Saturday, April 9, 2011

நஞ்சுபுரம் - விமர்சனம்



[படத்தை பார்க்க விரும்புபவர்கள், இல்லை பார்க்கலாம் என நினைத்திருப்பவர்கள் படிப்பதை தவிர்க்கவும், ஏனெனில் முழு கதையும் இங்கு சொல்லப்பட்டு உள்ளது]



நாகதோசத்தை நிவர்த்தி செய்யாமல் விட்டுவிட்ட ஒருத்தருக்கு நாக தோசம் நிவர்த்தி செய்வதற்காக நஞ்சுபுரத்திற்கு பரிசலில் வந்திறங்குகிறது ஒரு குடும்பம், தோசத்தை நிவர்த்தி செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் வேலையில் சிறுநீர் கழிக்க போனவரை ஒரு நாகம் வந்து கடித்து கொன்று அவருடைய இரண்டு கண்களையும் பிடுங்கி எடுக்கிறது என அதிரடியாக தொடங்குகிறது படம்

நஞ்சுபுரம் பேருக்கு தகுந்தது போல, ஊர் நிறைய விஷப்பாம்புகள் நடமாட்டம் நிறைந்த ஊர், எப்போது யாரை வந்து பாம்பு கடிக்கும் என யாருக்கும் தெரியாது, ஊரில் உள்ள அனைவரும் பாம்பினை கண்டு பயந்து நடுங்குறார்கள், அவர்களுக்கு மத்தியில் கதாநாயகன் ராகவ் மட்டும் பாம்பின் மேல் பயமில்லாமல் சுற்றி வருகிறார், அனாயசமாக பாம்புகளை பிடித்து அடித்து கொள்கிறார்

பாம்பிற்கு அடுத்தபடியாக அந்த ஊரில் காணப்படும் நஞ்சு ஜாதி, ஊரில் ராகவ்வின் அப்பாவும், மைனா பட்த்தில் வந்த தம்பி ராமையாவும் பெரிய மனிதர்கள், இதில் ராகவ்வின் அப்பா பெரும் பணக்காரர், தம்பி ராமையா அரசியல்வாதி இருவரும் ஜாதிப்பித்து அதிகம் பிடித்தவர்கள், இதில் தம்பி ராமையா ஒரு கீழ்சாதி பெண்ணின் வீட்டில் மட்டும் சாதி ஒற்றுமையை பேணுகிறார், அந்த பெண்ணை வப்பாட்டியாக வைத்திருக்கிறார், அந்த பெண்ணின் மகள்தான் மோனிகா

ராகவ் மோனிகாவை காதலிக்கிறார், மோனிகாவிற்கும் ராகவ்வின் மேல் காதல் ஏற்படுகிறது, ஆனால் தன்னையும் வப்பாட்டியாக வைத்துக்கொள்வார்களோ என நினைத்து ராகவ்வை தவிர்க்கிறார், ஆனால் ராகவ் அவரை உண்மையாக காதலிப்பதாகவும், திரும்ணம் செய்து கொள்வதாகவும் வாக்கு கொடுத்து காதலிக்க வைக்கிறார், இவர்களின் காதல் விவகாரத்தை அறிந்த ராகவ்வின் தந்தை இவர்களை பிரிக்க தம்பி ராமையாவின் உதவியோடு திட்டம் போடுகிறார்

இதற்கிடையில் ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் மோனிகாவை பாம்பொன்று கடிக்க வருகிறது அதனை காலால் மிதித்து மோனிகாவை காப்பாற்றுகிறார் ராகவ், ஆனால் அந்த பாம்பை கொல்வதற்குள் அது தப்பித்து விடுகிறது, அதனால் அதிர்ச்சியடைகிறார்கள் ஊர்காரர்களும் ராகவ்வின் பெற்றோர்களும்

அந்த ஊரின் ஐதீகப்படி அடிபட்ட பாம்பு நாற்பது நாளுக்குள் அடித்தவனை கொன்று பழிதீப்பதாக நம்பப்படுகிறது, எனவே நாற்பது நாள் தப்பிப்பதற்காக ஊருக்கு வெளியே பரண் கட்டி தங்க வைக்கப்படுகிறார் ராகவ், அவரின் பாதுகாப்பிற்காக நான்கு அடியாட்களும் தங்க வைக்கப்படுகிறார்கள்

ஆனால் பாம்பு பயம் இல்லாத ராகவ் இரவில் யாருக்கும் தெரியாமல் ஆற்றங்கரைக்கு சென்று மோனிகாவை சந்தித்து காதலை வளர்க்கிறார், அதில் ஒருநாள் இருவரும் தப்பு செய்து விடுகிறார்கள், அதில் மோனிகா கர்ப்பமடைகிறார், இதற்கிடையே விசயத்தை கேள்விபட்ட தம்பி ராமையாவும் மோனிகாவை அடைய முயற்சிக்கிறார், அந்த முயற்சி தோல்வியடைய சீக்கிரமே மோனிகாவுக்கு திருமணம் செய்து வைக்குமாறும் இல்லையெனில் நடப்பதே வேறு எனவும் எச்சரிக்கிறார் தம்பி ராமையா

