Wednesday, January 5, 2011

நானும் என் லவ்வும் - 3


Myspace Love Comments Quotes
                    
பகுதி - 1


புதுசா வந்து படிக்கிறவங்க, மேல இருக்குற இரண்டு பகுதியையும் படிச்சிட்டு வந்துடுங்க, இல்லைன்னா ஒன்னுமே புரியாது - பொது நலன் கருதி வெளியிடுவது நாந்தான்.


பத்தாவது அடி எடுத்து வைக்கறதுக்குள்ள அவளுக்கும் பயம் வந்துச்சோ இல்லை வெட்கம் வந்துச்சோ என்னவோ அவ கூட வந்த பிரண்டு ஒரு புள்ளய இந்த பக்கம் தள்ளி விட்டுட்டு அவ அந்த பக்கம் போயிட்டா, அப்படியே அவங்களும் வேக வேகமா நடந்து என்ன கிராஸ் பண்ணி போயிட்டாங்க, தப்பிச்சேண்டா சாமின்னு தோணினாலும் ஏன் இப்படி பண்ணினான்னு குழப்பம் வந்துருச்சு, சரின்னு அவளயே பார்த்துட்டு இருந்தேன், கொஞ்சதூரம் போனதும் அவளும் திரும்பி என்னை பார்த்து சிரிச்சிட்டு போனா, எனக்கு ஜிவ்வுன்னு ஆயிருச்சு, நானும் ஹி ஹின்னு சிரிச்சுகிட்டே என் பிரண்ட பார்த்து எப்படிடான்னு கேட்டேன்,
போடாங்@#\\/_’@^*  (கோடிட்ட வார்த்தைய உங்க இஷ்டப்படி நிரப்பிக்கோங்க) போயி பேச சொன்னா பக்கத்துல போய் நின்னுட்டு திரும்பி வந்து இளிச்சிகிட்டு நிக்கிற ம@#^%& மாதிரின்னு டென்சன் ஆயிட்டான்,

டேய் நான் என்னடா பண்றது நான் பேசத்தான போனேன், அவ என்னப்பார்த்து அந்த பக்கம் ஓடிட்டா நான் என்ன பண்றது?

என்கிட்ட மட்டும் வியாக்கியானம் பேசு, அவகிட்ட பேசாத,

சரி விடுடா நாளைக்கு கண்டிப்பா ஐ லவ் யூ வே சொல்லிடுறேன்.

கிளிச்ச, பேசறதுக்கே இவ்வளவு பம்முற நீயாவது ஐ லவ் யூ சொல்லப் போறாதாவது பார்க்கலாம், பார்க்கலாம்ன்னான்.

கண்டிப்பா நாளைக்கு கிளைமேக்ஸ்தாண்டா, நான் ஐ லவ் யூ சொல்ல போறது உறுதின்னு சொன்னேன்.

அவ என்ன திரும்பி பார்த்து சிரிச்சிட்டு போனது எனக்குள்ள நம்பிக்கையை கொடுத்திருந்தது, ஐ லவ் யூ சொன்னா கண்டிப்பா ஒத்துக்குவான்னு தோணுச்சு.அன்னைக்கு நைட்டு விதவிதமா கனவு வந்துச்சு, நான் ஐ லவ் யூ சொன்ன மாதிரியும், அவ அதுக்காகவே காத்துகிட்டு இருந்த மாதிரி அவளும் என்க்கு ஐ லவ் யூ சொல்ற மாதிரியும், காஸ்டியூம் மாத்திட்டு எங்க ஊர் புல்லா பாட்டு பாடற மாதிரியும், ஹி ஹி ஹி கூடவே கிஸ் அடிக்கற மாதிரி, பலான பலான கனவெல்லாம் வருது விடிய விடிய தூக்கமே வரல, சாயங்காலம் வர வரைக்கும் காத்துகிட்டு இருக்க மனசில்லை, காலையில டியூசன் போகும் போதே சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

