Monday, April 4, 2011

குள்ளநரிக் கூட்டம் - விமர்சனம்
சமீப காலங்களில் வந்த திரைப்படங்களில் ஆகச்சிறந்த குடும்பத்தோடு பார்க்க்கூடிய நல்ல பொழுது போக்கு திரைப்படம் குள்ளநரிக்கூட்டம், ஒரு சாதாரண விசயத்தை களமாக கொண்டு எப்படி அலுக்காமல் படம் எடுப்பது என அனாயசமாக செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர்.

வேலை வெட்டி இல்லாம சுத்திகிட்டு இருக்காரு நம்ம ஹீரோ விஷ்னு, அவங்க அப்பா ரீசார்ஜ் பண்ண கொடுத்த பணத்துல ரீசார்ஜ் பண்ணும் போது தவறுதலா மாத்தி வேறொரு எண்ணுக்கு ரீசார்ஜ் ஆகிருது, அது யாருன்னு பார்த்தா ஹீரோயின் ரம்யா நம்பீசன், அவங்க்கிட்ட இருந்து அந்த பணத்த வாங்க டிரை பண்றாரு விஷ்ணு, அவங்க முதல்ல தர மாட்டேன்னு சொல்லிடுறாங்க, இவரும் விடாம போன் பண்ணி தொல்லை பண்ராரு,

இப்படி ரெண்டு பேரும் மாத்தி மாத்தி போன் பண்றது கடைசியில காதல்ல போய் முடியுது, அப்புறம் என்ன நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா லவ் பண்ணிட்டு இருக்குறாங்க, அப்புறம்  என்ன நடக்கும்? கதாநாயகிக்கு வீட்டுல மாப்பிள்ளை பார்க்குராங்க, விஷ்ணுவும் அண்ணன கூட்டிட்டு பொண்ணு கேட்க போறாரு, அங்க பார்த்தா வேறொரு மாப்பிள்ளை வந்து நிச்சயம் வரைக்கும் பேசிட்டு போறாங்க,

ஷாக்காகி நிக்குற விஷ்ணுகிட்ட பொண்ணோட அப்பா ஒன்னா ராணூவத்துல சேர்ந்துட்டு வா, இல்லைன்னா கடைசிக்கு போலீசாவாவது ஆகிட்டு வா அப்பத்தான் பொண்ண கொடுப்பேன்னு சொல்றாரு, ஏண்ணா அவரு ஒரு பெரிய போலீஸ்கார்ர், அவரு மட்டுமல்ல அவங்க இருக்குற ஏரியாவே ராணுவத்துக்கு ஆள் சப்ளை பண்ற ஏரியா, சரி அப்புறமென்ன போலீசாகி கல்யாணம் பண்ண வேண்டியதுதானேன்னு நினைச்சீங்கன்னா அது தப்பு,

ஏன்னா விஷ்ணுவோட அப்பாவுக்கு போலீசுன்னாலே ஆகாது, மழைக்கு கூட போலீஸ் பக்கம் ஒதுங்க மாட்டாரு, இந்த டயலாக்க விசுவலாவே காட்டுறாங்க, அப்படி ஒரு டெர்ர் பயம் அவருக்கு போலீஸ் மேல, சரி நம்ம காதல் அவ்வளவுதான் புட்டுகிச்சு போலன்னு நினைச்சுகிட்டு இருக்குற விஷ்ணுவுக்கு அவங்க அம்மா வந்து தைரியத்த கொடுக்கறாங்க, மவனே நீ போய் போலீசா ஆகிட்டு வா, உங்கப்பனை நான் பார்த்துகிறேன்னு சொல்றாங்க, அப்புறம் என்ன இவரும் போலீசாக கிளம்பறாரு, போலீசானாரா? கல்யாணம் பண்ணாராங்கறத படத்துக்கு போய் பாருங்க

