Monday, January 10, 2011

கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க ...


ஆரம்பிச்சிட்டாங்கையா அடுத்த புரோகிராம, காலையில டிவி பார்க்கும் போது சேனல் மாத்திட்டே வந்தேன், அப்போ ராஜ் டிவி பார்க்கும் போது ஒரு சூப்பரான பிகரான ஆண்ட்டி ஒன்னு உட்காந்துட்டு இருந்தது, இது யாருடா காலையில, ஒரு வேளை காலை மலரா இருக்குமோ, அப்படி இருந்தாலும் வயலும் வாழ்வும் ரேஞ்சுக்கு உடல்நலம், ஆரோக்கியம்னுதான மொக்கை போடுவானுங்க, அதுவும் வயசான பெருசுங்கதான இருக்கும், இது என்ன புதுசா இருக்குன்னு ஆர்வமா பார்த்தா, 24 மணி நேர ஜோசிய சேவையாம்,


சும்மா சொல்லக்கூடாது, முன்னயெல்லாம் ஜோசியம்னா பட்டையும் கொட்டையும் போட்டுட்டு கெழடு கட்டைங்க குரு பகவான் ஏழாம் இடத்தில் இருப்பதால் உங்களுக்கு சனி பகவான் உட்சத்தில் இருக்கிறார்னு ஆரம்பிப்பாங்க, ஆனா இங்க ஜோசியம் எப்படின்னா ஒரு பிகர புடிச்சிட்டு வந்து கையில்லாத ஒரு பிராக் மாட்டி, லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு ஒரே கவர்ச்சி மயமா உட்கார வெச்சு இருக்குராங்க, பொண்ணு வேற சூப்பரா இருக்குது, சரி பொண்ணு ஜோசியத்துல பெரிய படிப்பு படிச்சிருக்கும் போல எப்படித்தான் ஜோசியம் சொல்லுதுன்னு பார்ப்போம்னு பார்த்தேன், அதுவும் சொல்லுச்சு, உங்களோட எந்த கஷ்டமா இருந்தாலும், எந்த நேரமா இருந்தாலும் உடனே 5664474 இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க எங்க ஜோதிட வல்லுனர்கள் (?) 24 மணி நேரமும் உங்களுக்காக உதவி பண்ண காத்துகிட்டு இருக்காங்க அப்படின்னு தேன் மயக்கும் குரல்ல சொல்லுச்சு (உண்மையிலேயே ஸ்வீட் வாய்சுங்க) என்கிட்டயே பேசனும்னா பிரியா @#$%&  கிட்டயே பேசனும்னா இப்பவே கால் பண்ணுங்க, கால் பண்ணுங்கன்னு சொல்லிகிட்டே இருந்தது, பரிகாரம் எல்லாம் வீட்டுலயே பண்ணலாம், சின்ன சின்ன பரிகாரம்தான்னு சொல்லுச்சு.

ஆகா இந்த டகால்டி வேலைய முன்னமே பார்த்திருக்கோமேன்னு யோசிச்சி பார்த்தா இதுக்கு முன்னாடி சினிமா நடிகர், நடிகையோட கண்ணு காது மூக்கு இதல்லாம் கண்டுபுடின்னு கொலம்பஸ் ரேஞ்சுக்கு போட்டி வச்சு கண்டுபிடிச்சா பத்தாயிரம் இருபதாயிரம்னு சொல்லிகிட்டு இருந்தானுங்க, அதுலயும் பாருங்க, டைமிங் ஓடிட்டு இருக்கும், ஆங்கரும் சும்மா சொன்னதையே சொல்லிகிட்டு இருப்பானுங்க, ஆனா ஒரு பயலும் கூப்பிட மாட்டான், என்னோட தங்கச்சியும் முதல்ல நான் சொன்னத கேட்காம போன் போட்டா பதில சொன்னா இருபதாயிரம் கிடைக்குமேன்ன்னு ஆசை பட்டு கூப்பிட்டா வெயிட்டிங்க போட்டுட்டானுங்க, 40 ரூபா போயிடுச்சு, அப்புறம் பார்த்தா நிமிசத்துக்கு 5 ரூபாயாம், அதிலயும் லைன் கிடைச்சவன், அஜீத்த விஜயங்கறான், விஜயை ...... சரி வேணாம் விடுங்க மாத்தி மாத்தி சொல்லுறானுங்க, எப்படி எல்லாம் ஏமாத்தறானுங்க பாருங்க,


