அயன் படத்துக்கு அப்புறம் கே.வி. ஆனந்த் மேல அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த படம் கோ, முதல்ல சிம்பு நடிக்கறதா இருந்து அப்புறம் ஜீவா கமிட்டான படம், இந்த படத்துக்கு சிம்புவ ஏன் செலக்ட் பண்ணி இருந்தாங்கன்னு தெரியல, இது அக்மார்க் ஜீவாவுக்கு மட்டும் செட்டாக கூடிய படம்தான்
தேர்தல்ல ஆட்சியை கைப்பற்ற துடிக்குது ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும், இந்த ரெண்டு கட்சிக்கு மத்தியில மக்களுக்கு நல்லது செய்யனும் நினைக்கறாங்க அஜ்மல் தலைமையில இயங்குகிற சிறகுகள் அமைப்பு, இந்த சிறகுகள் அமைப்பு நினைச்சத சாதிச்சதா? அதற்கு பத்திரிகைகாரங்களா இருக்குற ஜீவாவும், கார்த்திகாவும் என்ன ஹெல்ப் பண்ணுனாங்க? தேர்தல்ல யார் ஜெயிச்சா? முடிவு என்னங்கறத தியேட்டர்ல போய் பாருங்க
படத்தோட ஆரம்பத்துல பேங்க கொள்ளையடிக்கிற கொள்ளைகாரங்கள பைக்ல வீலிங் பண்ணிட்டே போட்டோ எடுக்குறதுல ஆரம்பிக்குது ஜீவாவோட அதகளம், அதற்கப்புறம் படம் முடியற வரைக்கும் எத பார்த்தாலும் கை துறுதுறுன்னு போட்டோ எடுக்க துடிக்கும் பத்திரிகைகாரானா ஜீவா செமயா பண்ணி இருக்காரு, குறிப்பா கோட்டா சீனிவாசராவோட குடிசை பகுதி தேர்தல் பிரசாரத்த ரவுண்டு கட்டி போட்டோ எடுக்கற சீன் செம காமெடி, போட்டோ கிராபரா போட்டோ எடுக்கும் போதும், பத்திரிகைகாரனா போட்டு வாங்கும் போதும், காதல் சீன்ல நெருக்கம் காட்டும் போதும், ஜீவா செம நடிப்பு
கார்த்திகா பத்திரிகை நிருபரா வராங்க, சின்ன பொண்ணா இருக்குற அவங்க அந்த பத்திரிகையிலேயே பெரிய ஆளுன்னு சொல்றது நம்பற மாதிரி இல்லை, பெரிய அழகுன்னு சொல்லமுடியாட்டாலும் ரசிக்கற மாதிரி அழகா இருக்காங்க, மீனா, அமலா பாலுக்கு அப்புறம் கண்ணழகி பட்டம் கிடைக்க சான்ஸ் இருக்கு, நடிப்பு பெரிசா ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்லை, புதுமுகம்தானே போக போக சரியாகிடும்னு நம்பலாம்,
படத்தோட வேகத்துக்கு ஈடா பரபரன்னு திரியறது பியாதான், ஒரு மெட்ரோபாலிட்டன் சிட்டி பொண்ணா எத பத்தியும் கவலைபடாம பேசரதும், குறும்புதனம் பண்றதும் ரசிக்க வைக்குது, அதிலும் அவர் ஜெண்ட்ஸ் பாத்ரூமுக்குள்ள ஓடி போற சீன், ஜீவாகிட்ட என்னோட ரேட் என்னன்னு கேட்குற சீன், கார்த்திகாவோட இடுப்புல சேலைய பார்த்துட்டு கமெண்ட் அடிக்கற சீன், பிளாட்டுல அந்த குண்டு பையன்னு நினைச்சு @$%#$%^# சீன் (சென்சார்) நிறைய இடங்கள்ள பியாதான் ஹீரோயினோன்னு நினைக்க வைக்குது