போலீஸ் செலக்சன்ல நடக்கற அநியாயம், அக்கிரம் எல்லாத்தையும் விலாவரியா காட்டி இருக்காங்க, நம்ம ஊர்ல பாதி போலீசு ஏன் இப்படி வெத்து வேட்டா இருக்காங்கங்கறது நல்லாவே புரியுது, இப்படி செலக்சன் எல்லாம் நல்லா காட்டி இருக்குற டைரக்டர் கிளைமேக்ஸ்ல நல்லாவே சொதப்பிட்டாரு, அக்மார்க் சினிமா கிளைமேக்ஸ், சினிமாலதான் இப்படி எல்லாம் நடக்கும், நிஜத்துல பண்ணா அடி பிரிச்சிர மாட்டாங்க,

கிளைமேக்ஸ் மட்டுமில்ல, ஒன்னுமே தெரியாத ஹீரோ எஸ்.ஐ செலக்சன் ஓட்டப்பந்தயத்துல புது ரெக்கார்டே பண்றதும், லாங் ஜம்ப்புல அரையடி ஜாஸ்தியா வெச்சும் அனாயசமா தாண்டுறதும் லாஜிக்கே இல்லை, கேட்டா லவ்வாம், காதல் வந்தா எல்லாத்துலயும் ஜெயிச்சிடலாமாம், ஆமாமா இங்க லவ் பண்றவங்களா கேட்டாதானே தெரியும், அதுசரி ரம்யா நம்பீசன் மாதிரி பொண்ணு கிடைச்சா எஸ்.ஐ என்ன கமிசனரே ஆகலாம்

வெண்ணிலா கபடிகுழுவுல வர பாதிப்பேரு இதுலயும் வராங்க, இடைவேளைக்கு அப்புறம் அவங்க அடிக்கற கூத்துல படம் செம ஜாலியா போகுது, பர்ஸ்ட் ஆப் லவ்வு, செகண்ட் ஆப் காமெடின்னு நல்லாவே மேனேஜ் பண்ணி இருக்காங்க

பட்த்தோட ஹீரோ விஷ்ணு நல்லா பண்ணி இருக்காரு, இந்த கதை அவருக்கு நல்லா செட் ஆகிருக்கு, ரம்யா நம்பீசன் ஹோம்லியா அழகா இருக்காங்க, பாட்டு சீன்ல கூட கவர்ச்சி ஆக்காம சுடிதார்லயே உலாவ விட்டுருக்காங்க, ரொம்ப நல்லா நடிச்சு இருக்காங்க, இவங்க மட்டுமில்லாம அந்த செல்போன் கடை பொண்ணு, ரம்யாவோட தோழியா வர பொண்ணு, அவங்க அப்பா, குடும்பம்னு எல்லாமே பாத்திரத்துக்கு தகுந்த தேர்வுகள், நாமளும் அவங்க கூட இருக்கற மாதிரி ஒரு பீலீங், எல்லாரு நம்ம பக்கத்து வீடு எதுர்த்த வீட்டுல இருக்கறவங்க மாதிரி இருக்காங்க

மொத்தத்துல குடும்பத்தோட பார்க்க முடியற, எந்த வெட்டு குத்து கொலை இல்லாத, பஞ்ச் டயலாக், வில்லன், கார் சேசிங்னு எந்த தலைவலியும் இல்லாத கொஞ்சம் லாஜிக்கும் இல்லாத அருமையான திரைப்படம், கண்டிப்பா பாருங்க.

மொத்ததுல குள்ளநரிக் கூட்டம் - மனதை கொள்ளை கொண்ட கூட்டம்..!
   

33 comments:

 1. நாமளும் அவங்க கூட இருக்கற மாதிரி ஒரு பீலீங், எல்லாரு நம்ம பக்கத்து வீடு எதுர்த்த வீட்டுல இருக்கறவங்க மாதிரி இருக்காங்க

  மொத்தத்துல குடும்பத்தோட பார்க்க முடியற, எந்த வெட்டு குத்து கொலை இல்லாத, பஞ்ச் டயலாக், வில்லன், கார் சேசிங்னு எந்த தலைவலியும் இல்லாத கொஞ்சம் லாஜிக்கும் இல்லாத அருமையான திரைப்படம், கண்டிப்பா பாருங்க.