சரி நம்ம கதைக்கு வருவோம், அதே மாதிரி இங்கயும் ஏதாவது இருக்குமேன்னு டிவி புல்லா தேடுறேன், ஒன்னுமே தெரிய மாட்டேங்குது, என்னென்னெமோ எழவெல்லாம் ஓடிட்டு இருந்தது, ஒரு வேளை பிரீ சர்வீசா இருக்குமோன்னு நினைச்சாலும், பீரி எல்லாம் கலைஞர்தான கொடுப்பாரு ராஜ் டிவிகாரங்க எங்க கொடுக்க போறாங்கன்னு ஒரு பத்து நிமிசம் உத்து பார்த்துட்டு இருந்தேன், வந்தது பாருங்க டீடெயிலு நிமிசத்துக்கு 12 ரூபாயாம், அதுவும் வெயிட்டிங்க போட்டாலும் வெயிட் பண்ணனுமாம், அதான பார்த்தேன் டிவிகாரனுங்க என்ன இளிச்சவாயங்களா, நம்ம மக்கள் மட்டும்தான இளிச்சவாயங்க, சரி ஜோசியமாவது கரக்டா சொல்லுதான்னு பார்ப்போம்னு கவனிக்க ஆரம்பிச்சேன்,
கரக்டா அப்ப ஒருத்தன் போன் பண்ணினா, நான் இந்த ஊருல இருந்து பேசறேன்ங்க, என்னோட வியாபாரம் டல்லா இருக்கு, எப்ப என்னோட வியாபாரம் சரியாகும்னு கேட்டாங்க, நம்ம பிரியாவும் இதோ இப்பவே பார்த்து சொல்லுறேன்னு ரம்மி ஆடுவாங்கள்ள அந்த மாதிரி ஒரு சீட்டு கட்டை எடுத்தது, இது என்னடா கோராமை, சீட்டு விளையாண்டா ஜோசியம் தெரியுமான்னு ஒரே ஆச்சரியமா போச்சு, அந்த பொண்ணு அந்த சீட்ட நாலு குலுக்கு குலுக்கி பரப்பி வச்சு, காக்கா ஓட்டுற மாதிரி கைய ஆட்டுச்சு, அப்புறம் அது இஷ்டத்துக்கு நாலு சீட்ட கையில எடுத்தது, அந்த நாலு சீட்டையும் பார்த்துட்டு நாலு மாசத்துல உங்க வியாபாரம் சரியாகிடும் அதுக்கு நீங்க என்ன பண்ணனும்னா கடையில வெள்ளை சந்தன கட்டி கிடைக்கும் அத வாங்கி அது முழுக்க கருப்பு கயிறு கட்டி தலையணைக்கு அடியில வச்சுட்டு படுங்க, வியாபாரம் அமோகமா நடக்கும்னு சொல்லுச்சு, ஆகா இதுவல்லடா ஜோசியம், பிரமாதம், வெள்ளை சந்தன கட்டிக்கு இப்படி ஒரு அற்புத சக்தி இருக்கான்னு எனக்கே அன்னைக்குதான் தெரிஞ்சது,


