ஞாயிற்று கிழமை விஜய் டிவியில ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பினாங்க, அது விஜய் ரீவைண்ட்ஸ், இது வாராவாரம் ஒளிபரப்பாகுற நிகழ்ச்சிதான்னாலும், ஒவ்வொரு வாரமும் ரீவைண்டுன்னு சொல்லி, ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், இது மாதிரி போட்டு தாளிப்பாங்க, ஆனா இந்த வாரம் கோபிநாத்தோட ரீவைண்ட் வாரம், கோபிநாத் ஆச்சே வித்தியாசமா ஏதாவது இருக்கும்னு நினைச்சி ஆர்வமா பார்த்தேன், நிகழ்ச்சி நல்லா இருந்தது, கோபிநாத் சிகரம் தொட்ட மனிதர்கள், தமிழர்கள் நிகழ்ச்சியில அவரு பேட்டி எடுத்த பிரபலங்கள பத்தி சொல்லிட்டு இருந்தாரு, எழுத்தாளர் சுஜாதா, ஜெயகாந்தன், அரசியல்ல கலைஞர், சிதம்பரம், நடிகர்கள்ள சூப்பர்ஸ்டார், கமலஹாசன், விஜய், அஜீத் இவங்கள பேட்டி எடுத்த அனுபவத்தை பத்தி சொன்னாரு, அதில் இருந்து சில காட்சிகளையும் போட்டு காட்டுனாங்க,
எல்லாமே நல்லா இருந்தாலும் முக்கியமா ஒரு பேட்டி ரொம்ப நல்லா இருந்தது, அது சன் டிவி அதிபர் கலாநிதிமாறன் அவர்களோட பேட்டி, அந்த பேட்டிய வாங்கவே எவ்வளவு கஷ்ட்டப்பட்டாங்க அப்படிங்கறத பத்தியும் சொன்னாரு, கலாநிதிமாறன் சொன்ன விசயம் ரொம்ப புடிச்சதுன்னு கோபிநாத் சொன்னாரு, அது எனக்கும் ரொம்ப புடிச்சது,
அது என்னன்னா ரிஸ்க் எடுக்கனும், ரிஸ்க் எடுக்காம ஜெயிக்க முடியாதுங்கறது எல்லாருக்கும் தெரியும், ஆனா எடுக்குற ரிஸ்க் கால்குலேட்டிவ் ரிஸ்க்கா இருக்கனும்னு சொன்னாரு, அப்படின்னா 6 ஆவது மாடியில இருந்து குதிச்சா அடிபடும்கறது ரிஸ்க், ஆனா சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தா தப்பிச்சிடலாம்னா அத அணிஞ்சிட்டு குதிக்கறது கால்குலேட்டிவ் ரிஸ்க்குனு சொன்னாரு, அது ரொம்ப சரியாதான இருக்குது, ஒரு பிசினஸ்ல ஜெயிச்சவரு சொன்னா சரியாதான் இருக்கும், அதே மாதிரி ஒரு விசயம் தோல்வியடைஞ்சா அதுக்கு என்ன காரணம்னு ஆராயனும், ஆராய்ந்ததுக்கு அப்புறம் சரி பண்ண முடிந்தால் சரி பண்ணனும், முடியாதுன்னு தெரிஞ்சா விட்டுடனும், ஒத்து வராதத புடிச்சிட்டு கட்டிட்டு அழக் கூடாதுன்னு சொன்னாரு, என்ன நண்பர்களே கலாநிதி மாறன் சார் சொல்றது சரிதானே.
அது என்னன்னா ரிஸ்க் எடுக்கனும், ரிஸ்க் எடுக்காம ஜெயிக்க முடியாதுங்கறது எல்லாருக்கும் தெரியும், ஆனா எடுக்குற ரிஸ்க் கால்குலேட்டிவ் ரிஸ்க்கா இருக்கனும்னு சொன்னாரு, அப்படின்னா 6 ஆவது மாடியில இருந்து குதிச்சா அடிபடும்கறது ரிஸ்க், ஆனா சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தா தப்பிச்சிடலாம்னா அத அணிஞ்சிட்டு குதிக்கறது கால்குலேட்டிவ் ரிஸ்க்குனு சொன்னாரு, அது ரொம்ப சரியாதான இருக்குது, ஒரு பிசினஸ்ல ஜெயிச்சவரு சொன்னா சரியாதான் இருக்கும், அதே மாதிரி ஒரு விசயம் தோல்வியடைஞ்சா அதுக்கு என்ன காரணம்னு ஆராயனும், ஆராய்ந்ததுக்கு அப்புறம் சரி பண்ண முடிந்தால் சரி பண்ணனும், முடியாதுன்னு தெரிஞ்சா விட்டுடனும், ஒத்து வராதத புடிச்சிட்டு கட்டிட்டு அழக் கூடாதுன்னு சொன்னாரு, என்ன நண்பர்களே கலாநிதி மாறன் சார் சொல்றது சரிதானே.
