Saturday, March 5, 2011

சிங்கம் புலி - அடல்ஸ் ஒன்லி ....


பொதுவாவே ஜீவா படத்துக்கு நான் ரசிகன், ஜீவா படம்னாலே ஏதாவது வித்தியாசமா பண்ணி இருப்பாரு, காமெடி நல்லா இருக்கும், நல்ல நடிகர், பாட்டெல்லாம் சூப்பரா இருக்கும், அதே மாதிரி இருக்கும்னு நம்பி போனா? நம்பிக்கையை நிறைவேத்துனாறா? இல்லையா? தெரியலியே...

படத்தோட கதைக்காகவெல்லாம் டைரக்டர் கவலைபட்டதா தெரியல, விஷாலோட தீராத விளையாட்டு பிள்ளை, சின்ன டாக்டரோட அழகிய தமிழ்மகன், அஜீத்தோட வாலி அப்படின்னு ஒரு நாளைஞ்சு படத்த மிக்சில போட்டு அடிச்சு கொடுத்துருக்காரு, படமும் அப்ப்டித்தான் இருக்குது, எல்லா படத்துல இருந்தும் ரெண்டு ரெண்டு சீனு உருவி இருக்காரு, அட ஒரு பாட்டு சீனு இருக்குதுங்க, அதுல கூட அயன் படத்துல நெஞ்சே நெஞ்சே பாட்டு வருமில்ல, அதே லோகேசன்ல ஆடுறாங்க..

படத்தோட கதை என்னன்னா, அண்ணன், தம்பின்னு ரெண்டு ஜீவா, அண்ணன் நீதி, நேர்மை, நியாயம் பேசும் மீன் வியாபாரி, தம்பி பொண்ணுங்கள கரக்ட் பண்ணி மேட்டர் பண்ணி கழட்டி விடுற வக்கீல், இவங்க ரெண்டு பேரும் எதிரும் புதிருமாவே இருக்காங்க, வழக்கம் போல தம்பிய நல்லவன்னு நினைச்சு அண்ணன வெறுப்பேத்தற அப்பா, பாசக்கார தங்கச்சி, ரெண்டு பக்கமும் நிற்க முடியாத அம்மான்னு டெம்ப்ளேட் தமிழ்சினிமா பார்முலா கொஞ்சம் இருக்குது, போறது வரது பார்க்குரதுன்னு எல்லா பொண்ணுங்களையும் கரக்ட் பண்ணி மேட்டர் பண்ணிட்டு கழட்டி விடுறாரு தம்பி, அப்படி அவரு கழட்டி விட்ட ஒரு பொண்ணு ஒன்னால பிரச்சனை வருது, பிரச்ச்னைய உண்டு பண்ணுனது அண்ணங்காரன், அந்த பிரச்சனை என்ன,  பிரச்சனை தீர்ந்துச்சா, அண்ணன் தம்பிக்குல்ல என்ன நடக்குதுங்கறதுதான் சிங்கம் புலி கதை, 

அண்ணன் ஜீவாவுக்கு பெரிசா ஒன்னும் வேலையில்லை, சும்மா அப்பா கூட சண்டை போடறது, ஆ வூன்னு கத்துறது, ரெண்டு மூணு பைட்டுன்னு முடிஞ்சுருது, தம்பி ஜீவாவுக்குதான் சான்ஸ், பார்க்குற பொண்ணுங்க எல்லாரையும் கரக்ட் பண்ணி கழட்டி விடறாரு, அதுவும் அம்மாவ கரக்ட் பண்ணிட்டு வெளில வரும்போது அவங்க பொண்ண பார்த்தா அது ஏற்கனவே கரக்ட் பண்ணுன பொண்ணுங்கறது தெரிய வரும்போது தியேட்டர்ல பயங்கர சிரிப்பலை, ஏற்கனவே கெளதம் மேனன்னால பெரிய பிரட்சனை, இப்ப அடுத்தது ஒன்னு சிக்கிரிச்சு, கலாச்சார காவலர்கள் கொந்தளிக்க போறாங்க,

விக்கல வெச்சு கூட இப்படி பண்ண முடியுமான்னு ஒரு ஐடியா குடுக்கராங்க, தெரிஞ்சுக்கனும்னு நினைக்கிறவங்க படத்த பாருங்க, என்னதான் ஜீவா பார்க்குற பொண்ணுங்களை எல்லாம் மேட்டர் பண்ணினாலும் படத்த தூக்கி நிறுத்தறது என்னவோ சந்தானம்தான், அவரு மட்டும் இல்லைன்னா தியேட்டர்ல பார்த்துட்டு இருக்கறவங்க மூஞ்சில எல்லாம் பூரான் உட்டுறுப்பாங்க, செம காமெடி, ஆனா எல்லாம் டபுள் மீனிங், அதுவும் பிரா வாங்கற கடையில பச்சை பச்சை, சந்தானம் பொம்பளை வேசம் போடறதும் கடைசியில ஜீவா அவரையே கரக்ட் பண்ணுறதும் வெடிச்சிரிப்பு, 

