Monday, April 18, 2011

கலைஞரின் - பொன்னர் சங்கர்லேட்டஸ்டா கலைஞரின் கதை வசனத்தில் வந்திருக்குற படம், ஏற்கனவே வந்த பெண்சிங்கம், இளைஞன் படத்த பத்தியெல்லாம் கேள்விபட்டு டரியலாகிப்போன எனக்கு பொன்னர் சிங்கம் பார்க்கலாம்னு தோணுனதுக்கு மொத காரணம் அண்ணன்மார் கதைதான், அது ஏன்னு கடைசியில சொல்றேன்

பெரியமலை கவுண்டர் விஜயகுமாரோட பொண்ணு தாமரை நாச்சியார் குஷ்பு சின்ன வயசுல இருந்தே மாமன் மகனான நெல்லியன் கோடான் ஜெயராமை விரும்பராரு, ஆனா நம்ம நாட்டாமை குஷ்புவ மந்தியப்பன் பிரகாஷ்ராஜுக்கு கல்யாணம் பண்ணி வைக்க டிரை பண்றாரு, கல்யானத்துக்கு முந்துன நாள் குஷ்பு மாமன் மகனோட கல்யாணம் பண்ணி வைக்கலைன்னா செத்து போயிருவேன்னு சொல்றாங்க

அதனால வேற வழி இல்லாம பிரகாஷ்ராஜ கழட்டிவிட்டுட்டு ஜெயராமுக்கே கல்யாணம் பண்ணி வைக்கறாரு விஜயகுமார், இதனால மானம் போச்சேன்னு கடுப்பான குஷ்புவோட அண்ணன் சின்னமலை கவுண்டர் பொன்வண்ணன் குஷ்புவயும் ஜெயராமையும் வீட்ட விட்டு தொறத்தி விட்டுடுறாரு

போறதுக்கு முன்னாடி, நாங்க பணக்காரங்களாகி எனக்கு பொறக்கற இரண்டு சிங்க(?) குட்டிகளுக்கும்  உன்னோட பொண்ண கட்டி வைக்கிறேன்னு குஷ்பு ஒரு சவால் விடறாரு, குஷ்புவுக்கு குழந்தை பொறந்துச்சா? ஏமாந்து போன மந்தியப்பன் என்ன பண்ணாரு, குஷ்புவோடசத்தியம் நிறைவேறிச்சாங்கறதுதான் இந்த பொன்னர் சங்கர் கதை

பிரஷாந்த் டபுள் ஆக்ட் குடுத்திருக்காரு, எருமைமாடு மாதிரி செம பாடியா இருக்குர அவருக்கு பூ மாதிரி இருக்குற இரண்டு பொண்ணுங்கள கதாநாயகியா போட்டது சரியில்ல, சண்டை காட்சிகள்ள நல்லா ரிஸ்க் எடுத்து பண்ணிருக்காரு பிரசாந்த், வாள் சண்டை, குதிரை ஏற்றம், பல்டி அடிக்கறதுன்னு கலக்குறாரு, கலைஞரோட வசனம்னு சொன்னாங்க, ரெண்டு பிரசாந்தும் சேர்ந்து மொத்தமாவே இருபது டயலாக் பேசி இருந்தாலே அதிகம், அட போருக்கு போறதுக்கு முன்னாடி பொண்டாட்டிய பார்க்க போறாங்க, போயிட்டு வரேன்னு கூட சொல்ல மாட்டேங்குறாங்க,

படத்தோட மியூசிக் இசைஞானி, சரித்திர கதைக்கு பின்னி எடுப்பாருன்னு நினைச்சேன், ஆனா அது டைட்டில்ல பொன்னர் சங்கருக்கு மேல கலைஞர்னு போடும் போது திடும்முன்னு மியூசிக் கொடுக்கறதோட நின்னு போச்சு, இவங்க படத்துக்கு இது போதும்னு நினைச்சுட்டாரு போல, சந்தேகம் இருக்குறவங்க டிவில டிரைலர் போடும் போது பார்த்துக்கோங்க, ஆனா ரெண்டு பாட்டு பரவாயில்லை, கேட்க கேட்க ஹிட்டாயிடும்


