Friday, April 22, 2011

ஆசை ஆசையாய்..!இந்த பதிவில் படிக்க சுவாரஸ்மாக எதுவும் இல்லை, இது முழுக்க முழுக்க என்னுடைய சுயபுலம்பல்கள் மட்டுமே, சற்றே பெரிய பதிவும் கூட, ஒரு மொக்கைபதிவு என்றும் சொல்லலாம், அதனால் பொழுதுபோக்கவும், ஜாலிக்காகவும் வலைப்பதிவு படிப்பவர்களுக்கு போரடிக்கக்கூடும், மற்றபடி பொறுமைசாலிகள் தொடரலாம், நன்றிஆசையே துன்பத்திற்கு காரணம்னு புத்தர் சொன்னாரு, ஆனா ஆசைப்படாம வாழ முடியுமா? இல்ல எந்த ஆசையுமே இல்லாம மனுசன்தான் இருக்க முடியுமா? எல்லா வகையான ஆசையும் மண், பெண், பொன் இந்த மூணு கேட்டகிரில அடங்கிருது, இந்த மூணுக்கும் ஆசைப்படறதும் அதை அடைய நினைக்கறதும்தான் மனுச வாழ்க்கைன்னு ஆகிப்போச்சு,

அதே சமயம் ஆசையால துன்பம் மட்டும்தான் வருமா இன்பமே வராதா? நிறைய பேரு ஆசைப்பட்டதாலதான் வாழ்க்கையில முன்னேறி இருக்காங்க, ஒரு விசயத்து மேல ஆசைப்படாம அதை அடைய முடியுமா சொல்லுங்க,

எனக்கும் நிறைய ஆசைகள் இருந்தது இன்னும் இருக்கு, சின்னதா பெரிசா ஏன் தகுதிக்கு மீறின ஆசைகளும் இருந்தது, இருக்கு, சின்ன பையனா இருக்கும் போது நான் முதன்முதலா அதிகமா ஆசைப்பட்ட விசயம் என்ன தெரியுமா? தேன் மிட்டாய், சிவப்பா உருண்டையா சின்னதா சாப்பிடும் போதே உச்சி மண்டை வரைக்கும் இனிப்பு தித்திக்கும், தேன் மிட்டாய்னா உண்மையிலேயே உள்ள தேன் தான் இருக்கும்னு பலநாள் நினைச்சு இருக்கேன், ஊர்ல யாராவது இறந்து போனா பொணத்து மேல காசு வீசிட்டு போவாங்க, அந்த காச கூட எடுத்து மிட்டாய் வாங்கி சாப்பிட்டு இருக்கேன், சில நாட்கள்ள மிட்டாய் வாங்கி சாப்பிட காசு இருக்காத போது இன்னைக்கு எவனும் சாகலையான்னு மனசுல ஏங்கி இருக்கேன்

தேன் மிட்டாய்க்கு அடுத்தபடியா ஆசை வந்தது ஜவ்வுமிட்டாய் மேல, வியாழகிழமை ஆனா போதும் ஒரு மூங்கில் உச்சில பொம்மை ஒன்னு மாட்டிட்டு ஜவ்வுமிட்டாய்காரர் வருவாரு, அந்த பொம்மை இரண்டு கைய்யும் தட்டி சவுண்டு கொடுக்கும், ஊர்ல இருக்குற சில்வண்டு பசங்க எல்லாம் அவர ரவுண்டு கட்டிக்குவாங்க, அவரும் சளைக்காம ஜவ்வு மிட்டாய்லயே வாட்சு, மோதிரம், பொம்மைன்னு கையிலயே மாட்டி விடுவாரு, இதெல்லாம் மாட்டினது போதாதுன்னு கொஞ்சம் மூக்குலயும் ஒட்டி விடுவாரு, இப்பல்லாம் ஜவ்வு மிட்டாய் விக்கிறவங்க யாரையும் பார்க்க முடியறதில்ல

