Tuesday, March 1, 2011

கமர்சியல் பக்கங்கள் - 01/03/2011



கருப்பு எம்ஜியார் விஜயகாந்த், விஞ்ஞான முறையில ஊழல் செய்ய தெரிந்தவர் என சர்க்காரியா கமிசனால் பாராட்டு பெற்ற (இன்னும் பாராட்டு விழா நடக்கலை) நமது சினிமா மினிஸ்டர் முத்தமிழ் அறிஞர், இளைஞர் ச்சீ கலைஞர் இளைஞன் காவியம் படைத்தவருடன் கூட்டணி அமைக்காமல், வெறும் சாதா ஊழல் மட்டுமே புரிய தெரிந்த வாய்தாதெய்வம் ச்சீ மனித தெய்வம், இதயதெய்வம், தமிழகத்தின் நிரந்தர முதல்வர், ஒரிஜினல் எம்ஜியார் தோற்றுவித்த அம்மா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிரந்தர பொதுசெயலாளர் அம்மாவுடன் கூட்டு சேர போகிறாராம், 
முன்பு யாருடனும் கூட்டணி இல்லைன்னு சொன்னாரு, அப்புறம் மக்களுடனும் தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணின்னு சொன்னாரு, இப்போ? (ஒருவேளை நைட்டு கொஞ்சம் ஓவரா போச்சோ)
ஒருவேளை அந்த குழந்தையே நீங்கதான் சார்ங்கற மாதிரி அந்த தெய்வமே அம்மாதானோ என்னவோ :-)
தெரிஞ்சோ தெரியாமலோ போன எலக்சன்ல விருத்தாச்சலத்துல ஜெயிச்சு ச.ம.உ ஆயிட்டாரு, அந்த ஊரு ஜனங்களும் கூட்டணி இல்லாம தனியா நிக்குறாரு அதுவுமில்லாம முதல்வர் பதவிக்கு போட்டி போடற ஆளாச்சேன்னுதான் ஓட்டு போட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன், சரி முதல்வர் ஆசைதான் கைகூடல, கிடைச்ச எம்,எல்,ஏ பதவியை வெச்சாவது ஏதாவது பண்ணிருக்க வேண்டியதுதான, முதல்வர் ஆகணும்னு ஆசைபடறவரு தன்னோட தொகுதியில தேவையான வசதிகளை செஞ்சு கொடுத்து, பாலாரும் தேனாரும் ஓட விடாட்டியும், தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எல்லாத்தையும் செஞ்சு கொடுத்து தமிழகத்திலேயே ஒரு முன்மாதிரி தொகுதியா தன்னோட தொகுதியை கொண்டுவந்து, பாருங்க மக்களே என்னோட ஒரு தொகுதியவே இந்தளவு பண்ணியிருக்கனே, தமிழ்நாட்ட என்கையில கொடுங்க மொத்த தமிழ்நாட்டையும் மாத்தி காட்டறேன்னு சவால் விட்டுருந்தா அது சரி, அதவிட்டுட்டு விருதகிரி படம் எடுக்கறதுலயும், மீதி நேரத்துல சரக்கு அடிச்சுட்டு திமுகாவை மட்டும் வாரு வாருன்னு வாரிட்டும் இருந்தா எப்படி? கடைசியா நடந்த மாநாட்டுல தலைவர் காலுக்கு அடியிலேயே ஒருத்தர் உட்கார்ந்துகிட்டு இருந்தாரு, அடுத்தது என்ன பேசறதுன்னு பாயிண்ட் எடுத்து குடுத்துட்டு இருந்தாரு, அப்படித்தான் மாநாடு முழுக்க பேசிட்டு இருந்தாரு, அதுவும் குடும்ப அரசியல பத்தி பேசுறது,
நம்ம வீட்டுல மட்டும் என்ன வாழுதாம், அண்ணி, மச்சான்னு, நாளைக்கு நம்ம பசங்களே பெரியவங்க ஆனா கட்சிபதவி கொடுக்க மாட்டீங்களா என்ன?

ஜனங்க இவர நம்பி ஓட்டு போட்டதே இவரு தனிச்சு நிக்கிறாருங்கறதுக்குதான், இப்ப கூட்டணி வச்சு தானும் ஒரு அரசியல்வாதின்னு நிருபிச்சிட்டாரு, 
எதிரியை கூட மன்னிக்கலாம், ஆனா நம்பிக்கை துரோகியை மன்னிக்கவே மாட்டேன், இது இவரோட பஞ்ச் டயலாக்தான், மக்களே மன்னிப்பீங்களா?
மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை - இதுவும் இவரோட டயலாக்தான் ஞாபகம் வச்சிக்கோங்க, அவ்வளவுதான்..
நாளைக்கே கூட்டணி பேரம் ஒத்து வரலைன்னா மீண்டும் மக்களோட மட்டும்தான் கூட்டணின்னு சொல்லுவாங்களோ?


