மன்மதன் அம்பு இந்த படத்தை பத்தி எழுதுனா வந்திருமே வம்புன்னுதான் இருந்தேன், ஆனா சுனாமின்னு வந்ததுக்கு அப்புறம் முழுகாம இருக்க முடியுமா? படம் பார்த்ததுக்கு அப்புறம் எழுதாம இருக்க முடியுமா? ஆனது ஆகட்டும்னு துணிஞ்சு இறங்கிட்டேன், முடிஞ்ச வரைக்கும் நடுநிலையா எழுதறேன், சினிமாவுல எல்லா விசயங்களையும் தெரிஞ்ச ஒரு நடிகரா கமலை எனக்கு ரொம்ப பிடிக்கும், ஒரு சிறந்த நடிகரா ரொம்பவே புடிக்கும், ஆனா தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரிஞ்சமாதிரி சிலசமயம் நடக்கும் போது புடிக்காம போயிருது, இப்படி சினிமாவுல கதை, திரைக்கதை, வசனம், பாட்ல்கள், நடனம், நடிப்பு, இயக்கம்னு எல்லாம் தெரிஞ்ச கமல், எப்படி எடுத்தாலும் கண்டிப்பா நல்லா பண்ண முடியாதுன்னு தெரிஞ்ச இந்த கதையை ஏன் படமா எடுத்தாருன்னுதான் புரியல, அட நம்ம கேப்டன் கூட விருதகிரிய சும்மா விரு விருன்னு பண்ணி இருந்தாருப்பா,
சரி படத்தோட கதை என்னன்னு உங்க எல்லாருக்குமே தெரியும், இருந்தாலும் நானும் சொல்லனும்ல, நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லன்னு நாயகன் கமல் சொன்னாரு, இரண்டு பேருக்கு நல்லதுன்னா உண்மையான காதலை கூட பிரிக்கலாம்னு இதுல சொல்லறாங்க, உண்மையில மாதவனும் திரிஷாவும் உண்மையாவே ஒருத்தர ஒருத்தர் லவ் பண்றாங்க, மாதவனோட சந்தேகத்தால ரெண்டு பேரும் பிரிஞ்சிடராங்க, கமல் கூட இறந்து போன பொண்டாட்டிய நினைச்சி 3 வருசமா உருகிட்டுதான் இருக்காரு, பிரண்டோட கேன்சர் டிரீட்மெண்டுக்காக பொய் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிடுறாரு, கமல் பொண்டாட்டிய நினைச்சு பீல் பண்றத பார்த்தா கிளைமேக்ஸ்ல மாதவனோட சந்தேகத்த தீர்த்து வச்சி சேர்த்து வைப்பாருன்னு பார்த்தா திரிசாகூட ஜோடியாயிடராரு, திரிசா மேலயே சந்தேகப்பட்ட மாதவன் அடுததவன் முன்னாள் பொண்டாட்டிய கல்யாணம் பண்ண முடிவு பண்றாரு இதுதான் கதை.
இது காமெடி படமா சீரியஸ் படமா செண்டிமெண்ட் படமான்னு தெரியல, படத்துல வசனம் எல்லாம் நல்லா இருந்தாலும் பாதி வசனம் புரியல, லைவ்வா பதிவு பண்ணினதாம், இந்த லைவ் எல்லாம் வெளிநாட்டு சினிமா தியேட்டருக்கு வேணா சரியா இருக்கும், இங்க பாதி தியேட்டர் நாலு ஸ்பீக்கர சைடுல தொங்க விட்டுட்டு DTS னு பேரு வச்சிட்டு ஏமாத்தறாங்க, அதில நல்ல காலத்துலயே பாட்டு போட்டாலே சத்தம் கேட்குறது இல்லை, இந்த படத்தோட சவுண்ட சொல்லவே வேணாம், சுத்தமா ஒன்னும் புரியல, எனக்கு என்னவோ கடைசி வரைக்கும் காமெடியா ஒன்னும் தெரியல, படத்துல திரிசா, சங்கீதா, மாதவன் ரொம்ப நல்லா இயல்பா நடிச்சி இருந்தாங்க, ஒளிப்பதிவு ரொம்ப நல்லா இருந்தது,