காலையில 5 மணிக்கே அலாரம் வெச்சு எந்திருச்சு குளிச்சி முடிச்சு என் தங்கச்சி வெச்சிருந்த பேர் அண்ட் லவ்லி 5 ரூபா பாக்கெட்ட தேடி எடுத்தேன், அவ 5 நாளைக்கு போடர பேர் அண்ட் லவ்லிய நான் அஞ்சே நிமிசத்துல மூஞ்சில போட்டு அப்பினேன், ஹி ஹி பேசிக்காவே நான் கொஞ்சம் அழகுங்க, ஆனா இன்னைக்கு ஐ லவ் யூ சொல்லனும்ல அதான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பியூட்டி, அன்னைக்குன்னு பார்த்து ஏழு மணிக்கு எந்திரிக்கிற என் தங்கச்சி 6 மணிக்கே எந்திரிச்சி என் மூஞ்சிய பார்த்து வீல்னு கத்தறா,
ஏண்டி கத்தற பேர் அண்ட் லவ்லிதான போட்டேன், அதுக்கு எதுக்கு கத்துற?
எதுக்கடா என்னோட பேர் அண்ட் லவ்லிய எடுத்து பேய் மாதிரி அப்பிட்டு நிக்குற, எனக்கு பேர் அண்ட் லவ்லி வேணும் கொடுடான்னு கத்தறா,

ஆகா ஆரம்பமே அபசகுணமா இருக்கே, போற காரியம் விளங்குமான்னு மனசில நினைச்சாலும் நரி மூஞ்சிலதான் முழிச்சிருக்கோம், கண்டிப்பா விளங்கும், விளங்கலைனா மூஞ்சிய பேத்துற வேண்டியதுதான்னு முடிவு பண்ணேன்,

இங்க பாருடி அண்ணன் ஒரு முக்கியமான வேலைக்கு போறேன், சக்சஸ் ஆச்சுன்னா அரை கிலோ பேர் அண்ட் லவ்லி வாங்கி தரேன், வேற ஏதாவது ஆச்சு மண்டைய உடச்சிடுவேன், காலையில கத்தாதன்னு அவள மிரட்டிட்டு கிளம்பினேன்.

நேரா என் பிரண்டு வீட்டுக்கு போனேன், தூங்கிட்டு இருந்தான் எழுப்பி பார்த்தேன், நாதாரி நைட்டு புல்லா சரக்கு அடிச்சிருப்பான் போல எந்திரிக்கவே இல்லை, சரி ஐ லவ் யூ சொல்ல போறோம், தனியா போனாத்தான் நல்லா இருக்கும்னு நினைச்சிட்டு கிளம்பினேன், போகும் போதே அவ வீட்டு வழியா போலாம் , காலையில எப்படி இருப்பான்னு பார்க்கலாம்னு நினைச்சிட்டே போனேன், அவ வீட்டுக்கு முன்னாடி இருக்குற தூண்ல சாய்ஞ்சு நின்னுகிட்டு இருந்தா, சும்மா தேவதை மாதிரி இருந்தா அவ நெத்தியில இருந்த ஸ்டிக்கர் பொட்டு சூரிய வெளிச்சத்துல சும்மா டாலடிச்சு அவ மூஞ்சிய மட்டும் ஆரஞ்சு கலர்ல பிரகாசமா காட்டுச்சு, அவ என்ன பார்த்த போது லைட்டா சிரிச்ச மாதிரி வேற இருந்துச்சு, ஐயே காலையிலேயே கொல்றாளேன்னு மனசுல நினைச்சிட்டு வேக வேகமா போய் அந்த டியூசன் செண்டர் போற வழியில நின்னேன்.

கொஞ்ச நேரம் ஆச்சு, அவளும் அவளோட பிரண்டும் தூரத்துல வந்திட்டு இருந்தாங்க, மறுபடியும் கடைசி பதிவில சொன்ன மாதிரியே கை, கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருச்சு, இதயம் வேகமா துடிக்குது, அவ ஓகே சொல்லிருவான்னு மனசு சொன்னாலும், என்னோட இதயத்தோட லப் டப் சத்தம், சங்கு ஊதற மாதிரி கேட்குது, உட்சகட்ட பயத்தோட காத்திருக்க ஆரம்பிச்சேன், அவளும் நெருங்கிகிட்டே இருந்தா, என்னோட பக்கத்துல வர வர எனக்கு உதறல் எடுக்க ஆரம்பிச்சிருச்சு, வேணாண்டா சாமி போயிரலாம்னு மனசு சொல்லுச்சு, சரி கிளம்பிரலாம்னு நான் நினைச்சு நடக்க ஆரம்பிச்சேன், அவ என் எதிர்ல வந்து நின்னா,
அவ என் மூஞ்சிய பார்த்தா, நான் அவ கண்ணை பார்த்தேன், இரண்டு பேரும் நேருக்கு நேரா நின்னுகிட்டு இருந்தோம்....

