Friday, January 21, 2011

நானும் என் லவ்வும் - 5



உன் மேல் கோபம்தான் அன்பே
உன்னைபற்றி மட்டுமே
நினைக்க வைத்து 
என்னை
சுயநலவாதியாய்
மாற்றிவிட்டாய் என்று ...





நண்பர்களே நான் இந்த கதையை எழுத ஆரம்பிக்கும் போது முழு கதையையும் சுருக்கமா எழுதிடலாம்னு நினைச்சேன், ஆனா எழுத எழுத அனுமார் வாலாட்டம் அது பாட்டுக்கு நீண்டுகிட்டே போகுது, அதனால இந்த பதிவு ஏறக்குறைய கிளைமேக்ஸ் மாதிரி, இதோட போதும்னு நினைச்சீங்கன்னா சொல்லுங்க நிறுத்திடறேன், மேற்கொண்டு என்ன நட்ந்ததுன்னு தெரிஞ்சுக்கனும்னா விருப்பப்பட்டீங்கன்னா சொல்லுங்க மேற்கொண்டு தொடருகிறேன், ஏன்னா உங்க பொறுமையை இதுக்கு மேல சோதிக்க எனக்கே பொறுமை இல்லை ... 

மூணு பேரும் கிளம்பினோம், நேரா வீட்டுக்கு போனேன்,
டேய் எங்கடா போற,
நில்லுடா வீட்டுக்கு போய் கை கால் மூஞ்சி எல்லாம் கழுவிட்டு டிரஸ் மாத்திட்டு போலாம்டா
டேய் ஏற்கனவே டைம் ஆயிருச்சி, இன்னும் இதெல்லாம் பண்ணிகிட்டு இருந்தா அவ போயிருவா, அப்படியே வா, நல்லாத்தான் இருக்கு
விட மாட்டான் போலருக்கே, எப்படியாவது லேட் பண்ணிடலாம்னு பார்த்தா, என்னை விட இவனுக்குதான் அவசரம் போல இருக்குது
அதெல்லாம் முடியாது, லவ் பண்றது நானு, இந்த அழுக்கு பனியன், வேட்டியோட எல்லாம் என்னால வரமுடியாது, வேணும்னா இன்னொரு நாள் மொட்டையனை கூட்டிட்டு போலாம்
ஏண்டா நீவேற இவ்வளவு தூரம் கிளம்பி வந்துட்டு ஆசை காட்டி அவன ஏமாத்தாத
அப்ப அஞ்சு நிமிசம் வெயிட் பண்ணுடான்னு சொல்லிட்டு அவசர அவசரமா சட்டை மாத்தினேன், அதகூட மாட்ட அவனுங்க விட மாட்டேங்கறாங்க, இருங்கடா இருங்கடான்னு சொல்ல சொல்ல ஏறக்குறைய என்னை தூக்கிட்டே போயிட்டானுங்க
டேய் பேர் அண்ட் லவ்லியாவது போட்டுக்கறேண்டா விடுங்கடான்னு கத்தினேன், அவனுங்க கேட்டாத்தான, அவசர அவசரமா சைக்கிள்ள உட்கார வெச்சு கிளம்புனானுங்க,

