Friday, March 11, 2011

பேருந்து பயணம் ஜோடிகளின் தரிசனம் ...


அன்று மாலை 4.30 மணி

பலவித மனக்குழப்பங்களோடு கோவை சென்று என்ன ஆகுமோ ஏதாகுமோ என்று நினைத்திருந்த காரியம் ஒன்றும் பிரச்ச்னை இல்லாமல் சுமூகமாக ஆனதில் மனதில் ஒரு மெல்லிய சந்தோசம் இழையோடியது, மாலை நேர சூரியனின் மெல்லிய சூடு உடலில் மெதுவாக பரவியது, சரி ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்குமே என்று தோணியது, காந்திபுரம் பேருந்து நிலையத்தின் வெளிப்புறம் இருந்த டீக்கடையில் டீ குடித்துவிட்டு எனது ஊருக்கு செல்லும் பஸ்கள் நிற்குமிடத்தை வந்தடைந்தேன்.

அரசுபேருந்துகள் மட்டுமே நின்று கொண்டிருந்தன, மனதில் சே இதற்கா இவ்வளவு வருத்ததுடன் இருந்தோம், இரண்டு நாளாக தூக்கத்தை கெடுத்துவிட்டு தேவையில்லாமல் வருந்திகொண்டு, ஒருநிமிடம் இரண்டு நாளாக நடந்ததை எண்னியது மனது, அந்த வருத்தம் எல்லாம் மறைந்ததில் பாட்டு கேட்டு கொண்டு பயணித்தால் நன்றாக இருக்குமே என மனம் நினைத்தது, அரசுபேருந்துகளில் பாட்டு போட மாட்டார்கள், தனியார் பேருந்துகளில்தான் பாட்டு போடுவார்கள், சரி அடுத்து வரும் தனியார் பேருந்தில் ஏறிக் கொள்ளலாம் என நினைத்து நடைபாதையில் ஒதுங்கி நின்றேன்.

பேருந்து வரும்வரை சுற்றுப்புறம் என்ன நிகழ்கிறது என வேடிக்கை பார்க்கலாம் என நினைத்தேன், மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி விட்டு வந்த மாணவ மாணவியர்கள் தத்தம் ஜோடியோடு கடலை போட்டு கொண்டிருந்தனர், தகப்பனாரின் சம்பாத்தியத்தில் உண்டு கொழுத்திருந்த சேட்டு வீட்டு குண்டு பெண்கள் நான்கு பேர் பேசிக்கொண்டு போனார்கள், வேலை முடிந்து வீடு திரும்ப நான்கைந்து பெண்கள் தனித்தனியே நின்று கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர், கையில் ஹாஸ்பிடல் ஸ்கேன் ரிப்போர்ட்டை வைத்து கொண்டு என்னாகுமோ என கவலை தேய்ந்த முகத்தோடு ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார், அவரின் மனைவியும் அதே கவலையோடு அமர்ந்திருந்தார், 

நிற்கும் பேருந்துகளில் வெள்ளரிக்காய் விற்பவர்களும், பத்து ருபாய்க்கு பொது அறிவையும் பல மொழிகளையும் விற்பவர்கள் ஏறி இறங்கி வியாபாரம் செய்து கொண்டிருந்தனர், ஜீன்ஸ் அணிந்து கொண்டு சென்று கொண்டிருந்த இரண்டு பெண்களை கல்லூரியில் படிக்கும் வாலிப பையன்கள் அவர்களுக்குள் ஏதோ பேசி சத்தமாக சிரித்து கொண்டிருந்தார்கள், நடைபாதை ஓர டீக்கடை வாசலில் நின்றுகொண்டிருக்கும் பையன்கள தங்கள் கடைக்கு வருமாறு போய் வந்து கொண்டிருப்பவர்களை பார்த்து கத்தி கொண்டிருந்தார்கள்

அரை மணி நேரத்திற்கு பக்கம் ஆகிறது இன்னும் ஒரு தனியார் பேருந்து கூட வரவில்லையே என பேருந்து வரும் பாதையில் பார்த்துக் கொண்டிருந்த போது, அந்த நடைபாதையின் கடைசியில் தனியாக ஒரு பெண்ணும் பையனும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள், யாரடா இது பாத்ரூம் அருகில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்களே என நினைத்தாலும் தூரத்தில் இருந்ததால் அவர்களை சரியாக பார்க்க முடியவில்லை, நானும் பார்வையை திருப்பி சுற்றுப்புறம் பார்த்து கொண்டிருந்தேன், மீண்டும் ஒரு கால்மணி நேரம் ஆயிற்று.