ஒருநாள் எங்க அம்மாவோட உடல்நிலை சரியில்லாதவங்க ஒருத்தரை பார்க்க போயிருந்தேன், அங்க சாப்பிட காபி கொடுத்தாங்க குடிச்சு பார்த்தா காபி இல்லை, ஆனா டேஸ்ட் ரொம்ப வித்தியாசமா இருந்த்து, அதுக்கு பேரு என்னன்னு கேட்டேன் ஹார்லிக்ஸ்னு சொன்னாங்க, அன்னையில இருந்து புடிச்சதுதான் ஹார்லிக்ஸ் பைத்தியம், அன்னையில இருந்து எங்க அம்மாவ விடாம நச்சரிச்சேன் ஹார்லிக்ஸ் வாங்கி கொடு ஹார்லிக்ஸ் வாங்கி கொடுன்னு, அது ரொம்ப விலை அதிகம்டான்னு எங்க அம்மா கணேஷ் காபித்தூள் வாங்கி கொடுத்தாங்க, இது என்னடா கணேஷ் காபிதூள் பேரே கேள்விபடாத மாதிரி இருக்கேன்னு நினைக்காதீங்க, அது எங்க ஊருல ப்ரூ காபி ரேஞ்ச்

அப்ப எங்க வீட்ல வாரத்துக்கு ஒருநாள்தான் பாலே வாங்குவாங்க, அதுவும் ஞாயித்துகிழமை மட்டும்தான், ஞாயித்துகிழமையானா எங்க அம்மா கணேஷ் காபி போட ஆரம்பிச்சாங்க, ஆனா எனக்கோ மனசுல ஹார்லிக்ஸ் குடிக்கனும் ஆசை, என்ன பண்றது வீட்டுல அந்த அளவு வசதி இல்லை, ஆனாலும் நான் விடாம அடம் புடிச்சதுல மூணு மாசம் கழிச்சு எங்கம்மா அரைக்கிலோ ஹார்லிக்ஸ் வாங்கிட்டு வந்தாங்க

எனக்குன்னா ஒரே சந்தோசம், ஞாயித்துகிழமை மட்டும் ஆறு டம்ளர் ஹார்லிக்ஸ் குடிச்சேன், பையன் ஆசையா கேட்குறானேன்னு எங்கம்மாவும் போட்டு போட்டு கொடுத்தாங்க, அடுத்த ஒருவாரத்துக்கு எத தின்னாலும் ஹார்லிக்ஸ் கூடத்தான், இட்லிக்கும் தோசைக்கும், ஏன் சாப்பாட்டுக்கு கூட சட்னிக்கு பதிலா ஹார்லிக்ஸதான் சேர்த்து சாப்பிட்டேன், விளைவு அடுத்த ஞாயித்துகிழமை மீண்டும் கணேஷ் காபி, ம்ம்ம் அதெல்லாம் முடியாது எனக்கு ஹார்லிக்ஸ்தான் வேணும்னு அடம் புடிச்சேன், பொறுத்து பொறுத்து பார்த்து எங்கம்மா ஈர்க்குமாறு குச்சில நாலு எடுத்து பிரிச்சு மேஞ்சதுல ஹார்லிக்ஸ் மட்டுமில்லாம கணேஷ் காபியும் சேர்த்தே மறந்துட்டேன்

பின்னாடி ஒருநாள் எங்க சொந்தகாரங்க கல்யாணத்துக்கு கோயம்புத்தூர் போயிருந்தேன், அங்க கொஞ்சம் சிகப்பா ஆரஞ்சு கலர்ல ஒரு தண்ணிய குடுத்தாங்க குடிக்கறதுகு, ஜில்லுன்னு இனிப்பா செம டேஸ்ட், விடுவமா நாங்க, வழக்கம் போல பேரு என்ன்ன்னு கேட்க, ஐ லவ் யூ ரஸ்னானாங்க, இது என்னடா ஐ லவ் யூ ரஸ்னான்னு கேட்டா டிவிய பாருன்னு சொல்லிட்டாங்க

அப்புறம் டிவில வர விளம்பரம் பார்த்தா ஒரு சின்ன பொண்ணு ஐ லவ் யூ ரஸ்னா, ஐ லவ் யூ ரஸ்னானு சொல்லிகிட்டு இருந்த்து, அப்புறம் மறுபடியும் எங்கம்மாகிட்ட போய் ஐ லவ் யூ ரஸ்னா வாங்கி தாம்மான்னு சொல்ல கூட இருந்த பொம்பளைங்க எல்லாம் கொல்லுன்னு சிரிச்சாங்க, எங்கம்மா அப்புறம் வாங்கி தரேன் போடான்னு சொன்னாங்க, நான் கேட்காம அடம் புடிக்க அங்கயே நாலு மாத்து, தற்காலிகமா ரஸ்னாவ மறந்தேன்

