புத்தம் புது வருடத்தில் இந்த புது பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன், எல்லாரும் புது வருசத்தை உற்சாகமா கொண்டாடி இருப்பீங்க, கொஞ்ச பேரு கோயிலுக்கு போயிருப்பீங்க, கொஞ்ச பேரு வீட்டுல இருந்தே கொண்டாடி இருப்பீங்க, கொஞ்ச பேரு டூருன்னு எந்த இடத்துக்காவது போயிருப்பீங்க, நிறைய பேரு சரக்கு அடிச்சி கொண்டாடி இருப்பாங்கன்னு இன்னைக்கு பேப்பர பார்த்தாலே தெரியுது, நிறைய சாலை விபத்துகள் நடந்து இருக்கு, எது எப்படியோ எல்லோரும் மிகுந்த உற்சாகத்தோடவும், சந்தோசத்தோடவும் கொண்டாடி இருக்காங்க, அதே உற்சாகமும் சந்தோசமும் வருசம் முழுக்கா இருக்கட்டும்.
எப்படி இருந்தாலும், சினிமா, மொக்கை, காமெடி, நக்கலுன்னுதான் பதிவு எழுத போகிறோம், இந்த வருசத்தோட முதல் பதிவையாவது உருப்படியா எழுதணும்னு யோசிக்கிறேன், ஒன்னும் தோணவே மாட்டேங்குது, சரி நான் படிச்சதுல புடிச்சதுல இருந்து நாலு விசயத்தை எடுத்து போட்டு பதிவ ஆரம்பிக்கிறேன்.
புத்தாண்டு சபதம் எடுக்கிறது வருசா வருசம் எல்லாரும் நினைக்கிற ஒன்னுதான், ஆனா முழுசா நாலு நாளைக்கு அப்புறம் அந்த சபதத்தை பாலோ பண்ணுறவங்க எத்தனை பேருங்கறது கொசு தலையில பேன் பார்க்குற மாதிரிதான் இருக்கு, இப்படி ஒழுங்கா முழுசா பாலோ பண்ண முடியாதவங்க கீழே இருக்குற சின்ன சின்ன விசயங்களை டிரை பண்ணி பாருங்களேன்.
- அதிகாலை 5 மணிக்கு எழுந்திரிக்கிறது ( இது நள்ளிரவுன்னு விவேக் மாதிரி காமெடி பண்ணினாலும் சரி )
- காலையில் எழுந்தவுடன் குறைந்தது அரை மணி நேரம் நடைபயிற்சியையோ உடற்பயிற்சியையோ செய்வது.
- முடிந்த அளவு அதிகமாக தண்ணீர் குடிக்கலாம்.
- முடிந்தால் தினமும் ஒரு பழவகையை உண்ணலாம்.
- சிகரட் குடிப்பது, தண்ணி அடிப்பதை நிறுத்த முடியாது என்றாலும் வாரத்தில் ஒருநாள் மட்டுமாவது நிறுத்த முயற்சிக்கலாம் (முடியலைன்னா விட்டுறுங்க ஏன்னா நீங்க யார் சென்னாலும் கேட்க போறது இல்லை J )
- டீ, காபி அதிகம் குடிப்பவராக இருந்தால், அதையும் ஒன்று இரண்டு குறைவாக குடிக்குமாறு முயற்சி செய்யலாம்.
- டீ கடையில பப்ஸ், பன்னு, ரொட்டி, பிஸ்கட் போன்ற பேக்கரி ஐட்டம்ஸ் அதிகம் சாப்பிடுபவரா, அப்படி என்றால் அதையும் குறைத்துக் கொள்ள முயற்சி செய்யலாம்.
- மாதத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க முயற்சி செய்யலாம், குறைந்த பட்சம் 100 ரூபாய் ஆவது.
- மாதத்தில் ஒரு நாளைக்காவது ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யலாம்.
- வாரத்தில் ஒருநாளாவது கோவிலுக்கு செல்ல முயற்சிக்கலாம், அதனால மனம் அமைதி பெறும் (ஏனென்றால் மனதுக்கு கஷ்டம் என்றால் டாஸ்மாக் செல்வதை விட கோவிலுக்கு செல்வது நல்லது அல்லவா, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அடுத்ததுக்கு சென்று விடலாம்.)