படத்தோட பாட்டெல்லாம் ஒன்னும் கேட்குற மாதிரி இல்லை, ஹி ஹி எல்லாமே பார்க்குற மாதிரிதான் இருக்குது, படத்தோட ஹீரோயின்களை பத்தி சொல்லியே ஆகணும், திவ்யா அலைஸ் குத்து ரம்யா, ஹனி ரோஸ் ரெண்டு பேருமே சும்மா கும்முன்னு இருக்காங்க, இரண்டு பேரும் நடந்து போகும் போது பின்னாடி கேமரா வெச்சதுல டைரக்டரோட ரசனை வெளிப்படுது, மத்தபடி ஒளிப்பதிவு, இசை அப்படின்னு எல்லா டெக்னிகல் விசயங்களும் படத்துக்கு தேவையான அளவுக்கு இருக்குது, 

வலையுலகத்துல ஜீவாவுக்கு என்ன விட்டா ரசிகர் யாரும் இருக்க மாட்டாங்க போல, அதனால நானே சொல்றேன், படம் அருமை, பிரமாதம், சூப்பரு, ஆனா குடும்பத்தோட போயிராதீங்க, பசங்க, பிரண்சோட மட்டும் போங்க, ஜீவாவுக்காக ஒருதடவை பார்க்கலாம், ( ஹி ஹி குத்து ரம்யாவுக்காக பத்து தடவையே பார்க்கலாம்)

மொத்தத்துல சிங்கம் புலி - கழுதைப்புலி

தியேட்டர் கட்டிங்

இந்த படத்த சரண்யா தியேட்டர்ல பார்த்தேன், ரொம்ப கட்டுபாடான தியேட்டர், எச்சை துப்புனாலோ, முன்னாடி சீட்ல கால வெச்சாலோ கழுத்தை புடிச்சு வெளில தள்ளிடுவாங்க, எச்சை துப்புனா பக்கெட்டுல தண்ணி குடுத்து கழுவ சொல்லுவாங்க, அவ்வளவு கண்டிப்பு, ஒருதடவை பொண்ணுங்க பின்னாடி உட்கார்ந்துகிட்டு சத்தம் போட்டுட்டு இருந்த காலேஜ் பசங்க 15 பேரை கழுத்த புடிச்சு வெளில தள்ளுனவங்க, தமிழ்நாடி தியேட்டர் காம்ப்ளக்ஸ்னாலே குடும்பத்தோட நம்பி போகலாம், பாத்ரூம், தண்ணி வசதி எல்லாமே பர்பெக்ட்டா இருக்கும், படம் முடியற வரை ஏசி போடுவாங்க, ஆனா..,
நேத்தைக்குன்னு பார்த்து படத்துக்கு கூட்டமே இல்லை, ஆனாலும் வரிசைப்படிதான் உட்கார வெப்பேன்னு தியேட்டர் ஊழியர் அடம் புடிச்சாரு, அதிலயும் ஒரு பொண்ண கூட்டிட்டு வந்தவருக்கு நடுசெண்டர் சீட் கிடைச்சிருச்சு, அந்த பொண்ணுக்கு பக்கத்துல ஒரு தண்ணி பார்ட்டி, பாவம் அந்த ஜோடிங்க படம் முடியற வரை அந்த பையன் அந்த பொண்ண பாதுகாக்கறதே வேலையா போச்சு, கொஞம் ப்ரீயா உட்கார்ந்தாலும் தண்ணி பார்ட்டி கைய இடிக்கறது கால இடிக்கறதுன்னு பார்க்கவே பாவமா இருந்தது, தியேட்டர் ஊழியர் கிட்ட சொல்லி வேற சீட் கேட்டும் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான், படம் வேற ஒரு மாதிரியா, கேட்கவா வேணும், அதனால குடும்பத்தோட போறவங்க, லேடீஸ்ஸ கூட்டிட்டு போறவங்க டிக்கெட் குடுக்கரவங்க கிட்ட சொல்லி கார்னர் சீட்டா கேட்டு வாங்கிக்கோங்க, அவ்வளவுதான்....

25 comments:

  1. நம்ம ஜீவாவா இப்படி...

    ReplyDelete
  2. இந்த படத்த சரண்யா தியேட்டர்ல பார்த்தேன், ரொம்ப கட்டுபாடான தியேட்டர், எச்சை துப்புனாலோ, முன்னாடி சீட்ல கால வெச்சாலோ கழுத்தை புடிச்சு வெளில தள்ளிடுவாங்க, எச்சை துப்புனா பக்கெட்டுல தண்ணி குடுத்து கழுவ சொல்லுவாங்க, அவ்வளவு கண்டிப்பு,//// நம்ம நாட்டில் இப்படியொரு தியேட்டரா? ஆகா..

    ReplyDelete
  3. ஏற்கனவே இந்த மாதிரி ஒரு படம் வந்து வெட்டு குத்துன்னு போயிட்டு இருக்கு. இதுல மறுபடியும் ஒரு படமா.. ரைட்டு!