காமெடி

நான் 50 வருசமா அஸ்வின் ஹேர் ஆயில்தான் யூஸ் பண்ணிட்டு இருக்கேன், இப்ப முடி கொட்டுறது சுத்தமா நின்னு போச்சு, தேங்க்ஸ் டூ அஸ்வின்

- டாக்டர் கலைஞர் கருணாநிதி

குழந்தை : மம்மி எனக்கு தம்பி வேணும்
மம்மி : உங்க அப்பா துபாய் போய் இருக்கார், வரட்டும் யோசிக்கலாம்
குழந்தை : நோ மம்மி, டாடிக்கு நாம் சர்ப்ரைஸ் கொடுப்போம்
மம்மி : டாடிக்கு நீயே சர்ப்ரைஸ்தாண்டா செல்லம்

கவிதை

புரண்டு படுத்தால் நாம் இறந்து போவோமோ என்று
கருவில் இருந்து நமக்காக தூக்கத்தை கூட
தொலைத்து விட்டு இரவில் விழித்திருந்த சூரியன்
- அம்மா

எனக்கு எதிரிகள் யாரும் இல்லை
அவளை பார்க்கும் பொழுது
ஒரு நொடி மறைக்கும்
இமைகளை தவிர...

தத்துவம்

யாராவது உங்களை விரும்பினால் நீங்கள் உணர்வது காதல் என்றால் என்னவென்று
யாராவது உங்களை வெறுத்தால் நீங்கள் உணர்வது வாழ்க்கை என்றால் என்னவென்று

நல்ல உறவுகள் என்பது கடிகாரத்தின் முள்ளை போல
சில நேரங்களில் மட்டுமே இணையும்
ஆனால் எப்பொழுதும் பிரியாது

ஒரு சின்ன நியூஸ்
கூகிள்ல ஒரு புது பிராஜெக்ட் வந்திருக்கு, இந்த விசயம் பல பேருக்கு தெரிஞ்சிருக்கலாம், தெரியாதவங்களுக்காக இந்த நியூஸ்.
அமெரிக்கா, லண்டன்ல, பெர்லின் இப்படி பெரிய நாடுகள்ல இருக்கற பெரிய பெரிய மியூசியங்கள பார்க்கனும்னு நிறைய பேருக்கு ஆசையா இருக்கலாம், ஆனா அங்க போறதுக்கு வசதி இல்லாம நாம நிறைய பேரு இருக்குறோம் இல்லையா, அவங்களுக்காக கூகிள் கம்பெனிக்காரங்க ஆரம்பிச்சி இருக்கறதுதான் கூகிள் ஆர்ட் பிராஜெக்ட், இந்த வெப்சைட் மூலமா பல்வேறு நாடுகள்ல இருக்குற புகழ்பெற்ற மியூசிங்கள நாம இங்கிருந்தே பார்த்துக்கலாம், அதுவும் மவுஸ் மூலமாவே ஸ்கிரால் பண்ணி மியூசியத்துல இருக்கற ஒவ்வொன்னையும் பக்கத்துல பக்கத்துல பார்த்துக்கலாம், நான் எல்லா மியூசிங்களையும் சுத்தி பார்த்துட்டேன், நீங்களும் பார்க்கணும்மா

மியூசிங்கள பார்க்க இங்க கிளிக் பண்ணுங்க...


நீங்க தம்மடிக்கற ஆளா, தம்மடிச்சா ஒரு ரிலீஃப் கிடைக்குதுன்னு நம்புறீங்களா? கூடவே கேன்சரும் ப்ரீயா கிடைக்குது அதையும் நம்புங்க, கீழ இருக்குற வீடியோவை பாருங்க, சாதாரண வாட்டர் கேனுக்கே இந்த நிலைமையுனா? உங்க நுரையீரல் என்ன கதியாகும்?



இதே மாதிரிதான் நான் ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்க போயிருந்தேன், அங்கயும் படம் போடுரதுக்கு முன்னாடி சிகரெட் புடிக்கறதால ஏற்படுற கெடுதல்கள் என்ன, என்னென்ன நோய் வரும், அப்படின்னு பார்க்கவே சகிக்காத படங்களா போட்டு ஒரு விழிப்புணர்வு படம் போட்டுருந்தாங்க, படத்தோட இடைவேளையில ரெண்டு பசங்க, மச்சி பார்த்தயாடா நுரையீரல் எல்லாம் எப்படிவெந்து போய் கிடக்குதுன்னு அத பத்தி பயங்கர சீரியசா டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்க, கையில சிகரட்டோட ...