பேருந்து வரும் ஹாரன் சத்தம் கேட்டது, ஒரு தனியார் பேருந்து பஸ்நிலையத்தில் நுழைந்தது, அனைவரும் அதற்காகவே காத்திருந்தது போல அந்த பேருந்தை நோக்கி ஓடினார்கள், அந்த பேருந்தின் ஓட்டுனர் உள்ளே வராமல் கடைசியிலேயே நிறுத்தி கொண்டார், இப்போ வண்டி எடுக்க மாட்டோம், இதற்கு முன்னால் பஸ் இருக்கிறது என்று சொன்னார், அதனால் ஓடியவர்கள் அனைவரும் திரும்பி விட்டார்கள், நான் ஏறிக்கொண்டேன், இன்னும் அரைமணி நேரம் ஆகும்ப்பா, பரவாயில்லை, நான் காத்திருக்கிறேன் என கூறி ஏறிக்கொண்டேன், நீண்ட நேரம் நின்றிருந்ததால் கால் வலித்தது, ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொள்ளலாம் என நினைத்து பேருந்தின் கடைசி இருக்கையின் முன்னிருக்கையில் ஜன்னல் ஓரம் அமர்ந்து கொண்டேன்.

மீண்டும் சுற்றுப்புறம் வேடிக்கை, ஏதேச்சையாக திரும்பி பார்த்ததில், முன்னே பார்த்த ஜோடிகள் இப்பொழுது இடம் மாறி பேருந்தின் அருகே உள்ள தூணில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள், அவர்கள் இருவருக்கும் 17 வயதிருக்கலாம், ஏதாவது கல்லூரியில் முதலாமாண்டு படித்து கொண்டிருக்ககூடும், அந்த பெண் பேரழகி என்று சொல்ல முடியாது, சராசரிக்கும் மேல் அழகாகவே இருந்தாள், திருத்தப்பட்ட புருவம், லைட்டான லிப்ஸ்டிக் அவளை அழகை பராமரிப்பவள் என்று கூறியது, அந்த பையன் மொட்டை அடித்து இருபது நாள் வளர்ந்த முடியோடு இருந்தான், கருப்பாக சராசரிக்கும் குறைவாக, சமீபகால தமிழ்சினிமா ரவுடி ஹீரோ போல ஒல்லியாக இருந்தான், எப்படி பார்த்தாலும் இருவருக்கும் கொஞ்சம் கூட பொருத்தமே இல்லாதது போல தோன்றியது, எப்படித்தான் இவனுங்க எல்லாம் அழகான பெண்களை கரக்ட் பண்ணுகிறார்களோ என மனதில் மெல்லிய பொறாமை தோன்றியது.

அவர்களின் ஏறக்குறைய முக்கால் மணி நேர பேச்சுவார்த்தை உட்சகட்டத்தை எட்டி சிறிது வாக்குவாதமாக மாறி இருந்தது, அந்த பெண் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தாள், இப்பொழுது அவர்கள் பேசிக் கொள்வது எனக்கு கேட்டது, அவர்களின் விடாத வாக்குவாதத்தில் அவர்கள் பேசி கொள்வது எனக்கு புரிந்தது, எனக்கு புரிந்தவரையில் இருவரும் நெடுநாட்களாக பழகி வந்துள்ளனர், பழக்கம் நெருக்கம் ஆனதில் ஏதோ ஒரு சந்தர்ப்பதில் உறவு வைத்ததால் அந்த பெண் கர்ப்பம் ஆகி இருக்கலாம் என சந்தேகிப்பதாக பேசிக் கொண்டிருந்தனர், 
இந்த பிரச்சனைக்கு தீர்வாக அந்த பெண் எப்படியாவது கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்றும், இனிமேல் தன்னை பார்க்கவோ பேசவோ கூடாது என அந்த பையனை திட்டி கொண்டிருந்தாள்.

