என்னதான் தமிழக அரசு தை முதல் தேதியை தமிழ்புத்தாண்டாக அறிவித்தாலும், சித்திரை முதல் தேதியைதான் பெரும்பான்மையானவர்கள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள், அந்தவகையில் தமிழ் புத்தாண்டின் என்னுடைய முதல் பதிவினில் நான் படித்த, கடைபிடிக்க நினைக்கின்ற சில நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.
மிக மிக நல்லநாள் – இன்று
மிகப் பெரிய வெகுமதி – மன்னிப்பு
மிகவும் வேண்டியது – பணிவு
மிகவும் வேண்டாதது – வெறுப்பு
மிகப் பெரிய தேவை – சமயோசித புத்தி
மிகப் பெரிய நோய் – பேராசை
மிகவும் கீழ்த்தரமான விசயம் – பொறாமை
நம்பக் கூடாதது – வதந்தி
ஆபத்தை விளைவிப்பது – அதிக பேச்சு
செய்யக்கூடாதது – உபதேசம்
செய்யக்கூடியது – உதவி
விலக்க வேண்டியது – விவாதம்
உயர்வுக்கு வழி – உழைப்பு
நழுவவிடக் கூடாதது – வாய்ப்பு
மறக்கக் கூடாதது - நன்றி
அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள், லேட்டா சொன்னாலும்..!
அப்பாடா எலக்சன் எலக்சன்னு ஒரு மாசமா இருந்த பரபரப்பு தீர்ந்து போய் இப்ப அமைதியா இருக்கு, எப்பவும் இல்லாம இந்த முறை கண்டிப்பாவும், அமைதியாவும் தேர்தல நடத்துன எலக்சன் கமிசனுக்கு மட்டும் ஓட்டு போடற மாதிரி இருந்தா நிறைய பேருக்கு எலக்சன் கமிசனுக்கே ஓட்டு போட்டு இருப்பாங்க, இதே மாதிரி அடுத்து வர உள்ளாட்சி தேர்தலயும் நடத்தனும்கறதுதான் என்னோட ஆசை
இந்த எலக்சன்ல இருந்த ஒரு பெரிய குறை என்ன்ன்னா, 49 ஓ போட நினைச்சவங்க நிறைய பேரு 49 ஓ போட முடியாம போனதுதான், ஏண்ணா பூத்துல இருக்குற பூத் ஏஜெண்டுக எல்லாருமே உள்ளூர்காரங்க, எதாவது சின்னத்துல ஓட்டு போட்டாகூட வெளியில அவங்க வந்து நம்மகிட்ட கேட்டா உங்களுக்குதான் ஓட்டு போட்டோம்னு சமாளிக்கலாம், அதவிட்டுட்டு நாம ஓட்டு போடாம 49 ஓ கொடுங்கன்னா, நம்மளுக்கு அவங்க ’’ஓ’’ போட்டுடுவாங்க, அதனால வேற வழியில்லாம எதாவது கட்சிக்கோ சின்னத்திற்கோ ஓட்டு போட வேண்டிய நிலைமைதான் எல்லாருக்கும், அடுத்த முறையாவது பூத் ஏஜெண்டுகள வெளில உட்கார வெச்சாங்கன்னா இன்னும் நிறைய பேரு 49 ஓ போடுவாங்க, அதனால என்ன பிரயோசனம்னு கேட்குறீங்களா? அதுவும் சரிதான், பேசாம இருக்கவே இருக்கு பல்பு, கோடாலி, பட்டம், சக்கரம், கூடை, மெழுகுவர்த்தின்னு எதுக்காச்சும் போட வேண்டியதுதான், பாவம் அவங்களும் நம்மள நம்பிதான நிக்குறாங்க
