Wednesday, January 12, 2011

நானும் என் லவ்வும் - 4


[புதுசா வந்து படிக்கறவங்க மேல இருக்கற மூணு பாகத்தையும் படிச்சிட்டு வந்திடுங்க, இல்லைன்னா ஒன்னுமே புரியாது, ஏன்னா எனக்கே புரிய மாட்டேங்குது]


நான் அவ கண்ணை பார்த்தேன், கோவமா இருக்காளா, இல்லை நல்லாத்தான் இருக்குறாளா, ஒரே குழப்பமா இருக்கே, என்ன பேசுறது, ஒருவேளை திட்டிருவாளோ, இப்படி யோசிச்சுகிட்டு இருந்தேன், நல்லவேளை அவளே பேசினா
ஏன் என் பின்னாடியே வர்ரீங்க?
இல்லையே நான் எங்க உங்க பின்னாடி வந்தேன், அப்படின்னுதான் சொன்னேன்னு நினைக்கிறேன், ஏன்னா நான் பேசுனது எனக்கே கேட்கலை, வார்த்தைகளுக்கு பதிலா வெறும் காத்துதான் வருது.
நான் சொன்னதை கேட்டு அவளுக்கு சிரிப்பு வந்துருச்சு, அவ கூட வந்த பிரண்டும் சிரிச்சிட்டா, சரி என்னன்னு சொல்லுங்கன்னு கேட்டா,
ஒன்னுமில்லிங்க நல்லா இருக்கீங்களான்னு கேட்டேன், என்னோட குரல் நடுங்கறது எனக்கே தெளிவா தெரிஞ்சது, நல்லாத்தான் இருக்கேன்னு சொல்லிட்டு சிரிச்சிகிட்டே போயிட்டா.

ஒரு நிமிசம் எனக்கு என்னாச்சுங்கறதே ஞாபகம் இல்லை, உண்மையிலேயே பேசிட்டனா, கனவா இல்லை நெஜமான்னு புரியல, ஆனா ரொம்ப சந்தோசமா இருந்தது, அன்னைக்கு எனக்கு இருந்த மனநிலைய வார்த்தையால சொல்லி புரிய வைக்க முடியாது, அப்படி ஒரு சந்தோசம், என் வாழ்க்கையில மகிழ்ச்சியா இருந்த தருணங்கள்ள அதுவும் ஒன்னு.

உண்மையிலேயே முன்ன பின்ன தெரியாத பொண்ணுகூட பேசுறது கஷ்டம்க, இப்ப வேணா சோசியலா இருக்கலாம், ஆனா அப்ப அப்படி இல்லை, இந்த லட்சணத்துல ஐ லவ் யூ எங்க சொல்றது, பேசுனதே பெரிய விசயம்னு ஆகி போச்சு

நேரா கிளம்பி ஸ்கூலுக்கு போனேன், முதல் பீரியட் தமிழ், இரண்டாவது பீரியட் இங்கிலீஸ், இது ரெண்டும் பரவாயில்லைங்க, ஆனா மூணாவது, நாலாவது பீரியட் கண்டிப்பா கணக்கு, இல்லைன்னா சயின்ஸ்தான், இது ரெண்டும் வேலைக்காதது, நாங்க முதல் பீரியட் அட்டெண்டண்ஸ் எடுத்ததுமே ஸ்கூல் ஜன்னல் வழியா எஸ்கேப் ஆகிடுவோம், கவருமெண்டு ஸ்கூலுங்கறதால ஜன்னல்ல பாதி கம்பியே இருக்காது, எனக்கு தெரியும் என்னோட உயிர் நண்பர்கள் பள்ளிக்கூடத்துல இருக்க மாட்டாங்க, கிரவுண்டுலதான் இருப்பானுங்கன்னு, நானும் கட் அடிச்சிட்டு கிளம்பி போய் அவனுங்க நாலு பேரையும் பார்த்தேன்.