என் பிரண்டு சொன்னான், டேய் டைம் இப்பவே ரொம்ப ஆயிருச்சு, நான் முன்னாடி போய் பார்க்கிறேன், இன்னேரம் டியூசன் முடிஞ்சாலும் முடிஞ்சிருக்கும், நீங்க பின்னாடியே வாங்க, டியூசன் விட்டுருந்தாங்கன்னா முன்னாடியே வந்து சொல்றேன்னுட்டு போயிட்டான்
நானும் மொட்டையனும் அவனோட சைக்கிள்ள முடிஞ்ச அளவுக்கு வேகமா போயிட்டு இருந்தோம், அய்யர் வீதி தாண்டி திரும்புனா கடை வீதி வந்துரும், அதை தாண்டி போனாத்தான் டியூசன் செண்டர், நாங்க அய்யர் வீதி பாதி தூரம் போகறதுக்குள்ள என் பிரண்டு தலைதெறிக்க சைக்கிள் ஓட்டிட்டு எதிர வந்துகிட்டு இருந்தான், அவன பார்த்ததும் நாங்களும் சைக்கிள நிறுத்துனோம்.
ஏண்டா என்னாச்சு
டியூசன் முடிஞ்சிருச்சுடா, அவங்க கிளம்பிட்டாங்க, பாதி தூரம் வந்துட்டாங்க, இனி அங்கே போய் பேச முடியாது
அய்யா தப்பிச்சோம்டா சாமின்னு நினைச்சேன், அப்ப சரி விடுங்கடா இன்னொரு நாளைக்கு பார்க்கலாம்னேன்,
டேய் பாவம்டா மொட்டையன், இன்னொரு நாளைக்கு எப்படிடா வருவான், பேசாம இங்கயே வச்சு பேசிருடான்னான்,
இங்கயா முடியவே முடியாது, உங்களுக்கு வேற வேலை இல்லையா, இது அவங்க ஏரியா, யாராவது பார்த்தா பிரச்சனையாகிடும்டா
ஒன்னும் ஆகாதுடா, ஞாயித்து கிழமை மத்தியானம் யாருமே இருக்க மாட்டாங்க, நான் வேணா உன்கூட நிக்கிறேன், தைரியமா பேசுடா, பேசுடான்னு உசுப்பேத்தறானுங்க,

நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கவே மாட்டேங்கறானுங்க, இங்க ஒன்னு சொல்லியாகனும். அய்யர் வீதி எண்டுல போஸ்ட் ஆபிஸ், அது பக்கத்துலேயே போலீஸ் ஸ்டேசன் இருக்குது, நாங்க நின்னுகிட்டு இருந்தது போஸ்ட் ஆபிஸ் பக்கத்துல,

சரி ஆனது ஆகட்டும்னு போஸ்ட் ஆபிஸ் முன்னாடி நின்னேன், என் பிரண்டு வெவரமா பத்தடி தள்ளி போஸ்ட் பாக்ஸ்கிட்ட நிக்கிறான், மொட்டையன் ரோட்டுக்கு ஆப்போசிட்ல ஒரு வீட்டு முன்னாடி சைக்கிள ரிப்பேர் பண்றமாதிரி நிக்கிறான், போலீஸ் ஸ்டேசன்ல இருக்கற ஏட்டு வேற என்னயே பார்க்கிற மாதிரி இருந்தது, ஆகா நல்லா மாட்டிகிட்டம்டா, சிக்குனம்னா ஈவ் டீசிங் கேசுல உட்கார வெச்சிடுவாங்களோ என்னமோன்னு மனசுல நினைச்சிகிட்டு இருந்தேன்.

முன்னயாவது என்ன பேசனும், எப்படி பேசனும்னு நைட்டு வீட்டுல உட்கார்ந்து விடிய விடிய டிரைனிங் எடுப்பேன், இப்ப திடீர்னு கூட்டிட்டு வந்துட்டானுங்க, என்ன பேசுறதுன்னு ஒன்னும் புரியல, ஏதோ ஒன்னு பேசனும், என்ன பேசலாம்னு நான் யோசிச்சிட்டு இருக்கும்போதே கரக்டா போலீஸ் ஸ்டேசன் திரும்பி அவளும், அவ பிரண்டும் அய்யர் வீதிக்குள்ள நுழைஞ்சாங்க, என் பிரண்டுக இரண்டு பேரும் சைகை மூலம் பேசிட்டு இருந்தானுங்க, டேய் அதுதான் அவன் ஆளுன்னு,

சரி ஆனது ஆச்சு பேசிரலாம்னு முடிவு பண்னினேன், இப்ப எனக்கு முன்ன மாதிரி பயம் இல்லை, அவகிட்ட பேசுனா கண்டிப்பா திருப்பி பேசுவா, சிரிச்சிட்டு போவான்னு ஹண்ட்ரட் பர்சண்ட் நம்பிக்கை இருந்தது மனசுக்குல்ல, அவ கொஞ்ச கொஞ்சமா நெருங்கி வர ஆரம்பிச்சா,

அவ பக்கத்துல வந்ததும், நானே அவங்ககிட்ட நெருங்கி போனேன், அவ மூஞ்சில சிரிப்பு மிஸ்சிங், அதவிட அவ என்ன கண்டுக்காத மாதிரி நேரா பார்த்துட்டு போனா, நான் இது இரண்டையும் கவனிக்க தவறுனேன், நேரா எதிர்ல போய் நின்னேன், அவங்களும் நின்னாங்க, என்ன பேசறதுன்னு தெரியல, அதனால சும்மானாச்சுக்கும் எதாவது பேசுவோம்னு,