தலையூர் காளியா நெப்போலியன், இயல்பாவே அவருக்கு ராசா வேசம் நல்லாவே பொருந்தும், கேரக்டருக்கு தகுந்த மாதிரி நல்லாவே பண்ணி இருக்காரு, நாசருக்கு மகாபாரதம் கிருஷ்ண பரமாத்மா மாதிரி வேடம், பாதி கதைய அவருதான் மத்தவங்க கிட்ட அதென்ன ஆச்சு, இதென்ன ஆச்சுன்னு வாய கிளறி சொல்ல வைக்குறாரு, அவரு மூலமாதான் கதையே புரியுது,

ராஜ்கிரண் ராக்கி அண்ணனா வராரு, இரண்டு பிரசாந்துக்கும் ஆசான் அவருதான், ஆனா இன்னும் நெஞ்ச நிமித்தி, கண்ண சிவக்க வச்சு, மீசைய துடிக்க வச்சு சோலையம்மா செத்து போச்சேங்கற மாதிரி பீல் பண்றத்தான் தாங்க முடியல, இன்னும் எத்தனை படத்துக்கு இதே ஆக்ட கொடுக்க போறாரோ, நல்ல வேளை தக்காளி என் சபதத்த நிறைவேத்தாம பர்ஸ்ட் நைட்டுக்கு போனீங்க, தக்காளி கொன்னுபுடுவேன்னு டயலாக் பேசாம விட்ட வரைக்கும் சந்தோசம், ஆனா அதுக்கு பதிலா சங்கரை ஷங்கர் ஷங்கர்னு கூப்புட்டு கொல்லறாரு

படத்தோட செட்டெல்லாம் சூப்பரு, கிராபிக்ஸ் காட்சிகெல்லாம் பிரமாதமா இருக்கு, பழக்க தோசத்துல மானாட மயிலாட செட்டா இருக்குமோன்னு சந்தேகபட்டுட்டேன், அப்படியெல்லாம் இல்லை போலருக்கு, ஒரே பாட்டுக்கு பானு ஆடறாங்க, சினேகாவும் இருக்காங்க, ஒரிஜினல் கதைல சினேகா கேரெக்டர்தான் வெயிட்டு, படத்துல ஓரமா நின்னு பல்லை காட்டறதோட சரின்னு விட்டுட்டாங்க, இன்னும் நிறைய நடிகர்கள் நடிச்சிருக்காங்க, சமீப காலத்துல வந்ததுலயே நிறைய துணை நடிகர்கள் நடிச்சிருக்கறது இந்த படத்துலயாத்தான் இருக்கும்

படம் இடைவேளை வரை போறதே தெரியலை, அவ்வளவு விருவிருப்பா இருந்தது, ஒரு மணி நேரத்துலேயே இண்டர்வெல் விட்டுட்டாங்கறது வேற விசயம், அப்புறம் கொஞ்சம் ஸ்லோதான், இடைவேளைக்கு அப்புறம் படத்த மட்டுமில்ல உட்கார்ந்து இருக்குற ரசிகர்களையும் தூக்கி நிறுத்தறது கதாநாயகிகள்தான், இரண்டு பேரும் வெள்ளை பளிங்குகல்லுல செதுக்குன சிலை மாதிரி இருக்காங்க, ஏற்கனவே எல்லாரும் ஜொள்ளுவிட்டுட்டதால நான் இத்தோட நிறுத்திக்கிறேன்


மொத்த்துல கலைஞரோட கதை திரைக்கதை வசனத்துல காண்டாகாம ’’பார்க்குற’’ மாதிரி இருக்கு பொன்னர் சங்கர்