ரசித்தவை...

அப்புறம் இன்னொரு விசயம் குடிக்கற சரக்குல போட்டு இருக்காங்க, மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடுன்னு, வீட்டுக்கும், உயிருக்கும் வேணா கேடா இருக்கலாம், ஆனா சத்தியமா நாட்டுக்கு இல்லை, நாடே டாஸ்மாக் வருமானத்துலதான் தள்ளாடாம நடக்குது, இப்படி நாடு தள்ளாடாம இருக்கறதுக்காக, தான் தள்ளாடிட்டு இருக்கற குடிமகன பாராட்டாட்டியும் பரவாயில்லை, தயவுசெய்து யாரும் திட்டாம இருங்க, அதனால மதுபாட்டில்கள்ள மது வீட்டுக்கும் உயிருக்கும் மட்டும் கேடுன்னு போடுமாறு அரசாங்கத்தை குடிமகன்கள் சார்பாக கேட்டுக் கொள்றேங்க...


35 comments:

  1. வணக்கம் நண்பரே :)

    ReplyDelete
  2. 2 பதிவுகளுக்கான மேட்டரை ஒரே பதிவில் தந்த அண்ணன் வாழ்க

    ReplyDelete
  3. //சி.பி.செந்தில்குமார் said...
    போட்றா முத வெட்டை//

    இது என்னா எங்க போனாலும் ஒரே வன்முறையால்ல இருக்கு... ஹிஹி

    ReplyDelete
  4. கமர்சியல் பக்கங்கள் ரொம்ப நிறைவான பக்கங்கள் தகவல்களும் அரசியல் காமெடிகளும் அருமை...

    நன்றி நண்பரே :))

    ReplyDelete
  5. வழக்கம் போலவே கலக்கிட்டீங்க ....
    எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
    கலைஞரின் பேச்சும் எடக்கு மடக்கான எனது கேள்விகளும்

    ReplyDelete
  6. இன்றைய கமர்சியல் பக்கங்களும் ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு! நன்றி!

    ReplyDelete
  7. அண்ணே சூப்பரு கலக்கிட்டீங்க!

    எப்படியோ தெய்வம் யாருன்னு கட்சீல தெளிஞ்சிடுச்சா சாரிபா தெரிஞ்சிடுச்சா ஹி ஹி!

    ReplyDelete
  8. இன்றைய கமர்சியல் பக்கங்கங்கள் ரொம்ப அருமைன்னா அருமை.. இந்தப் பதிவிர்க்காக உங்கள் உழைப்பு தெரிகிறது.
    நம்ம பக்கம் வந்துரொம்ப நாளாச்சே...

    ReplyDelete
  9. ம்ம்ம் கலக்கல்தான்
    பாவம் வாத்தியார் கொண்ணுப்புட்டிங்க

    எங்கவீட்டுக்கெல்லாம் வரமாட்டிங்களா நண்பரே...

    ReplyDelete
  10. கமர்சியல் பக்கங்கள் அனைத்தும் அருமை..

    ReplyDelete
  11. தமிழ் மணத்தில் 7 வது ஓட்டு நீங்க பாஸ்..

    ReplyDelete
  12. ஐயா சாமீ, தம்மடிக்கிறவங்களைப் பத்தி மட்டும் தப்பா பேசப்படாது. ஆமா, சொல்லிப்புட்டேன். :-))

    ReplyDelete
  13. அழகாய் சொல்லிருகிரீர்கள். உங்கள் சமுதாய நல நோக்கம் அருமை. மேலும் தொடருங்கள்.

    ReplyDelete
  14. @சி.பி.செந்தில்குமார் said...
    //போட்றா முத வெட்டை//

    தல என்னதிது வர வர ரத்தகளறியா போயிட்டு இருக்கு..

    @ மாணவன்

    உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாணவன் சார்...

    @ ரஹீம் கஸாலி

    நன்றி நண்பா

    @ எஸ்.கே

    நன்றி எஸ்.கே சார்

    @ விக்கி உலகம்

    ஹி ஹி தெளிஞ்சுடுச்சு, ச்சீ சீ தெரிஞ்சுடுச்சு..

    @ வேடந்தாங்கல் - கருன்

    நன்றி நண்பா, இதோ வருகிறேன்

    @ நேசமுடன் ஹாசிம்

    நன்றி ஹாசிம் சார், கண்டிப்பாக வருகிறேன்

    @ சமுத்ரா

    நன்றி சமுத்ரா சார்...