அதற்கு அந்த பையன், அவள் மேல் உயிரையே வைத்திருப்பதாகவும், இப்பொழுது இப்படி ஆகி விட்டதால் உடனடியாக திருமணம் செய்து கொள்வோம் என அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான், அந்த பெண் கடைசி வரை அவனை மறுத்து பேசி கொண்டிருந்தாள், அவனை திருமணம் செய்யும் ஐடியாவே தனக்கு கிடையாது, தயவுசெய்து இனிமேல் என்னை பார்க்க வேண்டாம், பேச வேண்டாம் என கறாராக சொல்லி கொண்டிருந்தாள், எனக்கு ஒருபக்கம் சிரிப்பாகவும் வேதனையாகவும் இருந்தது, இந்த வார்த்தைகளை சம்பந்த பட்ட இருவரின் பெற்றோர்களும் கேட்டால் அவர்களுக்கு எப்படி இருக்கும், என்ன செய்வார்கள் என மனம் சிந்தித்தது.

மேற்கொண்டு கேட்கும் முன்னர் பேருந்தின் ஓட்டுனர் வண்டியை எடுத்து முன்னால் நகர்த்தினார், கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கும் எனக்கும் இடையேயான தூரம் அதிகமானது, இப்பொழுது அவர்கள் பேசுவது சுத்தமாக கேட்கவில்லை, தவிர அவர்களை பார்க்க வேண்டுமானாலும் கழுத்தை திருப்பி பார்க்க வேண்டி இருந்தது, சிறிது நேரத்தில் வெறுத்து போய், அருகில் இருப்பவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன், 

கொஞ்சநேரம் சுவாரஸ்மாக எதுவும் இல்லை, வழக்கம் போலான காட்சிகளே நகர்ந்து கொண்டிருந்தது, அப்பொழுது ஒரு கணவன், மனைவி, குழந்தை என மூன்று பேர் கையில அழுக்கு மூட்டையோடு வந்து கொண்டிருந்தார்கள், பார்க்கவே பிச்சைகாரர்களோ என சந்தேகப்படும் படியான தோற்றம், அந்த கணவன் கட்டி இருந்த வேட்டி சட்டை துவைத்து கண்டிப்பாக ஒரு மாமாங்கம் ஆகி இருக்கும் போல இருந்தது, அது போலவே அந்த பெண்ணின் சேலையும் அழுக்கேறி இருந்தது, கழுத்தில் ஒரு கருப்பு பாசி, குளித்து ஆறுமாதம் ஆகி இருக்கும் என்னும் அளவிற்கு ஒரு துர்நாற்றம் அவர்களின் மேல் வீசியது, அந்த குழந்தைக்கு போட்டு விட துணி இல்லாமல், ஒரு கிழிந்த பனியன் அணிந்திருந்தது,.

வந்தவர்கள் நடைபாதையில அமர்ந்து மூட்டையை பிரிக்க ஆரம்பித்தார்கள், நான்கு சோற்று பொட்டலத்துடன் ஒரு பழைய ரேடியோ பொட்டியை எடுத்து வைத்து பாட்டு போட்டார்கள், பிறகு சோற்று பொட்டலைத்தை பிரித்து வைத்து சாப்பிட ஆரம்பித்தார்கள், தக்காளி சாதம், தயிர் சாதம், பிரியாணி என கலந்து கட்டி அவர்கள் சாப்பிடுவதை பார்த்தால் சத்தியமாக வாந்தி எடுக்காமல் இருக்க முடியாது, அவர்கள் சாப்பிடுவதை பார்த்து பலர் அருவெறுப்புடன் ஒதுங்கி போனார்கள், சிலர் வாந்தி வருவதை போல சைகை காட்டி தாண்டி போனார்கள்.