இனி என்னோட கதை, சின்ன வயசுல இருந்தே எங்க ஊருல வருசா வருசம் அண்ணன்மார்கதை மாரியம்மன் கோவில் பக்கத்துல தெருக்கூத்து மாதிரி நடத்துவாங்க, இரண்டு பேர் ராஜா வேசம் போட்டுட்டு அண்ணன் தம்பியாகவும் ஒருத்தர் பெண் வேசம் போட்டுட்டு பச்சை அம்மனாவும் அதாவது அருக்காணியாவும் நடிப்பாங்க, ஜல் ஜல்லுன்னு சலங்கை கட்டிகிட்டு அவங்க பாடிகிட்டும் ஆடிகிட்டும் கதை சொல்லும் போது சின்ன பையனா இருந்த வரைக்கும் நல்லாத்தான் இருந்துச்சு, காலம் மாறிப்போச்சோ இல்லை நான் மாறிட்டனோ கடந்த ஆறேழு வருசமா அண்ணன்மார் கதை பார்க்க போனதே இல்லை,

ஒவ்வொரு வருசமும் ஜனவரி மாசம் ஆனா போதும், எங்க ஊரு கோட்டா ஆரம்பமாகிரும், இந்த வருசமும் ஜனவரில நடத்துனாங்க, டெய்லியும் நைட்டு ஏழெட்டு மணிக்கு ஆரம்பிச்சு பதினொன்னு பண்ணெண்டு மணி வரைக்கும் போகும், இப்படியே 18 நாள் கதை சொல்லுவாங்க, அப்புறம் அடுத்த ஊருக்கு போயிருவாங்க, ஒருநாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து மணி நேரம் கதை சொன்னாலே 18 நாள் ஆகற அண்ணன்மார் கதைய இரண்டரை மணி நேர கதையா எப்படி படம் எடுத்துருக்காங்கன்னு பார்க்குறதுக்காக இந்த படத்துக்கு போனேன்

ஒரிஜினல் கதைல மூணு தலைக்கட்டா கதை சொல்லுவாங்க, பெரியமலை கவுண்டரோட முன்னோர்கள் கதை, தலையூர் காளியோட கதை, அருக்காணி பச்சை அம்மனா எப்படி மாறுனாங்க அப்படிங்கற கதை, பொன்னர் சங்கர் கதை, அதே மாதிரி அண்ணன்மார்கள் இரண்டு பேரும் போருல இறந்து போயிருவாங்க அந்த கதை இப்படி நிறைய விசயங்கள் இருக்குதே எப்படி சினிமாவா எடுத்தாங்கன்னுதான் பார்க்க போனேன், ஆனா ஒரிஜினல் கதைய சினிமாவுக்கு தகுந்த மாதிரி கண்டபடி மாத்தி இருக்காங்க, இரண்டரை மணி நேரத்துல விறுவிறுப்பா கொடுக்கனும்னா என்ன பண்ணனுன்னு யோசிச்சு அதற்கு தகுந்த மாதிரி கதையவே மாத்தி இருக்காரு டைரக்டர் தியாகராஜன்,

எது எப்படியோ கலைஞர் கதை எழுதறதுக்கு வர காச முதலமைச்சர் நிவாரண நிதியிலயோ இல்ல வேற எதாவது பயன்பாட்டுகோ கொடுத்து ஹெல்ப் பண்ணுவாரு, அதே மாதிரி இந்த பட்த்துக்கு வந்த காசயும் ஊர் ஊரா அண்ணன்மார்கதைய தெருக்கூத்தா நட்த்துறவங்களுக்கு கொடுத்தாருன்னா பிரயோஜனமா இருக்கும்,

ஏன்னா அவங்களுக்கு இந்த தெருக்கூத்து நடத்துறதுக்கு யாரும் காசு தரதில்ல, வாய் வலிக்க கத்திகிட்டு அஞ்சு மணி நேரம் ஆடுவாங்க, அப்ப  ஊர் பெரிய மனுசங்க அஞ்சோ பத்தோ இருபதோ கொடுப்பாங்க, அதுவும் எதுக்கு? அவங்க பேர சொல்லி இந்த பெரிய மனுசன் இவ்வளவு கொடுத்தாருன்னு சொல்லி அதுக்கொரு ஆட்டம் போடுவாங்க, எல்லாம் ஒரு விளம்பரத்துக்குதான், இப்படி 18 நாள் ஆடுனாங்கன்னா அதிகபட்சம் என்ன வசூலாக போகுது? சில நாட்கள்ல ஒருத்தனும் ஒன்னும் கொடுக்க மாட்டான்,

