Saturday, December 11, 2010

சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்



டிசம்பர் 12 நாளை ஞாயிற்றுகிழமை நம்ம தலைவருக்கு பிறந்தநாள், அவர வாழ்த்தற அளவுக்கு எனக்கு வயசும் இல்ல, தகுதியும் இல்ல, இருந்தாலும் அவரு நல்லா இருக்கணும்னு இறைவனை வேண்டிக்கிறேன், தலைவர பத்தி அப்படி இப்படின்னு கண்ட மேனிக்கு பல விமர்சனம் இருந்தாலும், மத்தவங்க ஒவ்வொரு தடவை விமர்சனம் பண்ணும்போது தலைவர் மேல ஈர்ப்பு கூடிக்கிட்டேதான் போகுது, குறைய மாட்டேங்குது, ஒருவிதத்துல எதிர்விமர்சனம் பண்ணரவங்கள பாராட்டத்தான் வேணும், இவங்க நேரத்த செலவு பண்ணி இவங்களே விளம்பரப்படுத்தறாங்க, நல்லா இருங்க,



அதனால இந்த நேரத்துல தலைவர பத்தி எழுத நிறைய விஷயம் இருந்தாலும் எனக்கு பிடிச்ச தலைவரோட பாடல் 5 மட்டும் எழுதிடலாம்னு முடிவு பண்ணிட்டேன், என்னோட ரசனை எப்படின்னா கன்னா பின்னான்னு இருக்கும், இதுதான் பிடிக்கும்கறது எல்லாம் கிடையாது, இருந்தாலும் மெலோடி சாங்கா பார்த்தா கீழ இருக்கற அஞ்சு பாட்டு ரொம்ப புடிக்கும்,




முதல் பாட்டு மன்னன் படத்துல வர்ர ’’அம்மா என்றழைக்காத உயிரில்லையே’’ ஜேசுதாஸ் பாடினதுல இந்த பாட்டு எனக்கு ரொம்ப புடிக்கும், எனக்கு அம்மா செண்டிமெண்ட் ரொம்ப ஜாஸ்தி, இப்ப எஙக அம்மா இல்லாத நிலையில இந்த பாட்ட எப்ப பார்த்தாலும் கண்ணுல தண்ணி வந்துடும், இந்த பாட்டுல சூப்பர்ஸ்டார் அம்மாவுக்கு உடம்பு சரியாகனும்கறதுக்காக வேண்டிக்கிற பாடல், உண்மையிலேயே ஒருத்தரோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போனா மனசு என்ன பாடுபடும்கறத கண்ணுலெயே காமிச்சி இருப்பாரு, அதிலயும் பண்டரிபாய் அம்மா கைகால் வராதவங்களா இருந்த இடத்துலயே இருபாங்க, அப்ப தலைவர் ஊனமுற்றவர்கள் போறதுக்கான வண்டி ஒன்னு வாங்கிட்டு வருவாரு, அம்மா நீங்க இனிமேல் இப்படியே உட்கார்ந்து இருக்க வேணாம் நீங்க எங்க வேணா போகலாம்னு சொல்லிட்டு அந்த சக்கர நாற்காலியில உட்காரவெச்சி வீடு முழுக்க தள்ளிகிட்டு போவாரு, அதுவும் அவங்க மனசு சங்கடப்படகூடாதுன்னு சிரிச்சிகிட்டே தள்ளிட்டு போவாரு, ஒரு கட்டத்துல தாங்க முடியாம அழுவாரு, நல்ல நெகிழ்ச்சியான சீன் அது, உண்மையில இந்த பாட்டுக்கு ரஜினிகாந்த விட வேற யாராலும் சிறப்பா நடிச்சி இருக்க முடியாது, நானும் இந்த பாட்டுக்கு கமலோ, சிவாஜி சாரோ நடிச்சி இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சி பார்த்தேன், கண்டிப்பா நல்லா இருக்காதுன்னுதான் தோணுது, இந்த பாட்ட புடிக்காதவங்க யாரும் இருக்க முடியாது, நீங்களும் ஒருதடவை கேட்டு பாருங்க, பாடல் வரிகளும் நல்லா இருக்கும்.