எதுக்குங்க என்ன பார்த்து சிரிச்சீங்கன்னு கேட்டேன்,
அதுக்கு அவளும், நீங்க ஏன் என்னை பார்த்தீங்கன்னு கேட்டா, 
நான் சும்மாதான் பார்த்தேன்னு சொன்னேன்
நானும் சும்மாதான் சிரிச்சேன்னு சொன்னா
இது என்னடா கொடுமைன்னு நினைச்சுகிட்டே சரி எத்தனையோ பேர் இருக்கயில்ல என்னை மட்டும் பார்த்து ஏன் சிரிச்சீங்க, அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டேன்,
அதுக்கு அவ சொன்னா பாருங்க பதிலு, அத கேட்டு அடிக்கற காத்து அப்படியே நிக்குது, கடல் அலைகளும் அப்படியே நிக்குது, காத்துல ஆடுற மரங்களும் அப்படியே நிக்குது

அவ என்ன சொன்னான்னா ....

உன் வயசு என்ன? என் வயசு என்ன? நான் பிளஸ் 2 படிக்கிறேன், நீ பிளஸ் 1 படிக்கிற, நீ என் தம்பி மாதிரி ....

தொடர்ந்தாலும் தொடரும் ... 


ஒரு சின்ன கவிதை
அவள் சிரித்தாள்
நான் முறைத்தேன்
அவள் காதல் என்றால்
நான் பேரன்ஸ் என்றேன், இறுதியில்
’’நான் மணவறையில்’’
’’அவள் கல்லறையில்’’
கொய்யாலே எவ்வளவு நாள்தான் பசங்களே சாகுறது..
இனிமேல் பொண்ணுங்களும் சாகட்டும்
நமக்கு 1000 பிகர் மடியும் மச்சி ...


47 comments:

  1. ஐயையோ நண்பா முதல் பிகருலே சூடேத்துறீன்களே . இருங்க படிச்சுட்டு வரேன்

    ReplyDelete
  2. ம்ம் .முடிவ படிச்சு அழுகையா வருது

    ReplyDelete
  3. Tv - சீரியல் பாக்கும்போது தொடர்ம்ன்னு போட்டா ஒரு டென்சன் வருமே.... அதே.. அதே..
    கவிதை அருமை..
    http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9630.html

    ReplyDelete
  4. அந்த பொண்ணு போட்டோ சூன்னர் பாஸ்..

    ReplyDelete
  5. tamilmanam,tamil10,indli,ulavu..
    நான் ஓட்டு போட்டுட்டேன்..

    ReplyDelete
  6. ஃபோட்டோல உள்ள ஃபிகர் யாரு சார்? சும்மா டக்கராக்கீதுப்பா.

    ReplyDelete
  7. உன் வயசு என்ன? என் வயசு என்ன? நான் பிளஸ் 2 படிக்கிறேன், நீ பிளஸ் 1 படிக்கிற, நீ என் தம்பி மாதிரி ....///
    இந்த பொம்பளைங்களே இப்படிதான் குத்துங்க எசமா குத்துங்க.....:)

    ReplyDelete
  8. போன பதிவில் மொட்டையனுக்கும் அந்த பொண்ணுக்கும் சம்பந்தம் இருக்கு அப்டின்னு முடிச்சீங்க-நு நெனைக்கிறேன். அத பத்தி சொல்லவே இல்ல...

    ReplyDelete
  9. @ நா.மணிவண்ணன் ...

    பொண்ணு ஓகேன்னா சொல்லுங்க மணி முடிச்சிரலாம் :-))))

    ReplyDelete
  10. @ sakthistudycentre-கருன் ...

    எங்க விளையாட்டுக்கு சொல்றீங்களா இல்லை காமெடிக்கு சொல்றீங்களான்னு தெரியல, உண்மையிலேயே சீரியல் அளவுக்கு கொடுமையாகவா இருக்குது, உங்களுக்கும் பொண்ணு புடிச்சு போச்சா, இருங்க இன்னொரு போட்டாவயும் போட்டுடுறேன்...