இப்படி காலம் காலமா காலத்தால அழியாத காவியங்கள தெருக்கூத்தாவும், பொம்மலாட்டமாவும், தோல்பாவை கூத்தாகவும், வில்லுபாட்டாகவும், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மரக்குதிரை ஆட்டம், இப்படி பலவகையில நாட்டுபுற கலைகள் மூலமா நம்ம தமிழ்நாட்டோட கலாசாரத்தை இன்னும் கட்டி காத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு போறவங்களுக்கு நலவாரியம் அமைக்காட்டாலும் குறைந்த பட்சம் ஒரு டிரஸ்டாவது அமைச்சு கொடுத்து நல்லது செய்யனும்னு கேட்டுகறேங்க..!  

27 comments:

 1. இம்புட்டு பொறுமையா படத்தை பார்த்ததுக்கு ஒரு ஷொட்டு...

  ReplyDelete
 2. படமும் செம ஹிட்டு [[ப்பூப்ப்]]

  ReplyDelete
 3. யார்லேய் அது விமர்சனம் படிக்காம அப்பிடி ஓடுறது....

  ReplyDelete
 4. இப்படி காலம் காலமா காலத்தால அழியாத காவியங்கள தெருக்கூத்தாவும், பொம்மலாட்டமாவும், தோல்பாவை கூத்தாகவும், வில்லுபாட்டாகவும், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மரக்குதிரை ஆட்டம், இப்படி பலவகையில நாட்டுபுற கலைகள் மூலமா நம்ம தமிழ்நாட்டோட கலாசாரத்தை இன்னும் கட்டி காத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு போறவங்களுக்கு நலவாரியம் அமைக்காட்டாலும் குறைந்த பட்சம் ஒரு டிரஸ்டாவது அமைச்சு கொடுத்து நல்லது செய்யனும்னு கேட்டுகறேங்க..!


  .....நல்ல திட்டமாக இருக்குதே...ஆனால், அந்த திட்டம் அமுல் படுத்தினாள் வோட்டு நிறைய கிடைக்குமா என்று யோசிக்கிறாங்களோ என்னவோ? :-(

  ReplyDelete
 5. அசத்தல் விமர்சனம்...
  நான் இன்னும் படம் பார்க்கல...

  ReplyDelete
 6. எனது முதலிரவு அனுபவங்கள்...

  http://kavithaiveedhi.blogspot.com/2011/04/blog-post_18.html

  ReplyDelete
 7. //இப்படி காலம் காலமா காலத்தால அழியாத காவியங்கள தெருக்கூத்தாவும், பொம்மலாட்டமாவும், தோல்பாவை கூத்தாகவும், வில்லுபாட்டாகவும், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மரக்குதிரை ஆட்டம், இப்படி பலவகையில நாட்டுபுற கலைகள் மூலமா நம்ம தமிழ்நாட்டோட கலாசாரத்தை இன்னும் கட்டி காத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு போறவங்களுக்கு நலவாரியம் அமைக்காட்டாலும் குறைந்த பட்சம் ஒரு டிரஸ்டாவது அமைச்சு கொடுத்து நல்லது செய்யனும்னு கேட்டுகறேங்க..! //

  விஜய் டீவீ யில் நேற்று நீயா,நானா நிகழ்சியில் கூத்துக் கலைகள் பற்றிதான் விவாதம் நடந்தது.அந்த கலைஞர்கள் சிலர் தமது கலை அழிந்துவிடக் கூடாதுனு இந்த காலத்திலும் செய்து வருவதால் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.

  ReplyDelete
 8. நல்ல பதிவு.
  அருமையான யோசனை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. @ MANO நாஞ்சில் மனோ

  கலைஞரின் வடையா? புதுசு புதுசா வார்த்தைய கண்டுபுடிக்கறீங்க மனோ சார், கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 10. @ Chitra

  ஓட்டு பெரிதா மேடம்? மனிதரின் வாழ்வாதாரங்கள்தானே முக்கியம், இங்கு எல்லாவற்றிக்கும் ஓட்டுகண் கொண்டு பார்த்தே எல்லாவற்றையும் கெடுத்து வைத்து விட்டார்கள், கருத்துக்கு நன்றி மேடம்