நான் அவகூட பேசிட்டண்டானு சொன்னேன், பயபுள்ளக ஒருத்தனும் நம்பலை, நான் எங்க ஊருல இருக்குற 47 சாமி மேலயும், என்னோட எட்டு தலைமுறை முன்னோர்கள் மேலயும் சத்தியம் பண்ணி நம்ப வச்சேன், சரி பார்ட்டி வைடான்னு சொன்னாங்க, பார்ட்டின்னா இப்ப இருக்கற மாதிரி பார்ட்டி இல்லை, அப்ப என்னோட குளோஸ் பிரண்டு மட்டும்தான் ஆப் பீர் அடிப்பான், மீதி நாங்க மூணு பேரும் டீ மட்டும்தான் அடிப்போம், இருக்குற காசெல்லாம் போட்டு ஆப் பீர் 35 ரூபாதான் அவனுக்கு வாங்கி கொடுத்தோம், அத குடிச்சிட்டு மப்பேறி போயிருச்சு அவனுக்கு, மாப்ள பொண்ணு ஓகே சொல்லிட்டால்ல விடுடா நாளைக்கே பொண்ண தூக்குறோம், கல்யாணம் பண்றோம்கறான்,
அட நாதாரி நான் இன்னும் ஐ லவ் யூ சொல்லவே இல்லைடா, சும்மாதாண்டா பேசிட்டு வந்திருக்கேன்,
பேசிட்டாளில்ல அப்ப அவ லவ் பண்றாண்ணுதான் அர்த்தம், அப்படி இப்படின்னு அன்னைக்கு நாள் முழுக்க ஒரே அலப்பறை அவனோட,

டேய் இந்த விசயத்தை யார்கிட்டயும் சொல்லிடாதடா, முக்கியமா நம்ம ஊர் பசங்ககிட்ட மட்டும் கண்டிப்பா சொல்லிடாதடான்னு மப்புல இருந்த அவங்கிட்ட சத்தியம் வாங்கினேன், ஏன்னா எங்க ஊரு பசங்க கொஞ்சம் இல்லை ரொம்பவே மோசமானவனுங்க, டோட்டலா எங்க ஊருல ஏலெட்டு ஊரு இருக்கு, அதுல எங்க ஊரும், பக்கத்து ஊரும் ரொம்ப பேர் வாங்கின ஊரு, அவங்களுக்கு மட்டும் விசயம் தெரிஞ்சது மானத்தை வாங்கிடுவானுங்க, இப்பத்தான் லவ் பன்ற விசயம்லாம் ரொம்ப சாதாரணமா இருக்கு, ஆனா அப்பயெல்லாம், லவ் பண்றாங்கன்னாலே ஏதோ ஜந்துவை பார்க்குற மாதிரி பார்ப்பாங்க, கிண்டல் பண்ணியே கொன்னுடுவானுங்க,
ஒரு வழியா அவனோட பார்ட்டி பிரச்சனை முடிஞ்சது, மீதி இரண்டு பேர் இருக்கானுங்களே அவனுங்களுக்கு பார்ட்டி, அப்பத்தான் எங்க ஊருல ஒரு ஸ்வீட் ஸ்டால் ஓப்பன் பண்ணி இருந்தாங்க, புது கடைங்கறதால எப்ப பார்த்தாலும் செம கூட்டமா இருக்கும், கடையில வேலை பார்க்குற ஆளுங்களும் கம்மி, நமக்கு எது வேணாலும் நாமே எடுத்து சாப்பிட்டுக்கலாம், எங்ககிட்ட எப்ப காசு கம்மியா இருந்தாலும் அங்கதான் போவோம், முப்பது நாப்பது ரூபாய்க்கு சாப்பிட்டுட்டு பத்து ரூபா கொடுத்துட்டு வந்திடுவோம், அன்னைக்கு எங்கையில இருவது ரூவாதான் இருந்தது, என் பிரண்டு துரை இருக்கானே சரியான சாப்பாட்டு பைத்தியம் புடிச்சவன், எவ்வளவு கிடைச்சாலும் சாப்பிட்டுட்டே இருப்பான், அன்னைக்கு 150 ரூபாய்க்கு தின்னுட்டு வெறும் இருபது ரூபா கொடுத்திட்டு பார்சலும் வாங்கிட்டான்.
ஒருவழியா இவனுங்க பிரச்சனையும் முடிஞ்சது.

