(கவுண்டமணியும் செந்திலும் பிளாக்கரா இருக்காங்க, கவுண்டமணி ரொம்ப நாளா பிளாக் எழுதாம இருக்காரு, ரொம்ப நாள் ஆச்சேன்னு பிளாக் பக்கம் போய் பார்க்கலாம்னு இரண்டு பேரும் நெட் செண்டருக்கு போறாங்க)
கவுண்டமணி : அப்பப்பா என்ன வெயில் என்ன வெயில் ஒரே குஷ்ட்டமப்பா, ச்சீ கஷ்ட்டமப்பா, அலோ கடைக்காரரே ஒரு சிஸ்டம் கொடுங்க, பிளாக் படிக்கனும்
செந்தில் : உள்ள ஏசி இருக்குதுங்கலா (கடைக்காரரை பார்த்து)
கவுண்டர் : அடி செருப்பால, நீ கொடுக்கற 20 ரூபாய்க்கு ஏசி வேணுமா? மூடிட்டு வா நாயே, உள்ள போ நாயே
(கம்ப்யூட்டர் முன்னால் இருவரும் அமர்ந்து கம்ப்யூட்டரை ஆன் செய்கிறார்கள்)
கவுண்டர் : டேய் ஒண்டிபுலி ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கேன், ஒரு நல்ல பதிவா பார்த்து ஓப்பன் பன்ணுடா, படிக்கலாம்
செந்தில் : அண்ணே என் பிளாக் ஒப்பன் பண்ணுங்கன்னே, நல்ல பதிவா போட்டிருக்கேன்
கவுண்டர் : ஏண்டா நான் நல்லா இருக்கறது உனக்கு புடிக்கலையா,ஏண்டா ஆரம்பத்துலேயே சங்கு ஊதற
(கவுண்டர் ஓப்பன் பண்ணியதும், மெயிலிலும், சாட்டிங்கிலும் நண்பர்கள் வந்து தங்களுடைய பதிவை படிக்குமாரு, ரிக்வெஸ்டும், நியூஸ் லெட்டரும் அனுப்புகிறார்கள்)
கவுண்டர் ; பார்த்தியாடா அண்ணனோட மதிப்பை, எத்தனை பேரு பதிவு எழுதி வச்சுட்டு அண்ணனுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க பாரு, இப்பயாச்சும் என் மதிப்பு உனக்கு புரிஞ்சுதா, இவங்க பதிவ எல்லாம் கூட படிச்சிரலாம்டா சோசியல் மேட்டரு பண்ணிரலாம், ஆனா கேப்டன பத்தி ஒருத்தன் பதிவ எழுதி வச்சிருக்காண்டா, அத அவனாலயே படிக்க முடியலயாம், என்ன படிக்க சொல்றான், நான் என்ன சாகப்போறேன்னு அவன்கிட்ட சொன்னனா? மவனே அவன்மட்டும் என் கையில கிடைச்சான்...
செந்தில் ; அதவிடுங்கண்ணே, என்னோட பதிவ படிச்சு பாருங்கன்னே, ரொம்ப நல்லா இருக்கும்.
கவுண்டர் : டே நாயே, நான் மறுபடியும் சொல்றேன், ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கேன், நல்ல பதிவா படிக்கலாம்னு, என்னை கொலகாரனாக்கிராதே
செந்தில் ; அட என்னங்கன்னே, நீங்க நம்பவே மாட்டீங்கறீங்க, நான் நல்ல பதிவாதான் போட்டு இருக்கேன், அதுவும் என்னோட சொந்த அனுபவ பதிவு
கவுண்டர் : சொந்த அனுபவத்த பதிவா போட்டிருக்கியா? அது என்னடா நாயே அனுபவம்?
செந்தில : அதுவான்னே, காலையில எங்கப்பா வடகம் காயப்போட்டுட்டு இருக்கும் போது ரெண்டு வெள்ளைக்காக்கா வந்து வடகத்த தூக்கிட்டு செய்யின்ன்னு பறந்து போயிருச்சுன்னே, அததான் பதிவா போட்டு இருக்கேன்.
கவுண்டர் ; எப்படி பறந்து போச்சு?
செந்தில : சொய்யின்னு...
கவுண்டர் : இப்ப நீயும் அப்படித்தான் பறக்க போற பாரு...
