Tuesday, December 21, 2010

ஈசன் - சசிக்குமாரின் மற்றுமொரு மைல்கல்



ஈசன் சசிக்குமார் என்னை ஏமாற்றி விட்டார், நானும் நமது வலையுலகில் வந்த விமர்சனங்களை எல்லாம் மனதில் கொண்டு இந்த படம் அவ்வளவுதான் போல இருக்கு, மொக்க படம் எடுத்து படம் பார்க்க வந்தவங்களை மண்டை காஞ்சி போக வச்சிட்டாரு போலன்னு நினைச்சிதான் படம் பார்க்க போனேன், பார்த்ததுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது சசி என்னை ஏமாத்திட்டாருன்னு, படம் அவ்வளவு நல்லா இருக்கு, அவங்கவங்க ஒரு படம் எடுக்குறதுக்கே கதை இல்லாம எப்படி எடுக்குறதுன்னு திணறிட்டு இருக்கும் போது சசிகுமார் ஒரு படத்துலேயே இத்தனை விஷயங்களை எப்படி சொல்லி இருக்காருன்னு பிரமிப்புதான் வருது.



சுப்பிரமணியபுரம் படத்துல நட்பு, காதல், சூழ்ச்சி, வஞ்சகம், துரோகம் இதை பற்றி எல்லாம் சொன்ன சசிக்குமார், இந்த படத்துல மூணு விதமான கதை சொல்றாரு, பப் எனும் மேற்கத்திய கலாச்சாரம், குடிக்கிற பசங்க, பொண்ணுங்க, அதனால ஏற்படுகிற விளைவுகள், சும்மா டிரை பன்ணி பார்போம்னு ஆரம்பிச்ச் பழக்கம் எதுல கொண்டு போய் விடுது, அவங்கனால அவங்க பெற்றோர் படும் பாடு இப்படி ஒரு கதை, அரசியல்வாதி, அவங்களோட பணம் சம்பாதிக்கும் பேரம், அவங்க சுயநலத்துக்காக அதிகாரிகளை யூஸ் பண்ணுவது, அதிகாரிகளின் வீக்னெஸ் மற்றும் நேர்மை, இப்படி ஒரு கதை, தொழிலதிபர்கள், அவங்களோட பிசினஸ் டெக்னிக், ஸ்டேட்டசுக்காக எதையும் செய்ய துணியும் மனநிலை, அவங்களுக்கு உள்ளேயும் இருக்கும் செண்டிமெண்ட் இப்படி ஒரு கதை , இது எல்லாத்தையும் இணைக்கிற ராஜேஷ்குமார் நாவல் மாதிரியான திரைக்கதைன்னு அசத்தி இருக்காரு சசிக்குமார், படம் முழுக்க நகர வாழ்கையோட அழுக்கை, ஆர்த்தடாக்ஸ் பேமிலி, விபச்சார புரோக்கர், இப்படி பல கேரக்டர் மூலமா நக்கலா சொல்லி இருக்காரு, படத்தோட வசனம் எல்லாம் செம நக்கல், நையாண்டிதான், நகைச்சுவை நடிகர்னு தனியா வச்சி டிராக் ஓட்டர டைரக்டர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்.


நிறைய பேரு இது என்ன குடிக்கிறாங்க, தம்மடிக்கிறாங்க, குடிக்கறாங்க, தம்மடிக்கிறாங்க இப்படியே படம் போகுதுன்னு சொல்றவங்களுக்கு, படத்தோட கதையே இதுதான, தண்ணியடிக்கற பொண்ணுங்களதான், ஈவ் டீசிங் பண்றாங்க, தண்ணி அடிக்கிற பொண்ணத்தான் ரேப் பண்றாங்க, தண்ணி அடிக்கிற இடத்துல பார்க்குற பொண்ணத்தான் லவ் பண்றாங்க, படத்தோட கதை களனே அதான, அப்புறம் வேற எப்படி எடுக்க முடியும்? ஒரு வேளை லவ் படமா இருந்தாதான் நம்மாளுங்களுக்கு புடிக்குமோ என்னமோ, எனக்கு ஒன்னுமே புரியல, எனக்கு தெரிஞ்ச வரைக்கும், எல்லா இளைஞர்கள் பத்தியும் சசிக்குமார் சொல்ல வரவில்லை என்றே நினைக்கிறேன், இப்படி குடி, குட்டி என இருக்கும் பப் கலாச்சாரத்தில் இருக்குற பசங்க பொண்ணுங்களை பத்திதான் படத்தில் சொல்ல வர்ராரு,