அப்புறம் ஒருத்தன் மும்பையில இருந்து போன் பண்ணினான், அவங்க வீட்டுல மாமியார், மருமகள் சண்டையாம் குடும்ப அமைதியே போயிடுச்சு, என்ன பண்றது, எப்ப சரியாகும்னு கேட்டாங்க, பயபுள்ள முழுக்க முழுக்க இங்கிலிபீசுலயே பேசுறான், அத புரிஞ்சுக்கறதுக்குள்ள எனக்குதான் பயித்தியம் புடிச்சிருச்சு, அப்படி ஒரு வேகமான இங்கிலீஸ், லண்டன் ரிட்டர்ன் போல இருக்கு, அதுக்கு நம்ம பிரியா மேடம் கொடுத்த ஜோசியம் என்ன தெரியுங்களா, மஞ்சா கலருல ஒரு மெழுகுவர்த்திய வாங்கி வீட்டுல வடக்கு மூலையில கொளுத்தி வச்சா மாமியார் மருமக சண்டை முடிஞ்சுருமாம், குடும்பத்துல நிம்மதி வந்துருமாம், இத நம்ம பிரியா மேடம் முழுக்க முழுக்க தமிழ்லதான் சொன்னாங்க, அங்க அந்தாளு புரிஞ்சுகிட்டானோ என்னவோ, மக்களே டிரை பண்ண நினைக்குறவங்க டிரை பண்ணி பாருங்க, ஆனா கோவத்துல துணிமணி மேல பத்த வச்சு ஒரேயடியா நிம்மதி அடைஞ்சுராதீங்க.


இத விட பெரிய மேட்டர் இன்னைக்கு காலையில நடந்தது, ஒருத்தனுக்கு கல்யாணம் ஆகி நாலு வருசம் ஆயிருச்சாம், குழந்தை பாக்கியமே இல்லையாம், எப்ப குழந்தை பொறக்கும்னு கேட்டான், அதுக்கு நம்ம பிரியா வழக்கம் போல சீட்டை காக்கா ஓட்டு ஓட்டி பரிகாரம் சொல்லுச்சு, என்ன பரிகாரம்னா, பையனுக்கு வாஸ்து பிராப்ளமாம், குழந்தை பொறக்குறதுக்கும் வாஸ்துவுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்காதீங்க, அதனால வாஸ்து பரிகார எந்திரம்னு ஒன்னு பூஜை கடையில கிடைக்குமாம், அத வாங்கி வீட்டோட கதவு மேல வெக்கனுமாம், அப்புறம் மாதுளம் பழம் இருக்குல்ல அத நாலு வாங்கி அந்த தோல மட்டும் வெயில்ல காய வெச்சு கட்டிலோட நாலு மூலையில போட்டு வச்சீங்கன்னா ஒன்பது மாசத்துல குழந்தை பொறந்துருமாம், குறை பிரசவமான்னு கேட்க கூடாது, பிரியா அப்படித்தான் சொன்னாங்க, குழந்தை இல்லாத தம்பதியரே மாதுளம் பழம் வாங்க ரெடியாகிட்டீங்களா, டிரை பண்ணி பாருங்க, குழந்தை பொறக்கலீன்னா என்ன சொல்லாதீங்க, ராஜ் டிவிக்கு போன் போடுங்க.

அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன், அது சீட்டு கட்டு இல்லையாம், சித்திர கார்டாம், அந்த சீட்டு கட்டுல நிறைய பொம்ம படமெல்லாம் வரைஞ்சு வச்சிருக்காங்க, நீங்க போன் பண்ணாலே போதுமாம், உங்க வாய்ச வெச்சு உங்க கஷ்டம் எல்லாத்தையும் அந்த பொம்ம படம் சொல்லிருமாம், முக்கியமா அவங்களுக்கு ஜாதி மதம் பேதம் ஒன்னும் கிடையாதாம், யாரு வேணாலும் போன் பண்ணி கஷ்டத்த தீர்த்துகலாமாம், அப்புறம் பணம் புடுங்கறதுகெல்லாம் ஜாதி மதம் தேவையா என்ன? இப்படி ஒன்னு போனா ஒன்னுன்னு ஆரம்பிக்கிறாய்ங்களோ ஒரு வேளை உட்காந்து யோசிப்பானுங்களோ, இது உண்மையா பொய்யா? யாருக்கு தெரியும்?