(கவுண்டமணி செந்திலை எட்டி உதைக்கிறார், செந்தில கேபினுக்கு வெளியே போய் விழுகிறார், பக்கத்து கேபினில் உள்ளவர்கள் எட்டி பார்க்கிறார்கள்)
கவுண்டர் ; அப்படியே ஓடி போயிருடா, இந்த பக்கம் மறுபடியும் வந்த கொத்த வச்சு குறுக்காலயே வெட்டி போட்டுடுவேன்
செந்தில் : ஏண்னே உதைச்சீங்க, பக்கத்து கேபின்ல இருந்து ரெண்டு பொண்ணுங்க எட்டி பார்க்குறாங்க, எனக்கு மெசேஜ் பிராப்ளமா இருக்குதுல்ல
கவுண்டர் : என்ன பிராப்ளமா இருக்குது?
செந்தில் : மெசேஜ் பிராப்ளம், அதானே இந்த பசங்க எல்லாம் பொண்ணுங்க முன்னாடி அவமானப்பட்டா சொல்லுவாங்களே, இது கூட தெரியலயா? அய்யோ அய்யோ
கவுண்டர் ; டே நாயே அது இமேஜ் பிராப்ளம்டா, அய்யோ ராமா என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்களோட எல்லாம் கூட்டு சேர வைக்கற..
செந்தில் : சரி சரி அதவிடுங்க, என்னோட பதிவ படிங்க (செந்தில் பதிவை ஓப்பன் பண்ணுகிறார்)
கவுண்டர் : இவன் விடமாட்டாண்டா, என்ன சாகடிக்காம விடமாட்டான் போலருக்கு, சரி படிச்சு தொலைக்கிறேன், ஒப்பன் பண்ணி தொலை.
கவுண்டர் படிக்க ஆரம்பிக்கிறார்
இய்ய்ய்ய்
ஆஆஆ
பாதி பதிவை படித்ததுமே
முடியலயே...
கர்ர்ர்ர்ர்
செந்திலை பார்த்து முறைக்கிறார், செந்தில் முழிக்கிறார்..
கவுண்டர் : படிச்சு முடிச்சிட்டண்டா நாயே
செந்தில் : எப்படின்னே இருந்தது?
கவுண்டர் : ம்ம்ம், ரொம்ப கேவலமா இருந்த்து, இதெல்லாம் ஒரு பதிவாடா? டொட்டடோ, டொட்ட்டோ, டொட்ட்டொட்ட்டோங்கற மாதிரி இது ஒரு பதிவு? கர்ர்ர்ர்ர்ர்ர், த்தூதூதூ..
(காறி துப்புகிறார், எச்சில் செந்திலின் மேல் படுகிறது)
செந்தில : (முகத்தை துடைத்தபடி) உங்களுக்கு பொறாமைன்னே, நான் பிரபல பதிவர் ஆயிருவேண்ணு
கவுண்டர் : ஆமா இவரு பெரிய காந்தியடிகள், சத்திய சோதனை புஸ்தகம் எழுதிட்டாரு, நாங்க பொறாமைபடறதுக்கு, போ நாயே
செந்தில் : சரி சரி படிச்சது படிச்சிட்டீங்க, கமெண்டு போட்டுட்டு போங்க
கவுண்டர் : கமெண்டா? எதுக்குடா நாயே?
செந்தில் : ஒரு பதிவ படிச்சா அத பாராட்டி நல்லா இருக்குதுன்னு கமெண்டு போடனும்னே.
கவுண்டர் : நான் எப்படா உன் பதிவு நல்லா இருக்குதுன்னு சொன்னேன்?
செந்தில் : நல்லா இருந்தாலும், நல்லா இல்லாட்டியும் நல்லா இருக்குது, அருமை, சூப்பர், வாழ்த்துக்கள் இப்படின்னு போடனும்னே
கவுண்டர் : முடியாதுடா, நல்லா இருக்குதுன்னு நான் போட மாட்டேன்டா.
செந்தில : அதெல்லாம் முடியாது, நீங்க போட்டே ஆகணும் (கெஞ்சுகிறார்)
கவுண்டர் : சரி, சின்ன பையன் ஆசைப்பட்டுட்ட போய் தொழ, இந்தா நல்லா இருக்குதுன்னு கமெண்ட் போட்டாச்சு
செந்தில் : ஹி ஹி ரொம்ப தேங்க்ஸ்சுங்கன்னே..
