Friday, December 31, 2010

நானும் என்னுடைய லவ்வும் - 2என்னுடைய முந்தைய பகுதியில் தொடரலாம் என்று நிறைய பேர்கள் பின்னூட்டம் இட்டிருந்தார்கள், அவர்களுக்கு என்னுடைய நன்றிகள், உங்களின் நம்பிக்கையினால் நான் தொடருகிறேன், நிறைய பேரு காமெடி பதிவா இருக்கும்னு நினைச்சு சொல்லியிருப்பீங்கன்னு நினைக்கிறேன், ஆனா கொஞ்சம் சீரியசாதான் இருக்கும், முந்தைய பகுதியினை தவற விட்டவர்கள் பகுதி - 1  இங்கே கிளிக் பண்ணி படித்துக் கொள்ளவும்.

இனி...

இப்படி வெத்துசோறா போயிட்டு இருந்த என் வாழ்க்கையில அந்த அய்யர் பொண்ணு கிராஸ் ஆச்சு, நானும் அந்த பொண்ண முதல்ல பெரிசா ஒன்னும் நினைக்கலை, வழக்கம் போல 14 க்கு அப்புறம் 15 அப்படின்னுதான் நினைச்சிட்டு இருந்தேன், ஆனா நம்ம பசங்க விட்டாதான, அது உன்னத்தான் பார்க்குது, உன்ன பார்த்துதான் சிரிக்குதுன்னு கிளப்பி விட ஆரம்பிச்சாங்க, நானும் மெதுவா வாட்ச் பண்ண ஆரம்பிச்சேன், அவங்க சொன்னமாதிரிதான் எனக்கும் தெரிஞ்சது, அப்ப என் பிரண்டு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சான், நாமளும் எவ்வளவு நாளைக்குதான் ஒன்சைடாவே லவ் பண்றது, ஒன்னையாவது டூ சைடூ ஆக்கணும்டான்னு சொன்னான், நானும் அவன நம்பி சரி இவளை எப்படியாவது கரக்ட் பண்ணிர வேண்டியதுதான்னு முடிவு பண்னேன், அன்னைல இருந்து அய்யர் பொண்ண தீவிரமா பாலோ பண்ண ஆரம்பிச்சேன், இப்படி இந்த பொண்ணு பின்னாடியே போனதால, என்னுடைய முன்னாள் காதலிகள் 14 லிருந்து 13 ஆச்சு, 13 - 12 ஆச்சு, 12 - 11 ஆச்சு, இப்படியே குறைய ஆரம்பிச்சது, நான் வேணான்னு சொன்ன பிகர்கள எல்லாம் என் நண்பன் நான் வெச்சுக்கட்டுமான்னு கேட்டான், நானும் பெருந்தன்மையா வெச்சுக்கடான்னு சொல்லிட்டேன்,


இப்ப நான் அந்த அய்யர் பொண்ணோட அழகை பத்தி செல்லியே ஆகணும், இதுக்கு முன்னாடி யாரும் இப்படி அழகா ஒரு பொண்ண பார்த்திருக்க மாட்டீங்க, அயம் லவ் வித் ஹர், (முன் தினம் பார்த்தேனே பாட்டெல்லாம் அப்ப கிடையாது) அவளோட கண்ணு இருக்கே மின்சாரகனவு கஜோல் கண்ணு, ஓரக்கண்ணால பார்த்தான்னா அவ்வளவுதான் குவாட்டர் அடிச்ச குரங்காட்டம் பிளாட் ஆயிர வேண்டியதுதான், கலருன்னா கலரு அப்படி ஒரு கலரு டிராக்டர் எமால்யூசன் பெயிண்ட் மாதிரி சும்மா மினுமினுன்னு இருப்பா, அய்யர் வீதில இருக்குற வீடெல்லாம் பார்த்திருப்பீங்க, அலாவுதீன் குகையாட்டம் ஒரு கிலோ மீட்டர் நீளம் இருக்கும், அந்த குகையில அவ எங்க இருந்தாலும் பளிச்சின்னு தெரிவா அப்படி ஒரு பிகர்.