தொடரும்....


30 comments:

 1. // பொது நலன் கருதி வெளியிடுவது நாந்தான்.//

  HAHAHA.........

  ReplyDelete
 2. நல்லா இருக்கு, எல்லார் லைப்ளையும் வர முதல் அனுபவம்............

  FAIR & LOVELY ......................ஹஹாஹா

  ReplyDelete
 3. 'ஐ லவ் யூ’ சொல்லத்தெரியாவிட்டாலும், தொடரை எங்கே நிறுத்துறதுன்னு தெரிஞ்சு வச்சிருக்கீங்க..சீக்கிரம் அடுத்து என்னாச்சுன்னு சொல்லுங்க நைட் ஸ்கை..

  ReplyDelete
 4. ஓ.. இது இரண்டாவது பாகமா..

  நான் அப்போ முதல் பாகத்தையும் படிச்சுட்டு வந்து கொஞ்சம் லேட்டா வந்து படிக்கிறேன்.. :-)

  ReplyDelete
 5. ஹா ஹா ஹா.. ஐ'ம் சாரி.. இது மூனாவது பாகமா..

  ReplyDelete
 6. THOPPITHOPPI said... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தொப்பி தொப்பி, நீங்களும் பேர் அண்ட் லவ்லியா?

  செங்கோவி said... இருங்க இப்பத்தான் ஒரு புலோவுல போய்கிட்டு இருக்கேன், பழசை எல்லாம் ஞாபகபடுத்த வேண்டாமா? சீக்கிரமே சொல்றேன் :-)

  பதிவுலகில் பாபு said... இது மூணாவது பாகங்க, முதல் இரண்டையும் படிச்சிட்டு வாங்க பாபு

  ReplyDelete
 7. பதிவுலகில் பாபு said... அதுக்குள்ள கமண்ட் போட்டுடீங்களா, நன்றிங்க பாபு

  ReplyDelete
 8. சூப்பர் சூப்பர்.. ஒரு சிரிப்போடவே படிச்சேன்.. உண்மையைச் சொல்லனும்னா மலரும் நினைவுகள்தான்.. :-)

  தொடர்ந்து கலக்குங்க..

  ReplyDelete
 9. நானும் காலைல இப்படிதாங்க பிகரு பார்க்க கிளம்புவேன் . ஹி ஹி ஹி . ஆனா பேர் அண்ட் லவ்லிலாம் போடமாட்டேங்க

  ReplyDelete
 10. என்கிட்ட மட்டும் வியாக்கியானம் பேசு, அவகிட்ட பேசாத//
  இது என்ன கொடும? வியாக்கியானம் எல்லாம் லவ் பண்ற பொண்ணுககிட்ட பேசக்கூடாது... ப்ரெண்டுகிட்டதான் பேசணும். நீங்க செஞ்சதுதான் சரி...

  ReplyDelete
 11. யோவ் கண்ணா.... கதை அதே இடத்தில திரும்பி வந்து தொடரும்னு நிக்குது, இப்டி ஓவருநாளும் அவ முன்னாடி போய் நின்னேன் என்று சொல்லி எங்கள கலாய்க்க போறீங்களா? :-)

  ReplyDelete
 12. அட இப்பவும் தொடருமா.. தொடரட்டும்... தொடரட்டும்.. நான் காத்திருக்கேன்... சீக்கிரம் போடுங்க...

  ReplyDelete
 13. பதிவுலகில் பாபு said... நன்றி பாபு

  நா.மணிவண்ணன் said... அப்புறம் வேற என்ன போடுவீஙக? பேர் எவரா? எப்படி இருந்தாலும் நீங்க என்னோட இனம்தான்

  karthikkumar said... அது எல்லாம் சரி மாம்சு, புது வருசமும் வந்துருச்சு, பதிவு மட்டும் போட மாட்டேங்குறீங்களே?