  ....... எப்படியும் இன்னும் ஆறு மாதத்துக்குள், திரைக்கு வந்த சில மாதங்களே ஆன படம் என்று டிவியில் போட்டுருவாங்க என்று சொல்லுங்க....

  ReplyDelete
 2. அக்மார்க் சினிமா கிளைமேக்ஸ்,////
  இதுக்கெல்லாம் அக்மார்க் ஐஎஸ்ஒவெல்லாம் கொடுக்குறாங்களா ....:))

  ReplyDelete
 3. மொத்ததுல குள்ளநரிக் கூட்டம் - மனதை கொள்ளை கொண்ட கூட்டம்..!///
  திருட்டு கூட்டம்னு சொல்றீங்களா ....:))

  ReplyDelete
 4. அய்யோ அய்யோ வடை போச்சே மக்கா...

  ReplyDelete
 5. @ Chitra
  எப்படியும் இன்னும் ஆறு மாதத்துக்குள், திரைக்கு வந்த சில மாதங்களே ஆன படம் என்று டிவியில் போட்டுருவாங்க என்று சொல்லுங்க.

  அது என்னவோ வாஸ்தவம்தானுங்க, ஆனாலும் தியேட்டருக்கு குடும்பத்தோட போய் பார்க்க்ரதுக்கு இந்த படம் ஓகேங்க...

  ReplyDelete
 6. @ karthikkumar
  இதுக்கெல்லாம் அக்மார்க் ஐஎஸ்ஒவெல்லாம் கொடுக்குறாங்களா ....:))

  விட்டா நீ அக்மார்க் நெய் கம்பெனிக்காரன்கிட்டயே விளக்கம் கேட்ப போலிருக்குதே???
  //திருட்டு கூட்டம்னு சொல்றீங்களா ....://

  இன்னும் அடுத்து என்னன்னவெல்லாம் கேட்க போறியோ மொத்தமா கேட்டுடு, அப்புறமா பதில் சொல்றேன் :-))))

  ReplyDelete
 7. @ MANO நாஞ்சில் மனோ
  அய்யோ அய்யோ வடை போச்சே மக்கா...


  சரி சரி விடுங்க சார், இன்னும் பத்து பதினைஞ்சு டயலாக்க போடுவீங்களே அதில ஏதாவது ஒன்ன எடுத்துக்கோங்க :-)

  //நல்ல விமர்சனம்// நன்றிங்க மனோ சார்...

  ReplyDelete
 8. நண்பா நானும் இந்த படத்துல வர்ற மாதிரி வேணும்னே யாருக்காவது மாத்தி ரீசார்ஜ் பண்ணலாம்னு நெனைக்கிறேன்

  அப்பறம் நான் நஞ்சுபுரம் விமர்சனம் எதிர்பார்த்தேன்

  ReplyDelete
 9. இன்னும் அடுத்து என்னன்னவெல்லாம் கேட்க போறியோ மொத்தமா கேட்டுடு, அப்புறமா பதில் சொல்றேன் :-))))///
  யோவ் மாம்ஸ் நான் என்ன உங்ககிட்ட சொத்தா கேக்கபோறேன்.... எனக்கு தேவை எல்லாம் நீதி நேர்மை நியாயம்... ( ச்சே இனிமேல் அடிக்கடி நாட்டாமை படத்த பாக்குறத குறைச்சிக்கனும்...:))

  ReplyDelete
 10. நல்ல படம்... நல்ல விமர்சனம்...

