Wednesday, March 2, 2011

சீடன் & நடுநிசி நாய்கள்


நாமளும் சினிமா பத்தின பதிவு எழுதி ரொம்ப நாளாச்சேன்னு ரெண்டு படம் பார்த்தேன், ஒன்னு சீடன் இன்னொன்னு நடுநிசி நாய்கள், இந்த ரெண்டு படத்தை பத்தியும் சொல்லனும்னா, அபாரம், அற்புதம், பிரமாதம்னு சொல்லுவேன், யாருக்குன்னு கேட்குறிங்களா என்னோட பொறுமைக்குதான், முதல்ல சீடன்..

பழனியில செட்டிலாகி இருக்குற பாட்டிக்கு எல்லா வேலையும் செஞ்சு தரதுக்கு ஒரு வேலைக்காரிய வெச்சிருக்காங்க, அவங்க அனன்யா,
சும்மா சொல்லக்கூடாது வருசம் 16 குஷ்பு மாதிரியே சூப்பரா இருக்காங்க, அவங்க முருக பக்தை, உங்க வீட்டு பக்தி எங்க வீட்டு பக்தி இல்லைங்க, ங்கொக்கா மக்கா பக்திங்க, காலையில கண்ணு முழிக்கறதுல இருந்து நைட்டு தூங்கற வரைக்கும் ஆ வூன்னா முருகன்கிட்ட போய் பேசுறது விளக்கு பத்த வைக்கிறதுன்னு ஓரே பக்தி மயம், இதையேதான் பத்து சீனாவது காட்டுறாங்க, பட்ஜெட் படம் போல, அனன்யா கனவுல கல்யாணம் ஆகற மாதிரி கனவு வருது, அந்த கனவுல வர ஆளு நம்ம பாட்டியோட பேரன், 

பாட்டியோட பேரன் லண்டன் போறதுக்கு முன்னாடி பாட்டியோட இருந்துட்டு போகலாம்னு வராரு, வந்த இடத்துல வேலைக்காரி அனன்யாவ பார்த்தவுடனே லவ் பண்ண ஆரம்பிச்சிடராரு, இவ்வளவு அழகான வேலைக்காரி எல்லா வீட்டுலயும் இருந்தா யார்தான் லவ் பண்ண மாட்டாங்க, கனவுல பார்த்த ஆளாச்சேன்னு இவங்களும் லவ் பண்ண ஆரம்பிக்கிறாங்க, இப்படி இவங்க ரெண்டு பேரும் மொக்கையா லவ் பண்ணிட்டு இருக்கும் போதே, ஹீரோவோட அம்மா சுகாசினி வேற இடத்துல பொண்ணு பார்த்துடறாங்க, மத்த நார்மல் ஹீரோவா இருந்தா அம்மாகிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்க நினைப்பாங்க, ஆனா நம்ம ஹீரோ அம்மா செல்லமாம், இவருக்கு புடிக்காதத அம்மா செய்ய மாட்டாங்களாம், அம்மாவுக்கு புடிக்காதத இவரு செய்ய மாட்டாங்களாம், அதுசரி முதல்லயே சொல்லி இருந்தாதான் இண்டர்வெல்லயே படம் முடிஞ்சிருக்குமே

அதனால அனன்யாவும் ஹீரோவும் லவ் வேண்டாம்னு பிரிஞ்சிடுராங்க, மகனுக்கு புடிக்காதத செய்யாத சுகாசினி மேடமும் நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிருங்க, இல்லைன்னா குடும்ப கவுரவம் கெட்டு போயிரும்னு சொல்லிடுறாங்க, அப்படியே அனன்யா ரொம்ப பீல் பண்ணி எனக்கு ஏன் கனவுல அவர காட்டுன, இப்ப பிரிச்சிட்ட, அதனால இனிமே உன்ன பார்க்க மாட்டேன், சாமி கும்புட மாட்டேன், விளக்கு பத்த வைக்க மாட்டேன்னு முருகன் கூட டூ விட்டுடுராங்க, உடனே முருகர் சும்மா இருப்பாரா,
பயங்கரமான பேக்கிரவுண்ட் மியூசிக்கோட நம்ம தனுஷ் தண்ணிக்குள்ள இருந்து எந்திரிச்சு வராரு