நான் மட்டும் அவளை லவ் பண்ணலீங்கோ, எனக்கு போட்டியா இன்னும் ஒரு பத்து பதினைஞ்சு பேரு இருந்தாங்க, அவனுங்களை எப்படி சமாளிக்கறதுன்னு நானும் என்னோட பிரண்டும் சேர்ந்து வட்ட மேசை மாநாடு போட்டோம், அவனுங்களுக்கு முன்னாடியே நாம எண்ட்ரண்ஸ் கொடுக்கனுமே எப்படிடான்னு பிளான் பண்ணோம், அப்பத்தான் ஒரு முடிவு எடுத்தோம், எல்லாருக்கும் முன்னாடி நாம இருக்கணும்னா நாம அந்த அய்யர் வீதில இருந்தாத்தான் முடியும், நம்மளை அங்க எல்லாம் சேர்த்துக்க மாட்டாங்க அதனால அந்த வீதியில இருக்குற யாரையாவது பிரண்டு புடிக்கலாம்னு முடிவு பண்ணினேன், அப்படி வலைவீசி தேடும்போது இரண்டு இளிச்சவாயன்கள் கிடைச்சானுங்க, ஒருத்தன் பேரு எஸ்.கே. இன்னொருத்தன் துரை, என்னடா பேர கேட்டா இனிஷியல் மட்டும் சொல்றியே பேரு என்னடான்னு கேட்டேன், கடைசிவரைக்கு அந்த நாதாரி பேரே சொல்லல, சரி அதவிடுங்க எப்படியோ அய்யர் வீதில அடிக்கடி போயிட்டு வரதுக்கு சான்ஸ் கிடைச்சிருச்சு, இனி மேற்கொண்டு எப்படி மூவ் பண்ணுரதுன்னு தெரியல, 


சரி இப்படியே விட்டா சரிவராது, எப்படியாவது பேசிரலாம்னு முடிவு பண்ணினேன், எப்படி பேசுரது, எங்க வெச்சு பேசுரது, பேசுனா திருப்பி பேசுவாலா இல்லை செருப்ப கழட்டுவாளான்னு பல குழப்பம், முன்ன பின்ன எந்த பொன்ணுகிட்டயும் பேசுனது வேற இல்லை, என்ன பண்ணலாம்னு ஒரே குழப்பம், என் பிரண்டு சொன்னான், டியூசன் செண்டர் விட்டு வரும்போது பேசிரலாம்னு, சரி வாடான்னு ரெண்டு பேரும் 8 மணிக்கு விடப்போற டியூசனுக்கு 7 மணில இருந்தே காத்திருக்க ஆரம்பிச்சோம், 7.30 மணி வரைக்கும் இருந்த தைரியம், 7.45, 7.50, 7.55 ன்னு ஆக ஆக இதயம் திடுக் திடுக்னு துடிக்குது, என்னோட ஹார்ட் பீட்டு சங்கு சத்தம் மாதிரி எனக்கே கேட்குது,  உடம்பெல்லாம் வேர்த்து போச்சு, கைகால் எல்லாம் நடுங்குது, மணி எட்டும் ஆச்சு, டீயூசன் விட்டு எல்லாரும் வெளியே வர ஆரம்பிச்சாங்க, அவளும் வந்தா, எனக்கு ஹார்ட் அட்டாக் வரமாதிரி ஆகிருச்சு, இன்னும் பத்து ஸ்டெப் வச்சா என் பக்கத்துல வந்துருவா, வர ஆரம்பிச்சா ...

ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, 


நான்கு ....


மூன்று ...

இரண்டு ..

தொடரும் ...
-------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்களே இது இந்த வருடத்தின் கடைசி பதிவு, இந்த வருடமும் முடிவுற்று புது வருடமும் தொடங்க போகிறது, நான் எப்பொழுது பதிவு எழுதினாலும், அது கிண்டலோ, நக்கலோ எதுவாகினும் முடிந்த வரை யாருடைய மனதும் புண்படக்கூடாது என்ற முடிவோடுதான் எழுதிகிறேன், இருந்தும் இதுவரை நான் எழுதிய பதிவுகளில் ஏதேனும் ஒரு பதிவோ அல்லது வாக்கியமோ யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள், இனி வரப்போகும் புது வருடத்தினை நட்போடும் மகிழ்ச்சியோடும் தொடர விரும்புகிறேன், இது வரை என்னுடைய பதிவுகளில் பின்னூட்டமிட்டும் ஓட்டு அளித்தும், வந்து படித்தும் சென்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியினை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

   
  நண்பர்கள் மற்றும் உங்கள்   குடும்பத்தார்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், இந்த புதிய வருடத்தில் நீங்கள் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ இறைவனை வேண்டுகிறேன், நன்றி...


இவன்
நைட் ஸ்கை

[ அப்படியே போயிடாதீங்க பதிவை பத்தின உங்க கருத்துகளையும் கொஞ்சம் கொட்டீட்டு போங்க ]30 comments:

 1. வழக்கம் போல 14 க்கு அப்புறம் 15 அப்படின்னுதான் நினைச்சிட்டு இருந்தேன், ///
  பத்தோட பதினொன்னு அப்டின்னுதான் சொல்றது வழக்கம்....

  ReplyDelete
 2. இனிய புத்தாண்டு 2011 நல்வாழ்துக்கள்.

  மூன்று ...

  இரண்டு ..

  ஒண்ணு எப்போ?