ஆகவே மக்களே இதுக்கு யார குறை செல்ல போறீங்க, எப்படி வேணாலும் மக்களை ஏமாத்தலாம்னு நினைக்குறவங்கள தப்பு சொல்றதா? காசு வாங்கிட்டு யார வேணாலும் ஏமாத்திக்கடான்னு ஸ்லாட் கொடுக்குற டிவிகாரனுங்கள தப்பு சொல்றதா? இப்படி எத சொன்னாலும் நம்பற மக்கள் மேல தப்பு சொல்றதா? ஒரே குழப்பமா இருங்குங்க...


பேசாம டயல் பண்ணிடலாமா 5664474.


30 comments:

 1. கடினமாக உழைத்து சம்பாதிக்க ஒரு கூட்டம், அவர்களை ஏமாற்றி சம்பாதிக்க ஒரு கூட்டம் இதுதான் இப்போதைய நிலைமை.

  ReplyDelete
 2. ரைட்டு.... நடத்துங்க...

  ReplyDelete
 3. ஓ... இப்படி எழுதுறதுக்கு பெயர் தான் கமர்சியல் பதிவா?
  சொன்ன மாதிரியே மாறியிட்டீங்க..

  ReplyDelete
 4. திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.....அத சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தூங்கிக்கொண்டே இருக்குது............

  ReplyDelete
 5. நண்பா ஜோசியத்த நம்பலாம் ஆனா (போலி )ஜோசியகாரைங்கள நம்பா முடியாது .

  ReplyDelete
 6. பாருங்க ஒரு பொண்ணு ஜோசிய சொல்ல... ஒரு பதிவே போட்டுட்டீங்க.. :-)

  ReplyDelete
 7. THOPPITHOPPI said... உண்மைதான் நண்பா

  பாரத்... பாரதி... said... கமர்சியல்ல இதுவும் ஒரு பகுதிதான் சார்

  karthikkumar said... ரைட்டு உங்க பதிவு எப்போ?

  விக்கி உலகம் said... கரக்டா சொல்லிட்டீங்க

  நா.மணிவண்ணன் said... அவங்கள எப்படி கண்டுபுடிக்கறதுன்னுதான் கேள்வியே ந்ண்பா

  பதிவுலகில் பாபு said... ஹி ஹி பப்ளிக் பப்ளிக்

  ReplyDelete
 8. ஏமாற நீங்க ரெடின்னா ஏமாற்ற அவங்க ரெடி.

  ReplyDelete
 9. எப்படியெல்லாம் மக்களிடமிருது பணம் புடுங்கலாம்ன்னு ரூம் போட்டு யோசிப்பாணுக போல

  ReplyDelete
 10. சரியான ஏமாற்று வித்தையாக இருக்கிறதே..நிகழ்ச்சிக்கு ‘சித்திரம் பேசுதடி’ன்னு பேர் வைக்கலாம், சித்திரச் சீட்டுக்காகவும், ஆண்டிக்காகவும்.

  ReplyDelete
 11. அட ஆமாம் சகோ...என் கண்ணிலும் அந்த நிகழ்ச்சி பட்டுச்சு...கிளாமர் ஜோசியத்திலும் வந்திருச்சு...:)) எல்லாம் நம்ம தலை எழுத்து..:))

  ReplyDelete
 12. இதுக்கு நம்ம காசுல கேபிள் கனெக்ஷன் வேற.

  ReplyDelete
 13. கேபிள் கனெக்ஷன் இனி வேண்டவே வேண்டாம்பா சாமி .

  ReplyDelete
 14. குழப்பமா இருந்தா அயன் பண்ணிக்கோங்க :-)

  ReplyDelete
 15. ஆகவே மக்களே இதுக்கு யார குறை செல்ல போறீங்க, எப்படி வேணாலும் மக்களை ஏமாத்தலாம்னு நினைக்குறவங்கள தப்பு சொல்றதா? காசு வாங்கிட்டு யார வேணாலும் ஏமாத்திக்கடான்னு ஸ்லாட் கொடுக்குற டிவிகாரனுங்கள தப்பு சொல்றதா? இப்படி எத சொன்னாலும் நம்பற மக்கள் மேல தப்பு சொல்றதா? ஒரே குழப்பமா இருங்குங்க...  ..... ஈஸியா பணம் சம்பாதிக்கவும் ஈஸியாக ஏமாறவும் ...... combination.......... ம்ம்ம்ம்.....

