Wednesday, December 1, 2010

லிவ்விங் டு கெதர் - சிம்பு, நயன்தாரா, பிரபுதேவா



பதிவுலகில் சூடான விவாதத்தை ஏற்படுத்திய தலைப்பு லிவ்விங் டு கெதர், சரி நானும் என் மனதில் தோன்றிய எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன், இந்த பதிவு லிவ்விங் டு கெதருக்கு ஆதரவானதோ அல்லது எதிரானதோ இல்லை.

ஒரு மனிதன் இங்கு தனித்து வாழ முடியாது, அவன் தன்னை சார்ந்துள்ள மக்கள் சமுதாயத்தினை சார்ந்தே வாழ்கிறான், எனவே சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றை மட்டுமே அவனால் செய்ய முடியும், லிவ்விங் டு கெதரோ அல்லது வேறு ஒரு பிரச்சனையோ அது மக்களால், சமுதாயத்தினால் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும், இல்லையென்றால் ஏற்றுக் கொள்ளப்படாது,  எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் நல்லவைகளும் உள்ளன, கெட்டவைகளும் உள்ளன, உதாரணமாக பிரபுதேவா நயந்தாராவின் காதல் நம்மை பொறுத்தவரையில் கள்ளக்காதல் ஆனால் அவர்களுக்கு அது நல்ல காதல்? நமக்கு நல்லவை என தோன்றும் விஷயம் இன்னொருவருக்கு கெட்டதாக தோன்றும், எனவே ஏன் லிவ்விங் டு கெதர் என்ற விஷயம் தோன்றியது என எண்ணி பார்த்தால் அவர்களுக்கு திருமணம் என்ற விஷயத்தில் நம்பிக்கை இல்லாத காரணம் ஒன்றே, இதுதவிர வேறு ஏதேனும் காரணம் இருந்தால் அவர்கள் செய்வதை என்னவென்று சொல்வது அதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.



என்ன காரணத்திற்காகவும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழட்டும், ஆனால் இந்த பழக்கம் பெரும்பாலும் யாரிடம் உள்ளது என பார்த்தால், வசதி வாய்ப்புகளில் தன்னிரைவு பெற்ற பணக்காரர்களிடமும், அதிக சம்பளம் வாங்கும் உத்தியோகத்தில் உள்ளவர்களிடமும், மெட்ரோபாலிட்டன் சிட்டியில் வசிக்கும் வசதி வாய்ந்தவர்களிடமும் மட்டுமே காணமுடியும், சாதாரண நடுத்தர குடும்பத்தை அல்லது ஏழையாக வாழும் குப்பனோ சுப்புனோ இந்த வாழ்க்கை வாழ்வதில்லை, எனவே இந்த லிவ்விங் டு கெதருக்கு பணம் என்பது மிகவும் முக்கிய காரணியாக உள்ளது. 




பணக்கொழுப்பு எடுத்து அலைபவர்களை விட்டுவிட்டு திருமணம் என்பதில் நம்பிக்கை இல்லாமல் லிவ்விங் டு கெதராக வாழ்பவர்களுக்கு திருமணம் என்ற விஷயத்தில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டுமானால் என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும். இன்றைய திருமண வாழ்க்கையில் கல்யாணம் முடிந்து ஒரு வாரத்திற்குள் விவாகரத்து கேட்பது என்பது சாதாரணமாகி விட்ட்து, விவாகரத்து கேசுகள் ஒவ்வொரு கோர்ட்டுகளிலும் லட்சக்கணக்கில் இருக்கும் போலிருக்கிறது, சின்ன சின்ன விசயங்கள், கருத்து வேறுபாடுகளுக்காக விவாகரத்து கேட்பது தொடர்கதையாகிறது, முன்பு எல்லாம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆணோ பெண்ணோ அவர்களின் தாய், தந்தையர் திருமணம் என்றால் என்ன? கணவனிடமோ, மனைவியிடமோ எப்படி அனுசரித்து போக வேண்டும், புகுந்த வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என சொல்லி கொடுப்பார்கள், ஆனால் இப்பொழுது எல்லாமே தலை கீழாக மாறி விட்டது, ஆணோ பொண்ணோ குடும்பத்தை விட்டுவிட்டு வெளியூரில் தங்கி படிக்கிறார்கள் அல்லது வேலை பார்க்கிறார்கள், வீட்டில் உள்ள தாத்தா, பாட்டியை முதியோர் இல்லத்தில் விட்டு விடுகிறார்கள், பெற்றவர்கள், உறவினர்கள் யாருடைய ஆலோசனைகளும் கிடைப்பதில்லை அப்படியே இருந்தாலும் இந்தகாலத்து பசங்களுக்கு தெரியாதா என்று பெற்றவர்களோ உறவினர்களோ எதுவும் சொல்லி கொடுப்பதில்லை, 