- வீட்டில் நல்ல காரியங்களை செய்யும் போது மீதம் ஆகும் உணவுப் பொருட்களை அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு கொடுக்கலாம்.
- மாதத்திற்கு ஒருமுறையாவது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தலாம், இதனால் குடும்ப உறவு பலப்படும்.
- இதே போல மாதம் ஒருமுறை நெருங்கிய உறவினர்கள் ஒவ்வொருவரையும் சந்திக்கலாம், இதனால் சொந்தபந்தங்களின் நெருக்கம் அதிகரிக்கும்.
- இறுதியாக, உங்களின் லட்சியத்தை அடைவதற்கு குறுகிய கால திட்டமிடுதலை மேற்கொள்ளுங்கள், அதாவது மூன்று மாதத்தில் இந்த இலக்கினை அடைவது, ஆறு மாதத்தில் இந்த இலக்கினை அடைவது என திட்டமிடுங்கள், அதன் படி நடந்து இருக்கிறதா என பாருங்கள், இல்லையெனில் அடுத்து என்ன செய்வது என்று ஆராய்ந்து மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
அடுத்த புத்தாண்டுக்குள் உங்கள் இலக்கினை அடைய இரவுவானத்தின் வாழ்த்துக்கள்.
மேற்படி கருத்துக்கள் நான் சொன்னதில்லை, யார் கூறினார்கள் என்றும் தெரியாது, அதனால் என்ன நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளலாம்தானே, மேற்படி உள்ளதெல்லாம் சாதாரணமாக பின்பற்றக் கூடியதே, பெரிய பெரிய சபதங்கள் போட்டு பாதியில் விடுவதை விட இந்த சிறிய சிறிய விசயங்களை கடைபிடிக்க முயல்வோம்.
இறுதியாக,
வாழ்வது ஒருமுறைதான் வாழ்ந்து பாருங்கள்
மோதுவது மனிதர்கள்தான் மோதி பார்த்து விடுங்கள்
எண்ணங்களே வாழ்க்கை நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்
நல்லதே நடக்கும் நம்பிக்கை கொள்ளுங்கள்
நன்றி – நைட் ஸ்கை
மனம் அமைதி பெறும் (ஏனென்றால் மனதுக்கு கஷ்டம் என்றால் டாஸ்மாக் செல்வதை விட கோவிலுக்கு செல்வது நல்லது அல்லவா, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அடுத்ததுக்கு சென்று விடலாம்.
ReplyDeleteசுரேஷ் வீட்டுக்காரம்மாவுக்கு அனுப்புகின்றேன்.
//அதிகாலை 5 மணிக்கு எழுந்திரிக்கிறது //
ReplyDeleteமூணு மணிக்கு படுத்து எப்பிடி ஐந்து மணிக்கு எழும்பிக்கிறது ?
//காலையில் எழுந்தவுடன் குறைந்தது அரை மணி நேரம் நடைபயிற்சியையோ உடற்பயிற்சியையோ செய்வது.//
ஹி ஹி
//சிகரட் குடிப்பது, தண்ணி அடிப்பதை நிறுத்த முடியாது என்றாலும் வாரத்தில் ஒருநாள் மட்டுமாவது நிறுத்த முயற்சிக்கலாம்//
பாவிக்காத நாம எப்பிடி நிறுத்திறது ?
//டீ கடையில பப்ஸ், பன்னு, ரொட்டி, பிஸ்கட் போன்ற பேக்கரி ஐட்டம்ஸ் அதிகம் சாப்பிடுபவரா, அப்படி என்றால் அதையும் குறைத்துக் கொள்ள முயற்சி செய்யலாம்.//
செல்லாது செல்லாது
//அடுத்த புத்தாண்டுக்குள் உங்கள் இலக்கினை அடைய இரவுவானத்தின் வாழ்த்துக்கள்.//
தங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
புத்தாண்டில் கடைபிடிக்க வேண்டியவற்றை வரிசைப்படுத்தி இருக்கிறீர்கள், நல்ல தொகுப்பு, நடைமுறைப்படுத்த முயற்சி தொடங்கியாச்சு. (சில விஷயங்கள் மட்டும்)
ReplyDeleteநைட் ஸ்கை யின் வார்த்தைகள் யோசிக்க வைக்கிறது.
மன்னிக்கவும். என்னால் தமிழ்மணத்தில் வாக்களிக்க இயலவில்லை.