படத்துல ரெண்டு பாட்டு ரொம்ப நல்லா இருந்த்து, ஒன்னு சூரியாவோட பாட்டு, படம் ஆரம்பத்துலேயே வந்ததால சூரியாவின் ரசிக சிகாமணிகள் கொஞ்சபேரு விசில் அடிச்சி கத்திட்டு இருந்தாங்க, அப்புறம் நீலவானம்ங்கற பாட்டு, உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு, ரிவர்ஸ்ல வித்தியாசமா பண்ணி இருக்காங்க, சூப்பரான லவ் + சின்ன சின்னதா ரொமான்ஸ் பாட்டு, அவ்வளவு பீல் பண்ணி கமல் பாடும் போது அதை அப்படியே இடைவேளை விடாம திரிசாகிட்ட சொல்லற மாதிரி பண்ணி இருக்கலாம், அதை விட்டுட்டு நாலஞ்சு ரீலுக்கு அப்புறம் திரிசா கதையை கேட்குறாங்கன்னு கண்ணெல்லாம் கலங்கி பீல் பண்ணி கதையை சொல்றது சொதப்பிருச்சின்னு நினைக்கிறேன். இன்னொரு பாட்டு இருக்கு சாம, தான, பேத, தண்டம்னு குத்துபாட்டு மாதிரி கமல் டான்ஸ்ல போட்டு குத்து குத்துன்னு குத்தி இருக்காரு, பார்த்துங்க சார், படத்தோட புரோமோசன்னு டிவியில பேட்டி கொடுக்கும் போது கஷ்ட்டப்பட்டு டான்ஸ் ஆடினேன்னு சொல்லிராதீங்க, அப்புறம் அவ்வளவுதான், என்ன ஸ்டெப்புக்கு கஷ்ட்டப்பட்டீங்கன்னு கேள்வி மேல கேள்வி வந்துரும் :-)
என்னதான் கமல் படமா இருந்தாலும் படம் ஸ்லோவாதான் போகுதுங்கறத ஒத்துகிட்டுதான் ஆகணும், அவங்களை சொல்லியும் குத்தமில்ல, இதுக்கு மேல இந்த படத்த நல்லா பண்ண முடியாது, எது எப்படியோ இன்னும் பெரிய பட்ஜெட்டுல ஒரு நாலஞ்சு படம் சன் குரூப்புக்கும், கலைஞர் குரூப்புக்கும் கிடைச்சா போதும் கண்டிப்பா படம் எடுக்கறத பத்தி யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க, அப்படியாவது அவங்க டாமினேசன் குறையட்டும்.
அப்புறம் கமல் சாருக்கு தனிப்பட்ட முறையில உங்ககிட்ட ஒன்னு சொல்லனும், மன்மதன் அம்புன்னு பேரு வச்சிருக்கீங்க, இந்த படத்துக்கு எதுக்கு இந்த டைட்டில்னு தெரியல, நிறைய பேரு டைட்டில பார்த்துட்டு நல்லா ரொமான்ஸா இருக்கும்னு நினைச்சி வந்து ஏமாந்துட்டாங்கங்க்கறது அவங்க சொல்றத வச்சி பார்க்கும் போது தெரியுது, உங்க சின்ன பொண்ணு கூட லவ் பண்ணுதுன்னு நெட்டில படிச்சேன், பார்த்துக்கங்க சார், முதல் பொண்ணு கல்யாணத்துக்கு கூப்பிடாட்டியும் பரவாயில்லை, ரெண்டாவது பொண்ணு கல்யாணத்துக்கு கண்டிப்பா ரசிகர்கள கூப்பிட்டுடுங்க, கூப்பிட முடியலனாலும் ரஜினி சார் மாதிரி அறிக்கை விட்டு மாட்டிக்காதீங்க, அப்புறம் எப்ப விருந்து வக்கிறீங்கனு கேட்டு நச்சு பண்ணீருவாங்க, உங்களுக்கு சொல்ல வேண்டியதே இல்லை உலகநாயகன் எந்த பிரச்சனையிலும் கண்டிப்பா மாட்டிக்க மாட்டீங்கன்னு தெரியும் இருந்தாலும் சொல்லனும்னு தோனுச்சு,
மொத்தத்துல மன்மதன் அம்பு நல்லா இருக்குன்னு சொல்ல வரல, நல்லா இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்ல வரேன்.
டிஸ்கி :- பின்னூட்டத்திலும், மைனஸ் வோட்டிலும் குமுற போகும் நண்பர்கள் பதிவை ஒருமுறை மீண்டும் படிக்கவும், எந்த இடத்திலும் நான் கமல் சாரை குறை கூறவில்லை, ஏனென்றால் நானும் கமல் ரசிகந்தான் :-)
Nice.......
ReplyDeleteநல்லாயில்லைனு சொன்னதுனால விமர்சனம் நன்றாக இருந்தது.