அப்படியே வீட்டுக்கு போயிட்டேன், அப்புறம் ஒரு வாரமும் அவள பார்க்கறதும், அவ சிரிக்கறதும், நானும் சிரிக்கறதும் தொடர்கதையா போச்சு, நானும் ரொம்ப சந்தோசமா இருந்தேன், ஆனா விதி வலியது, சும்மா விடுமா?

அன்னைக்கு ஞாயித்து கிழமை, நானும் என் பிரண்டு பசங்களும் வழக்கம் போல கிரிக்கெட் விளையாட கிரவுண்டுக்கு போய் விளையாடிட்டு இருந்தோம், அப்ப என்னோட பழைய பிரண்டு ஒருத்தன் மொடையன்னுதான் கூப்பிடுவோம், அவன் வந்தான், ரொம்ப நாள் கழிச்சு வந்ததால ரொம்ப நேரம் அவன் கூட பேசிட்டு இருதோம், அப்புறம் நான் பீல்டிங் பண்ண போயிட்டேன், என் குளோஸ் பிரண்டும் மொட்டையனும் மட்டும் தனியா பேசிட்டு இருந்தானுங்க, பீல்டிங் முடிஞ்சு நான் வந்தேன், என்னை தனியா கூப்பிட்டுட்டு போனானுங்க,

டேய் மொட்டையன் உன் ஆள பார்க்கனும்கறான், வாடா போய் காட்டிட்டு வந்திடலாம்கறான்
மொட்டையனும் ஆமாண்டா நானும் முன்ன பின்ன லவ் பண்றத பார்த்ததே இல்லை, ப்ளீஸ் என்னையும் கூட்டிட்டு போடாங்கறான்.
அடப்பாவிகளா நானே முன்ன பின்ன லவ் பண்ணதே இல்லயேடா இதுல இவனுக்கு எங்கிருந்து காமிக்கறது,
ஏண்டா உங்களுக்கு வேற வேலையே இல்லையாடா, தீடிர்னு வந்து லவ் பண்ணுடான்னா எப்பட்றா? இன்னொரு நாளைக்கு பார்க்கலாம்டான்னா கேட்கவே மாட்டேங்கறாங்க, இன்னொரு நாளைக்கு மொட்டையன் எப்படிடா வருவான், அவ்ளோ தூரத்துல இருந்து வந்துருக்கான், வாடா வாடான்னு கூப்பிடுரானுங்க,

அட இப்போ எப்படிடா போறது, டியூசன் வேற முடிஞ்சிருக்கும்டா

இல்லடா இன்னும் அரை மணி நேரம் இருக்கு, இப்ப போனா புடிச்சிரலாம்கறான்

அடப்பாவி என்ன விட எல்லா டீடெயிலும் கலக்ட் பண்ணி வச்சிருக்கானேன்னு வேற வழி இல்லாம நானும் கிளம்பினேன்,

நடக்கப்போற விபரீதம் தெரியாமலேயே...

தொடரும்...

டிஸ்கி 1 : அடுத்து நடக்க போவதை சரியாக ஊகிக்கும் நண்பர்களுக்கு சிறப்பு பரிசு ஒன்று காத்திருக்கிறது, 

டிஸ்கி 2 : அது என்னவென்றால் சரியாக ஊகிக்கும் நண்பர்கள் திருப்பூருக்கு வரும்போது என்னை தொடர்பு கொண்டால் காந்திநகரில் இருக்கும் முனியாண்டி விலாசில் குஸ்கா ஒன்று தயிர் வெங்காயத்துடன் கிடைக்கும், முந்துபவர்கள் முந்தலாம், நன்றி...    