    ReplyDelete
  15. @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

    நன்றி ரமேஷ் சார்

    @ # கவிதை வீதி # சௌந்தர்

    நன்றி செளந்தர் சார்

    @ தமிழ் உதயம்

    நன்றி தமிழ் உதயம் சார்

    @ சேட்டைக்காரன்

    ஓகே தல நீங்க சொன்னா சரிதான் :-)

    @ நிலாமதி

    நன்றி நிலாமதி மேடம்

    ReplyDelete
  16. எல்லாமே ரசிக்கும்படி இருந்தது..மிக ரசித்த விஷயங்கள் கவிதையும், தத்துவமும்...

    ReplyDelete
  17. கமர்சியல் பதிவராக முத்திரைப் பதித்து விட்டீர்கள்.. இப்போது திருப்தி தானே..

    ReplyDelete
  18. @ பாரத்... பாரதி..

    நன்றி பாரதி, அது சும்மா விளையாட்டுக்கு சொன்னதுதான், நான் அந்த இலக்கை அடைய நிறைய நாளாகும் :-). இருந்தாலும் கமர்சியல் பதிவர் என்ற வார்த்தையினை இன்னுமா ஞாபகம் வைத்துள்ளீர்கள்?

    ReplyDelete
  19. ஒரு வேளை அன்றாட வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கும் போது இந்த அளவிற்கு நொந்நு போய் நகைச்சுவை தன்னால வந்து விடுமோ சுரேஷ்.

    ReplyDelete
  20. 4 பதிவாப் போட வேண்டியதை இப்படியா ஒரே பதிவாப் போட்டு வேஸ்ட் பண்றது...

    ReplyDelete
  21. கருப்பு எம்ஜியார் விஜயகாந்த்
    விடுங்க அவருக்கு நேரம் நல்ல இருக்கு அரசியல் யாவரிங்கோ அவரு எலக்சனுக்கு எலக்சன் காங்கிரஸ் நல்ல விலை கொடுக்கறதா பேச்சி . அவரு அரசியல் வியபாரிங்கோ

    ReplyDelete
  22. எத்தனயோ விஷயங்களை குறித்த உங்கள் கருத்துக்களை, இந்த பதிவில் தெரிந்து கொள்ள முடியுது.

    ReplyDelete
  23. கலக்கல் கமர்சியல் சுரேஷ்! சியர்ஸ்!

    ReplyDelete
  24. நண்பா ம்ம்ம் கலக்கல்

    அந்த கடேசி பத்தில உள்ள மேட்டருக்கு என்னோட ஆதரவு உண்டு ஹி ஹி

    ReplyDelete
  25. @ ஜோதிஜி

    ஒருவேளை அப்படித்தான் இருக்கும் போல சார்,உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    @ செங்கோவி

    எத்தனை பதிவுங்கறது முக்கியமில்லை நண்பா :-)உங்களின் வருகைதான் முக்கியம்...

    @ bala

    அப்ப இதுநாள்வரை அவர நம்புனவங்களுக்கு சொம்புதான் நண்பா, உங்களின் கருத்துக்கு நன்றி...

    @ Chitra

    நன்றி சித்ரா மேடம்

    @ ! சிவகுமார் !

    நன்றி சிவா சியர்ஸ் :-)

    @ நா.மணிவண்ணன்

    ஹி ஹி என்னோட ஆதரவும் கூட, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

    ReplyDelete
  26. மது நாட்டுக்கு கேடு என்பது இந்தியாவின் மனித வளம் என்பது ஒரு தலைமுறை அளவில் பாதிக்கப்பட வாய்ப்பிரிக்கிறது . வெறும் பொருளாதார லாபம் மட்டும் பார்க்க வேண்டாம்.
    வரும் தலைமுறை திடமின்றி போக கூட வாயிப்பிரிக்கிறது.
    There is a more chance of impotency and weakness among generations which is not good for country infrastructure.In these cases,Rhetorically you don't want condemn tasmac, directly condemn tasmac if you want so.
    That's good for society

    ReplyDelete
  27. @ ♔ம.தி.சுதா♔

    நன்றி சார்

    @ எவனோ ஒருவன்

    முதலில் முதன்முதலான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே, நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றை நான் சீரியசாக கூறவில்லை, வெறும் கிண்டலுக்காக குறிப்பிட்டவை மட்டுமே, அதற்கு மேலே உள்ள கார்டூன்களை பாருங்கள், எத்தனை பேர் ரேசன் கடை கியூ போல டாஸ்மாக்கில் நிற்பதை, உங்களின் வருத்தமேதான் என்னுடைய வருத்தமும்...

    ReplyDelete
  28. அடேங்கப்பா........ எவ்வளவு மேட்டரு கமர்சியல் பக்கத்துல....? சுவராசியமா இருக்குங்க.....!

    ReplyDelete
  29. @ பன்னிக்குட்டி ராம்சாமி

    ரொம்ப நன்றி ராம்சாமி அண்ணே...

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!