ReplyDeleteமொத்தத்துல மன்மதன் அம்பு நல்லா இருக்குன்னு சொல்ல வரல, நல்லா இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்ல வரேன்.//
ReplyDeleteஎன்ன இங்க கொஞ்சம் குழம்பிட்டீங்க போல..
நல்லா இல்லைன்னு சொல்ல வரலை... நல்லா இருந்திருந்தா நல்லாருக்கும்னு சொல்றேன்...
இப்படி சொல்ல நினைச்சீங்களா..
நல்ல விமர்சனம் + அறிவுரை (கமலுக்கு)
ReplyDeleteரைட்டு . நீங்க ஒருத்தர் இன்னும் கிழிக்கலைன்னு பார்த்தேன் . நல்லாவே
ReplyDeleteகிழிச்சுடீங்க
THOPPITHOPPI said... நன்றி சார்
ReplyDeleteஇனியவன் said... மாட்டிவிடாதீங்க பாஸ், நான் எங்க நல்லா இல்லைன்னு சொன்னேன் :-)
பிரியமுடன் ரமேஷ் said... குழப்புறீன்களே, இதுக்குதான் கமல் மாதிரி பேச கூடாதுன்னு சொல்றது
நா.மணிவண்ணன் said... சத்தியமா நான் அவன் இல்லீங்கோ
@ பிரியமுடன் ரமேஷ்
ReplyDeleteஎப்படி சொன்னாலும் ஒரே அர்த்தம்தான் வருது நண்பா
பின்னூட்டத்திலும், மைனஸ் வோட்டிலும் குமுற போகும் நண்பர்கள் பதிவை ஒருமுறை மீண்டும் படிக்கவும், எந்த இடத்திலும் நான் கமல் சாரை குறை கூறவில்லை, ஏனென்றால் நானும் கமல் ரசிகந்தான்
ReplyDeleteஎனக்கு இந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு
ரஹீம் கஸாலி said...
ReplyDeleteஎப்படி எல்லாம் தப்பிக்க வேண்டி இருக்கு, வருகைக்கு நன்றி நண்பா :-)
மொத்தத்துல மன்மதன் அம்பு நல்லா இருக்குன்னு சொல்ல வரல, நல்லா இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்ல வரேன்
ReplyDeleteஇதுவே சொல்லுதே நீங்க கமல் ரசிகர்ன்னு .....
vimarsanam super
ReplyDeleteபூங்குழலி said... நன்றி மேடம்
ReplyDeletekarthikkumar said...
ReplyDeleteநன்றி மாம்ஸ்
//மொத்தத்துல மன்மதன் அம்பு நல்லா இருக்குன்னு சொல்ல வரல, நல்லா இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்ல வரேன்//
ReplyDeleteஇதை கமலுக்கு யாராவது போவெட் பண்ணுங்கப்பா :-)
எனக்கு மன்மதன் அ(வ)ம்பு பாக்கிற ஐடியா இல்லை, அடுத்து திரையில் பார்ப்பது ஆடுகளம்தான்,
அப்புறம் உங்க விமர்சனம் வழமைபோல அசத்தல்.
நல்ல விமர்சனங்க.. கமலுக்கு நல்ல அறிவுரைதான் இது..
ReplyDeleteஎப்பூடி.. said...
ReplyDeleteநன்றி தல உங்க வருகையைதான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்
பதிவுலகில் பாபு said... அய்யய்யோ மாட்டிவிட்டுடாதீங்க பாபு, அறிவுரையெல்லாம் ஒன்னும் இல்லை, சும்மா எழுதனும்னு தோணிச்சு அதான்
//எந்த இடத்திலும் நான் கமல் சாரை குறை கூறவில்லை, ஏனென்றால் நானும் கமல் ரசிகந்தான் :-//
ReplyDeleteவிமர்சனம் சூப்பர். அதை விட கடைசில நான் கமல் ரசிகன் என்று சொல்றிங்க நடுநிலை விமர்சனம்
டிலீப் said...
ReplyDeleteநன்றி டிலீப் சார்
My Dear Brother,
ReplyDeleteIt's Cinema related,
no comments and votes for cinema/actors related posts!-it's my policy.
then why here?????
Sorry!
Hope you don't know my policy!
Don't mistake me in future!
if possible ...,in future...,
//மொத்தத்துல மன்மதன் அம்பு நல்லா இருக்குன்னு சொல்ல வரல, நல்லா இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்ல வரேன்//
ReplyDeleteha ha ha super!! :-)
விமர்சனத்துல கும்மு கும்முன்னு கும்மிட்டு கமல் ரசிகராம்ல..மக்களே இதை நம்பாதீங்க..இவர் ஒரு ப்லாக் ஷிப்..மே...மே...