பின்னாடி ரஸ்னாவ அஞ்சுரூபா பாக்கெட்டு, இரண்டு ரூபா பாக்கெட்டா போட்டாங்க, அப்ப டெய்லியும் ரஸ்னா வாங்க வேண்டியது, தண்ணில கலக்க வேண்டியது, லிட்டரு கணக்கா குடிக்க வேண்டியது, ஒருமாசத்துக்கு வர வேண்டிய சக்கரை ஒருவாரத்துல தீர்ந்தா சும்மா இருப்பாங்களா எங்க அம்மா, ஒருநாள் கண்டுபுடிச்சு செம மாத்து மாத்துனதுல ஐ லவ் யூ ரஸ்னா அய்யோ ரஸ்னாவாங்கற மாதிரி ஆகிப்போச்சு

இப்படி சின்ன வயசுல சாப்பிடற பொருள் மேல மட்டும் இருந்த ஆசை பெரிசானதும் அப்படியே மாறிப்போச்சு, முன்னயெல்லாம் ஏதோ ஒன்னுமேல மட்டும் இருந்த ஆசை, இப்ப எத பார்த்தாலும் ஆசையா மாறிப்போச்சு, நீ படிச்சி முடிச்சு டாக்டராக போறியா? ஆமா, வக்கீலாக போறியா? ஆமா, என்ஞினியர் ஆக போறியா? ஆமா, வாத்தியார் ஆக போறியா? ஆமா, எதுவா இருந்தாலும் ஆமா, நானும்தான் ஆகப்போறேன்

இப்படி நான் முதல்லயே சொன்ன மாதிரி மண், பெண், பொன்னுங்கறதுல, மண் அதாவது பொருள் சம்பந்தமான என்னோட ஆசைகள் மேல சொன்ன மாதிரி குறுகிய வட்டத்துக்குள்ளயே முடிஞ்சு போச்சு,

அடுத்து பெண்

வளந்து வரும் போது எல்லார் மாதிரியே எனக்கும் பொண்ணுங்க கூட பேசனும், பழகனும்னு ஆசை வந்தது, ஆனா கொடுமைய பார்த்தீங்க்ன்னா, அப்ப பொண்ணுங்க பசங்க யார் கூடவும் பேச மாட்டாங்க, மீறி பேசுனா லவ்வுன்னு கதைகட்டி விட்டுடுவாங்க, அதுக்கு பயந்தே எல்லா பொண்ணுங்களும் குனிஞ்ச தலை நிமிராம போயிடும், அப்படியே பேச சான்ஸ் கிடைச்சாகூட எப்படி பேசறதுன்னும் தெரியாது, என்ன பேசறதுன்னும் தெரியாது,


அப்ப ஒருநாள் மினிபஸ்சுல போயிட்டு இருந்தப்ப பார்த்தேன், மினி பஸ் டிரைவரும், கண்டக்டரும் ஈசியா பொண்ணுங்க கூட கடலை போட்டு, பேசிட்டு இருந்தாங்க, அப்ப ஒரு முடிவு எடுத்தேன் நாமளும் மினிபஸ் கண்டக்டர் ஆகிர வேண்டியதுதான்னு, ஏன்னா டிரைவர் ஓட்டும் போது பேசிட்டு வரமுடியாது பாருங்க

என்னோட இந்த நினைப்பு ரொம்ப நாள் நீடிக்கல, ஒருநாள் ஒரு கூட்டமே இந்த மினிபஸ்ஸ வழிமறிச்சாங்க, அந்த கண்டக்டர புடிச்சு அந்த பொண்ணோட சொந்தகாரங்க எல்லாம் ரவுண்டு கட்டி மிதிமிதின்னு மிதிச்சாங்க, அத பார்த்த்துக்கு அப்புறம் அந்த கண்டக்டர் ஆகணும்கற ஆசையே விட்டு போச்சு,