  ReplyDelete
 3. The words which spoiled many boys life is "machi, ava unna thaan da paakura"

  ungaluthum ippadi thaana??
  (Happy new year)

  ReplyDelete
 4. karthikkumar said... மாம்சு நீங்க முதல் பகுதி படிக்கலன்னு நினைக்கிறேன், படிச்சிருங்க அப்ப புரியும் :-)

  Dr.எம்.கே.முருகானந்தன் said... அடுத்த வாரம் டாக்டர் சார், புத்தாண்டு வாழ்த்துக்கள்

  Nagasubramanian said... எனக்கு மட்டுமில்ல எல்லாரும் இதே வார்த்தைதான் சார் :-) உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. 1st part padichirukken machi naan pothuva sonnen

  ReplyDelete
 6. இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 7. Wish you happy new year.aduththa paguthi padikka aavaludan kaathirukkiren

  ReplyDelete
 8. Wish you happy new year.aduththa paguthi padikka aavaludan kaathirukkiren

  ReplyDelete
 9. அழகான பொண்ணு அதுவும் அய்யர் பொண்ணு கொஞ்சம் கடும் போட்டி இருந்திரு்கனுமே நண்பா

  ReplyDelete
 10. இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. karthikkumar said... ஓகே மாம்சு, உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

  dr suneel krishnan said... உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் டாக்டர் சார்

  ஐத்ருஸ் said... ஹேப்பி நியூ இயர் ஜத்ரூஸ், அடுத்த வாரமும் கண்டிப்பா வாங்க

  நா.மணிவண்ணன் said... கண்டிப்பா, பைட் சீக்குவன்ஸ் எல்லாம் இருக்கு பாஸ்

  ரஹீம் கஸாலி said... ஓகே நண்பா உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 12. >>> நல்லதோர் ஆண்டாக தொடங்கட்டும் 2011!! எல்லா வளமும் பெற வாழ்த்துகள்!!

  ReplyDelete
 13. சிவகுமார் said... நன்றி சிவக்குமார் உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. இனியவன் said... நன்றி இனியவன் உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. ஏன் காதல்னு வந்துட்டாலே மனுஷனுக்கு தடுமாற்றம் வந்துடுது பாஸ்../திருப்பி பேசுவாலா இல்லை... முன்ன பின்ன எந்த பொன்ணுகிட்டயும் //...ஸ்பெல்லிங் மிஸ்டேக்கைச் சொன்னேன்...கொஞ்சம் கவனிங்களேன்.

  மீண்டும் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே.

  ReplyDelete
 17. Wishing You, Family and your followers-a Happy New Year 2011, will bring all Happy,Joy, Health, Wealth and Prosperity.

  With Best Wishes!
  Sai Gokulakrishna

  ReplyDelete
 18. Super! :-)
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 20. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....நண்பரே..

  ReplyDelete
 21. //நான் வேணான்னு சொன்ன பிகர்கள எல்லாம் என் நண்பன் நான் வெச்சுக்கட்டுமான்னு கேட்டான், நானும் பெருந்தன்மையா வெச்சுக்கடான்னு சொல்லிட்டேன்,//

  ரொம்ப நல்லவரையா நீங்க :-)

  கிளைமாக்ஸ் சொந்த வாழ்க்கையில சோகமா இருந்தாலும் நமக்கு பொசிடிவாகதான் வேணும் :-)

  அப்புறம் அந்த டெம்ளேட் கமன்ட் எங்க ஆஆஆ... இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள், ஹலோ அது உங்களுக்கில்லை, அது 2011 க்கு, உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 23. Hi Night Sky,
  I like the way you write this blog.
  Very interesting.Actually this happens to every teenage boys.
  What I like is, the way you are writing is like a suspense thriller.
  Keep it up buddy.Write more.
  You have a wonderful New Year 2011.

  ReplyDelete
 24. பதிவுலகில் நீங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கும்.

  ReplyDelete
 25. pothandu vazthukal nadpudan nakkeeran

  ReplyDelete
 26. புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...

  http://www.philosophyprabhakaran.blogspot.com/

  ReplyDelete
 27. This comment has been removed by the author.

  ReplyDelete
 28. செங்கோவி said... கவனிக்கிறேன் நன்றி நண்பா

  Sai Gokula Krishna said... நன்றி கோகுல கிருஷ்ணா

  ஜீ... said... நன்றி சார், உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  யோவ் said... நன்றி நண்பா, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பிரஷா said... நன்றி மேடம், உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  எப்பூடி.. said... ஹி ஹி ஹி நன்றி தல, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  குறட்டை புலி said... நன்றி சார், உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  Thulasi said... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி துளசி மேடம், உங்களுக்கு என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  THOPPITHOPPI said... நன்றி நண்பா

  nakkeeran said...நன்றி நண்பா, உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  2009kr said... நன்றி நண்பரே

  Philosophy Prabhakaran said... இதோ வந்து விட்டேன்

  ReplyDelete
 29. ஹா ஹா ஹா.. சூப்பரா இருக்குங்க.. என்ன ஒரு தாராளம் உங்களுக்கு.. உங்க நண்பன் கேட்டதுக்கு விட்டுக்கொடுத்திட்டீங்களே.. கடைசியில நல்ல பீட்..

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!