ReplyDeleteஒரே தத்துவமா இருக்கு........
ReplyDeleteஅது என்ன ஹி ஹி ஹி ஹேப்பி நியூ இயர்ங்க?
ஜோதிஜி said... ஹி ஹி வேணாம் சார்
ReplyDeleteஎப்பூடி.. said... தல, நீங்க மொதல்ல அது எல்லாத்தையும் பழகிக்கோங்க, அப்புறம் நிறுத்திடுங்க எப்படி நம்ம ஐடியா :-)
பாரத்... பாரதி... said... நன்றி சார், ஓட்டு எல்லாம் பெருசு இல்லைங்க சார், நீங்க வந்ததே போதும் :-)
THOPPITHOPPI said... தெரியலியே மச்சி, ஒரு குவாட்டரு சொல்லேன் :-) தப்பா நினைக்காதீங்க சும்மா வெளாட்டுக்கு சொன்னேன், நன்றி சார்.
///மனம் அமைதி பெறும் (ஏனென்றால் மனதுக்கு கஷ்டம் என்றால் டாஸ்மாக் செல்வதை விட கோவிலுக்கு செல்வது நல்லது அல்லவா, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அடுத்ததுக்கு சென்று விடலாம்.///
ReplyDeleteஒன்னும் வெளங்கலையே நண்பா . ஒரு வேளை அதுவா இருக்குமோ
நா.மணிவண்ணன் said... ஹி ஹி அதேதான் நண்பா
ReplyDeleteநாலு விஷயம்னு நாற்பது விஷயங்கள் போட்ட மாதிரி இருக்கு..:)))
ReplyDelete//வாழ்வது ஒருமுறைதான் வாழ்ந்து பாருங்கள்
மோதுவது மனிதர்கள்தான் மோதி பார்த்து விடுங்கள்
எண்ணங்களே வாழ்க்கை நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்
நல்லதே நடக்கும் நம்பிக்கை கொள்ளுங்கள்//
இது ரொம்ப அழகான வரிகள்..ஓசி வார்த்தைகள் :))) என்றாலும் படிக்க சுவாரஸ்யமா இருந்தது...:))))
ஆனந்தி.. said... வாங்க மேடம் கடைசியா போட்டு இருக்குற நாலு வரிகள்தான் அந்த நான்கு விசயங்கள் :-)
ReplyDeletegood post. usefull to all
ReplyDeleteமீண்டும் க்யூட் பதிலா...:))) ஓகே..ஓகே..:))))
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... நன்றி தல
ReplyDeleteஆனந்தி.. said... கியூட்டெல்லாம் ஒன்னும் இல்லைங்க, காப்பி பேஸ்ட் மாதிரிதான் இதுவும்.
சின்ன விஷயங்களானாலும் நல்ல விஷயங்கள்.
ReplyDeleteநல்ல தொகுப்பு...
ReplyDeleteஸாதிகா said... நன்றி மேடம்
ReplyDeleteதோழி பிரஷா said... நன்றி மேடம்
இதுவும் நான் கூறியதில்லை, எனினும் புத்தாண்டில் எனது நண்பர்களாகிய உங்களுக்கு நான் இதனை கூற விரும்புகிறேன்,
ReplyDelete.....புத்தாண்டில், உங்கள் நேர்மை பிடிச்சு இருக்குது..... :-))
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!!
Chitra said... வாங்க சித்ரா மேடம் நீங்க மறுபடியும் வந்ததுக்கு நன்றி
ReplyDeleteஎச்சரிக்கை:
ReplyDelete"குறட்டை" புலி உலா வருகிறது.
வலைப்பிரியர்கள் வாழ்த்துக்கள் சொல்லாவிட்டால்
உங்கள் வலைப்பூக்களில் பதுங்கும்.அது உங்கள் பதிவிற்கு ஆபத்தானது.
--- sleepingtiger007.blogspot.com
உங்களுக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
ReplyDeleteநானும் புத்தாண்டு சபதங்கள் எடுக்கறதில்லை.. :-)
ReplyDelete"குறட்டை " புலி said... ஐயோ பயமா இருக்கு, நான் சின்ன பையன் விட்டுடுங்க :-)
ReplyDeleteபதிவுலகில் பாபு said... நல்லதுதான் விடுங்க பாபு :-)