    ReplyDelete
  4. எச்சை துப்புனாலோ, முன்னாடி சீட்ல கால வெச்சாலோ கழுத்தை புடிச்சு வெளில தள்ளிடுவாங்க, எச்சை துப்புனா பக்கெட்டுல தண்ணி குடுத்து கழுவ சொல்லுவாங்க,//
    அடேங்கப்பா தமிழ்நாட்டுல இப்படி ஒரு தியேட்டரா

    ReplyDelete
  5. நல்ல விமர்சனம்

    ReplyDelete
  6. கொஞம் ப்ரீயா உட்கார்ந்தாலும் தண்ணி பார்ட்டி கைய இடிக்கறது கால இடிக்கறதுன்னு பார்க்கவே பாவமா இருந்தது, தியேட்டர் ஊழியர் கிட்ட சொல்லி வேற சீட் கேட்டும் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான், ////
    இத்தனை நடந்திருக்கு . உங்க பாட்டுக்கு வேடிக்க பாத்துட்டு இருந்திருக்கீங்க..போய் அவன நாலு சாத்து சாத்தி இருக்க வேணாம்...நீங்கெல்லாம் ஒரு பதிவரா..............:))

    ReplyDelete
  7. @ செங்கோவி

    படம் பரவாயில்லை நண்பா, குடும்பத்தோடதான் பார்க்க முடியாது

    @ வேடந்தாங்கல் - கருன்

    உண்மைதான் நண்பா, அந்த தியேட்டர்ல பராமர்ரிப்பு எப்பவும் நல்லா இருக்கும்

    @ ! சிவகுமார் !

    இந்த படத்தை விட்டுருவாங்க நண்பா, ஏன்னா புது டைரக்டரு...

    @ ஆர்.கே.சதீஷ்குமார்

    ஆமா சார், அந்த தியேட்டர்ல பராமரிப்பு நல்லா இருக்கும், கருத்துக்கு நன்றி சார்

    @ karthikkumar

    மச்சி நீ எதுக்கு பிளான் பண்றேன்னு நல்லாவே தெரியுது, நான் சிக்க மாட்டேன் :-)

    ReplyDelete
  8. >>>இரண்டு பேரும் நடந்து போகும் போது பின்னாடி கேமரா வெச்சதுல டைரக்டரோட ரசனை வெளிப்படுது,

    உங்க ரசனையும்..

    ReplyDelete
  9. >>>அந்த பையன் அந்த பொண்ண பாதுகாக்கறதே வேலையா போச்சு, கொஞம் ப்ரீயா உட்கார்ந்தாலும் தண்ணி பார்ட்டி கைய இடிக்கறது கால இடிக்கறதுன்னு பார்க்கவே பாவமா இருந்தது,

    மொத்தத்துல நீங்க படத்தை பார்க்கலை..?

    ReplyDelete
  10. @ சி.பி.செந்தில்குமார் said..

    ஹி ஹி தல என்ன இருந்தாலும் உங்க ரசனை அளவுக்கு வருமா? நீங்கதான் சீனியர் :-)))))

    ReplyDelete
  11. சரி, காசு மிச்சம் பண்ணினதுக்கு ரொம்ப நன்றிங்கோ!

    ReplyDelete
  12. படத்தோட விமர்சனம் அருமை..
    அதை விட தியாட்டர் பத்திய விமர்சனம் இன்னும் அருமை..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  13. உங்களுக்கு தெரியுமா பத்துக்கு பத்து..

    விவரம் அறிய கவிதை வீதி வாங்க..

    ReplyDelete
  14. படம் பார்க்கத்தோன்றுது

    ReplyDelete
  15. பிழைகள்...

    //நிறைவேத்துனாறா//

    நிறைவேத்துனாரா

    //நாளைஞ்சு//

    நாலஞ்சு..

    ReplyDelete
  16. கார்னர் சீட்டா? அப்படினா என்ன பாஸ்?

    ReplyDelete
  17. ada kudumpap patam illai...kum kum padam.. super... vaaltthukkal

    ReplyDelete
  18. Jeeva-kku rasigana? kala kodumai... vilangidum?

    ReplyDelete
  19. நண்பா படத்துக்கு போய் படம் பாக்கிறத மட்டும் செய்யாம சுத்தி முத்தி என்ன நடக்குதுன்னு பாத்து அத பத்தியும் எழுதறீங்களே அட அட

    ஆகா மொத்தம் படம் வேஸ்ட்டு ,காசும் வேஸ்ட்டு ,டைம் வேஸ்ட்டு

    ReplyDelete
  20. உலகக் கிண்ணத்தை முடிச்சிட்டு ஆறுதல அப்பறம் பார்ப்போமுங்க...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

    ReplyDelete
  21. கொஞ்சம் அவசர வேலை இருப்பதால் தனித்தனியாக கமெண்ட் போட முடியவில்லை, எனவே கமெண்டிய அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்...

    ReplyDelete
  22. விமர்சனம் நல்லா இருக்கு....

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!