அப்புறமா முடிவெடுத்ததுதான் ஒன்சைடு லவ்வு, பார்க்குற பொண்ணயெல்லாம் லவ் பண்றது, அவங்க நம்மள லவ் பண்ணலயா? திரும்பி பாக்கலயா? நோ பிராப்ளம், நாம நம்ம கடமைய சரியா செஞ்சோம்கற திருப்தி மட்டுமே போதும், இப்படியே ஒரு பதினைஞ்சு பொண்ணுக பக்கம் லவ் பண்ணினேன், அப்புறம் ஒரு பொண்ண பார்த்து பல்பு வாங்குனதெல்லாம் முன்னாடியே கதையில சொல்லி இருக்கேன்

இது மட்டும் இல்லை, இன்னும் இன்னும் நிறைய ஆசைபட்டது இருக்கு, அத்தனையும் ஒரு பதிவுல சொல்ல முடியாது, உதாரணமா சினிமா பார்த்து புடிச்சு போனதுக்கு அப்புறமா, டெய்லியும் சினிமா பார்க்க சினிமா ஆப்பரேட்டரா ஆகணும்னு ஆசை வந்திருக்கு, எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போனபோது டாக்டர் ஆகணும்னு ஆசை வந்த்து, என்னோட மக்கு பிரண்டு ஒருத்தன் காசு கொடுத்து என்ஜினியர் சீட் வாங்குன போது, நானும் என்ஜினியர் ஆகணும்னு ஆசைபட்டேன், போலீசாகனும்னு ஆசைபட்டேன், பிளைட் ஓட்டனும்னு ஆசைபட்டேன், ராணுவத்துல சேரணும்னு ஆசைபட்டேன், கலெக்டர் ஆகணும்னு ஆசைபட்டேன், சினிமால ஹீரோ ஆகனும்னு ஆசைபட்டேன், அவ்வளவு ஏன் தமிழ்நாட்டோட முதலமைச்சரா ஆகனும்னு கூட ஆசைபட்டு இருக்கேன்

இப்படி கணக்கில்லாத ஆசைகள், அத்தனையும் சொல்ல கண்டிப்பா ஒரு பதிவு போதாது, அத்தனை அத்தனை ஆசைகள், நிறைவேறிய ஆசைகள், நிறைவேறாத ஆசைகள், தகுதிக்கு மீறின ஆசைகள், தகுதிக்கு உட்பட்ட ஆசைகள்னு எதையும் பிரிச்சு பார்க்க முடியாது, ஆசைபடறதுக்கு எதுக்கு தகுதியெல்லாம்? ஜஸ்ட் ஆசைபடறோம் அவ்வளவுதான், ஆசைப்படாம அடைய முடியுமா?

இதுல நான் ஆசைபட்டதுல பெரும்பாலான ஆசைகள் நிறைவேறியதே இல்லை, அது நிறைவேறாதுன்னு எனக்கும் தெரியும்,

இப்ப இருக்குற ஆசையெல்லாம் ரொம்ப குறுகி போச்சு சொல்லப்போனா ஒன்னே ஒன்னுதான், பணம் சம்பாதிக்கணும் அது மட்டும்தான், அதற்கு அப்புறம் இடம் வாங்கனும், வீடு கட்டனும், ஒரு ஸ்டேஜிக்கு வரணும், பணக்காரனா ஆனா எங்கம்மா பேருல ஒரு கேன்சர் டிரஸ்ட் ஆரம்பிக்கனும் அவ்வளவுதான், இத நோக்கிதான் என்னோட மிச்ச மீதி வாழ்க்கை எல்லாம்,

என்னோட மீதி வாழ்க்கையில நானும் என் குடும்பமும் அடைய நினைச்ச இடத்தை அடைவேணா இல்ல, என் பெற்றோர்கள் என் மீது நம்பிக்கை வைத்தது மாதிரி என்னால முடியாதத என்னோட குழந்தைகள் செய்யும்னு நானும் அதேநம்பிக்கையை என் சந்ததிகள்கிட்ட விட்டுட்டு போவேனான்னு தெரியாது,

குழந்தையா இருக்கும்வரை நம்மோட ஆசைகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் ஒரு குறுகிய வட்டத்துல நாம, நம்ம பெற்றோர்னு முடிஞ்சிருது, அந்த ஆசைகளை ஒரு டிவைன்னான ஆசைன்னு சொல்லலாம், கஷ்ட நஷ்டம் எதுவும் தெரியறதில்ல, ஆனா நாமே பெரியவனாக ஆகி நம்மோட ஆசைகளோட சமுதாயத்துல நேருக்கு நேர் மோதும் போதுதான் நிதர்சன வாழ்க்கை இடிக்கிறது