அவர்கள் எதை பற்றியும், யாரை பற்றியும் கவலைபட்டதாக தெரியவில்லை, மாறி மாறி ஊட்டி விட்டுக் கொண்டார்கள், அதிலும் பிரியாணியை மனைவி சாப்பிடட்டும் என கணவனும், கணவன் சாப்பிடட்டும் என மனைவியும் ஒதுக்கி வைத்து நீ சாப்பிடு, நீ சாப்பிடு என சண்டை போட்டனர், இடையில் அவர்களின் குழந்தை அங்கேயே சிறுநீர் கழித்து வைத்தது, அது அவர்கள் சாப்பிடும் சோற்றிலும் பட்டது, அந்த கணவ்ன் குழந்தையை அடிக்க போகிறான் என நினைத்த போது அவன் சிரித்துக் கொண்டே அந்த குழந்தையை முத்தமிட்டு தள்ளி நிற்கச் சொன்னான்.

அவர்களின் ஒவ்வொரு செயலிலும் அன்பும், பாசமும் பெருகி ஓடியது, வாழ்க்கையை சந்தோசமாக வாழ காசு பணம் சொத்து சுகம் வேண்டுமா?  யாரை பற்றி கவலைபட வேண்டும்? யாருக்காக நாம் வாழ்கிறோம்? ஒன்றுமே கையில் இல்லை ஆனால் எல்லாமே இருக்கிறது என்ற மனநிலை எப்போது வருகிறது? இது எல்லாமே அவர்களின் உண்மையான அக்கறை, அன்பு, பாசம் இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு உணர்த்தியது, அவர்கள் பார்க்க வேண்டுமானால் அருவெறுப்பானவர்களாக இருக்கலாம், உண்மையில் நம்மில்தான் நிறைய பேர் செண்ட் அடித்துக் கொண்டும், பகட்டான உடையணிந்தும் அருவெறுப்பை மறைத்துக் கொண்டும் இருக்கிறோம் என தோணியது.

நேரம் ஆகியதால் ஓட்டுனர் பேருந்தை கிளப்பினார், இப்பொழுது அந்த குடும்பம் என் கண்ணில் இருந்து மறைந்து கொண்டிருந்தது, பஸ் நிலையத்தை விட்டு பேருந்து வெளியே சென்று கொண்டிருந்தது, கடைசியாக அவர்களை காணலாம் என நினைத்து ஜன்னலுக்கு வெளியே எட்டி பார்த்தேன், அந்த குடும்பத்தை காணவில்லை, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்தேன், அவர்கள் எங்கு சென்றார்கள் என தெரியவில்லை,

தூரத்தில் பார்த்த போது அந்த கல்லூரி பையனும், பெண்ணும் இன்னும் நின்றுகொண்டு இருந்தார்கள், அவர்கள் பேசிக் கொண்டிருந்த தோரணையை பார்க்கும் போது இன்னும் அவர்களின் வாக்குவாதம் முடியவில்லை போல தோன்றியது, என்ன முடிவெடுத்து இருப்பார்கள்? என்று நான் சிந்திப்பதற்குள் பேருந்து பஸ் நிலையத்தை விட்டு வெளியேறி ஊரை நோக்கி பயணமானது.

உசுமலாறிசே உசுமலாரிசே உசுமலாறிசே யோ யோ, உசுமலாறிசே உசுமலாரிசே உசுமலாறிசே யோ யோ, பேருந்தின் ஓட்டுனர் பாடலை ஒலிக்க விட்டார்,

சே என்னவொரு சூப்பரான பாட்டு, உசுமலாறிசே, உசுமலாறிசேன்னா என்ன அர்த்தம் - என்ற புது சிந்தனைக்குள் நான்....!


45 comments:

  1. என்னய்யா நடக்கது அங்க... ஒரு தமிழ் படம் பார்த்த மாதிரியே இருக்கே...

    ReplyDelete
  2. எப்படித்தான் இவனுங்க எல்லாம் அழகான பெண்களை கரக்ட் பண்ணுகிறார்களோ என மனதில் மெல்லிய பொறாமை தோன்றியது.////


    ஆமாமா எனக்கும் அந்த பொறாமை இருக்கு ஹி ஹி ஹி

    ReplyDelete
  3. எப்படித்தான் இவனுங்க எல்லாம் அழகான பெண்களை கரக்ட் பண்ணுகிறார்களோ என மனதில் மெல்லிய பொறாமை தோன்றியது.///
    இனி பொறாம பட்டு என்ன மாம்ஸ் பண்றது...? காடு வா வாங்குது வீடு போ போங்குது... இந்த வயசுல போய் சின்னன்சிருசுக பேசுறத ஒட்டி கேட்டு அதை பதிவா வேற போடறீங்க.௦.... :))