34 comments:

 1. ஆஹா.. வடை.. யாரங்கே எடுத்து வாருங்கள் எனக்கான வடையை..

  ReplyDelete
 2. //காந்திநகரில் இருக்கும் முனியாண்டி விலாசில் குஸ்கா ஒன்று தயிர் வெங்காயத்துடன் கிடைக்கும், //
  எனக்கு வடையே போதும் , அடுத்து வருபவர்க்கு குஸ்கா குடுங்க...

  ReplyDelete
 3. தேச பக்தி என்பது அந்நியர்கள் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதைக் குறிப்பதோடு, நம்மவர்கள் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுதலையும் குறிப்பதாகும்.
  - விவேகானந்தர்.
  இன்று 12-1-11. தேசிய இளைஞர் தினம்.
  விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..

  ReplyDelete
 4. ஒரு டி.வி சீரியல் பாக்கிற FEELING அப்படியே இருக்கு..

  ReplyDelete
 5. tamil 10 -ல் kkarun09 அப்படீன்னு ஓட்டு பொடரது நான்தான்.

  ReplyDelete
 6. அன்னைக்கு எனக்கு இருந்த மனநிலைய வார்த்தையால சொல்லி புரிய வைக்க முடியாது,///
  அப்போ ஒரு பேப்பர்ல எழுதி கொடுங்க நான் படிச்சி தெரிஞ்சிக்கிறேன்...

  ReplyDelete
 7. என்ன அந்த பொண்ணு மொட்டையனோட உறவு பொண்ணா இருக்கும் இல்ல அந்த பிரென்ட் லவ் பண்ணிருப்பான் அப்டியா...

  ReplyDelete
 8. திருப்பூருக்கு வரும்போது என்னை தொடர்பு கொண்டால் காந்திநகரில் இருக்கும் முனியாண்டி விலாசில் குஸ்கா ஒன்று தயிர் வெங்காயத்துடன் கிடைக்கும், முந்துபவர்கள் முந்தலாம், நன்றி..////
  அது ஒரு மொக்க ஹோட்டல்யா அங்க எங்க பசங்க சாப்ட்ருகாங்க...

  ReplyDelete
 9. //மொட்டையனும் ஆமாண்டா நானும் முன்ன பின்ன லவ் பண்றத பார்த்ததே இல்லை, ப்ளீஸ் என்னையும் கூட்டிட்டு போடாங்கறான்.
  அடப்பாவிகளா நானே முன்ன பின்ன லவ் பண்ணதே இல்லயேடா இதுல இவனுக்கு எங்கிருந்து காமிக்கறது,//

  ஹ ஹ...என்ன கொடுமை இது...:)))

  ReplyDelete
 10. என்ன ஒரே மலையாள பாட்டா இருக்கு௦. கேரளா பொண்ண லவ் பண்றீங்களா...

  ReplyDelete
 11. பாரத்... பாரதி... said...

  நான் நாக்கு தவற ச்சீ வாக்கு தவற மாட்டேன், குஸ்கா மட்டும்தான் கிடைக்கும், வடைதான் வேண்டுமென்றால் அடுத்த பதிவில் டிரை பண்ணுங்க :-)

  ReplyDelete
 12. பாரத்... பாரதி... said...

  வீரத்துறவி விவேகானந்தரை நினைவு கொள்வதில் நானும் பெருமை அடைகிறேன்.

  ReplyDelete
 13. sakthistudycentre.blogspot.com said...
  //ஒரு டி.வி சீரியல் பாக்கிற FEELING அப்படியே இருக்கு..// அவ்வளவு கொடுமையா நான் பண்ரேன்?