நம்பிக்கை இல்லாம வாழ்க்கையில எதையும் சாதிக்க முடியாது, எந்த ஆசையயும் நிறைவேத்தவும் முடியாது, அடுத்த நிமிசம் என்ன நடக்கும்கற ஆச்சரியத்த உள்ளடக்கி இருக்குற வாழ்க்கையில இன்னமும் நானும் ஆசைபடுறேன், நம்பிக்கையோடு..!
  

38 comments:

 1. நீர் சொல்வது உண்மை தான் மாப்ள..........அத்தனைக்கும் ஆசைப்படு! ஆனால் அடையும் முன் யோசித்து செயல்படு ஹிஹி!

  ReplyDelete
 2. ஹார்லிக்ஸ் எனக்கே..

  ReplyDelete
 3. //ஞாயித்துகிழமை மட்டும் ஆறு டம்ளர் ஹார்லிக்ஸ் குடிச்சேன்,// அடேங்கப்பா..அடேங்கப்பா!

  ReplyDelete
 4. நம்பிக்கை இல்லாம வாழ்க்கையில எதையும் சாதிக்க முடியாது, எந்த ஆசையயும் நிறைவேத்தவும் முடியாது, அடுத்த நிமிசம் என்ன நடக்கும்கற ஆச்சரியத்த உள்ளடக்கி இருக்குற வாழ்க்கையில இன்னமும் நானும் ஆசைபடுறேன், நம்பிக்கையோடு..!

  wow...... great sura:

  ReplyDelete
 5. அட ரொம்ப பெரிய பதிவா இருந்தா கூட போர் அடிக்கலைங்க. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. சில இடங்களில் என்னோட சின்ன வயசு ஞாபகங்களும் வருது. சின்ன வயசுல இருக்குற ஹார்லிக்ஸ் ஆசை , ரஸ்ணா அப்புறமா ஈர்க்குமாறு குச்சில அடிவாங்குறது இப்படி எல்லாமே நானும் அனுபவிச்சிருக்கேன்.

  என்னோட சின்ன வயசுக்கு ஒரு முறை போயிட்டு வந்திட்டேன். ஆனா லவ்ல தான் இன்னும் என்னோட கடமைய செய்யாம இருக்கேன். விரைவில் அந்தக் கடமையையும் செவ்வனே செய்யணும். ஹி ஹி.

  அப்புறம் உங்க ஆசைகள் நிறைவேரனும்னு இறைவனை வேண்டுகிறேன். கண்டிப்பா உங்க அம்மா பேருல கேன்சர் ட்ரஸ்ட் ஆரம்பிக்கனும்கர ஆசை நிறைவேற வேண்டுகிறேன் :-)

  ReplyDelete
 6. இதில் என்னையும் பொருத்திப் பார்த்துக்கொள்ள நிறைய இடங்கள் உள்ளது. படித் தேன்.

  ReplyDelete
 7. @ சுரேஷ் மாம்ஸ் /// அந்த ஜவ்வு மிட்டாய் matter .... ஓடியா ஓடியா ஓடியா பம்பாய் மிட்டாய். அப்டின்னு சவுண்ட் விட்டுட்டே வருவாங்கல்ல ... அதெல்லாம் மறக்க முடியுமா ....:))

  ReplyDelete
 8. நானும் வந்துட்டேன்....

  ReplyDelete
 9. என் சின்ன வயசு ஞாபகம் எல்லாம் வருதே.....

  ReplyDelete
 10. ரெண்டு ஓட்டும் போட்டாச்சு நான் கிளம்புறேன்....

  ReplyDelete
 11. ஞாபகப்படுத்திடீங்களே பாஸ்! பதிவு சூப்பர்! :-)

  ReplyDelete
 12. இளமைக் காலங்களில் எங்கள் மனதின் எண்னங்கள், ஆசைகள் எப்படியெல்லாம் இருந்தது என்பதற்கு எடுத்துக் காட்டாய் உங்கள் பதிவும் இருந்திருக்கிறது.