இதற்கிடையில் ராகவ் ஒருநாள் ஆற்றங்கரைக்கு சென்று வரும் வழியில் பாம்பை பார்க்கிறார், அது அவரிடம் அடிபட்ட பாம்பு, அதுவுமில்லாமல் வைத்தியர் வேறு பாம்பு கதைகளை சொல்லி பயமுறுத்தி விடுகிறார் ராகவ்வை, அதனால் அதுவரை தைரியமாக இருந்து வந்த ராகவ் அதற்குபிறகு பயந்து நடுங்க ஆரம்பிக்கிறார், கயிறினை கண்டாலும் பாம்பு என பயம் கொள்கிறார், இதற்கிடையே தனக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதையும், நடந்ததையும் சொல்ல முயற்சிக்கிறார் மோனிகா, ஆனால் ராகவ்வின் பாம்பு பயத்தினால் அவரின் அருகினில் செல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் அழுது தவிக்கிறார் மோனிகா

நாற்பதாவது நாள், விடிந்தால் மோனிகாவிற்கு கல்யாணம், ஆனால் அன்று இரவு கிரகணம், கிரகணத்தை தாண்டிவிட்டால் உயிர்பிழைக்கலாம் என்ற நிலை, அந்த நேரத்தில் திருடனாக இருக்கும் நண்பன் மூலம் விசயத்தை கேள்விபடுகிறார் ராகவ், கீழே சென்றால் மட்டுமே காதலியை காப்பாற்ற முடியும், திருமணம் செய்ய முடியும் ஆனால் கீழே இறங்கினால் சாவு நிச்சயம் என்ற சூழலில் பயம்தான் விஷம், பயப்படாவிட்டால் ஒன்றுமே இல்லை என நண்பன் புரியவைக்கிறான்

ஆனது ஆகட்டும் என கிளம்பி செல்கிறார், ஆற்றங்கரையில் மோனிகா இவருக்காக காத்திருக்கிறார், ரோட்டின் வழியாக சென்றால் ஊர் மக்களிடம் பிடிபட்டுவிடுவோம் என இருவரும் சேர்ந்து நச்சு பாம்புகள் இருக்கும் அடர்ந்த காட்டின் வழியாக செல்கிறார்கள், அங்கே ஊர்மக்கள் இருவரையும் தேடி கொண்டிருக்கிறார்கள், இரவில் கிரகணம் தோன்றுகிறது, இருவரையும் இருள் மூடுகிறது


கிரகணம் விலகியதும் பார்த்தால் அடிபட்ட பாம்பு நின்று கொண்டிருக்கிறது, இருவரும் ஓடுகிறார்கள், பாம்பு விடாமல் துரத்துகிறது, ஓடி ஓடி களைத்து போன நிலையில் விடிய தொடங்குகிறது, நாற்பதாவது நாள் முடியத் தொடங்குகிறது, மோனிகா ரோட்டை அடைந்து விடுகிறார், ராகவ் சாலையை அடைய சிறிது தூரம்தான் உள்ளது

அதற்குள் முழுதாக விடிந்துவிடுகிறது, அதனால் துரத்தி வந்த பாம்பு நின்றுவிடுகிறது, சாலையில் மோனிகா நடுவில் ராகவ் பின்னால் பாம்பு, இருவரும் மகிழ்ச்சியில் சிரிக்கிறார்கள், அப்பொழுது ரோட்டில் வாகனம் ஒன்று வருகிறது, மோனிகா தப்பிப்பதற்காக வாகனத்தை வழிமறிக்கிறார்

உள்ளே இருந்து இறங்குவது தம்பி ராமையாவும் அவரின் அடியாட்களும், கீழ்சாதிக்காரி மோனிகாவை வெட்டி கொல்லுமாறு கூறுகிறார், அடியாட்களும் வெட்ட ஓடிவருகிறார்கள், ராகவ் காப்பாற்ற ஓடி வருகிறார், மோனிகாவை வெட்ட வீசப்பட்ட அரிவாள் ராகவ்வை வெட்டி விடுகிறது, அவர் பரிதாபமாக உயிரைவிடுகிறார், மோனிகா, ராகவ்வின் பெற்றோர் அனைவரும் கதறி அழத்தொடங்குகிறார்கள்

நடப்பது அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது அடிபட்ட பாம்பு, ஐந்து அறிவு உள்ள பாம்புகூட சத்தியத்துக்கு கட்டுபட்டு நாற்பது நாள் முடிந்த்தும் பகையை மறந்து விட்டுவிடுகிறது, ஆறறிவு படைத்த மனிதன் எப்பொழுதுதான் ஜாதிநஞ்சினை விடுவான்? என கேள்வி எழுப்புவதோடு முடிவடைகிறது படம்.