    ReplyDelete
  4. மீண்டும் சுற்றுப்புறம் வேடிக்கை, ஏதேச்சையாக திரும்பி பார்த்ததில், முன்னே பார்த்த ஜோடிகள் இப்பொழுது இடம் மாறி பேருந்தின் அருகே உள்ள தூணில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்,//// யோவ் நீங்க வேணும்னே தான் பாத்து இருக்கீங்க....:))

    ReplyDelete
  5. நண்பா சூப்பர் ரா கதை மாதரியே எழுதிருக்கீங்க

    ReplyDelete
  6. இந்த மாதிரி விஷயத்தை கூட சத்தமா பேசிருந்திருக்காங்கனா அவுங்களுக்கு அது ஒரு மேட்டராவே தெரியல போல

    ஆனா மேட்டர் னாலதான் இந்தபிரச்சனையே வந்திருக்கின்றது வேற விசியம் ஹி ஹி ஹி

    ReplyDelete
  7. //உசுமலாறிசே உசுமலாரிசே உசுமலாறிசே யோ யோ, உசுமலாறிசே உசுமலாரிசே உசுமலாறிசே யோ யோ, பேருந்தின் ஓட்டுனர் பாடலை ஒலிக்க விட்டார்,//

    எப்படித்தான் லிரிக்ஸ் கண்டுப்பிடிச்சிங்கலோ

    ReplyDelete
  8. //உண்மையில் நம்மில்தான் நிறைய பேர் செண்ட் அடித்துக் கொண்டும், பகட்டான உடையணிந்தும் அருவெறுப்பை மறைத்துக் கொண்டும் இருக்கிறோம் என தோணியது//

    உண்மைதான் பாஸ்.....
    உங்க பிளாக் படிச்சாலே ஒரு நல்ல சினிமா பார்க்குற மாதிரி லேசா மனசும் வலிச்சிருதே மக்கா....
    வாழ்த்துகள்....

    ReplyDelete
  9. நைட்..இது கதையா..அனுபவமா..கதை ஸ்டைல்ல அனுபவமா..நல்லாயிருக்கு.

    ReplyDelete
  10. நானும் பஸ் ஸ்டாண்டில் நின்று
    உங்களுடன் வேடிக்கை பார்ப்பதுபோல்
    உண்ர்ந்தேன் தெளிவான நடை
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. என்னை மாதிரியே நீ....ளமா பதிவு எழுத ஆரம்பிச்சுட்டீங்களா? ஒட்டு கேட்ட கதையை என்னமாய் விவரிக்கிறீர்கள்?

    நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  12. நண்பா.. எப்டி இருக்கீங்க.. இருங்க படிச்சுட்டு வர்றேன்.. :-)

    ReplyDelete
  13. :-).. ம்ம்ம்.. நல்லா பராக்கு பார்த்திருக்கீங்க.. :-)

    ReplyDelete
  14. நல்ல நீண்ட பதிவு.
    பேருந்தில் பயணம் செய்யும்போது நிறைய செய்திகள் விழுகின்றன. வேதனையாக இருக்கின்றன. பெற்றோர்கள் கண்காணிப்பு போதாது.

    ReplyDelete
  15. No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
    நன்றி

    ReplyDelete
  16. நல்லா எழுதி இருக்கீங்க........

    ReplyDelete
  17. ஷோபா சக்தியின் தூற்று.காம் - பகுதி 4 க்கு எதிராக‌ ! - http://powrnamy.blogspot.com/2011/03/4.html

    ReplyDelete
  18. ////////எப்படித்தான் இவனுங்க எல்லாம் அழகான பெண்களை கரக்ட் பண்ணுகிறார்களோ என மனதில் மெல்லிய பொறாமை தோன்றியது.//////////

    இதுதானே காலங்காலமா நடந்துக்கிட்டு வர்ர அநியாயம்... ! இதுல ஒரு லாஜிக் இருக்கு மாம்சு, ரெண்டு பேருல பையன் ஸ்மார்ட்டா இருந்தா எல்லாம் அவன் கண்ட்ரோல்ல இருக்கும், அதுவே பொண்ணு அழகா இருந்தா அப்படியே உல்டா.... அவ்வளவுதான்...