நம்ம ரசிகப்பெருமக்களும் விசிலடிச்சு பேப்பர் எல்லாம் பறக்க விட்டு குதியாட்டம் போட்டாங்க, சரி தனுஷ் ஏதாவது பெரிசா செய்வாருன்னு பார்த்தா .......................... போங்க பாஸ், இதுக்கு மேல படத்த பத்தி சொன்னா எனக்கு தூக்கம் தூக்கமா வருது, தனுஷ்தான் லார்ட் முருகர், ஈசியா சேர்த்து வைப்பாருன்னு பார்த்தா கழுத்த சுத்தி மூக்க தொட்டாலும் பரவாயில்லை, இவரு கை கால் உடம்பு எல்லாத்தையும் சுத்தி ஒரு வழியா மூக்க தொட்டு முடிக்கராரு, 
படத்தோட மியூசிக் டைரக்டர் தினாவுக்கு இது அம்பதாவது படமாம், முதல் 49 படத்துக்கு யார் சான்ஸ் கொடுத்தாங்கன்னு தெரியல, மியூசிக் பிரமாதம்(?) அம்பதாவது படமில்ல:-) ஏதோ புலி வருது ரேஞ்சுக்கு தனுஷ்க்கு பில் டப் கொடுத்துட்டு இருந்தாங்க டிவியில, இந்த ரோல்ல நடிக்கறதுக்கு சும்மாவே இருந்து இருக்கலாம் தனுஷ், விவேக்க பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லை, படத்தோட சேர்ந்து அவரும் கொல்றாரு, டைரக்டர் சிவா ஒரே ஒரு திருடா திருடி படத்த கொடுத்துட்டு அடுத்து வரதெல்லாம் மொக்கை படமா கொடுத்தா எப்படிங்க பாஸ், 
எது எப்படியோ குடும்பத்தோட பார்க்க கூடிய படமா மட்டும் சீடன் இருக்கு, என்ன பத்து இருபது கொட்டாவி விட வேண்டி இருக்கும் அவ்வளவுதான்...

நடுநிசி நாய்கள்

கெளதம் மேனன் எடுத்த இந்த ஒரு படத்தால பதிவுலகமே ரெண்டு பட்டு போயிருக்கு, இந்த நேரத்துல இந்த படத்த பத்தி எழுதறது சரியா இருக்காது, இருந்தாலும்,
பயணம் படத்துல ஒரு டயலாக் வரும், படம் பார்க்குறதுக்கு நல்லா இல்லைன்னா பரவாயில்லை, கேட்குறதுக்கே நல்லா இல்லையேடான்னு, அந்த டயலாக் இந்த படத்துக்கு முழுக்க முழுக்க பொருந்தும், இத்தோட நானும் நிறுத்திக்கிறேன், 

இந்த படம் முடிஞ்சு எல்லாரும் எந்திரிச்சு போகும் போது ஒரு இரண்டு பேர் தியேட்டர் சீட்டுல சரிஞ்சு கிடந்தாங்க, எல்லாரும் எழுப்பி பார்த்தாங்க முடியவே இல்லை, கடைசியில தியேட்டர் ஊழியர் ஒரு பக்கெட்டுல தண்ணி கொண்டு வந்து அவங்க மூஞ்சில ஊத்தினாங்க அப்பவும் எழுந்திரிக்கல, சரி இந்த பஞ்சாயத்த பார்த்துட்டு இருந்தா வேலைக்காகதுன்னு நான் கிளம்பி வந்துட்டேன், ஒருவேளை படத்த பார்த்த அதிர்ச்சியில மயங்கிட்டாங்களோ????

32 comments:

  1. ///எது எப்படியோ குடும்பத்தோட பார்க்க கூடிய படமா மட்டும் சீடன் இருக்கு, என்ன பத்து இருபது கொட்டாவி விட வேண்டி இருக்கும் அவ்வளவுதான்...
    ///
    positive mind! :-)))

    ReplyDelete
  2. @ எஸ்.கே

    வேற வழி நெகடிவ்வா ஏதாவது சொன்னா பிரச்சனையாயிருமோன்னு பயமா இருக்கு :-)))

    ReplyDelete
  3. //இந்த ரெண்டு படத்தை பத்தியும் சொல்லனும்னா, அபாரம், அற்புதம், பிரமாதம்னு சொல்லுவேன், யாருக்குன்னு கேட்குறிங்களா என்னோட பொறுமைக்குதான்,//

    ஆரம்பமே ஆப்பா....