  ஹோர்லிக்ஸ் மீதான ஆசை, ஜிலு ஜிலு சர்பத் ஆசை, பொண்ணுங்க மீதான ஆசை.. இவை யாவும் என் ஞாபகங்களைக் கிளறி விட்டுளது சகோ.
  சேம் சேம் பப்பி...சேம்.

  ReplyDelete
 13. நம்பிக்கை இல்லாம வாழ்க்கையில எதையும் சாதிக்க முடியாது, எந்த ஆசையயும் நிறைவேத்தவும் முடியாது,//
  தத்துவம் நல்லாருக்கே

  ReplyDelete
 14. அறிவிப்பு பேனர் பயமுறுத்துதே..

  ReplyDelete
 15. சூப்பர் பதிவு..
  இன்னும் கொஞ்சம் சுருக்கமாக தாருங்கள்..

  ReplyDelete
 16. தேன் மிட்டாய், சிவப்பா உருண்டையா சின்னதா சாப்பிடும் போதே உச்சி மண்டை வரைக்கும் இனிப்பு தித்திக்கும், தேன் மிட்டாய்//
  ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே.....
  மறக்க முடியுமா ....:))!1

  ReplyDelete
 17. //ஆசையே துன்பத்திற்கு காரணம்னு புத்தர் சொன்னாரு, ஆனா ஆசைப்படாம வாழ முடியுமா?//
  தத்துவம், நினைவுகள்,ஆசைகள் - அருமையா இருக்கு.

  ReplyDelete
 18. அசத்தல் பதிவு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. @ விக்கி உலகம்

  நன்றி விக்கி

  ReplyDelete
 20. @ செங்கோவி

  ஹார்லிக்ஸ் உங்களுக்குதான் வச்சுக்கோங்க

  ReplyDelete
 21. @ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

  நன்றி ராஜீவன்

  ReplyDelete
 22. @ கோமாளி செல்வா

  விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி செல்வா, கூடிய விரைவில் அந்த ஆசையவும் நிறைவேத்திடுஙக, முடிஞ்சா ஜெனிலியாவே கிடைக்க வாழ்த்துகிறேன், உங்களின் வேண்டுதலுக்கு மிகவும் நன்றி

  ReplyDelete
 23. @ ஜோதிஜி

  நன்றி சார்

  ReplyDelete
 24. @ karthikkumar

  மறக்க முடியாது மச்சி, கூடிய சீக்கிரம் உனக்கு வாங்கி தரேன் :-)

  ReplyDelete
 25. @ MANO நாஞ்சில் மனோ

  நன்றி மனோ சார்

  ReplyDelete
 26. @ சி.பி.செந்தில்குமார்

  ரொம்ப நன்றி தல

  ReplyDelete
 27. @ நிரூபன்

  மிகவும் நன்றி நிரூபன் சார்

  ReplyDelete
 28. @ ஆர்.கே.சதீஷ்குமார்

  பயமுறுத்தர மாதிரியா சார் இருக்குது பேனர்? உங்கள் கருத்துக்கு நன்றி சார்

  ReplyDelete
 29. @ # கவிதை வீதி # சௌந்தர்

  நன்றி செளந்தர், சுருக்குனதுதான் இவ்வளவு நீளமா வந்துருச்சு, அடுத்த தடவை குறைச்சுக்குறேன்

  ReplyDelete
 30. @ இராஜராஜேஸ்வரி

  நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்

  ReplyDelete
 31. @ FOOD

  மிகவும் நன்றி சார்

  ReplyDelete
 32. @ அந்நியன் 2

  நன்றி அந்நியன் சார்

  ReplyDelete
 33. @ தோழி பிரஷா( Tholi Pirasha)

  நன்றி பிரஷா மேடம்

  ReplyDelete
 34. ஆனா ஸ்பென்சர்ல அந்த பொண்ணு விஷயம் மட்டும் நீங்க ஆசைப்பட்டபடி நிறைவேறிடுச்சி.  அதாங்க..அந்த ரெண்டு வயசு பொண்ணு உங்கள பாத்து சிரிச்சதே..அதை சொன்னேன்.

  ReplyDelete
 35. @ ! சிவகுமார் !

  அந்த சின்ன பொண்ண கூட நான் பார்க்கலை, ஆனா நீங்க நல்லாவே கவனிச்சிருக்கீங்க சிவா :-)

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!