இதோ நேற்றுடன் பிரச்சாரம் முடிந்து நாளை ஓட்டுபதிவு நடக்க இருக்கிறது, யார் வரப்போகிறார்கள் என்றும் தெரியாது, வருபவர்கள் நல்லாட்சி தருவார்களா என்றும் தெரியாது, இருந்தாலும் நான் முன்னமே கூறியபடி உங்கள் தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரை, தகுதியான வேட்பாளரை, சுயேட்சையாக இருந்தாலும் ஜாதி மதம் இனம் கட்சி பாகுபாடு பார்க்காமல் தேர்ந்தெடுங்கள் என கேட்டுக் கொள்கிறேன், ஆனால் ஒரு கட்சிக்கு மட்டும் தயவுசெய்து ஓட்டு போட வேண்டாம், அது ஏன் என கூறுவதற்கு முன்னால் கீழே உள்ள லிங்கினை ஒருமுறை கிளிக்கி பார்த்துவிட்டு வாருங்கள்
பார்த்துவிட்டீர்களா, நான் ஏதோ காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மட்டும் கொடி பிடிப்பதாக நினைக்க வேண்டாம், ஒரு குறைந்தபட்ச மனிதாபிமானத்தைதான் எதிர்பார்க்கிறேன், கடுமையான போர் சூழலில் நமக்கு கிடைத்த புகைப்படங்களே இவ்வளவு கோரமானதாக இருந்தால், உண்மையிலேயே ஈழத்தில் நடந்த போர் கொடுமைகள் எவ்வளவு கோரமானதாக இருந்திருக்கும் என எண்ணி பாருங்கள்
நம் ஊரில் சாதாரண ஆக்சிடெண்ட் நடந்தாலே ஐயோ பாவம் என்று எத்தனை பேர் பரிதாபபடுகிறோம், ஒரு குழந்தை கீழே விழுந்தாலே வீல் என தம்மையும் அறியாமல் கத்தி பயப்படுகிறவர்கள் எத்தனை பேர், அவ்வளவு ஏன் இரத்தத்தை பார்த்தாலே மயக்கம் வரும் அளவிற்கு மனதில் வலிமையில்லாதவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறோம்
ஆனால் அங்கு பாருங்கள் ரத்தமும் சதையும் குடல்கள், கை கால்கள் என தனியே பிரிந்து எவ்வளவு கொடுமையான சாவுகள், நம்முடைய எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது, ஆனால் இந்த நிலை வந்தது யாருக்கு? நம்முடைய தொப்புள் கொடி உறவான தமிழ் மக்களுக்கு, தமிழ் மக்கள் ஏன் எந்த மக்களாக இருந்தாலும் என்ன ஐயோ பாவம் என நமது மனது துடிக்காதா? யாருக்கு தீங்கு என்றாலும் முதல் ஆளாக நிற்பது நாம், நமக்கு தீங்கு விளைவிப்பவர்களுக்கு இது தவறு என்று உறைக்க வைக்க வேண்டாமா?
எப்படி உறைக்க வைப்பது? குறைந்தபட்சம் இந்த தேர்தலில் காங்கிரஸை தோற்கடிப்பதன் மூலம்தான் கொஞ்சமாவது மத்திய அரசை உணர வைக்க முடியும்,எத்தனையோ ஆயிரம் பேர்கள் அனாமத்தாக சாகும் போது குறைந்தபட்சம் ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காதவர்களுக்கு நாம் கண்டனம் தெரிவிக்க வேண்டாமா? நான் யாருக்கும் ஆதரவாக ஓட்டு போடுங்கள் என கேட்கவில்லை, குறைந்தபட்சம் காங்கிரசுக்கு ஒட்டு போடாமலாவது இருங்கள் என கெஞ்சி கேட்கிறேன், நம்மால் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக ஆயுதம் ஏந்த முடியாமல் இருக்கலாம், மத்திய அரசை எதிர்த்து போராட முடியாமல் இருக்கலாம், ஆனால் இப்பொழுது ஓட்டு எனும் ஆயுதம் நமக்கு கிடைத்து இருக்கிறது, அதனை சரியான முறையில் பயன்படுத்தி காங்கிரஸை தண்டியுங்கள்
ஈழ ஆதரவாளர்களே இல்லை எதிர்ப்பாளர்களே நீங்கள் யாராக இருந்தாலும் சரி ஒரு குழந்தையையோ, மனிதனையோ, மக்களையோ மிக கொடுமையாக கொன்று குவிப்பதற்கு யாரும் சப்போர்ட் செய்ய மாட்டீர்கள் என நினைக்கிறேன், இந்த ஒருமுறையாவது காங்கிரசை தோற்கடியுங்கள், இந்த ஒருமுறை தோற்பதால் அவர்கள் ஒன்றும் நடுத்தெருவுக்கு வந்துவிட மாட்டார்கள், அவர்கள் ஒன்றும் சோற்றுக்கு சிங்கி அடிக்க மாட்டார்கள், அவர்கள் குடும்பம் ஒன்றும் பிச்சை எடுக்க போய்விடாது, அதனால் தைரியமாக காங்கிரசுக்கு எதிராக வாக்களியுங்கள்
இன்னும் சொல்லப்போனால் சுயேட்சைகளுக்கு மட்டுமே வாக்களியுங்கள், 234 தொகுதிகளிலும் சுயேட்சைகளுக்கு மட்டுமே வாக்களித்து ஜெயிக்க வையுங்கள், அனைத்து தொகுதிகளிலும் சுயேட்சைகளே வெல்வதின் மூலம்தான் கழக கட்சிகளுக்கும் தேசிய கட்சிகளுக்கும் முடிவு கட்ட முடியும், பாடம் புகட்ட முடியும், அது போன்ற நிலை ஒன்று உருவாகும் வரை நல்லாட்சி என்பதும் மக்களாட்சி என்பதும் வெறும் கனவாகத்தான் இருக்கும்.