கொஞ்சம் நினைச்சி பாருங்க, இதே கதைய நம்ம வெங்கடேஷ் மாதிரி டைரக்டர் கையில எல்லாம் கிடைச்சி இருந்தா என்ன பண்ணி இருப்பாங்கன்னு, முடிஞ்ச அளவுக்கு கதாநாயகி டிரஸ்ஸ கழிட்டி ஆட வுட்டு, நாலு குத்து பாட்டு போட்டு, ரேப் பண்ர சீனையே எவ்வளவு காட்ட முடியுமோ அவ்வளவு காட்டி ரசிகனுங்களுக்கு கிளுகிளுப்பாக்கி இருப்பாங்கதான, ஆனா சசிக்குமார் முடிஞ்ச அளவுக்கு டீசண்டா எதையும் கவர்ச்சியா காட்டாம, டபுள் மீனிங் டயலாக் இல்லாம, அட குத்து பாட்டு ஒன்னு இருக்குங்க, அதுல கூட சொகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசு இருக்கு பாருங்கன்னு கருத்து சொல்லி இருக்காரு, இவரு இப்படி எடுத்ததால தான் பப்பு கூட டீசண்டா காமிக்கிறாரு, இதுக்கே சசிக்குமாருக்கு ஒரு ராயல் சல்யூட்.

பிளாஸ்பேக்க கூட விறுவிறுப்பா இருக்கணும்னு நினைக்காம, சாதாரணமா காமிச்சதுல இருந்தே தெரியல, கதைக்கு மீறி எதுவுமே செய்யாம, சொல்ல வந்தத மட்டுமே சொல்லி முடிச்சு இருக்காரு, கிளைமேக்ஸ்ல வைபவ்வ இரும்பிலேயே அடிச்சு கொல்ற சீன் வன்முறையா இருக்குன்னா, கண்டிப்பா அப்படித்தான் இருக்கும், அக்காவ ரேப் பண்ணி சீரழிச்சா கோபப்படுற பையன் இரும்பால அடிக்காம, அடி ஸ்கேல் வச்சா அடிப்பான், அந்தளவு வெறி இருக்கத்தானே செய்யும், என்னை பொறுத்த வரை அளவுக்கு மீறி சசிக்குமார் எதுவுமே செய்யலை.


படத்துல நடிச்ச நடிகர்கள பத்தி சொல்லனும், ஈசனா நடிச்சிருக்குற பையன், பையன பார்த்தாலே பயம் வருது, சமுத்திரக்கனி, அபிநயா, முக்கியமா அபிநயாவோட அப்பா, அரசியல்வாதி, அவரோட அல்லக்கை, இவங்க எல்லாம் ரொம்ப நல்லா நடிச்சி இருக்காங்க, வைபவ், அவரோட லவ்வர், பிரண்ட்ஸ்சு இவங்க எல்லாம் சும்மா குடிச்சி இருக்காங்க, வேற ஒண்ணும் சொல்றதுக்கு இல்லே, ரொம்ப குறிப்பா அபிநயாவும், அவங்க அப்பா கொடுக்குற காப்பியில விஷம் இருக்கும்னு தெரிஞ்சும், அப்பாவை ஒரு பார்வை பார்த்துட்டு வேகமா குடிக்கிற சீன் ஒரு சிறந்த நடிகையா அவங்களை வெளிக்காட்டுது, நல்ல எதிர்காலம் இருக்கு பொண்ணுக்கு.


என்னோட இந்த பதிவு பலருக்கு புடிக்காதுன்னுதான் நினைக்கிறேன், நான் பார்த்த வரைக்கும் எல்லாரும் காமெடியா விமர்சனம் பண்ணனும்னு நினைச்சி எழுதுன மாதிரி தான் இருக்கு, ஆனா எனக்கு படத்துல சொல்ல வந்த கருத்துக்கள்தான் பெரிசுங்கற மாதிரி தோணுது, அதுனால நான் இப்படி எழுதுனது யாருக்காவது வருத்தமா இருந்தா மன்னிக்கவும், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னு சசிக்குமாருக்குதான் எல்லாரும் சொல்லி இருக்காங்க, ஆனா நான் எனக்கே சொல்லிக்கிறேன், ஏன்னா இந்த படம் கண்டிப்பா ஓடாது, இனிமே சசிக்குமாரும் நாம ஏன் இப்படி எல்லாம் படம் எடுத்து நஷ்டப்படனும்னு அவரும் மத்த கமர்ஷியல் டைரக்டர் மாதிரி லவ், ஆக்‌ஷன், காமெடி, குத்துபாட்டுன்னு ஆகிடுவாரு. எது எப்படியோ எனக்கு படம் ரொம்ப புடிச்சி இருந்தது, என்னை சசிக்குமார் ஏமாத்தலை.

