...

    இதை எல்லாம் கேட்டுட்டு உயிரோட இருக்கன் பாரு என்ன சொல்லனும் ;-)

    ReplyDelete
  10. என் பதிவுகளுக்கு தொடர் கருத்துகளை கூறி வரும் தங்களுக்கு..மிக்க நன்றி. உங்கள் பதிவுகளை விரும்பி படித்து வருகிறேன்.

    ReplyDelete
  11. சிவகுமார் said...

    நன்றி சிவக்குமார் சார், உங்களின் வருகையே என்னுடைய பலம்

    ReplyDelete
  12. ஜெயசீலன் said...

    vaanga jayaseelan sir, thanks for your smile

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!