    ReplyDelete
  19. காட்சிகளின் விவரிப்பு, கண் முன் நிறுத்துகிறது.

    ReplyDelete
  20. பெண்ணை மனதாக பார்த்தால் அவளது சிரிப்பு, கோபம், அக்கறை, அறிவு, அன்பு, அரவணைப்பு, என வியக்க வைக்கும்.... ஆனால் பெண்களை வெறும் உடலாக பார்ப்பவர்கள் அவளது சதை, சலம், மலம், சளி, இரத்தம், காற்று, தீட்டு என்பதை கவனிக்க மறந்துவிடுகின்றனர். ..... தங்களின் பதிவைப் பார்த்த போது நேரில் பார்த்த அனுபவம் வருகிறது. ...........

    ReplyDelete
  21. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////////எப்படித்தான் இவனுங்க எல்லாம் அழகான பெண்களை கரக்ட் பண்ணுகிறார்களோ என மனதில் மெல்லிய பொறாமை தோன்றியது.//////////

    இதுதானே காலங்காலமா நடந்துக்கிட்டு வர்ர அநியாயம்... ! இதுல ஒரு லாஜிக் இருக்கு மாம்சு, ரெண்டு பேருல பையன் ஸ்மார்ட்டா இருந்தா எல்லாம் அவன் கண்ட்ரோல்ல இருக்கும், அதுவே பொண்ணு அழகா இருந்தா அப்படியே உல்டா.... அவ்வளவுதான்.../

    /////////////////////////////////////////////



    ஆமாம் மாப்பு இந்த அநியாயத்துக்கு முடிவு கட்ட ஒருத்தன் பிறந்து வரமாட்டானா?

    ReplyDelete
  22. ////////அஞ்சா சிங்கம் said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////////எப்படித்தான் இவனுங்க எல்லாம் அழகான பெண்களை கரக்ட் பண்ணுகிறார்களோ என மனதில் மெல்லிய பொறாமை தோன்றியது.//////////

    இதுதானே காலங்காலமா நடந்துக்கிட்டு வர்ர அநியாயம்... ! இதுல ஒரு லாஜிக் இருக்கு மாம்சு, ரெண்டு பேருல பையன் ஸ்மார்ட்டா இருந்தா எல்லாம் அவன் கண்ட்ரோல்ல இருக்கும், அதுவே பொண்ணு அழகா இருந்தா அப்படியே உல்டா.... அவ்வளவுதான்.../

    /////////////////////////////////////////////



    ஆமாம் மாப்பு இந்த அநியாயத்துக்கு முடிவு கட்ட ஒருத்தன் பிறந்து வரமாட்டானா? ////////

    அவர் ஏற்கனவே பொறந்து இதையெல்லாம் தட்டி கேட்டுக்கிட்டு இருக்காரு மாப்பு...... இந்த அநியாயத்த அவரு ஒருத்தரால மட்டும் தான் தட்டிக் கேக்க முடியும்.... அவர்தான் டாகுடர் விஜய்....!

    ReplyDelete
  23. @ வேடந்தாங்கல் - கருன்

    தமிழ் படம் பார்த்த மாதிரியே இருக்கா அப்ப டிக்கட்டுக்கு காசு கொடுத்துட்டு போங்க :-)

    @ நா.மணிவண்ணன்

    நண்பா எப்படி பார்த்தாலும் நீங்க என்னோட இனம்தான் :-)

    @ karthikkumar

    யோவ் எப்ப பார்த்தாலும் பதிவ படிச்சுட்டு என்ன கிண்டல் பண்றதே உன் வேலையா போச்சு, இருடி வச்சுக்கறேன் :-)))

    @ THOPPITHOPPI

    ரொம்ப கஷ்ட்டப்பட்டுதான் கண்டுபிடிச்சேன் நண்பா :-)

    ReplyDelete
  24. MANO நாஞ்சில் மனோ said...
    //உண்மையில் நம்மில்தான் நிறைய பேர் செண்ட் அடித்துக் கொண்டும், பகட்டான உடையணிந்தும் அருவெறுப்பை மறைத்துக் கொண்டும் இருக்கிறோம் என தோணியது//

    உண்மைதான் பாஸ்.....
    உங்க பிளாக் படிச்சாலே ஒரு நல்ல சினிமா பார்க்குற மாதிரி லேசா மனசும் வலிச்சிருதே மக்கா....