பிண்ணனி பாடகி சித்ரா அவங்களோட பொண்ணு நந்தனா நீச்சல் குளத்துல மூழ்கி இறந்து போயிட்டாங்க, பாவம் அவங்க கல்யாணம் ஆகி 15 வருசம் கழிச்சு பிறந்த பிள்ளையாம், அதுவும் இல்லாம அந்த குழந்தை ஆட்டிசம் பிரச்சனையால வேற பாதிக்கப்பட்டு இருந்த பிள்ளையாம், கேட்கவே கஷ்டமா இருக்கு, அந்த குழந்தையோட ஆத்மா சாந்தியடையவும், சித்ரா அவர்களோட மனமும் சீக்கிரம் சாந்தியடையவும் இறைவனை பிரார்த்திப்போம் L
பெத்தவங்களே, சின்னகுழந்தைகளா இருந்தாலும் சரி பெரிய குழந்தைகளா இருந்தாலும் சரி, என்னதான் நல்லா நீச்சல் அடிக்கற குழந்தைகளா இருந்தாலும், நீச்சல் குளமோ, ஆறோ, கடலோ எங்க கூட்டிட்டு போனீங்கனாலும் உங்க குழந்தை மேல ஒரு கண் வச்சுக்கோங்க, ஏன்னா யாருக்கு எப்போ என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது
படிச்சதுல புடிச்சது
சமீப காலத்துல நான் படிச்ச பதிவுகள்ள ரொம்ப புடிச்சது நம்ம ’’மெட்ராஸ்பவன்’’ சிவா எழுதுன நான் முதலமைச்சரானால் அப்படிங்கற பதிவுகள்தான், ரொம்ப அருமையா சிரிப்போட சிந்திக்க வைக்கற மாதிரி எழுதி இருந்தாரு, சிவா ரொம்ப டேலண்ட் ஆன ஆளு, அவருகிட்ட கொஞ்சநேரம் பேசுனாலே நிறைய விசயங்களை தெரிஞ்சுக்க முடியும், எல்லா விசயங்களை பத்தியும் நல்ல தெளிவா புரிஞ்சு வைச்சுருக்காரு, கீழ இருக்குற இரண்டு பதிவுகள படிச்சு பாருங்க, உங்களுக்கும் புடிக்கும்.
நான் முதலமைச்சரானால்
நான் முதலமைச்சரானால் -2
சமீபத்துல மாப்பிள்ளை படம் பார்த்தேன், எவ்வளவு மொக்கை படமா இருந்தாலும் ஏண்டா போனேன்னு அவ்வளவு சீக்கிரம் கவலைபட்டதில்லை, பவர்ஸ்டாரோட லத்திகா படத்தயே முத நாள்ல பார்த்த ஆளு நானு, ஆனா என்னையவே கண்கலங்க வச்ச படம்னா அது இதுதான், சத்தியமா சொல்ரேன், மனசாட்சின்னு ஒன்னு இருந்திருந்தா இந்த படத்த சுராஜும் எடுத்திருக்க மாட்டாரு, தனுசும் நடிச்சிருக்க மாட்டாரு, சன் பிக்சர்ஸ்சுக்கு அந்த மண்ணாங்கட்டியெல்லாம் ஒன்னும் இல்லை,
ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாதுங்க தனுஷ், படத்துல மாமியார பாடா படுத்துற வேசமாம் தனுசுக்கு, ஆனா உண்மையில மாமனாரோட படத்த பாடா படுத்தி இருக்காரு மாப்பிள்ளை தனுஷ், படத்தோட ஒரே ஆறுதல் ஹன்சிகா மெத்துவானி, நல்லா மெத்து மெத்துன்னு இருக்காங்க, படம் பார்க்க நல்லா இல்லைன்னா கூட படிக்கற மாதிரி விமர்சனம் எழுதிறலாம், ஆனா இந்த படத்துக்கு படிக்கற மாதிரி கூட விமர்சனம் எழுத முடியாது, சன் பிக்சர்சோட வெற்றிபட(?) வரிசையில மற்றுமோர் மைல்கல்..!
ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாதுங்க தனுஷ், படத்துல மாமியார பாடா படுத்துற வேசமாம் தனுசுக்கு, ஆனா உண்மையில மாமனாரோட படத்த பாடா படுத்தி இருக்காரு மாப்பிள்ளை தனுஷ், படத்தோட ஒரே ஆறுதல் ஹன்சிகா மெத்துவானி, நல்லா மெத்து மெத்துன்னு இருக்காங்க, படம் பார்க்க நல்லா இல்லைன்னா கூட படிக்கற மாதிரி விமர்சனம் எழுதிறலாம், ஆனா இந்த படத்துக்கு படிக்கற மாதிரி கூட விமர்சனம் எழுத முடியாது, சன் பிக்சர்சோட வெற்றிபட(?) வரிசையில மற்றுமோர் மைல்கல்..!
கீழ இருக்குற வீடியோவ பாருங்க, தலைவரோட பேரு டேமியன் வால்டர்ஸ், நம்ம ஊருல இருக்குற அரசியல் கட்சிகள்ல சேர கூடிய தகுதியான ஆளு இவர்தான், இவரோட சாகசங்கள பார்த்தா நம்ம கட்சிக்காரங்க சும்மா அப்படியே கொத்திட்டு போயிடுவாங்க, மஸ்ட் வாட்ச்
இன்னைக்கு மேட்டர் அவ்வளவுதான்...
அன்புடன்
இரவுவானம்
அன்புடன்
இரவுவானம்
பெத்தவங்களே, சின்னகுழந்தைகளா இருந்தாலும் சரி பெரிய குழந்தைகளா இருந்தாலும் சரி, என்னதான் நல்லா நீச்சல் அடிக்கற குழந்தைகளா இருந்தாலும், நீச்சல் குளமோ, ஆறோ, கடலோ எங்க கூட்டிட்டு போனீங்கனாலும் உங்க குழந்தை மேல ஒரு கண் வச்சுக்கோங்க, ஏன்னா யாருக்கு எப்போ என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது
ReplyDelete....True.
புத்தாண்டை வாழை மாவிலைத் தோரணத்தோடு
ReplyDeleteவரவேற்றதும்
நல்ல எப்போதும் பயன்படக்கூடிய கருத்துக்களைத்
தந்ததும் அருமை
நல்ல பதிவு
புத்தாண்டிலும் தொடர வாழ்த்துக்கள்
இரவு வானம் குளுமையாக ஜில்லுனுத்தான் இருக்கு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇவ்வளவு விஷயங்கள் ஒரே இடத்தில்
ReplyDeleteஅருமை....
//எலக்சன் கமிசனுக்கே ஓட்டு போட்டு இருப்பாங்க//
ReplyDeleteகமிசன் வாங்காம ஓட்டு போட்டா சரி.....
//பல்பு, கோடாலி, பட்டம், சக்கரம், கூடை, மெழுகுவர்த்தின்னு எதுக்காச்சும் போட வேண்டியதுதான், பாவம் அவங்களும் நம்மள நம்பிதான நிக்குறாங்க//
அவங்கள நம்பி யாரும் இல்லையே...
....................
13 வருடம் குழந்தை இல்லாமல் இருந்த சித்ராவிற்கு பிறந்த நந்தனாவின் திடீர் மறைவு..ஆற்றொண்ணா சோகம்...
....................................
//சமீபத்துல மாப்பிள்ளை படம் பார்த்தேன்//
நீங்க லத்திகா.. நான் பொன்னர் சங்கர்....அதுக்கு போட்டியா நீங்க மாப்பிள்ளை... அமோகம். அமோகம். இப்படி ஒரு போட்டியை யாரும் பாத்து இருக்க மாட்டாங்க..
...................
மெட்ராஸ்பவன் சிவா அப்டின்னு ஒரு சுண்டக்கா பயலை பத்தி எழுதி இருக்கீங்க. அவன் என்னத்தை கிழிச்சி இருக்கான்னு படிச்சிட்டு வர்றேன்...
சூப்பரா இருக்கு பொன்மொழிகள்....