  ReplyDelete
 16. இரண்டு நாட்களாக புத்தக சந்தைக்கு சென்று வந்த களைப்பில் இருந்ததால் நெட்பக்கம் வர முடியவில்லை...

  நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
  http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html

  ReplyDelete
 17. இதுல காமெடி என்னன்னா நான் கஷ்டமர் கேர்ல வேலை செஞ்சப்ப இவனுங்க டிவி சேனலுக்கு கால் பண்ணி பேலன்சை காலியாக்கிட்டு எங்களுக்கு கால் பண்ணி கெட்ட கெட்ட வார்த்தைல திட்டுவாங்க...

  ReplyDelete
 18. தமிழ் உதயம் said... அதுக்கு துணை போக டிவிகாரனுங்களும் ரெடி...

  ரஹீம் கஸாலி said... கண்டிப்பா அப்படித்தான் யோசிப்பானுங்க போல இருக்கு நண்பா

  செங்கோவி said... ஹா ஹா ஹா உண்மைதான் நண்பா

  ஆனந்தி.. said... அட நீங்களும் பார்த்து இருக்கீங்களா, போன் ஒன்னும் பண்ணிடலியே :-)

  கக்கு - மாணிக்கம் said... என்ன பண்ரது சார் :-(

  !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said... கேபிள் கனக்சனை முழுசா ஒதுக்கவும் முடியலியே, என்ன பண்றது சார்?

  எப்பூடி.. said... தல ரணகளத்துலயும், உங்களுக்கு ஜோக்கா :-)

  Chitra said... உண்மைதான் மேடம்

  Philosophy Prabhakaran said... இதோ வரேன் நண்பா, கால் பண்ணி திட்டுறவங்கள திருப்பி திட்ட முடியாதா நண்பா?

  ReplyDelete
 19. இப்படி பட்ட நிகழ்சிகள் பக்கமே பொவதில்லை.

  ReplyDelete
 20. பகிர்வுக்கு நன்றிங்க

  ReplyDelete
 21. // கால் பண்ணி திட்டுறவங்கள திருப்பி திட்ட முடியாதா நண்பா? //

  அப்படி ஏதாவது செஞ்சு மாட்டினா வேலை போயிடுமே... இருந்தாலும் ரொம்ப மோசமா பேசுற வாடிக்கையாளர்களிடம் வேலையெல்லாம் துச்சமாக மதித்து கடித்து குதறியிருக்கிறேன்...

  ReplyDelete
 22. ஸாதிகா said... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்

  அரசன் said... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

  polurdhayanithi said... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

  Philosophy Prabhakaran said... ஹா ஹா குதறிட்டீங்களா :-) நான் கஸ்டமர் கேருக்கே கூப்பிடுறதில்லை, கூப்பிட்டாலும் அவங்களுக்கு முன்னாடியே நான் நன்றி சொல்லி வச்சிடுவேன் :-)

  ReplyDelete
 23. அதையும் பாத்து ஏமாந்து போற மக்கள் உள்ளவரை இவங்க காட்ல அடை மழைதான் நண்பரே...

  ReplyDelete
 24. உங்க கமர்சியல் எக்ஸ்பிரஸ் அடுத்து எப்ப கிளம்பும்?

  ReplyDelete
 25. சிவகுமார் said... உண்மைதான் நண்பா

  பாரத்... பாரதி... said... இன்னும் அஞ்சு நிமிசத்துல சார் :-)

  ReplyDelete
 26. நாம ஏமாறுற வரைக்கும் அவங்களும் ஏமாத்திட்டு தான் இருப்பாங்க பாஸ்.....

  ReplyDelete
 27. Pari T Moorthy said... உண்மைதான் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா

  ReplyDelete
 28. காதுல பூ வைத்தால் காட்டுல மழை.

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!