மொத்தத்துல ஈசன் பொண்ண பெத்த அப்பங்காரங்க எல்லாருக்கும் பாடம்.  


    

35 comments:

  1. என்னடா விமர்சனம் உப்புசப்பில்லாமல் இருக்கிறதே என நினைக்க வேண்டாம், அதுதான் மன்மதன் அம்பு வரப்போகிறது அல்லவா

    ReplyDelete
  2. இரவு வானம் said...
    என்னடா விமர்சனம் உப்புசப்பில்லாமல் இருக்கிறதே என நினைக்க வேண்டாம், அதுதான் மன்மதன் அம்பு வரப்போகிறது அல்லவா//

    அபோ மன்மதன் அம்புல உப்பு காரம் எல்லாம் இருக்கும் சொல்றீங்களா.. :)

    ReplyDelete
  3. karthikkumar said...

    ஆமா உப்பு, காரம், மிளகா பொடி, மல்லி பொடி, வெங்காயம் எல்லாமே இருக்கும் அட நீங்க வேற,ஒரு விளம்பரத்துக்கு சொன்னா சீரியசா கேட்குறீங்களே? விமர்சனம் வரும் போது பாருங்க, எப்படி இருக்குன்னு.

    ReplyDelete
  4. karthikkumar said...
    கார்த்தி மாமா, சீக்கிரம் ஏதாவது எழுதுங்க, நானும் டெய்லியும் பார்க்கிறேன் ஒரு கமண்டாவது போடலாம்னா, கடைய மூடிட்டு போயிட்டீங்களே?

    ReplyDelete
  5. நான் படம் பார்க்கவில்லை. ஆனால் நீங்கள் கூறுவதைப் பார்த்தால்; பப்பு-மப்பு, குடி-குட்டி என அலையும் இன்றைய இளைஞர்களுக்கு மாத்திரம் இப்படம் பிடிக்காதிருக்கலாம்.
    இப்படி அலையும் போக்குடைய இளைஞர்களைப் பெற்றோர் மகிழ்வார்கள் என நம்புகிறேன்.
    உங்கள் விமர்சனம் ஏனையோரிலும் மாறுபட்டது.

    ReplyDelete
  6. ஒரு திரைப்படம் பற்றிய எண்ணம் ஒவ்வொருவர் பார்வையில் இருந்தும் வேறுபடுவது இயற்கையே. அதை எக்காலத்திலும் தவிர்க்க இயலாது. அவ்வகையில் ஈசன் பற்றி வேறொரு கோணத்தில் சிந்தித்து இருக்கிறீர்கள், இரவு வானம். மன்மதன் அம்பு..இலக்கை நோக்கி துல்லியமாக பாயும் என கமல் சொல்லி இருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம். மொத்தத்தில் நல்ல படங்கள் வரவேண்டும் என்பதே நம் அனைவரின் கருத்தாக இருப்பது மகிழ்ச்சியே!

    ReplyDelete
  7. யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

    உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார், நீங்கள் கூறியது போலவும் இருக்கலாம், ஆனால் முழுக்க முழுக்க அவ்வாறே இருக்கும் என்றும் சொல்ல முடியாது, ஏனெனில் ரசிகர்கள் சினிமாவுக்கு போவதே மகிழ்ச்சிக்காகத்தான், அது சரிவர அமையாமல் அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை என்றால் குறைகூற ஆரம்பிக்கிறார்கள், சினிமாவும், பதிவுலகமும் ஒன்று, எது எப்பொழுது பாப்புலர் ஆகும் என்று கூற முடியாது.

    ReplyDelete
  8. வித்யாசமான பார்வை .

    ReplyDelete
  9. சிவகுமார் said...

    உங்களின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் சிவக்குமார், இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வை மட்டுமே, எனக்கு பிடித்தது மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை, அதை உணர்ந்தே இருக்கிறேன், இருந்தும் என்னுடைய கருத்தை வெளிப்படுத்தவே இந்த பதிவு.