  ReplyDelete
 11. @ # கவிதை வீதி # சௌந்தர்

  ஒருமுறை பார்க்கலாம், தவறில்லை, முடிந்தால் பாருங்கள் செளந்தர், கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 12. @ thirumathi bs sridhar

  உண்மைதான் ஆச்சி மேடம், அதைபற்றி எழுத வேண்டும் என்றால் தனிப்பதிவாகதான் போட வேண்டும் , பார்ப்போம், கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 13. @ Rathnavel

  தங்கள் கருத்துக்கு நன்றி ரத்னவேல் சார்

  ReplyDelete
 14. //ஆனா இன்னும் நெஞ்ச நிமித்தி, கண்ண சிவக்க வச்சு, மீசைய துடிக்க வச்சு சோலையம்மா செத்து போச்சேங்கற மாதிரி பீல் பண்றத்தான் தாங்க முடியல//

  இது தாங்க சூப்பரான விமர்சன வரிகள்..

  ReplyDelete
 15. //நாட்டுபுற கலைகள் மூலமா நம்ம தமிழ்நாட்டோட கலாசாரத்தை இன்னும் கட்டி காத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு போறவங்களுக்கு நலவாரியம் அமைக்காட்டாலும் குறைந்த பட்சம் ஒரு டிரஸ்டாவது அமைச்சு கொடுத்து நல்லது செய்யனும்னு கேட்டுகறேங்க..! //

  இது நியாயமான கோரிக்கையாக படுகிறது.

  ReplyDelete
 16. உங்கள் பதிவின் ஆரம்பத்தில் இருக்கும் படத்தில் பிரசாந்த் முகம் கிராபிக்ஸ் செய்யப்பட்டதா?

  ReplyDelete
 17. நல்ல வேண்டுகோள் நைட்..பார்ப்போம் யார் காதிலாவது விழுகிறதா என!

  ReplyDelete
 18. @ பாரத்... பாரதி...

  உங்கள் கருத்துக்கு நன்றி பாரதி, முதல் படம் கிராபிக்ஸ்தான், ஆனால் நான் பண்ணவில்லை, கூகிளில் தேடும்போது கிடைத்தது

  ReplyDelete
 19. @ செங்கோவி

  நன்றி நண்பா

  ReplyDelete
 20. நிஜக்கதையையும் படக்கதையையும் நிறைவா விமர்சனம் செஞ்சிருக்கீங்க சுரேஷ். ஒரு முடிவோட இருக்கீங்க. பாக்கலாம். அடுத்து சிம்புவோட வானம் தான் என் டார்கெட்.

  ReplyDelete
 21. படத்தை தியேட்டர்ல பார்க்கற ஐடியா இல்ல.. :-)..

  நீங்க சொல்றமாதிரி நாட்டுப்புற கலைகளுக்கு ஏதாவது பண்ணினாங்கன்னா.. நல்லாதான் இருக்கும்.. சின்ன வயசுல தெருக்கூத்து பார்த்திருக்கேன்.. அண்ணன்மார் கதையெல்லாம் தெரியாது..

  ReplyDelete
 22. படம் அவ்வளவு மோசம் என்று சொல்ல முடியாது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் மிக அற்புதமாக வந்திருக்கும். எல்லோரும் கலைஞர் பேரை பார்த்தவுடனே டரியல் ஆகி விடுகின்றனர்.

  ReplyDelete
 23. அப்ப படம் பாக்கலாங்களா

  ReplyDelete
 24. @ ! சிவகுமார் !

  நன்றி சிவா

  @ பதிவுலகில் பாபு

  தங்களின் கருத்துக்கு நன்றி பாபு

  @ பாலா

  நானும் அப்படித்தான் நினைக்கிறேன் பாலா, ஆனாலும் ஒருதடவை பார்க்கலாம்

  @ நா.மணிவண்ணன்

  ம்ம்ம் பார்க்கலாம் மணி

  ReplyDelete
 25. வைர இதயம் கொண்ட மாப்ள வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 26. @ விக்கி உலகம்

  ஹி ஹி அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க விக்கி

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!