    ReplyDelete
  4. //இந்த பஞ்சாயத்த பார்த்துட்டு இருந்தா வேலைக்காகதுன்னு நான் கிளம்பி வந்துட்டேன், ஒருவேளை படத்த பார்த்த அதிர்ச்சியில மயங்கிட்டாங்களோ????//

    ஹா ஹா ஹா ஹா வெளங்குமா....

    ReplyDelete
  5. @ MANO நாஞ்சில் மனோ

    நன்றி மனோ சார்...

    ReplyDelete
  6. சரி இந்த பஞ்சாயத்த பார்த்துட்டு இருந்தா வேலைக்காகதுன்னு நான் கிளம்பி வந்துட்டேன், ஒருவேளை படத்த பார்த்த அதிர்ச்சியில மயங்கிட்டாங்களோ????


    .....இப்படி ஒரு விமர்சனம் நான் படிச்சதே இல்லை... :-))))))

    ReplyDelete
  7. @ Chitra

    ஹா ஹா நீங்களும் பயந்துட்டீங்களா மேடம்?

    ReplyDelete
  8. அது என்ன ஒரே பேமிலி லுக் பெண்களா செலக்ட் பண்ணி போடுறிங்க?

    நல்ல கொள்கை

    ReplyDelete
  9. @ THOPPITHOPPI

    அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்க, படத்தோட கதாநாயகியே அவங்கதானுங்க :-)

    ReplyDelete
  10. சீடன் தனுஸ்க்கு கண் திருஷ்டியாக அமைந்து விட்டதே

    ReplyDelete
  11. சமீரா ரெட்டி அழகான நடிகை...கோரமாக்கி விட்டார்கள்....நாய்கள்

    ReplyDelete
  12. ஒரே கல்லௌல ரெண்டு மாங்கா அடிச்சிட்டியே ராசா

    ReplyDelete
  13. //படம் பார்க்குறதுக்கு நல்லா இல்லைன்னா பரவாயில்லை, கேட்குறதுக்கே நல்லா இல்லையேடா// நச்-ன்னு போட்டீங்க..சூப்பர் நைட்!

    ReplyDelete
  14. மாம்ஸ் உங்களுக்கு ரொம்ப தைரியம்.. சீடன் போய் பாதிருக்கீங்கள்ள...... :))

    ReplyDelete
  15. பயணம் படத்துல ஒரு டயலாக் வரும், படம் பார்க்குறதுக்கு நல்லா இல்லைன்னா பரவாயில்லை, கேட்குறதுக்கே நல்லா இல்லையேடான்னு, அந்த டயலாக் இந்த படத்துக்கு முழுக்க முழுக்க பொருந்தும்,////
    யோவ் மாம்ஸ் என்ன ஒரு படம் விடமாட்டீங்க போல...

    ReplyDelete
  16. // கெளதம் மேனன் எடுத்த இந்த ஒரு படத்தால பதிவுலகமே ரெண்டு பட்டு போயிருக்கு,
    இந்த நேரத்துல இந்த படத்த பத்தி எழுதறது சரியா இருக்காது, இருந்தாலும்,///


    உங்க பங்கை நீங்க செய்தே ஆக வேண்டும். இதில் என்ன தயக்கம்?

    ReplyDelete
  17. >>>>அபாரம், அற்புதம், பிரமாதம்னு சொல்லுவேன், யாருக்குன்னு கேட்குறிங்களா என்னோட பொறுமைக்குதான்,


    hi hi ஹா ஹா

    ReplyDelete
  18. >>>படத்தோட மியூசிக் டைரக்டர் தினாவுக்கு இது அம்பதாவது படமாம், முதல் 49 படத்துக்கு யார் சான்ஸ் கொடுத்தாங்கன்னு தெரியல,

    நக்கல் நாயகன்..?

    ReplyDelete
  19. >>>
    கெளதம் மேனன் எடுத்த இந்த ஒரு படத்தால பதிவுலகமே ரெண்டு பட்டு போயிருக்கு, இந்த நேரத்துல இந்த படத்த பத்தி எழுதறது சரியா இருக்காது,

    முன் ஜாக்கிரதை முத்தண்ணா..!!!