    ReplyDelete
  10. நா.மணிவண்ணன் said...

    நன்றி மணிவண்ணன் சார்

    ReplyDelete
  11. இரவு வானம் said...
    karthikkumar said...
    கார்த்தி மாமா, சீக்கிரம் ஏதாவது எழுதுங்க, நானும் டெய்லியும் பார்க்கிறேன் ஒரு கமண்டாவது போடலாம்னா, கடைய மூடிட்டு போயிட்டீங்களே///

    எது மாமாவா.. சரி சரி இல்ல மாப்ள நெறைய ஆணி இருக்கு. அதான் லேட்டாகுது.. அடுத்த வாரம் பதிவு ரெடி...

    ReplyDelete
  12. karthikkumar said...

    நீங்க முறைமாமன்தான அதான், என்ன மாமா சோறு ரெடிங்கற மாதிரி பதிவு ரெடிங்கறீங்க? சரி சரி சீக்கிரம் சோறு இல்ல இல்ல பதிவு போடுங்க

    ReplyDelete
  13. செங்கோவி said...

    வாங்க செங்கோவி, அட்டெண்டஸ் போட்டதுக்கு நன்றி,எங்க கோபபட்டுருவீங்களோன்னு பயந்திட்டேன்

    ReplyDelete
  14. //கோபபட்டுருவீங்களோன்னு பயந்திட்டேன்//.. செங்கோவி கோவக்காரன் அல்ல!...சசி கோபம் கொண்டு கமர்சியலுக்கு போய்விடுவார் என்கிறீர்கள்..பதிவர்களின் விமர்சனம் சொல்வதெல்லாம் அவர் கோபப்பட்டு, ரோசப்பட்டு சுப்பிரமணியபுரம் மாதிரி நல்ல படம் கொடுக்கவேண்டும் என்பதே. இந்தப் படத்தை ஊக்குவித்தால் பழைய சசியை இழந்துவிடுவோம் நண்பரே..நீங்கள் பார்த்த தியேட்டரில் ஃபேமிலிகள் வந்து முகம் சுளித்து ஓடவில்லையா..ஒழுங்கற்ற ஒட்டாத திரைக்கதை தான் மிகப்பெரும் பலவீனம்..எப்படியோ, படம் பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி. நல்ல எழுத்து நடை, சரோஜா தேவி போல்!

    ReplyDelete
  15. செங்கோவி said...

    செங்கோவி, உங்கள் பார்வையில் உங்கள் கருத்துக்களை நான் ஏற்றுக் கொள்கிறேன், என்னை பொறுத்தவரை சுப்பிரமணியபுரம் படத்திற்கு இந்த படமும் எந்தவிதத்திலும் குறைவானதில்லை, சொல்ல போனால், அதைவிட இந்த படத்தில் சொல்ல வந்த சமுதாய கண்ணோட்டம் பற்றியதே என்னுடைய விமர்சனம், மற்றபடி நாம் எழுதும் விமர்சனங்களுக்காகவெல்லாம் சினிமாக்காரர்கள் மாறப்போவதும் இல்லை, இங்கு எழுதுபவர்கள் எல்லோரும் தங்கள் மனதில் தோன்றுவதையே எழுதுகிறார்கள், மற்றபடி நீங்கள் கோபக்காரர் என்று கூறியது சும்மா ஒரு தமாசுக்காக மட்டுமே அன்றி உங்கள் அளவுக்கு என்னால் எழுத முடியும் என்று தோன்றவில்லை சரோஜா தேவி போல் அல்லாமல்.

    ReplyDelete
  16. படம் நல்லாயிருக்கோ இல்லையோ உங்க விமர்சனம் சூப்பரா இருக்கு, எழுத்துநடை மிகவும் நன்றாக இருக்கு, விருதகிரிக்கு அப்புறம் ஈசன் விமர்சனத்தையும் முழுவதும் வாசித்தேன், அலுப்பு தட்டாமல் வாசிக்க முடியும்படி எழுதுவது எல்லோருக்கும் அமையாது, உங்களுக்கு அமைகிறது, தொடர்ந்தும் விமர்சனங்கள் எழுதுங்கள்,மிகைப்படுத்தல் இல்லை, நான் பதிவுலகில் படித்த விமர்சனங்களில் எழுத்துநடை நன்றாக இருக்கும் விமர்சனம் உங்களுடையதுதான்.