ReplyDelete@ Chitra
ReplyDeleteநன்றி சித்ரா மேடம்
@ Ramani
ReplyDeleteநன்றி ரமணி சார்
@ கக்கு - மாணிக்கம்
ReplyDeleteநன்றி மாணிக்கம் சார்
@ # கவிதை வீதி # சௌந்தர்
ReplyDeleteநன்றி செளந்தர் சார்
@ ! சிவகுமார் !
ReplyDeleteவாங்க சிவா, பெரிய பின்னூட்டம் மிகவும் நன்றி, சரி நான் மாப்பிள்ளை பார்த்தாச்சு, அடுத்து நீங்க எந்த படம் பார்க்க போறீங்க???
@ MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteநன்றி மனோ சார்
சித்ராவின் குழந்தை இறந்த செய்திதான் வருத்தமாக உள்ளது.விக்ரம் நடித்த சாமி படத்தில் ‘இதுதானா ,இதுதானா’என்ற பாடலை தான் ஒன்பது மாத கற்பினியாக இருக்கும்போது பாடியது,மூச்சு இழுத்து பாட சற்று சிரமமாக இருந்தாலும் நல்லபடியாக பாடி முடித்தேன், அந்த பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்துளள்தென்று எப்பொதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் சித்ரா ஒரு டீ.வீ சேனலில் சந்தோசமாக சொன்னது நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteசரி சரி சீக்கிரம் மாப்பிள்ளை விமர்சனம் போடுங்க ....:))
ReplyDeleteஎனக்கு எப்பவுமே ஏப்ரல் 14தான் புத்தாண்டு. நீங்க சொல்வது சரிதான். 49 ஓ போடுவதற்கு இது இடஞ்சல்தான்.
ReplyDeleteசித்ராவுக்கு அனுதாபங்கள். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவருக்கு இப்படி ஒரு சோதனை.
மாப்பிள்ளை சேம் பிளட்.
@ thirumathi bs sridhar
ReplyDeleteநன்றி ஆச்சி மேடம், உங்களிம் தகவல் எனக்கு புதியதாகவும் அதே சமயம் வருத்தமாகவும் உள்ளது
@ karthikkumar
ReplyDeleteயோவ் அதுதான் விமர்சனம் போட்டாச்சுல்ல, இதுவே பெரிசு அந்த படத்துக்கு...
@ பாலா
ReplyDeleteவிரிவான பின்னூட்டத்திற்கு நன்றி பாலா
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநிறைய விஷயங்கள் பகிர்ந்து கொண்டதற்குப் பாராட்டுக்கள்.
பாடகி சின்னக்குயில் சித்ராவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். தவிர்த்திருக்க முடியும் விபத்து மற்றவர்களுக்குப் பாடமாகட்டும்.
புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteஅந்த 49 ஓ விஷயத்தில் நீங்க சொன்னது உண்மை சுரேஷ்..இதுவும் சங்கடமான ஒரு விஷயம் தான்...ஆனால் கட்சி agent polling ஏரியா வில் இருந்து தள்ளி இருக்க சில கட்டுபாடுகளை போட்டதாக தேர்தல் கமிஷன் சொல்லுச்சே...எல்லாரும் ஒரே மாதிரி உள்ள உட்கார்ந்திருக்காங்க..ஒன்னும் பிரிய மாட்டேங்கு..:)) ஆனால் இந்த வாட்டி தமிழ்நாட்டில் 27000 மக்கள் 49 ஓ போட்டு இருக்காங்களாம்...
ReplyDeleteஐயோ...மாப்ளை அவளவு மோசமா...நீங்க சொன்ன சிவா போஸ்ட் படிக்கிறேன் கட்டாயமா...
@ இராஜராஜேஸ்வரி
ReplyDeleteஉங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி மேடம்
@ செங்கோவி
ReplyDeleteநன்றி நண்பா, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@ ஆனந்தி..
ReplyDeleteஉண்மைதான் ஆனந்தி மேடம், அடுத்த எலக்சனிலாவது தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா என பார்ப்போம், சிவாவின் பதிவை கட்டாயம் படியுங்கள், நன்றி