    ReplyDelete
  20. என்னது தனுசு கடவுளா
    அவரு வந்து காதல சேர்த்து வைப்பாரா ,

    அதாவுது என்னத்த எடுத்தாலும் பய புள்ளைக ரெடி யா இருக்க்காயிங்கன்னு நெனச்சுட்டாய்ங்க போல இந்த டைரக்டர் கூட்டம் ,

    ReplyDelete
  21. @ ரஹீம் கஸாலி

    நன்றி நண்பா

    @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

    தூக்கம் வந்தா பரவாயில்லை, உயிரே போயிருச்சுன்னா என்ன சார் பண்றது..

    @ ஆர்.கே.சதீஷ்குமார்

    ஆமா சார் சமீரா ரெட்டிய கோராமாக்கிட்டாங்க, எனக்கும் கவலையாதான் இருந்துச்சு...

    @ செங்கோவி

    நன்றி நண்பா

    @ karthikkumar

    யோவ் மாம்சு படத்துக்கு போகும் போது உனக்கு போன் பண்ணுனன்யா நீதான் போனே எடுக்கல...

    @ கக்கு - மாணிக்கம்

    நீங்க சொல்றது சரிதான் சார், ஆனா அந்த படத்தை பத்தி என்ன எழுதறதுன்னே தெரியலலியே..

    @ வேடந்தாங்கல் - கருன்

    நன்றி கருன்

    @ சி.பி.செந்தில்குமார்

    நன்றி தல, உங்களை விடவா நான் நக்கல் பண்ணிட்டேன் :-)

    @ நா.மணிவண்ணன்

    ஹா ஹா டென்சனாகதீங்க நண்பா, தூக்கம் வரலைன்னா கண்டிப்பா போய் படத்த பாருங்க :-)

    ReplyDelete
  22. அட, சீடனும் அவ்வளவு தானா...? ரைட்டு...!
    ந.நி.நா பத்தி பேசவே பயமாயிருக்குது..விடு ஜூட்டு! :-)))

    ReplyDelete
  23. @ சேட்டைக்காரன்

    அட தல நீங்களே எஸ்கேப்பானா எப்படி, கொஞ்சம் சொல்லிட்டு போங்க :-)

    ReplyDelete
  24. இந்த காவியங்களை பற்றி சொல்லியட்க்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  25. நண்பரே சீடன் படம் பார்ப்பதற்கு பதிலாக டீவி சீரியலையே பார்த்து விடலாம். அவ்வளவு ஸ்லோ.

    நடு நிசி நாய்கள், நோ கமெண்ட்ஸ்.

    ReplyDelete
  26. ஒருவேளை படத்த பார்த்த அதிர்ச்சியில மயங்கிட்டாங்களோ????
    எனக்கென்னவோ மண்டய போட்டிருப்பானுகளோன்னு தான் பயம். உலகம் இப்படி ஆயிட்டதே இதைவிட கேவலமா படம் எடுக்கமுடியாதேன்னு நினைச்சிருப்பாங்க.

    ReplyDelete
  27. படம் தியேட்டர்ல ஓடுதோ இல்லையோ..பதிவுலகுல பரபரப்பா ஓடுது..வாழ்க கௌதம் அண்ணன்!

    ReplyDelete
  28. @ விக்கி உலகம்

    நன்றி நண்பா

    @ பாலா

    அப்ப நீங்களும் சீடன் பார்த்துட்டீங்களா?

    @ கே. ஆர்.விஜயன்

    ஹா ஹா ஹா நானும் அப்படித்தான் நினைக்கிறேன் சார், கருத்துக்கு நன்றி..

    @ ! சிவகுமார் !

    ஆமா நண்பா, அந்தாள் பாட்டுக்கு படம் எடுத்துட்டு போயிட்டாரு, ஆனா இங்க????

    ReplyDelete
  29. //படத்தோட மியூசிக் டைரக்டர் தினாவுக்கு இது அம்பதாவது படமாம், முதல் 49 படத்துக்கு யார் சான்ஸ் கொடுத்தாங்கன்னு தெரியல,//

    செம கலாய்ப்பு....:)))

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!