‘’ பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன் அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே ‘’





ரெண்டாவது பாட்டு வீரா படத்துல வர ‘’ மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே ‘’ இந்த படம் எனக்கு ரொம்ப புடிச்ச படம், இந்த பாட்ட எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது, இதுல தலைவர் மீனாவ கரக்ட் பண்ண டிரை பண்ணுவாரு, அத கேட்ட மீனா எங்கப்பா இதுவரைக்கும் யாருக்கும் சங்கீதம் கத்துதர ஒத்துக்கிட்டதில்லை, உங்கள நம்பி இருக்காரு, நீங்க உண்மையான மனுசனா இருந்தா இந்த ஒருமாசம் சங்கீதம் கத்துகிட்டு போயிருங்க, என் முகத்துல முழிக்காதீங்கன்னு சொல்லிடுவாங்க, தலைவரும் அது மாதிரியே ஒருமாசம் சங்கீதம் கத்துகிட்டு கடைசியில நான் உங்கள லவ் பண்றேன், நீங்களும் என்னை லவ் பண்ணீங்கண்னா நாளைக்கு மலைகோயில்ல ஒரு கார்த்திகை தீபம் ஏத்தி வையுங்க, தீபம் இருந்ததுன்னா நான் அதிர்ஷ்ட சாலி இல்லைன்னா பரவாயில்லைன்னு சொல்லுவாரு, அதுமாதிரி அடுத்தநாள் போய் பார்க்கும்போது தீபம் இருக்காது, சரி நம்ம அதிர்ஷ்டம் அவ்வளவுதான் அப்படின்னு நினைச்சி திரும்பி பார்க்கும் போது மீனா முத்துங்கற பேரயே தீபமா வச்சிருப்பாங்க, அப்படியே பாட்டு தொடங்கும், சூப்பரான லவ் பீலிங் பாட்டு, இதுல தலைவர் போட்டுட்டு வர கருப்பு டிரஸ் எனக்கு ரொம்ப புடிக்கும், இந்த பாட்டு போக இந்த படத்துல வர்ர, அடி பந்தலிலே தொங்குகிற புடலங்காய் மற்றும் ஆத்துல அன்னக்கிளிங்கற பாட்டும் ஆல்டைம் பேவரிட், நீங்களும் ஒருமுறை கேட்டு பாருங்க





மூனாவது பாட்டு பாண்டியன் படத்துல வர ‘’அன்பே நீ என்ன அந்த மன்னனோ ‘’ இந்த பாட்டு முழுக்க பெண்குரல்ல தான் வரும், கடைசி இரண்டு வரி மட்டும் ஆண்குரல்ல வரும், மியூசிக் ரொம்ப நல்லா இருக்கும், இந்த பாட்ட தலைவருக்காக மட்டுமில்ல குஷ்புவுக்காகவும் ரொம்ப புடிக்கும் ஹி ஹி ஹி




நாலாவது பாட்டு தளபதி படத்துல வர ‘’ சுந்தரி கண்ணால் ஒரு சேதி ‘’ இந்த பாட்டு புடிக்க காரணம் தேவையில்லை, எல்லாருக்கும் புடிச்ச பாட்டுதான், ஆனாலும் இந்த பாட்ட ஒருதடவை கேட்டா அரைமணி நேரம் மனசுல தங்கும், சம்திங் ஸ்பெஷல் இந்த பாட்டுல இருக்கு, என்னன்னுதான் தெரியல, தலைவர் இந்த படத்துல ரொம்ப இளமையா இருப்பாரு, சோபனாவும் சூப்பரா இருப்பாங்க





அஞ்சாவது பாட்டு தர்மதுரை படத்துல வர ‘’ மாசி மாசம் ஆளான பொண்ணு ‘’
தலைவர் படத்துலயே இந்த பாட்டு ஒன்னுதான் ஒரு மார்க்கமா இருக்கும், பொதுவுல வச்சி கேட்க முடியாது, ஆனாலும் ஜேசுதாஸ்குரல்ல ரொம்ப சூப்பரான பாட்டு, நிறைய பேருக்கு புடிக்கும்னு நினைக்கிறேன், அந்த காலத்துலேயே ஒரு கிளுகிளுப்பான பாடல், ஆனா மியூசிக் நல்லா இருக்கும், இந்த பாட்ட லாரண்ஸ் ரீமிக்ஸ் பண்ணி கெடுத்துட்டாரு.

இது போக இன்னும் நிறைய பாட்டு இருக்கு ஆனா அத எல்லாம் எழுதிகிட்டே போனா பதிவு பெரிசாகிரும், நாலுபத்தி தாண்டுனாலே படிக்க யாருக்கும் நேரம் இருக்கறதில்லை, இதில நானும் எழுதிகிட்டே போனா எல்லாரும் ஓடி போயிருவாங்க, இனிமே இரண்டு வரி பதிவு, நாலு வரி பதிவுன்னுதான் எழுதணும், அதனால நானும் இத்தோட நிறுத்திக்கிறேன்.



தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு ரசிகனாக என்னுடைய இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள், இந்த இனிய நாளில் எல்லா வளமும் பெற்று, சந்தோசத்தோடும், மனநிறைவோடும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.


[ இந்த பதிவில் இருந்து அடுத்து என்ன பதிவு எழுத போரேன்ங்கறத பிளாக்கோட வலது பக்கம் போடலாம்னு முடிவு பண்ணிட்டேன், இதுவும் சினிமா தியேட்டர் மாதிரிதான், சப்போஸ் எழுத ஒன்னும் தோணலின்னா UNDER CONSTRUCTION  அப்படின்னு போடுவேன், அதனால என்னுடைய வாசக பெருமக்கள் (?) அப்படின்னு யாராவது இருந்தா அதபாத்து தெரிஞ்சுக்கோங்க, இப்ப அடுத்து என்னன்னு தெரியணும்னா பிளாக்கோட வலது பக்கம் மேல பாருங்க ]





26 comments:

  1. சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  2. அனைத்து பாடல்களுமே இளையராஜாவின் இசையில் வெளிவந்த சிறப்பான பாடல்கள். தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்க டெடரான விமர்சனத்துக்கு வெய்ட்டிங்.

    ReplyDelete
  3. பாடல்களும் அதை நீங்கள் தொகுத்தளித்திருக்கும் விதமும் அருமை.

    ReplyDelete
  4. நா.மணிவண்ணன் said...

    வாங்க மணிவண்ணன் சார், கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  5. எப்பூடி.. said...

    நன்றி எப்பூடி சார், சீரியஸ் விமர்சனம்னு வேற போட்டுட்டேன், எந்த ஆஸ்பத்திரில அட்மிட் ஆகுறதுன்னுதான் தெரியல, ஏற்கனவே எடிட்டர் வேற இறந்துட்டாராம், போகலாமா வேண்டாமான்னு தெரியலயே

    ReplyDelete
  6. ரஹீம் கஸாலி said...

    உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி சார்.

    ReplyDelete
  7. தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அன்பரசன் said...

    நன்றி அன்பரசன் சார், உங்களின் வருகைக்கும், கருத்துக்கும்.

    ReplyDelete
  9. என் பதிவுகளுக்கு தொடர்ந்து கருத்து இடும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி, இரவு வானம்!

    ReplyDelete
  10. ’சுந்தரி கண்ணால்’ பாட்டு இளையராஜாவின் மாஸ்டர்பீஸ்களுள் ஒன்று..நல்ல பாடல் செலெக்சன் நண்பரே!
    --செங்கோவி

    ReplyDelete
  11. தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு ரசிகனாக என்னுடைய இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள், இந்த இனிய நாளில் எல்லா வளமும் பெற்று, சந்தோசத்தோடும், மனநிறைவோடும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

    ..... Great! :-)

    ReplyDelete
  12. சூப்பர் ஸ்டாருக்கு எனது சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. கடைசியில கிளுகிளுப்பா ஒரு மாசி மாசம் பாட்டு போட்டு அசத்தீட்டீங்க...

    ReplyDelete
  14. //சீரியஸ் விமர்சனம்னு வேற போட்டுட்டேன், எந்த ஆஸ்பத்திரில அட்மிட் ஆகுறதுன்னுதான் தெரியல, ஏற்கனவே எடிட்டர் வேற இறந்துட்டாராம், போகலாமா வேண்டாமான்னு தெரியலயே //

    ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் உங்களுக்கு ரஸ்கு சாப்பிற மாதிரின்னு சொன்னாங்க :-)

    ReplyDelete
  15. சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  16. சிவகுமார் said...

    அத விடுங்க, அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானுங்க

    ReplyDelete
  17. செங்கோவி said...

    வாங்க செங்கோவி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  18. Chitra said...

    நன்றி சித்ரா மேடம்

    ReplyDelete
  19. philosophy prabhakaran said...

    வாங்க பிரபாகரன், எப்பவும் ஒரே மாதிரி பாட்டா போட்டா போரடிச்சிரும் அதனாலதான், கிளுகிளுப்பா இருந்தாலும் நல்லாதான இருக்கு.

    ReplyDelete
  20. எப்பூடி.. said...

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  21. பதிவுலகில் பாபு said...

    நன்றி பாபு சார்

    ReplyDelete
  22. polurdhayanithi said...

    வாங்க சார், என்ன ஒன்னுமே சொல்லாம போறீங்க

    ReplyDelete
  23. அருமையானப் பதிவு. உங்கள் பதிவுகளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
    http://tamilblogs.corank.com/

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!