அவர்களுக்கு கிடைக்கும் அறிவுரைகள் எல்லாம் நண்பர்களிடத்தில் மட்டும்தான், நண்பர்கள் என்ன சொல்வார்கள், கல்யாணமா, வாழ்த்துகள் அப்புறம் என்ன என்ஜாய்தான், நடத்து நடத்துன்னு உசுப்பேத்தி விட்டு விடுவார்கள், அப்புறம் என்ன கல்யாண கனவுகளும் தேனிலவு கனவுகளுமாக திருமண நாளை எதிர் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள், இப்படி செக்ஸை பற்றிய எண்ணத்தோடு திருமணம் செய்வர்களது நிலைமை என்னவாகும், ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்கிற மாதிரி எல்லாம் முடிந்து ஒரு கட்டம் தாண்டும் போது நிதர்சன வாழ்க்கை இடிக்கும், தன் துணையின் உண்மையான விருப்பு வெறுப்பு வெளிப்படும் போதுதான் உறைக்கும், ஈகோ தலை தூக்கும், இத்தனை நாள் இப்படி இல்லையோ, இப்பொழுது எப்படி, மறைத்து விட்டானோ(ளோ) என்று பிரச்சனை ஆரம்பித்து கடைசியில் விவாகரத்து கோரி கோர்ட் படியேற வேண்டியதுதான், இதற்கு சரியான ஒரு உதாரணமாக நாடோடிகள் படத்தின் கிளைமேக்ஸ்ஸை குறிப்பிடலாம்.



எனவே ஆணோ பெண்ணோ திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் இருவருக்கும் பொதுவாகவும், தனித்தனியாகவும் கவுன்சிலிங் தேவை, திருமண வாழ்க்கையை எப்படி எதிர் கொள்வது, பிரச்சனைகள் ஏற்படின் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அதனை எப்படி தீர்க்க வேண்டும் இன்ன பிற வாழ்க்கை மற்றும் செக்சுவல் பிரச்சனைகள் எதாவது இருந்தால் அதற்கும் சேர்த்து கவுன்சிலிங் கொடுக்க வேண்டும், இப்படி கவுன்சிலிங் செய்த சர்டிபிகேட் இருந்தால்தான் அவர்களின் திருமணத்தை பதிவு செய்ய முடியும் என சட்டம் கொண்டு வர வேண்டும், அல்லது திருமணத்தையே நடத்த வேண்டும் எனவும் சட்டம் கொண்டு வரலாம், இந்த கவுன்சிலிங் திருமணத்திற்கு முன்பு, திருமணத்திற்கு பின்பு, திருமணம் முடிந்த 6 மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு பிறகு ஒருமுறை செய்ய வேண்டும் (அதற்கு அப்புறம் ஆனது ஆச்சுன்னு அவங்களே சகிச்சிக்குவாங்க), இப்படி தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு விவாகரத்து கோருவது படிப்படியாக குறைய வாய்ப்பிருக்கிறது, இதனை சட்டம் கொண்டு வந்துதான் செய்ய வேண்டும் என்பதில்லை, பெற்றவர்கள் அவர்களின் சுய விருப்பத்திலேயே இதனை நடைமுறைப்படுத்த வேண்டும், இன்றில்லை என்றாலும், வருங்காலத்தில் திருமண வாழ்க்கை என்பது ஒரு இனிமையானதாக எல்லாருக்கும் அமையும், அமைய வேண்டும் என்பதுதான் எனது ஆசை, அப்பொழுது லிவ்விங் டு கெதர் எல்லாம் இருக்கவோ அல்லது ஒரு பொருட்டாகவோ யாருக்கும் தெரியாது. ஒருவனுக்கு ஒருத்தி, கலாச்சாரம், பண்பாடு எல்லாம் தானாகவே உறைக்கும்.

 இது வேற ஒண்ணும் இல்லிங்க, லிவ்விங் டு கெதருக்கு போட்டோ       தேடும்போது கூகிள்ள இந்த போட்டோதான் முன்னாடி இருந்தது
பதிவிற்கும், தலைப்புக்கும், இவங்களுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொன்னா நம்பவா போறீங்க
புகைப்படங்கள் உதவி : நன்றி கூகிள் கம்பெனி

முடிஞ்சா ஓட்டு போடுங்க, முடியாட்டி படிச்சிட்டாவது போங்க, நன்றி





13 comments:

  1. ரொம்ப நல்லா ஆராய்ச்சி பண்ணி எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.
    சமுதாய மாற்றம் ஒரு நாளில் வருவதில்லை. மிகமிக மெதுவாகவே வருகிறது. வருவதை யாராலும் நிறுத்த முடியாது. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

    ReplyDelete
  2. படிச்சு ஓட்டும் போட்டாச்சுங்க.