  //tamil 10 -ல் kkarun09 அப்படீன்னு ஓட்டு பொடரது நான்தான்// pldmsuri அப்படினு ஓட்டு போடறது நாந்தான் :-)

  ReplyDelete
 14. karthikkumar said...
  //அப்போ ஒரு பேப்பர்ல எழுதி கொடுங்க நான் படிச்சி தெரிஞ்சிக்கிறேன்// எழுத தெரிஞ்சா எழுத மாட்டனா மாம்சு

  //என்ன அந்த பொண்ணு மொட்டையனோட உறவு பொண்ணா இருக்கும் இல்ல அந்த பிரென்ட் லவ் பண்ணிருப்பான் அப்டியா// உங்களுக்கு குஸ்கா கூட கிடயாது

  //அது ஒரு மொக்க ஹோட்டல்யா அங்க எங்க பசங்க சாப்ட்ருகாங்க// நீங்க டிஸ்கிய சரியா கவனிக்கலை, வெங்காயத்தோடன்னு போட்டு இருக்கனில்ல, அவ்வளவு காஸ்ட்லியான பொருள் அங்க மட்டும்தான் கிடைக்குது, ஹி ஹி நம்ம ரேஞ்சு அவ்வளவுதான் மாம்சு

  //என்ன ஒரே மலையாள பாட்டா இருக்கு௦. கேரளா பொண்ண லவ் பண்றீங்களா...// நீங்க நிறைய கிளறுவீங்க போல இருக்குதே, மெயில பண்ணி இருக்கேன் பாருங்க

  ReplyDelete
 15. ஆனந்தி.. said... கொடுமைதான் என்ன பண்ரது மேடம், எனக்கு மேல இருக்கானுங்க :-)

  ReplyDelete
 16. சாட் INVITE அனுப்பிருக்கேன்.. சாட் ACCEPT கொடுங்க

  ReplyDelete
 17. இரவு வானம் said...
  ஆனந்தி.. said... கொடுமைதான் என்ன பண்ரது மேடம், எனக்கு மேல இருக்கானுங்க :-)///

  கீழ எறக்கி விடுங்க...

  ReplyDelete
 18. //இல்லடா இன்னும் அரை மணி நேரம் இருக்கு, இப்ப போனா புடிச்சிரலாம்கறான்
  அடப்பாவி என்ன விட எல்லா டீடெயிலும் கலக்ட் பண்ணி வச்சிருக்கானேன்னு வேற வழி இல்லாம நானும் கிளம்பினேன்//
  :-)

  ReplyDelete
 19. http://thiruttusavi.blogspot.com/2011/01/blog-post_12.html


  ennai paathithathu ungalidam pagirgiren;

  ReplyDelete
 20. எல்லாரும் ஒரேமாதிரிதான் இருந்திருக்கோம்.. :-)..

  டிஸ்கி வேற போட்டுட்டீங்க.. ம்ம்ம்.. என்னவா இருந்திருக்கும்..

  அன்னைக்கு அந்தப் பொண்ணு வீட்டு ஆளுங்ககிட்ட மாட்டிக்கிட்டீங்களோ..

  ReplyDelete
 21. அண்ணாத்த டென்சன் தாங்கல, சீக்கிரமா முடிங்க :-)

  ReplyDelete
 22. "" பயபுள்ளக ஒருத்தனும் நம்பலை, நான் எங்க ஊருல இருக்குற 47 சாமி மேலயும், என்னோட எட்டு தலைமுறை முன்னோர்கள் மேலயும் சத்தியம் பண்ணி நம்ப வச்சேன் ""

  நாம நம்பறோம் சார்! ரொம்ப நல்லாவே எழுதுறீங்க! கீப் கண்டினியூ!!

  ReplyDelete
 23. //அடுத்து நடக்க போவதை சரியாக ஊகிக்கும் நண்பர்களுக்கு சிறப்பு பரிசு ஒன்று காத்திருக்கிறது,//

  அடுத்து என்ன நடக்கும்னா கொஞ்சம் கதை அதுக்கப்புறம்

  தொடரும்......