    என்னது மனோ சாருக்கே பீலீங்கா, இது சரிப்பட்டு வராது பாஸ், கூலாகிடுங்க :-))))

    ReplyDelete
  25. செங்கோவி said...
    நைட்..இது கதையா..அனுபவமா..கதை ஸ்டைல்ல அனுபவமா..நல்லாயிருக்கு.

    அனுபவம்தான், சும்மா கதை மாதிரி எழுத்து தமிழ்ல எழுதி பார்த்தா எப்படி இருக்கும்னு டிரை பண்ணி பார்த்தேன் நண்பா...

    ReplyDelete
  26. @ Ramani said...

    நன்றி ரமணி சார்


    பாலா said...
    என்னை மாதிரியே நீ....ளமா பதிவு எழுத ஆரம்பிச்சுட்டீங்களா? ஒட்டு கேட்ட கதையை என்னமாய் விவரிக்கிறீர்கள்?

    நான் ஒட்டு கேட்கவில்லை நண்பா, அவர்கள் சத்தம் போட்டுதான் பேசிக்கொண்டிருந்தார்கள், நான் மட்டுமில்லை இன்னும் நாலைந்து பேர்களும் கேட்டு கொண்டிருந்தார்கள் :-)

    @ ரஹீம் கஸாலி said...

    எஸ் சார்...

    ReplyDelete
  27. @ பதிவுலகில் பாபு

    பாபு ரொம்ப நாள் ஆச்சே, என்ன ஆச்சு, எங்க போனீங்க, எப்படி இருக்கீங்க, பதிவுலகில் பாபுன்னு பேர வச்சுகிட்டு காணாம போனா எப்படிங்க :-)))))

    சரி சரி இருங்க உங்க கடைக்கு வரேன்...

    ReplyDelete
  28. Rathnavel said...
    நல்ல நீண்ட பதிவு.
    பேருந்தில் பயணம் செய்யும்போது நிறைய செய்திகள் விழுகின்றன. வேதனையாக இருக்கின்றன. பெற்றோர்கள் கண்காணிப்பு போதாது.


    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார், இவர்கள் செய்வதையெல்லாம் பெற்றோர்களால் கண்கானிக்க முடியாது சார், அவர்களுக்கு தெரியாமல் பக்காவா செய்கிறார்கள், நல்லது கெட்டதை அவர்களேதான் உணர வேண்டும் :-(

    ReplyDelete
  29. @ Part Time Jobs said...

    வருகிரேன் பார்ட் டைம் ஜாப் அவர்களே


    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////////எப்படித்தான் இவனுங்க எல்லாம் அழகான பெண்களை கரக்ட் பண்ணுகிறார்களோ என மனதில் மெல்லிய பொறாமை தோன்றியது.//////////

    இதுதானே காலங்காலமா நடந்துக்கிட்டு வர்ர அநியாயம்... ! இதுல ஒரு லாஜிக் இருக்கு மாம்சு, ரெண்டு பேருல பையன் ஸ்மார்ட்டா இருந்தா எல்லாம் அவன் கண்ட்ரோல்ல இருக்கும், அதுவே பொண்ணு அழகா இருந்தா அப்படியே உல்டா.... அவ்வளவுதான்...


    பன்னிக்குட்டி சார், நீங்க சொல்றது சரிதான், ஆனா அழகான பொண்ணுங்கள எல்லாம் சுமாரான பசங்க எப்படி கரக்ட் பண்றாங்க? கொஞ்சம் சொல்லங்களேன் :-))

    ReplyDelete
  30. Chitra said...
    காட்சிகளின் விவரிப்பு, கண் முன் நிறுத்துகிறது.