சரி இப்ப எதுக்கு இதெல்லாம்னு கேட்குறீங்களா விசயம் இருக்கு, நான் பதிவுலகத்துக்கு வந்து 4 மாசம் ஆச்சு, இதுவரைக்கும் ஒரு நாப்பது பதிவு எழுதி இருக்கேன், அப்படி எல்லாம் ஒன்னும் பெரிசா உருப்படியா இதுவரைக்கும் எழுதலை, இந்த தமிழ்மணம் விருது, போட்டி இது எல்லாமே எனக்கு ரொம்ப புதுசு, இருந்தாலும் எனக்கும் மெயில் அனுப்பி இருந்தாங்க, போட்டில கலந்துக்கறதா இருந்தா கலந்துக்கங்கன்னு, சரி ஆனது ஆச்சு, சும்மா 3 பதிவு அனுப்பி பார்க்கலாமேன்னு அனுப்பி வச்சிருந்தேன், கண்டிப்பா யாரும் நமக்கெல்லாம் ஓட்டு போட மாட்டாங்கன்னு அந்த பதிவுகளோட லிங்க்க கூட நான் எங்கயும் கொடுக்கலை, ஆனா நேத்து காலையில நம்ம நண்பர்களோட பதிவுகளை பார்த்தா எல்லாரும் இரண்டாம் கட்டத்துக்கு முன்னேறிட்டாங்கன்னு பதிவு போட்டு இருக்காங்க, சரி நம்மளுதும் எதாவது இருக்கான்னு போய் பார்த்தேன், என்ன ஒரு ஆச்சரியம், அரசியல், சமூக விமர்சனங்கள் பிரிவுல நான் லிவ்விங் டு கெதர் பத்தி எழுதுனது வந்துருக்கு, ஆனா சும்மா சொல்லக்கூடாது இந்த பிரிவுக்குதான் ஹெவி காம்படீசன், என்னையும் மதிச்சு ஓட்டு போட்ட அன்பர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள், அதனால நானும் இப்ப லிங்க் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்,
இத படிச்சி பாருங்க, உங்களுக்கு யாருக்காவது புடிச்சி இருந்தா வோட்டு போட விருப்பம் இருந்தா ஓட்டு போடுங்க, ஓட்டுக்கு பணம், குவாட்டர் எதுவுமே கிடையாது, ஒன்லி நன்றி மட்டும்தான், ஜெயிச்சா பிறகு பார்க்கலாம், அரசியல், சமூக விமர்சனங்கள் பிரிவுல இந்த இடுகை இருக்குது. நன்றி,
இந்த இடுகையை நான் போடறதுக்கு காரணமே கலாநிதிமாறன் தான், நானும் கால்குலேட்டிவ் ரிஸ்க் எடுத்துட்டேன்,ஜெயிக்கலீன்னா தோல்விக்கான காரணம் என்னன்னு ஆராய்சி பண்ண போறேன், அப்படி ஆராய்ச்சி பண்ணி என்ன கண்டுபுடிச்சேன்கறதயும் பதிவா போட்டு கொல்லுவேன்கிறதயும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன், வேற எதையாவது நினைச்சு வந்திருந்தீங்கன்னா இங்க போய் பார்த்துக்கோங்க. :-)
நன்றி, நன்றி, நன்றி......
நன்றி, நன்றி, நன்றி......
வாழ்த்துக்கள்
ReplyDeleteI too saw that program and congrats to u
ReplyDeleteநீங்கள் முதலிலேயே லின்க் கொடுத்திருக்கலாமே..வெற்றி பெற வாழ்த்துகள்.
ReplyDeleteநீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
ReplyDeleteTHOPPITHOPPI said...
ReplyDeleteNagasubramanian said...
செங்கோவி said...
ரஹீம் கஸாலி said...
நண்பர்கள் அனைவரும் வருகை தந்ததுக்கும், வாழ்த்து தெரிவித்ததுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
***அது என்னன்னா ரிஸ்க் எடுக்கனும், ரிஸ்க் எடுக்காம ஜெயிக்க முடியாதுங்கறது எல்லாருக்கும் தெரியும், ஆனா எடுக்குற ரிஸ்க் கால்குலேட்டிவ் ரிஸ்க்கா இருக்கனும்னு சொன்னாரு***
ReplyDeleteதல: கலாநிதிமாறன் ஏற்கனவே வெற்ற்றியடைந்து விட்டார். அதனால் அவர் சொல்றதுதான் வேதம். :)
வாழ்த்துக்கள் பாஸ்
ReplyDeleteநல்லா பல்பு கொடுத்தீங்க...
ReplyDeleteஎன்னாமா கால்குலேட்டிவ் ஐடியா!
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்
வருண் said... கரக்ட்தான் வருண், வருகைக்கு நன்றி
ReplyDeleteடி.சாய் said... நன்றி சார்
philosophy prabhakaran said... நானும் எத்தனை பல்பு வாங்கியிருப்பேன், அதனால ஒன்னு திருப்பி கொடுக்கலாம்னுதான், ஹி ஹி ஹி
நீச்சல்காரன் said... நன்றி சார்
வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பா.. நானும் ஓட்டு போட்டிருக்கேன்.. இந்தப் பதிவுக்கு.. உருப்படியான ஒரு மெசேஜோட வித்தியாசமா பதிவிட்டிருக்கீங்க.. அதுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteபிரியமுடன் ரமேஷ் said... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நண்பா, நான் ஜெயிக்கறேனோ இல்லையோ நீங்க கண்டிப்பா ஜெயிப்பீங்க, ரெண்டாவது ரவுண்டிலும் உங்களுக்கு நான் ஓட்டு போட்டிருக்கேன்.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கள்......எரிற பல்பை எதிர் பார்கிறோம்
ReplyDeleteவாழ்த்துக்கள் இரவு வானம் -சுரேஷ் (பேரு சரிதான ?)
ReplyDeletecongrats
ReplyDeleteநீங்க பல்ப் கொடுத்ததற்காகவே ஒட்டு போட்டு விடுவோம்
ReplyDeleteநீங்க ரொம்ப clever சகோ...இந்த பதிவில் எக்க சக்க புத்திசாலி தனம் தெரிந்தது...கலாநிதி மாறனை அழகாய் quote பண்ணி..கடைசியில் முக்கியமாய் சொல்ல வந்த பினிஷிங் ஸோ cute ...வாழ்த்துக்கள்...வோட்டு போட்டுடுறேன்..இந்த அப்ப்ரோச் ஐ ரசித்தேன்...ஹாப்பி நியூ இயர் சகோ:)
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteBst Wishes!
ReplyDeleteSai Gokulakrishna
எனக்கு தமிழ்மணம் ஓட்டுகூட அனுப்பல :-( உங்க பதிவுகள் விருதுபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteகோவி.கண்ணன் said... மிகவும் நன்றி சார்
ReplyDeleteAbu Nadeem said... பார்க்கலாம் நண்பா நன்றி
dr suneel krishnan said... கரக்ட்தான் சார், நன்றி சார்
சி.பி.செந்தில்குமார் said... நன்றி தல
நா.மணிவண்ணன் said... நன்றி மணிவண்ணன்
ஆனந்தி.. said... நன்றி ஆனந்தி மேடம், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்களுக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
THOPPITHOPPI said... நன்றி தொப்பி தொப்பி, உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Sai Gokula Krishna said... நன்றி நண்பா
எப்பூடி.. said... தல உங்களுக்கே ஓட்டு இல்லையா? என்ன கொடுமை சரவணா இது ?
உங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு எல்லா வளமும் கொடுக்க வாழ்த்துக்கள்.. :-)
ReplyDeleteஇரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
ReplyDeleteஇனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.