கவுண்டர் : ரொம்ப பக்கத்துல மூஞ்சிய காட்டாதடா, பயமா இருக்கு, சரி அப்புறமென்ன, அடுத்த பதிவ ஓப்பன் பண்ணு..
செந்தில் : என்னன்னே அதுக்குள்ள கிளம்பிட்டீங்க?
கவுண்டர் : அப்புறம் என்னடா பண்ண சொல்றே? உன் பிளாக்குலயே இருந்து கிடாவெட்டி பூஜை போட்டு சாமி கும்புட சொல்றியா?
செந்தில் ; இல்லனே, இன்னும் நீங்க ஓட்டு போடவே இல்லையே?
கவுண்டர் : ஓட்டா எதுக்குடா?
செந்தில் : அண்ணே பதிவ படிச்சிட்டு கமெண்ட் போட்டா மட்டும் போதாது, ஓட்டும் போடனும்.
கவுண்டர் ; டேய் அண்ணனுக்கு அதுக்கெல்லாம் நேரமில்லைடா, டெல்லி புரோகிராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன், சீக்கிரம் அடுத்த பதிவ ஒப்பன் பண்ணு.
செந்தில் ; அதெல்லாம் முடியாதுன்னே, நான் உங்க பதிவு எல்லாத்துக்கும் கமெண்டு ஓட்டு எல்லாம் போட்டிருக்கேன், அதனால நீங்களும் என்னோட பதிவுக்கு போட்டே ஆகணும்
கவுண்டர் : டேய் என்ன கொலகாரனாக்கிராத, எனக்கு நேரமும் இல்ல, உன் பதிவும் புடிக்கல, மரியாதையா விட்டுடு
செந்தில் ; அதெல்லாம் முடியாது நீங்க ஓட்டு போட்டே ஆகணும், இல்லைன்னா நடக்குறதே வேற
(செந்தில் ஆவேசமாகிறார்)
கவுண்டர் : இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு நீ கொந்தளிக்கற, உட்காரு, கோவப்படாத, இப்ப என்ன நான் ஓட்டு போடனும், அவ்வளவுதான, ஓட்டு போடறேன் விடு, சரி இந்த ஓட்டு வாங்கி என்ன பண்ண போற?
செந்தில் ; என்னன்னே இப்படி சொல்லிட்டீங்க, நிறைய ஓட்டு வாங்குனாதான் நம்மோட பதிவு இண்ட்லி, தமிழ்மணம்னு திரட்டியில முண்ணனியில வரும், நமக்கு நிறைய ஹிட்ஸ் கிடைக்கும்.
கவுண்டர் : ஹிட்ஸ்ஸா, எது திருப்பாச்சியில நம்ம டாக்டர் தம்பி ஒருத்தன கொல்றதுக்கு யூஸ் பண்ணுவாறே அதா?
செந்தில் : அதில்லைன்ணே, இது வேற, இது பதிவுலக ஹிட்ஸ்
கவுண்டர் : என்ன எழவோ இருந்துட்டு போகட்டும், நானும் ஓட்டு போட்டு தொலைக்கிறேன், இந்த பதிவ படிச்சு எத்தனை பேருக்கு வாந்தி பேதியாக போகுதோ, அதுசரி இந்த ஹிட்ஸ்ஸ வாங்கி என்ன பண்ணப் போற?
செந்தில் : ஒண்ணுமில்லன்னே, சும்மா ஒரு வெளம்பரம்..
கவுண்டர் : வெளம்பரமா? நீ எழுதற ஒண்ணு ரெண்டு மொக்கைக்கு எதுக்கடா இந்த விளம்பரம், அந்த சினிமாக்காரங்கதான் ஆ வூன்னா தனக்குதானே போஸ்டர் ஒட்டி செவுத்த நாறடிக்கறாங்க ஒன்னுமே கிடைக்கலீன்னா பொறந்த நாள் கொண்டாடுரானுங்க, அதுவும் 33 வயசுக்கு மேல போறாங்களான்னா போக மாட்டேங்குறாங்க, 33 லயே நிக்குறானுங்க, நாட்டுல இவனுங்க மட்டும்தான் பொறந்தானுங்களா? நாம எல்லாம் தேவையில்லாம பொறந்துட்டமா?