  சி.பி.செந்தில்குமார் said... ஓகே தல

  எப்பூடி.. said... தல அப்ப நான் நின்னேன், இப்ப அவ நிக்குறா வித்தியாசம் இருக்குதுல்ல, அதுவும் இல்லாம ஒரே பாட்டுல லவ் ஓர்க் அவுட் ஆக நான் என்ன சூர்யவம்சம் சரத்குமாரா யோசிங்க தல :-)

  வெறும்பய said... சார் முதல்முதலா வருகை தந்து இருக்கீங்க ரொம்ப நன்றி சார்.

  ReplyDelete
 14. கதையை சொல்லும் விதம் நல்லாயிருக்குங்க. தலைப்பு மிரள வைக்கிறது.படத்தெரிவு அருமை.

  ReplyDelete
 15. தொடருங்கள்.. காத்திருக்கனே் அடுத்த பதிவிற்கு..

  ReplyDelete
 16. கதை நல்லா போகுது...... :-)

  ReplyDelete
 17. Blog Background music maathavillaiyaa?

  ReplyDelete
 18. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

  ReplyDelete
 19. சுவாதி படம் போட்டிருக்கீங்க... அதுவாச்சு பரவாயில்லை ஒவ்வொரு பாகத்துளையும் ஒவ்வொரு பிகரு.,... ஏன் இப்படி...?

  ReplyDelete
 20. பாரத்... பாரதி... said... நன்றி பாரதி சார், இந்த தலைப்பு அப்படி என்ன மிரள வைக்குதுன்னு தெரியலியே.

  தோழி பிரஷா said... நன்றி மேடம்

  Chitra said... இல்லை மேடம் நிறைய பேருக்கு அந்த பாட்டு புடிச்சு இருக்கு, அதான் விட்டுட்டேன், நன்றி மேடம்

  பன்னிக்குட்டி ராம்சாமி said... நன்றி ராமசாமி சார்

  Philosophy Prabhakaran said... அது ஒன்னும் இல்லை பிரபா, சும்மா ஒரு அட்ராக்சனுக்குதான் :-)

  ReplyDelete
 21. 3 பாகமும் படிச்சிட்டு பின்னூட்டம் எழுத கொஞ்சம் லேடடாகும், இந்த பற்றி அடுத்த பின்னூடடத்தில் விரிவா....

  ReplyDelete
 22. நேத்திக்கு ஆங்கிலத்தில் ஒரு கமெண்டு போட்டேன் வரலியா? உங்க ஸ்டோரி சூப்பர் ஆ இருக்கு! உங்க ப்ளாக்க மொபைலுக்கு எத்த மாதிரி மாத்துங்க! நாம படிக்க வசதியா இருக்கும்!

  ReplyDelete
 23. முதல் இரு பாகங்களை படித்துவிட்டு சொல்கிறேன்..!!

  ReplyDelete
 24. Super! Waiting for your next post! :-)

  ReplyDelete
 25. sakthistudycentre.blogspot.com said... ஒன்னும் அவசரமில்லை, மெதுவா படிச்சிட்டு வாங்க

  Rajeevan said... நன்றி நண்பா, மொபைல்ல மாத்தற மாதிரி வசதி இன்னும் எனக்கு வரல

  சிவகுமார் said... ஓகே நண்பா

  ஜீ... said... நன்றி நண்பா

  ReplyDelete
 26. //u love 3 girls? o sorry 3rd part..? ok ok//
  superb comment ..ஹ ஹ...:))))

  ReplyDelete
 27. //அவ 5 நாளைக்கு போடர பேர் அண்ட் லவ்லிய நான் அஞ்சே நிமிசத்துல மூஞ்சில போட்டு அப்பினேன், ஹி ஹி பேசிக்காவே நான் கொஞ்சம் அழகுங்க,//
  :))) ஓகே..ஓகே...

  ReplyDelete
 28. ஆனந்தி.. said... நம்ப மாட்டீங்களா, ஒருத்தன் அழகா இருக்கான்னா நம்ப மாட்டீங்களே, இருங்க இருங்க ஒருநாள் இல்லேன்னா ஒரு நாள் என்னோட போட்டோவ பிளாக்குல போடத்தான் போறேன், நீங்க ஓடத்தான் போறீங்க

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!