    ReplyDelete
  11. @ Ding Dong ...

    நீயுமா கொஞ்சம் பொறுப்பா இன்னொரு போட்டோவும் போட்டுடறேன்...

    ReplyDelete
  12. @ karthikkumar ...

    எங்கத்த குத்துறது, அதுதான் அவ குத்திட்டு போயிட்டாளே, நான் எங்கயா மொட்டையனுக்கும் அந்த பொண்ணுக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொன்னேன், அந்த பதிவ சரியா படிச்சீங்களா இல்லையா மாம்சு?

    ReplyDelete
  13. PART 4 :
    அடப்பாவி என்ன விட எல்லா டீடெயிலும் கலக்ட் பண்ணி வச்சிருக்கானேன்னு வேற வழி இல்லாம நானும் கிளம்பினேன்,

    நடக்கப்போற விபரீதம் தெரியாமலேயே///

    சாரி மாப்பு இந்த லைன் படிச்சு கன்பியுஸ் ஆயிட்டேன்... :)

    ReplyDelete
  14. karthikkumar said...

    ஓகே மாம்சு, மொபைல் ஓகே ஆயிருச்சா?

    ReplyDelete
  15. இரவு வானம் said...
    karthikkumar said...

    ஓகே மாம்சு, மொபைல் ஓகே ஆயிருச்சா///

    இன்னும் இல்ல மாப்பு.. ரெடி ஆச்சு அப்டின்னு சொன்னா ஏகப்பட்ட பொண்ணுக கால் பண்ணி தொல்ல பண்ணுவாங்க.. நமக்கு இருக்குற சமூக பணிகளில் எடஞ்சல் வர கூடாது பாருங்க...

    ReplyDelete
  16. கொய்யாலே எவ்வளவு நாள்தான் பசங்களே சாகுறது..
    இனிமேல் பொண்ணுங்களும் சாகட்டும்
    நமக்கு 1000 பிகர் மடியும் மச்சி ...

    பாஸு இந்த Line சூப்பரா இருக்குது.ஆனா ஒரு mistake 999 ஃபிகர்ஸ் ஒன்னு தான் அவுட் ஆகியிருச்சில்ல .. ஆமா photoல இருக்கிற ஃபிகர் யாரு?

    ReplyDelete
  17. @ sulthanonline...

    ஹி ஹி நம்மாளுதான் நல்லா இருக்கா மச்சி..

    ReplyDelete
  18. காதல் சொல்ல வந்தேன் கதை மாதிரி இருக்கு !

    ReplyDelete
  19. @ ஆகாயமனிதன்.. .

    சாரிங்க நான் அந்த படம் பார்த்ததில்லை, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சார்

    ReplyDelete
  20. விவரமா இருக்காங்கப்பா, எல்லாரும் பொண்ண பத்தியே கேட்குறாங்களே தவிர ஒரு ஆளாச்சும் தொடரலாம்னு சொல்ல மாட்டேங்குறாங்களே?

    ReplyDelete
  21. அப்போ தொடர மாட்டீங்களா பாஸ்? ஒரு வயசுதானே! :-)

    ReplyDelete
  22. கடைசியாக உள்ளது SMS தானே?

    ReplyDelete
  23. ///இரவு வானம் said...

    @ நா.மணிவண்ணன் ...

    பொண்ணு ஓகேன்னா சொல்லுங்க மணி முடிச்சிரலாம் :-)))) ///

    நண்பா உண்மைலே அம்சமான பிகர் . ஹி ஹி

    ReplyDelete
  24. நண்பா முடியல , மனசே என்கிட்டே இல்ல . எங்க இருந்து அந்த போட்டோ எடுத்தீங்க

    ReplyDelete
  25. ஏங்க..இரவு வானம்சார்.எல்லாம் சரிதான்.கதைக்கு இந்த படங்கள்தன் கிடைச்சுதா>

    ReplyDelete
  26. sema செம பதிவு செம ஃபிகர்.. (கேரளாவா?)