    ReplyDelete
  3. DrPKandaswamyPhD said...

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கந்தசாமி சார்

    ReplyDelete
  4. ஜோதிஜி said...

    நன்றி ஜோதிஜி சார்

    ReplyDelete
  5. main matter இல்லாமல் எப்படி ஒத்து வாழ்வது?

    செக்சில் யாருக்கு என்ன தேவை என்று கவுன்சலிங் செய்யவேண்டும்.செக்ஸ் இல்லாமல் யாரும் சேர்ந்து வாழமுடியாது.புறத்தோற்றத்தில் இதைப் பற்றி யாரும் அறியமுடியாது.இங்குதான் அனைவருக்கும் தோல்வி.
    ஆண் எதிர்பார்ப்பது பெண்ணிடம் இல்லை, பெண் எதிர்பார்த்தது ஆணிடம் இல்லை.

    முழுமையான together என்றால், செக்ஸில் திருப்திநிலை இருவருக்கும் வரவேண்டும்.
    இல்லாவிட்டால் கெடாவெட்டுதான்.

    ReplyDelete
  6. ராவணன் said...

    வாங்க சார், அதற்கும் சேர்த்துதான் கவுன்சிலிங் செய்ய வேண்டும், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  7. எப்படி இந்த மாதிரி பெரிய பெரிய மேட்டர்லாம் அழகா ஆராய்ச்சி செஞ்சு எழுதுறிங்க ? நானும் ஒரு உருபிடியான பதிவ எழுதனும்னு வந்ததுல இருந்து முயற்சி பன்னிட்டுதான் இருக்கேன் முடியல ...

    ReplyDelete
  8. Chitra said...

    வாங்க சித்ரா மேடம்.

    ReplyDelete
  9. Venkat Saran. said...

    கிழிஞ்சது போங்க, நான் ஏதோ எனக்கு தோணினதை சும்மானாச்சுக்கும் எழுதினேன், இத போய் ஆராய்சின்னு சொல்லுறீங்களே, என்ன வச்சி காமெடி கீமடி ஒண்ணும் பண்ணலியே, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரண்

    ReplyDelete
  10. முடிஞ்சா ஓட்டு போடுங்க, முடியாட்டி படிச்சிட்டாவது போங்க,
    -----------------------------------------------
    ஏன் இந்த கொலை வெறி ,
    எங்கள மறந்துட்டிங்களா ?

    ReplyDelete
  11. THOPPITHOPPI said...

    வாங்க சார், உங்கள மறக்க முடியுமா, பதிவு போட்டு 3 நாள் ஆகுது, அதான் அந்த டிஸ்கி, உங்க வருகைக்கு நன்றி

    ReplyDelete
  12. "அறிவுரைகள் எல்லாம் நண்பர்களிடத்தில் மட்டும்தான், நண்பர்கள் என்ன சொல்வார்கள், கல்யாணமா, வாழ்த்துகள் அப்புறம் என்ன என்ஜாய்தான், நடத்து நடத்துன்னு உசுப்பேத்தி விட்டு விடுவார்கள், அப்புறம் என்ன கல்யாண கனவுகளும் தேனிலவு கனவுகளுமாக திருமண நாளை எதிர் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள், இப்படி செக்ஸை பற்றிய எண்ணத்தோடு திருமணம் செய்வர்களது நிலைமை என்னவாகும், ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்கிற மாதிரி எல்லாம் முடிந்து ஒரு கட்டம் தாண்டும் போது நிதர்சன வாழ்க்கை இடிக்கும், தன் துணையின் உண்மையான விருப்பு வெறுப்பு வெளிப்படும் போதுதான் உறைக்கும், ஈகோ தலை தூக்கும், இத்தனை நாள் இப்படி இல்லையோ, இப்பொழுது எப்படி, மறைத்து விட்டானோ(ளோ) என்று பிரச்சனை ஆரம்பித்து கடைசியில் விவாகரத்து கோரி கோர்ட் படியேற வேண்டியதுதான்,"

    எதார்த்த உண்மைகளை படம் பிடித்திருக்கிறீர்கள் , சொன்னா ஜலிசில் அப்படின்னு சொல்லுவாங்க அதனாலே இதை பற்றி எழுத வில்லை , நன்றி அருமை நண்பா

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!