ReplyDelete// நல்லா இருக்குன்னு சொல்ல வரல, நல்லா இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்ல வரேன் //
ReplyDeleteஉன்னத வரிகள்...
ராசா இந்த பாதையில் புடுச்சு மேலே போய்க்கிட்டு இருந்தா நிச்சயம் உண்மைத்தமிழனுக்கு அடுத்த மாற்று இரவு வானம் என்ற பெயர் வந்து விடும் போலிருக்கு. குறிப்பா கதையைப் பற்றி மூச்சு விடாமல் கதையில் நடித்த நாயகனை அவர் சொந்த வாழ்க்கையை சுட்டிக் காட்டிய விதம் எனக்கு ரொம்ப பிடித்தது. கமல் சொன்ன கடவுள் இல்லைன்னு நான் எங்கே சொன்னேன்? அப்படி ஒருத்தர் இருந்தா பரவாயில்லைன்னு தானே சொன்னேன்ங்ற மாதிரி கோர்த்து விட்ட விதம் அற்புதம்.
ReplyDeleteமைனஸ் ஓட்டு போடுற அளவுக்கு உருவாக்கிய தாக்கம் வரவேற்றக்ககூடியது. இப்ப பார்க்க வாய்பில்லை. அமெரிக்காவில் உள்ள தெகா கூட நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாரு. அப்படியே இங்குள்ள திரை அரங்கத்தில் உள்ள வசதிகளை மற்றும் இவர்கள் உள்ளே நம்பி வருபவர்களை வாங்கும் காசுக்கேத்த வசதிகளை கொடுக்காமல் ஏமாற்றும் விதங்களைப் பற்றி கிழித்து தொங்க விட்டுருககலாம்.
ReplyDeleteஆனா சுனாமின்னு வந்ததுக்கு அப்புறம் முழுகாம இருக்க முடியுமா?..............அட இது ரொம்ப நல்லா இருக்கே! உக்காந்து யோசிச்சீங்களா?
ReplyDeleteSai Gokula Krishna said... நல்லது நண்பா உங்கள் கொள்கைகளை வரவேற்கிறேன், உங்களின் மேல மிகுந்த மதிப்பும் வைத்துள்ளேன், நீங்கள் வருகை தந்ததற்கே மிகுந்த நன்றிகள் பல
ReplyDeleteஜீ... said... நன்றி ஜீ சார்
செங்கோவி said... ஆகா மாட்டிவிட்டுட்டீங்களே செங்கோவி
philosophy prabhakaran said... பிரபா கோபபட்டுடுவீங்களோன்னு பயந்துகிட்டே இருந்தேன், நன்றி
ஜோதிஜி said... சார் நீங்க பெரிய வார்த்தை சொல்றீங்க, உண்மைதமிழன் சார் அளவுக்கு எல்லாம் வரமுடியாது, ஏதோ எனக்கு தோணினதை நானும் பதிவு செய்யறேன் அவ்வளவுதான், மைனஸ் ஓட்டு கண்டிப்ப போடுவாங்கன்னு எனக்கும் தெரியும் சார், ஏனென்றால் ரஜினி ரசிகர்கள் அளவுக்கு கமல் ரசிகர்கள் இல்லை என்பதே உண்மைதான், அப்புறம் தியேட்டர்கள பத்தி இனிமே எழுதலாம் சார், நல்ல பாயிண்ட் எடுத்து கொடுத்து இருக்கீங்க,மொத்தமாக உங்கள் கருத்துக்களுக்கு என்னுடைய நன்றிகள் சார்
Rajeevan said... அட எப்படி அவ்வளவு கரக்ட்டா சொன்னீங்க உட்கார்ந்துதான் யோசித்தேன்
The best thing I liked in the movie is the flashback scene. Rest all is crap. After a day I learned that the flashback song sequence is copied short by short from the below video. Watch this one in you tube - http://www.youtube.com/watch?v=bxNJHuM0Js0
ReplyDeleteRavi said... நன்றி ரவி உங்க லிங்கில் போய் பார்த்தேன், அப்ப அந்த ரிவர்ஸ் பாட்டும் காப்பிதானா? பரவாயில்லை விடுங்க இந்த படத்துலயும் அந்த பாட்டு நல்லாதான இருக்கு :-)
ReplyDelete//ஆனா தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரிஞ்சமாதிரி சிலசமயம் நடக்கும் போது புடிக்காம போயிரு?//
ReplyDeleteI agree! :)))))