செந்தில் : இங்க பாருங்க என்ன பத்தி தப்பா பேசுங்க, என்னோட பதிவ பத்தி மட்டும் தப்பா பேசுனீங்க, கடிச்சு வெச்சிடுவேன்
கவுண்டர் : அய்யோ வேண்டாம்டா சாமி, நீ செஞ்சாலும் செய்வ, எங்கடா ஒட்டு போடனும் சொல்லுடா
செந்தில் : பிளாக்குக்கு கீழ பாருங்கன்னே, லைனா இருக்குதுல்ல அதுலதான் ஓட்டு போடனும்
கவுண்டர் : அடங்கொன்னியா, என்னடா இது பழனி படிக்கட்டு மாதிரி இவ்வளவு நீளமா இருக்குது..
செந்தில் : அதாண்ணே, அதுதான் ஓட்டுபட்டை, இண்ட்லி, தமிழ்மணம், உலவு, தமிழ்10 இப்படி எல்லாமே இருக்குது, எல்லாத்துலயும் ஓட்டு போடுங்கன்னே
கவுண்டர் : எல்லாத்துலயுமா, இதுல எல்லாத்துலயும் ஓட்டு போடனும்னா ஒரு மாசம் ஆகும் போலிருக்கே, என்னால அத்தனை எல்லாம் போட முடியாது, இந்தா ஒன்னுல போட்டுட்டேன்
செந்தில் : அதெல்லாம் முடியாது, எல்லாத்துலயும் போடுங்க
கவுண்டர் : முடியாதுங்கறேன்
செந்தில் : ஓட்டு போடுங்க
கவுண்டர் : முடியாதுடா நாயே
செந்தில் : மரியாதையா ஓட்டு போடுங்க, இல்லேன்னா நடக்கறதே வேற
கவுண்டர் : அடி நாயே, போனா போகுதுன்னு பார்த்தா ஓவரா லவுட்ட கொடுக்கறயா (எட்டி உதைக்கிறார்)
செந்தில் பறந்து போய் விழுகிறார்
செந்தில் : அய்யோ அண்ணே தூக்கி விடுங்கன்னே
கவுண்டர் : நாலு வீட்டுல பொறுக்கி திங்கற நாயிக்கு லொல்ல பாரு
செந்தில் : அய்யோ அண்ணே
கவுண்டர் : எகத்தாளத்த பாரு
செந்தில் : அண்ணே எந்திரிக்க முடியலன்னே
கவுண்டர் : லோலாய்தனத்த பாரு
செந்தில் : அண்ணே முடியலன்னே தூக்கி விடுங்கன்னே
கவுண்டர் : போ நாயே அப்படியே உருண்டு போ நாயே, உங்கப்பன் எங்கயாவது நண்டு வறுத்து தின்னுட்டு இருப்பான் அவன்கிட்ட போய் தூக்கி விட சொல்லு, இனிமே என் கண்னுல நீ பட்ட, பர்ஸ்ட் டெட் பாடி நீதாண்டி..!
ஆம்.. அப்படியா...
ReplyDeleteநண்பா சரிதான் ,பதிவுலகத்தில இருக்கிறவுங்க எல்லாத்தையும் ஓட்டிடீங்க ,ஆனா கொஞ்சம் அதிகமா ,அண்ணன் சி ,பி .செந்தில் குமார ஓட்டுன தெரியுதே (ஏதோ நம்மளால முடிஞ்சுது )
ReplyDelete///
ReplyDeleteவெளம்பரமா? நீ எழுதற ஒண்ணு ரெண்டு மொக்கைக்கு எதுக்கடா இந்த விளம்பரம், அந்த சினிமாக்காரங்கதான் ஆ வூன்னா தனக்குதானே போஸ்டர் ஒட்டி செவுத்த நாறடிக்கறாங்க ஒன்னுமே கிடைக்கலீன்னா பொறந்த நாள் கொண்டாடுரானுங்க, அதுவும் 33 வயசுக்கு மேல போறாங்களான்னா போக மாட்டேங்குறாங்க, 33 லயே நிக்குறானுங்க, நாட்டுல இவனுங்க மட்டும்தான் பொறந்தானுங்களா? நாம எல்லாம் தேவையில்லாம பொறந்துட்டமா?///
எப்படியோ மொத்த பதிவர்களையும் கலாய்ச்சாச்சி...
நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்..