நீண்ட நாட்கள் கழித்து நடிப்பதற்கு ஏற்ற பாத்திரம் கிடைத்து இருக்குறது மோனிகாவிற்கு நன்றாகவே நடித்திருக்கிறார், ராகவ்வும் நன்றாக செய்திருக்கிறார், அவரின் மனைவி படத்தை தயாரித்து இருக்கிறார், பட்த்தின் இசை பரவாயில்லை, ஆனால் கொஞ்சம் இரைச்சல் அதிகமாக உள்ளது, படம் கேண்டிட் கேமராவால் எடுக்கப்பட்டுள்ளதால் கொஞ்சம் அதிகமாக பிரைட்டாக உள்ளது, திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டி இருந்தால் பிரமாதமாக வந்திருக்கும் என நினைக்கிறேன், இந்த படத்தின் புரோமோ சாங் ஒன்றினை டிவியில் போட்டார்கள், ராகவ்வும் அனுயாவும் நடித்தது, நன்றாக இருந்தது, அந்த பாடல் படத்தில் இல்லை, போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் பாம்பு படம் என்றால் இப்படி இருக்கும் என எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் ஒருமுறை ரசித்துவிட்டு வரலாம், பாம்பு பட பிரியர்களுக்கும் பிடிக்கும், ரொம்பவும் மோசம் என்று கூறமுடியாது.   

  

16 comments:

  1. சரிங்க...
    படிச்சாச்சி...

    படம் வந்து ஒரு வாரம் ஆகதுன்னு நினைக்கிறேன்...

    நல்ல விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. //இந்த படத்தின் புரோமோ சாங் ஒன்றினை டிவியில் போட்டார்கள், ராகவ்வும் அனுயாவும் நடித்தது, நன்றாக இருந்தது, அந்த பாடல் படத்தில் இல்லை, போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.//


    ஆகா.. உங்கள் ரசனை அவுங்களுக்கு இல்லாமல் போய்விட்டதே...

    ReplyDelete
  3. ம்ம்ம் அசத்துங்க அசத்துங்க....

    ReplyDelete
  4. @ # கவிதை வீதி # சௌந்தர்

    ஹி ஹி எழுத நேரம் கிடைக்கல செளந்தர் சார்

    ReplyDelete
  5. @ பாரத்... பாரதி...

    ஹி ஹி ஆமாங்க பாரதி, ரசனை கெட்ட ஆளுங்க..

    ReplyDelete
  6. @ MANO நாஞ்சில் மனோ

    ஒகே மனோ சார்...

    ReplyDelete
  7. என்னங்க படம் வேஸ்டுங்க சொன்னீங்க அன்னைக்கு

    இன்னைக்கு பார்த்த படம் நல்ல இருக்கிற மாதிரி போட்டிருக்கீங்களே

    ReplyDelete
  8. மோனிக்குட்டிக்காக பார்க்கலாம் போலிருக்கே..அருமையா கதை மாதிரி கதையைச் சொல்லி இருக்கீங்க!

    ReplyDelete
  9. //என்னங்க படம் வேஸ்டுங்க சொன்னீங்க அன்னைக்கு

    இன்னைக்கு பார்த்த படம் நல்ல இருக்கிற மாதிரி போட்டிருக்கீங்களே// ஆஹா..நைட் ஒரு பிளானோட தான் இருக்காரு போலிருக்கே..மக்களே உஷார்!

    ReplyDelete
  10. வர வர லோ பட்ஜெட் படமா பாக்குறீங்க... அடுத்து பதிவாவது பிரம்மாண்ட பொன்னர் சங்கர் விமர்சனம் போடுங்க!

    ReplyDelete
  11. @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

    நன்றி ரமேஷ் சார்

    ReplyDelete
  12. @ நா.மணிவண்ணன்

    நண்பா கடைசி வரியை கவனிக்கவும் //ரொம்பவும் மோசம் என்று கூறமுடியாது// அப்பட் என்றால் மோசம் என்றுதானே அர்த்தம்? படத்தின் கதை நன்றாக உள்ளது, எடுத்த விதம்தான் சீரியல் மாதிரி ஆகிவிட்டது, சரி சரி லூஸ்ல விடுங்க :-)

    ReplyDelete
  13. @ செங்கோவி

    மோனி உங்களுக்கு குட்டியா? இருங்க தங்கமணிகிட்ட சொல்றேன் :-) அடுத்த கேள்விக்கு பதில் மணிக்கு சொன்னதுதான்...

    ReplyDelete
  14. @ ! சிவகுமார் !

    சிவா நீங்க லேண்ட்மார்க்குல நெஞ்சுக்கு நீதி புஸ்தகம் வாங்கி தர டிரை பண்ணும் போதே நான் உசாராயிட்டேன் :-) அவ்வளவு சீக்கிரம் சிக்குவனா? இருந்தாலும் உங்களுக்காக பொன்னர் சங்கர் பார்க்க டிரை பண்றேன்...

    ReplyDelete
  15. படம் இண்ட்ரஸ்டின்காதான் இருந்தது. ஆனால் படத்தில் அழுத்தமான காட்சிகள் இல்லாதது குறை.

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!