அஞ்சாதே படத்துக்கு அப்புறம் அஜ்மலுக்கு சொல்லிக்கற மாதிரி படம், அவரோட அண்டர்பிளே கேரக்டர் தெரிய வரும்போது அதிர்ச்சியடைய வைக்குது, ஆனா பல படம் பார்த்த சினிமா ரசிகர்களால ஈசியா கண்டுபுடிச்சிட முடியும், உணர்ச்சி பொங்க பேசறதுலயும், ஒரு அமைப்புக்கு தலைவனா வெளிக்காட்டறதுலயும் அஜ்மல் செமயா பண்ணி இருக்காரு, அஜ்மல் படத்தோட ஹீரோன்னே சொல்லலாம், அந்தளவு படம் அஜ்மல சுத்தியே நகருது
பிரகாஷ்ராஜீம், கோட்டா சீனிவாசராவும் கெஸ்ட் ரோல் மாதிரிதான் வந்து போறாங்க, இருந்தாலும் ரெண்டு பேர் சம்பந்தபட்ட காட்சிகளும் செமயா இருக்கு, கோட்டா 13 வயசு பொண்ண கல்யாணம் பண்ண நினைக்கற சீனும், பிரகாஷ்ராஜ் காருக்குள்ள பேட்டி கொடுக்கற சீனும் செம விறுவிறுப்பு, இருந்தாலும் சின்ன பசங்க அமைப்புனால தமிழ்நாட்டோட முதலைமைச்சரா இருக்குற பிரகாஷ்ராஜ் தோத்து போறதெல்லாம், இப்ப தமிழ்நாட்டுல இருந்துட்டு நம்மாள நம்ப முடியல
படத்தோட திரைக்கதையும் வசனத்தையும் கே.வி.ஆனந்துகூட சேர்ந்து சுபாவும் பண்ணி இருக்காங்க, படம் முழுக்க சுபா கதை மாதிரியே விறுவிறுப்பா பரபரன்னு ஓடுது, வசனங்கள்ளாம் ஷார்ப், தேர்தல் பிரச்சாரத்துல நடிகை சோனா மச்சான்ஸ்னு பேசறதும், அவங்க பேசிட்டு போனதும் மொத்த கூட்டமும் போயிடறதும், அதற்கு அப்புறம் கோட்டா பேச போகும்போது யாருமே காணாம போகும் போது, அல்லக்கை இதுக்குதான் தலைவரே அவங்கள கடைசியா பேச சொல்லி இருக்கனும்னு சொல்லறதும் வெடிச்சிரிப்பு,
ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக்ல இரண்டு பாட்டுதான் ஹிட்டாகும் போல இருக்கு, என்னமோ ஏதோ பாட்டு மட்டும் சூப்பர், மத்த பாட்டுக்கான லொகேசன் எல்லாம் அருமை, அயன் படத்துல ஜெகன் செத்ததுக்கு அப்புறம் அடுத்த சீனுலயே நெஞ்சே நெஞ்சே பாட்டு வர மாதிரி இங்கயும் பியா செத்த்துக்கு அப்புறம் அடுத்த சீனுலயே வெண்பனியே பாட்டு வருது, சோக சீன் வந்தா அடுத்த சீன்லயே பாட்டு சீன் வைக்கனும்கறது டைரக்டரோட செண்டிமெண்ட் போல இருக்கு
நிறைய உள்குத்து இருக்குற இந்த படத்த உதயநிதி வாங்குனது ஆச்சரியம்தான், அதே மாதிரி படம் ஆரம்பிக்கும் போது ரெட் ஜெயிண்ட்டுன்னு போட்டபோது ஒரு உடன்பிறப்பு தலைவான்னு கத்துனது அதைவிட ஆச்சரியம், ஒருவேளை சன்டிவிக்காரங்க மாதிரி இவங்களும் ஆளு வச்சு வீடியோ எடுக்கறாங்களோ என்னமோ, எலக்சனுக்கு முன்னாடி வரவேண்டிய படம், ரிசல்டுக்கு முன்னாடி வந்திருக்கு
இண்டர்வெல்ல மகாவீரன், ரெளத்திரம் டிரைலர் போட்டாங்க, ரெண்டு டிரைலருமே சூப்பரா இருக்கு, படம் வந்தா கண்டிப்பா பாக்கணும்,
மொத்தத்துல கோ – தாராளமா நீங்க ’’GO’’வலாம், சம்மர்ல ஜாலியா பார்க்கக்கூடிய எண்டர்டெயிண்மெண்ட் சினிமா.
வடை...
ReplyDeleteவிமர்சனம் நல்லா இருக்கு....
ReplyDeleteஉள் குத்து உள்ள பட விமர்சனம் அலசல், பின்னணி இசை, தொழில் நுட்பம் பற்றியும் கொஞ்சம் அலசியிருந்தால் விமர்சனம் இன்னும் சிறப்பாக இருக்கும்.