எனவே தோற்கடிப்போம் காங்கிரசை, ஆதரிப்போம் சுயேட்சைகளை..!
இதன் தொடர்புடைய நண்பர் செங்கோவியின் பதிவின் லிங்க்இங்கு கிளிக்கி படிக்கவும்..!
இதன் தொடர்புடைய நண்பர் செங்கோவியின் பதிவின் லிங்க்இங்கு கிளிக்கி படிக்கவும்..!
It didnt happen in 2009 parliment election itself.. where it was an election to bring congress to power in the center..
ReplyDeletenow it is only a asssembly election..
இன்ட்லி'ல இணைப்பு குடுங்க மக்கா..
ReplyDeleteகாங்கிரஸை வேரோடும் வேரடி மண்ணோடும் புடுங்குவோம்.
ReplyDeleteஉணர்வுள்ள இடுகை...
ReplyDeleteசொல்வதற்கு ஒன்றும் இல்லை.எங்கள் ஊரில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டி இடுகிறார். தேர்தலில் காட்டலாம் நம் பதிலை.
ReplyDelete@ ராஜேஷ், திருச்சி
ReplyDeleteபார்லிமெண்ட் எலக்சனில்தான் விட்டுவிட்டோம், அது ஒட்டுமொத்த இந்தியாவிற்கான தேர்தல், ஆனால் இது நம் மாநிலத்தின் தேர்தல், ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றுதானே ராகுல் பார்முலா போட்டு கொண்டிருக்கிறார், இப்பொழுது தமிழகத்திலும் கூட்டணி ஆட்சிக்காக காய் நகர்த்தி கொண்டிருக்கிறார், இந்த தேர்தலில் காங்கிரசை தோற்கடிப்பதன் மூலம்தான் தமிழக மக்களின் இன உணர்வினை தெரிவிக்கமுடியும், ஏன் தமிழகத்தில் தோல்வி என அவர்கள் சிந்தித்து பார்க்கும் போது ஈழவிவகாரம் கண்ணில் தெரிய வேண்டும், அதற்காகத்தான் இந்த கோரிக்கை, அதுவுமில்லாமல் தேர்தலில் நிற்பவர்கள் யாரும் பரம் ஏழையில்லை, எல்லாரும் வசதியானவர்களே...
@ MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteஆதரவிற்கு நன்றி மனோ...
@ கே.ஆர்.பி.செந்தில்
ReplyDeleteநன்றி செந்தில் சார்...
@ பாலா
ReplyDeleteநன்றி பாலா, கண்டிப்பாக காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம்..
கடமையை சரியாக செய்வோம்
ReplyDeleteகாங்கிரசுக்கு எதிராக வாக்களிக்கலாம் என்கிறார்கள்.. அது எந்த விதத்தில் உதவும் ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சி கட்டிலில் ஏற்றுவது தவிர?
ReplyDeleteஜெயலலிதா காங்கிரசுக்கு தூது விட்டவர் தானே? அவர் காங்கிரசுடன் போய் இன்று காங்கிரசை எதிர்த்து வாக்களித்தவர்கள் முகத்தில் கரி பூசமாட்டார் என்று என்ன நிச்சயம்?
சட்டமன்ற தேர்தலில் தோற்பதால் காங்கிரசுக்கு என்ன இழப்பு?
ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக உணர்ச்சிவயப்பட்ட முடிவெடுத்து , அது தமிழக தமிழர்களுக்கு எதிராக போகவேண்டுமா?
தேர்தல் தமிழத்துக்கு - தமிழகது தமிழர் , இலங்கை தமிழர் என்று இரண்டையும் எடை போட்டுதானே வாக்களிக்க வேண்டும்?
ஜெ வின் மீது பெங்களுரு வில் இருக்கும் வழக்கில் அவருக்கு எதிராக திறப்பு வரபோகிறது.. அப்படிப்பட்டவர் மிண்டும் வர வேண்டுமா?
யோசியுங்கள்.. மூட்டை பூசிக்கு பயந்து வீட்டை கொளுத்த வேண்டுமா?
அருமையான பதிவு நண்பா. நாம் வேண்டுவது குறைந்த பட்ச மனிதாபிமானத்தையே..தோற்கடியுங்கள் கொலைகாரர்களை!
ReplyDeleteநான் ஓட்டு போட்டாச்சு? நீங்க?
ReplyDeletepresent
ReplyDelete