  ReplyDelete
 11. நல்ல விமர்சனம் சகோ... படம் பார்க்கணும்

  ReplyDelete
 12. @ நா.மணிவண்ணன்
  //நண்பா நானும் இந்த படத்துல வர்ற மாதிரி வேணும்னே யாருக்காவது மாத்தி ரீசார்ஜ் பண்ணலாம்னு நெனைக்கிறேன்//

  வேணாம் நண்பா, சினிமாலதான் கதாநாயகிக சூப்பரா இருப்பாங்க, நெஜத்துல மாத்தி கிழவிக்கு ரீசார்ஜ் பண்ணிட போறீங்க :-)))

  நஞ்சுபுரம் விமர்சனம் எழுதவே பயமா இருக்கு, ஒரே பாம்பூ....

  ReplyDelete
 13. @ karthikkumar

  சரி விடுய்யா இனிமே எந்த மார்க்கும் போடல போதுமா :-)

  ReplyDelete
 14. @ தமிழ் உதயம்

  நன்றி தமிழுதயம் சார்...

  ReplyDelete
 15. @ தோழி பிரஷா

  நன்றி பிரஷா மேடம்...

  ReplyDelete
 16. எது எப்படியோ உங்கள் விமர்சனம் மனதை அள்ளுகிறது..

  ReplyDelete
 17. தல, அவ்ளோ நல்லா இருக்கா?..அப்போ பாத்துடுவோம்!

  ReplyDelete
 18. // ரம்யா நம்பீசன் மாதிரி பொண்ணு கிடைச்சா எஸ்.ஐ என்ன கமிசனரே ஆகலாம் //

  valid point...

  ReplyDelete
 19. உங்க விமர்சனத்தை பார்க்கும்போது தைரியமா,நம்பி படத்தை பார்க்கலாம்.நன்றி.

  ReplyDelete
 20. @ பாரத்... பாரதி...

  நன்றி பாரதி சார்...

  ReplyDelete
 21. @ செங்கோவி

  உண்மையாகவே அருமையா இருக்கு, கண்டிப்பா பாருங்க...

  ReplyDelete
 22. @ Philosophy Prabhakaran

  கரக்ட் பிரபா

  ReplyDelete
 23. @ சி.பி.செந்தில்குமார்

  நன்றி தல...

  ReplyDelete
 24. @ thirumathi bs sridhar

  நன்றி மேடம்...

  ReplyDelete
 25. குள்ளநரி கூட்டம் தலைப்பை பார்த்ததும் அரசியல் கட்சிகளை கிண்டல் செஞ்சி இருப்பீங்கன்னு பார்த்தேன். இது வேற ஒரு குள்ளநரி கூட்டமா...ஏமாந்துட்டேன்.

  ReplyDelete
 26. This comment has been removed by the author.

  ReplyDelete
 27. ஹாய்..இது எங்க ஊரு கதை களம்னு கேள்விபட்டேன்...மெய்யாலுமா சுரேஷ்???

  ReplyDelete
 28. நானும் இந்த படத்தை பார்த்தேன்! 1,76,000 கோடி அடிச்சிட்டு தன்னோட டிவில சதுரங்கம்னு ஒரு நிகழ்ச்சிய காண்பிச்சா நாங்க ஓட்டு போற்றுவோமா!!!

  ReplyDelete
 29. யோவ் போன வருஷம் ரிலீஸ் ஆனா படத்துக்கு இப்போ விமர்சனமா?

  ReplyDelete
 30. நான் இன்னும் பாக்கல தல

  ReplyDelete
 31. @ ! சிவகுமார் !

  எல்லாரும்தான் அந்த குள்ளநரிகளை போட்டு கிழிக்கறாய்ங்களோ, இதில நாம வேறயா சிவா?

  @ ஆனந்தி..

  உங்க ஊருதான் மேடம், ஆனா எங்க ஊரு மாதிரி எடுத்துருக்காங்க ஹி ஹி

  @ udai

  சரி விடுங்க சார், லாஜிக்கெல்லாம் பார்த்துகிட்டு

  @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

  நான் இந்த வருசம்தான் பார்த்தேன் ரமேஷ் சார்

  @ கே.ஆர்.பி.செந்தில்

  கண்டிப்பா பார்க்கலாம் சார்

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!