ReplyDelete>>நிறைய உள்குத்து இருக்குற இந்த படத்த உதயநிதி வாங்குனது ஆச்சரியம்தான்
ReplyDeleteஎஸ்.. ரொம்ப கரெக்ட்.. விமர்சனம் நீட்
@ MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteவடை உங்களுக்குதான் மனோ சார், கருத்துக்கு நன்றி
@ நிரூபன்
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி நிரூபன், அடுத்த முறை முயற்சிக்கிரேன்
@ சி.பி.செந்தில்குமார்
ReplyDeleteரொம்ப நன்றி தல
நீ சொன்னதை நம்பி படத்துக்கு போகப் போறேன்..
ReplyDeleteபடம் சரியில்லேன்னு வச்சிக்கோ...
@ # கவிதை வீதி # சௌந்தர்
ReplyDeleteஹி ஹி சரியில்லன்னா காச திருப்பி எனக்கு கொடுத்துருங்க :-)
சுமாராகத்தான் இருக்கு தல..
ReplyDeleteநல்ல விமர்சனம் பாஸ், ஆனா நமக்கு தியேட்டருக்கு போய் படம் பாக்கிற கெட்டபழக்கம் எல்லாம் இல்ல,,,,,,எல்லாம் கூச்ச சுபாவம் தான் ))))))
ReplyDeleteஓகே படத்துக்கு போய்டுவோம்
ReplyDeleteகார்த்திகா-பெரிய அழகுன்னு சொல்லமுடியாட்டாலும் ரசிக்கற மாதிரி அழகா இருக்காங்க,
இவுங்களுக்கு என்னங்க கொறச்சலு ,சூப்பர் பிகர்
//இந்த படத்துக்கு சிம்புவ ஏன் செலக்ட் பண்ணி இருந்தாங்கன்னு தெரியல//
ReplyDeleteஇதுக்கு மட்டுமா...
//முடிவு என்னங்கறத தியேட்டர்ல போய் பாருங்க//
ReplyDeleteகைல காசு இல்ல. நீங்க பாத்த 'கோ' சி.டி.ய அனுப்பி வைங்க.
/நா.மணிவண்ணன் said..
ReplyDelete//ஓகே படத்துக்கு போய்டுவோம்//
மணி, ஓகே ன்னு ஒரு படம் வந்துருக்கா..
//கார்த்திகா-பெரிய அழகுன்னு சொல்லமுடியாட்டாலும் ரசிக்கற மாதிரி அழகா இருக்காங்க, இவுங்களுக்கு என்னங்க கொறச்சலு ,சூப்பர் பிகர்//
பெரிய அழகுன்னு சொல்ல முடியாது..ஆனா சூப்பர் பிகர்னு சொல்றீங்க. மதுரைல ஓவர் வெயிலா மணி.!!
சூப்பர் விமர்சனம் நைட்..உள்குத்தை கரெக்டாச் சொல்லி இருக்கீங்க!
ReplyDeletegood movie
ReplyDeleteSupper...
ReplyDeleteநல்ல விமர்சனம் நண்பா.. கண்டிப்பாகப் பார்க்கனும்..
ReplyDeleteநல்ல பொழுதுபோக்கு படம். State of Playயின் காப்பி என்று சொல்கிறார்களே உண்மையா?
ReplyDelete@ கே.ஆர்.பி.செந்தில்
ReplyDeleteபார்க்கலாம் சார்
@ கந்தசாமி
ReplyDeleteஅப்ப சிடில பாருங்க சார்
@ நா.மணிவண்ணன்
ReplyDeleteமணிக்கு எல்லாருமே அழகுதான்
@ ! சிவகுமார் !
ReplyDeleteநான் தியேட்டர்லதான் பார்த்தேன் சிவா, மணிக்கு கார்த்திகாவயே கட்டி வச்சிடுவோம் விடுங்க :-)
@ செங்கோவி
ReplyDeleteநன்றி நண்பா
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
ReplyDeleteநன்றி சார்
@ from PBT
ReplyDeleteநன்றிங்க
@ பதிவுலகில் பாபு
ReplyDeleteகண்டிப்பா பாருங்க நண்பா
@ பாலா
ReplyDeleteயாருக்கு தெரியும் பாலா, இருக்கலாம், நம்மள பொறுத்தவரை படம் பார்த்தமா என் ஜாய் பண்ணுனமா, அவ்வள்வுதான், கருத்துக்கு நன்றி நண்பா