  ரைட்டா?

  பாஸ் உங்க லவ் ரொம்ப பெருசா இருக்கே?

  ReplyDelete
 24. [புதுசா வந்து படிக்கறவங்க மேல இருக்கற மூணு பாகத்தையும் படிச்சிட்டு வந்திடுங்க, இல்லைன்னா ஒன்னுமே புரியாது, ஏன்னா எனக்கே புரிய மாட்டேங்குது]


  .....உங்க நேர்மை பிடிச்சு இருக்குது.

  ReplyDelete
 25. ஆஹா... முதல் ரெண்டு பகுதியில் அஞ்சலி... இந்தவாரம் சுவாதியா...

  http://www.philosophyprabhakaran.blogspot.com/

  ReplyDelete
 26. நண்பா நீங்களும் ஒரு விசயத்துல ஒன்னு . எனக்கு கணக்கு சயின்ஸ் ஆகாது . அப்பறம் "அன்னைக்கு எனக்கு இருந்த மனநிலைய வார்த்தையால சொல்லி புரிய வைக்க முடியாது,///. இந்த மனநிலையையும் என்னால் உணர முடிகிறது அப்படியே நம்ம ஆளோட கையை பிடித்து கொண்டு வான்வெளியில் பறப்பது போல் இருக்கும்

  ReplyDelete
 27. karthikkumar said... விட்டாச்சு விட்டாச்சு

  ஜீ... said... ஹி ஹி நன்றிங்க

  vinu said... பகிர்வுக்கு நன்றி நண்பா, மனதை உலுக்கியது.

  பதிவுலகில் பாபு said... இல்லைங்க, சாரி உங்களுக்கு குஸ்கா கிடையாது :-)

  எப்பூடி.. said... தல இதுல உள்குத்து எதுவும் இல்லையே :-)

  மாத்தி யோசி said... நன்றி ராஜீவன்

  THOPPITHOPPI said... ஹி ஹி பேசாம அடுத்த பாகத்தோட முடிச்சிடலாமான்னுதான் நானும் யோசிக்கிறேன் நண்பா

  Chitra said... நன்றி சித்ரா மேடம்

  Philosophy Prabhakaran said... அடுத்த வாரம் பாருங்க இன்னொரு சூப்பர் பிகர் இருக்கு :-)

  நா.மணிவண்ணன் said... என் இனமடா நீன்னு சொல்லனும் போல இருக்கு நண்பா :-)கரக்டா சொன்னீங்க, நன்றி நண்பா

  ReplyDelete
 28. //நான் நாக்கு தவற ச்சீ வாக்கு தவற மாட்டேன், குஸ்கா மட்டும்தான் கிடைக்கும், வடைதான் வேண்டுமென்றால் அடுத்த பதிவில் டிரை பண்ணுங்க :-//

  இந்த பதிவில எனக்கு வடை தானே கிடைச்சது., ஏதோ ஊழல் நடந்துள்ளது. கூட்டுங்கள் பார்லிமெண்டை...

  ReplyDelete
 29. நண்பா உங்களை வலைச்சரத்தில் பாலா அறிமுகபடுத்தி இருக்கிறார்

  ReplyDelete
 30. பாரத்... பாரதி... said... நான் பதிவிலேயே குஸ்கான்னு சொல்லிட்டதால, உங்க வடைய நான் திருப்பி எடுத்துகிட்டேன் :-)

  ReplyDelete
 31. நா.மணிவண்ணன் said... நன்றி நண்பா பார்த்தேன்.

  ReplyDelete
 32. இன்றுதான் உங்க கடைக்கு வரமுடிந்தது..லவ் ஸ்டோரி ஜிவ்வுன்னு போகுது பாஸ்..

  ReplyDelete
 33. செங்கோவி said... நன்றி பாஸ்

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!