    நன்றி சித்ரா மேடம்


    March 11, 2011 10:46 AM
    இக்பால் செல்வன் said...
    பெண்ணை மனதாக பார்த்தால் அவளது சிரிப்பு, கோபம், அக்கறை, அறிவு, அன்பு, அரவணைப்பு, என வியக்க வைக்கும்.... ஆனால் பெண்களை வெறும் உடலாக பார்ப்பவர்கள் அவளது சதை, சலம், மலம், சளி, இரத்தம், காற்று, தீட்டு என்பதை கவனிக்க மறந்துவிடுகின்றனர். ..... தங்களின் பதிவைப் பார்த்த போது நேரில் பார்த்த அனுபவம் வருகிறது. ..........

    நன்றி இக்பால் சார், தங்களின் பின்னூட்டம் என்னுடைய பதிவை சுருக்கமாக தந்துள்ளது, அருமையான பின்னூட்டம், என் மனதில் உள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள்,இந்த பதிவினை முழுமையாக உணர்துள்ளீர்கள், நன்றி...

    ReplyDelete
  31. கலாநேசன் said...

    நன்றி கலாநேசன் சார்

    அஞ்சா சிங்கம் said...
    ஆமாம் மாப்பு இந்த அநியாயத்துக்கு முடிவு கட்ட ஒருத்தன் பிறந்து வரமாட்டானா?

    நன்றி அஞ்சாசிங்கம், உங்க கேள்விக்காக பதிலை பன்னிக்குட்டி சார் சொல்லியிருக்காரு பாருங்க :-)

    ReplyDelete
  32. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ஆமாம் மாப்பு இந்த அநியாயத்துக்கு முடிவு கட்ட ஒருத்தன் பிறந்து வரமாட்டானா? ////////

    அவர் ஏற்கனவே பொறந்து இதையெல்லாம் தட்டி கேட்டுக்கிட்டு இருக்காரு மாப்பு...... இந்த அநியாயத்த அவரு ஒருத்தரால மட்டும் தான் தட்டிக் கேக்க முடியும்.... அவர்தான் டாகுடர் விஜய்....

    ராம்சாமி சார், சின்ன டாகுடர நீங்க விடவே மாட்டீங்க போல, சரி சரி தட்டி மட்டும் கேட்க சொல்லுங்க, பஞ்ச் டயலாக் மட்டும் வேணாம், முடியல :-)

    ReplyDelete
  33. நல்லாவே ஒட்டு கேட்ருக்கீங்க

    ReplyDelete
  34. >>உண்டு கொழுத்திருந்த சேட்டு வீட்டு குண்டு பெண்கள் நான்கு பேர் பேசிக்கொண்டு போனார்கள்,

    கொழுக் மொளுக் ஃபிகரை இப்படி பேசலாமா?ஹி ஹி

    ReplyDelete
  35. @ஆர்.கே.சதீஷ்குமார்

    ஹி ஹி ஒட்டு கேட்கலை சார், நடந்தத சொன்னேன், அவங்க சத்தமாதான் பேசிட்டு இருந்தாங்க..

    ReplyDelete
  36. இந்த பதிவை வெச்சு 2 சிறுகதையும் ஒரு கவிதையும் தேத்தலாம் போல இருக்கே. டேய் சி பி யோசி...

    ReplyDelete
  37. @சி.பி.செந்தில்குமார்

    பாஸ் அவங்க ஓவர் குண்டுங்க பாஸ், இத வெச்சு இரண்டு சிறுகதையா எப்படிங்க தல?

    ReplyDelete
  38. உங்கள் படைப்பு, உள்ளம் கவர்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. ஐ ...எங்க ஏரியா...உங்களின் பதிவு இயல்பாக இருக்கிறது...

    ReplyDelete
  40. மையப் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தீர்கள் எப்படி நகர்ப் பேருந்து நிலையத்தை படம் போட்டிருக்கிறீர்கள். யாரும் கோவையை சேர்ந்தவர்கள் பின்னூட்டம் போடா மாட்டார்கள் என்ற தைரியமா?

    ReplyDelete
  41. @செந்திலான்

    ஹா ஹா நல்லாதான் கவனிச்சிருக்கீங்க செந்தில் சார், நானும் கூகிள்ள சர்ச் பண்ணி பார்த்தேன், மைய பேருந்து நிலையத்தோட போட்டோ கிடைக்கல, சரி கிடைச்சதயாவது எடுத்து போடுவோம்னுதான் போட்டேன், மன்னிச்சிக்கோங்க நண்பா...

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!