    ReplyDelete
  17. எப்பூடி.. said...

    தல உண்மையாத்தான் சொல்றீங்களா? வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி பட்டம் கிடைச்சா மாதிரி இருக்கு, எனக்கு எழுத்துநடைன்னா என்னான்னு எல்லாம் தெரியாது, நான் எல்லாருகிட்டயும் எப்படி பேசுவனோ அதே மாதிரிதான் எழுதறேன், அதனால அப்படி இருக்குமோ என்னவோ, ரொம்ப நன்றி தல

    ReplyDelete
  18. நான் சொன்னது நடிகை சரோஜா தேவியின் அன்ன நடை போல் உங்கள் எழுத்து!..வேற எதுவும் நினைச்சுக்காதீங்க..ஓட்டு போட்டாச்சு பாஸ்.

    ReplyDelete
  19. செங்கோவி said...

    நானும் அதேதான் சொன்னேன் பாஸ், என்னோட எழுத்து ரொம்பவே ஸ்லோவாத்தான் இருக்கு, நான் மறுபடியும் படிக்கும் போதே தெரிந்தது, ஆனா நீங்க நல்லா அதிரடியா எழுதறீங்க, கண்டினியூ பண்ணுங்க, வாழ்த்துக்கள், நான் ஓட்டு எல்லாம் பெரிசா நினைக்குறது இல்ல பாஸ், 100 பேரு படிச்சாலே போதும்னு சந்தோசப்பட்டுக்குவேன், இருந்தாலும் நீங்க எனக்காக ஓட்டு போட்டதுக்கு நன்றி

    ReplyDelete
  20. உங்கள் ரசனைக்கு சல்யூட்.
    நீங்கள் சசியை கை விட்டு விடாமல், ஆறுதலாய் சொல்லிருப்பதற்கு..
    கதை களம் நிறைய பேருக்கு பிடிக்கவில்லை என்பதே உண்மை.

    ReplyDelete
  21. பாரத்... பாரதி... said...

    வாங்க பாரதி, உங்களின் கருத்தும் உண்மைதான், வருகைக்கு நன்றி

    ReplyDelete
  22. ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு பார்வை இருக்கும். அவர்களின் பார்வையில் ஈசன் மொக்கை படம். உங்கள் பார்வையில் நல்ல படம். அவ்வளவுதான் விஷயம்.

    ReplyDelete
  23. ரஹீம் கஸாலி said...

    வாங்க நண்பா அதேதான் என்னுடைய எண்ணமும், சேம் பீலிங் :-)

    ReplyDelete
  24. உங்களுடையக் கருத்துக்களை எழுதியிருக்கீங்க.. அருமையாகவே சொல்லியிருக்கீங்க.. படம் பார்க்க வேண்டாம்னு முடிவு பண்ணியிருந்தேன்.. இனி யோசிக்கறேன்.. நன்றி..

    ReplyDelete
  25. இதுவரை படம் பார்க்கவில்லை... பார்க்கலாமோ ஒரு எண்ணம் உங்களது பதிவை படிக்கும் போது லேசாக தலை தூக்குகிறது...

    ReplyDelete
  26. viththiyaasamaana paarvaiவித்தியாசமான பர்வை

    ReplyDelete
  27. பதிவுலகில் பாபு said...

    கண்டிப்பா ஒருதடவை பார்க்கலாம் பாபு, எவ்வளவோ மொக்கை படம் பார்க்கிறேம், இதையும் ஒருதடவை பாருங்களேன்

    ReplyDelete
  28. philosophy prabhakaran said...

    கண்டிப்பா பாருங்க நண்பா

    ReplyDelete
  29. சி.பி.செந்தில்குமார் said...

    தல நீங்க மொதமொதலா வந்ததே பெரிசு, ரொம்ப நன்றிங்க, நீங்க சொன்னதும் கரக்ட்தான்.

    ReplyDelete
  30. நல்லா எழுதியுள்ளீர்கள்.. மிகுதியை தெரிந்து கொள்ள படத்தை பார்ப்போம்..

    ReplyDelete
  31. வைகறை said...

    உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  32. பிரஷா said...

    கண்டிப்பாக பாருங்கள் பிரஷா, உங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  33. நன்றி நண்பரே. நானும் நிறைய விமர்சனம் படிச்சிட்டு ஈசன் பார்க்க வேணாம்னு நெனைச்சிருந்தேன்
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!