    ReplyDelete
  27. இப்பகூட உங்களுக்கு கதைய முடிக்க மனசு வரல இல்ல :-))

    ReplyDelete
  28. இன்னும் எவ்வளவு பிளாஷ் back தேறும்னு குத்து மதிப்பா சொன்னால் நாங்களும் ஒரு முடிவு பண்ணி சொல்வோம்ல...:) ஆனால்..எல்லா பார்ட் டும் செம சுவாரஸ்யம்...நிஜமாய் இந்த பதிவில் நீங்க சொன்னதை கூட படிசிருப்பான்களா னு தெரியல:)))..காரணம் நீங்கள் பதிவில் போட்டு இருக்கும் அழகான பெண்ணின் புகைப்படங்கள்...ஸோ..நீங்க நினைச்சதை அடுத்த பார்ட் டில் போட்டு கேளுங்க ..ஜமாயுங்க உங்க தொடர் ஸ்டோரி ஐ..:) அந்த லாஸ்ட் கவிதை சூப்பர்..:)))

    ReplyDelete
  29. ஹா,ஹா,ஹா,ஹா,.... என்னவோ போங்க....

    ReplyDelete
  30. @ ஜீ...

    நன்றி ஜீ நீங்களாவது தொடரலம்னு சொன்னீங்களே..

    ReplyDelete
  31. @ பாரத்... பாரதி..

    ஒகே ரைட்டு, ஆமாங்க அது எஸ் எம் எஸ்தான், அது சரி உங்களை வந்து பார்க்கனும்னா என்ன சொல்லி வரணும்னு கேட்டதற்கு பதிலே சொல்ல மாட்டேங்குறீங்களே....

    ReplyDelete
  32. @ நா.மணிவண்ணன்...

    நண்பா ஓவரா உணர்ச்சி வசப்படாதீங்க உண்மைய சொல்லிடுறேன், அது தெலுங்கு பட நடிகை ஸ்ரீ திவ்யா, இன்னும் தமிழ்படங்களில் நடிக்காததால நிறைய பேருக்கு தெரியாமல் போயிருச்சு :-))))

    ReplyDelete
  33. @ ஸாதிகா...

    ஹி ஹி ஹி சும்மாதானுங்க, உங்களுக்கு பொண்ண புடிக்கலையா???

    ReplyDelete
  34. சி.பி.செந்தில்குமார் said...
    sema செம பதிவு செம ஃபிகர்.. (கேரளாவா?)

    ஹி ஹி ஹி இல்லைங்க ஆந்திரா, அந்த ரெண்டாவது போட்டோ மட்டும் கேரளா :-)

    ReplyDelete
  35. @ எப்பூடி..

    தல ஏன் தல, எனக்கு எழுத மேட்டர் இருந்தா எழுத மாட்டனா, இது ஒன்ன வச்சுதான் வாரத்துக்கு ஒரு பதிவு ஒப்பேத்திட்டு இருக்கேன், கொஞ்சம் லூஸ்ல விடுங்க தல எழுதிக்கறேனே...

    ReplyDelete
  36. திவ்யா திவ்யா திவ்யா திவ்யா

    ReplyDelete
  37. @ ஆனந்தி..

    நன்றி மேடம் நீங்களாவது புரிஞ்சுக்கிட்டீங்களே, மொட்டையா இதோட நிறுத்தினா அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியாம போயிடும்னு நினைச்சேன் அதான்,இன்னும் ஒரு 2 அல்லது 3 பதிவோட நிறுத்திக்கிறேன், ஒகேங்களா?

    ReplyDelete
  38. @ Chitra....

    என்ன மேடம் ஒன்னுமே சொல்லாம போனா எப்படி, ஏதாவது ஒன்னு சொல்லுங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  39. @ நா.மணிவண்ணன் ....

    ஹி ஹி ஹி ஆமா ஆமா ஆமா......

    ReplyDelete
  40. @ பாவா ஷரீப் ...

    நன்றி மச்சி, திருப்பூர்ல எங்கன்னு சொல்லுங்க, பிரண்ட்ஸ்சாகிடலாம்...

    ReplyDelete
  41. நல்ல ரைட் அப் மச்சி

    ரசனையாவும் இருந்துச்சு வித்தியாசமான முடிவு..

    ReplyDelete
  42. Sorry after Vacation- Long time no see!!!!!!
    How are you??? and family???
    Take care!

    ReplyDelete
  43. படிச்சேன் சூப்பர்! நல்ல எழுத்து நடை...!

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!