@ # கவிதை வீதி # சௌந்தர்
ReplyDeleteவாங்க செளந்தர் சார், நான் யாரையும் கலாய்கல, கவுண்டமணி செந்தில் பிளாக்கரா இருந்தாங்கன்னா எப்படி இருக்கும்னு யோசிச்சேன், அதுதான் இந்த பதிவு,அவ்வளவுதான் நீங்க வேற ஏத்திவிட்டுடீங்க, என்ன கொல்ல போறாங்க பாருங்க :-)
@ நா.மணிவண்ணன்
ReplyDeleteமணி நீங்களுமா? சிபி அண்ணன யாராவது ஓட்ட முடியுமா என்ன?
நண்பா நேத்து கொஞ்சம் 'டைட்' இன்னைக்கு நைட்டு கால் பண்றேன்
ReplyDeleteசக்சஸ் சக்சஸ்..........
ReplyDeleteஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....
இன்னைக்கு எல்லா மக்காவுக்கும் தமிழ்மணத்துல ஓட்டு போடுரதுதான் என் வேலை ஹே ஹே ஹே ஹே...
Gud one & lol post ...:))
ReplyDeleteஇப்ப என்ன பிரச்சனன்னு நீ இவ்ளோ டென்சனாவுற மாப்ள எனக்கு தெரிஞ்சாகனும்!
ReplyDelete//செந்தில் ; அதெல்லாம் முடியாதுன்னே, நான் உங்க பதிவு எல்லாத்துக்கும் கமெண்டு ஓட்டு எல்லாம் போட்டிருக்கேன், அதனால நீங்களும் என்னோட பதிவுக்கு போட்டே ஆகணும்//
ReplyDeleteமெசேஜ்? :-)
போட்டுட்டேன் பாஸ்!
ReplyDeleteரொம்ப தைரியம் மாம்ஸ் உங்களுக்கு .....:))
ReplyDeleteநல்ல வேலை ரெண்டும் பேரும் இன்னும் ப்ளாக் ஆரம்பிக்கல.
ReplyDelete@ நா.மணிவண்ணன்
ReplyDeleteஓகே மணி
@ MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteகடைசில சாதிச்சிட்டீங்க மனோ சார், வாழ்த்துக்கள்
@ தக்குடு
ReplyDeleteதேங்க்ஸ் சார்
@ விக்கி உலகம்
ReplyDeleteஒரு பிரச்சனையும் இல்ல மாப்ள, சும்மாதான்...
@ ஜீ...
ReplyDeleteஓகே ஜீ, நன்றி ஜீ
@ karthikkumar
ReplyDeleteஎதுக்கு மச்சி?
@ ! சிவகுமார்
ReplyDeleteஅதான் நீங்க ஆரம்பிச்சிட்டீங்கள்ள சிவா :-)
நல்லா இருந்தாலும், நல்லா இல்லாட்டியும் நல்லா இருக்குது, அருமை, சூப்பர், வாழ்த்துக்கள் இப்படின்னு போடனும்னே
ReplyDelete......அருமை, சூப்பர், வாழ்த்துக்கள் .... :-))))
@ Chitra
ReplyDeleteநன்றி சித்ரா மேடம்
இன்னும் சிரிப்பு நிக்கல.. இன்னும் சிரிச்சிட்டு இருக்கேன்.
ReplyDeleteஉங்க வீட்டு உள்குத்து, எங்க வீட்டு உள்குத்து இல்ல உலகமகா உள்குத்து.
ReplyDeleteகுத்துங்க எசமான் குத்துங்க. நாங்க அசரவே மாட்டோம்.
@ !* வேடந்தாங்கல் - கருன் *!
ReplyDeleteநன்றி கருன்
@ பாலா
ReplyDeleteவாங்க பாலா, இதுல எந்த குத்தும் இல்ல, Just for Fun
நிறைய பரிட்சயமான வசனங்கள தேவைகேற்ப use பண்ணியிருக்கீங்க... நல்லாருக்கு...மொய்க்கு மொய் conceptக்கு எதிரான போராட்டமோ...?
ReplyDeleteஇரவு.....
ReplyDeleteஎத்தன நாளா இப்படி எழுதனும்னு நெனச்சுட்டு இருந்திங்க?
செம ரகளையா இருக்குய்யா.....
அருமை, சூப்பர், வாழ்த்துக்கள்
ReplyDeleteஎப்படி தனியா உட்காந்து சிரிக்க விட்டுடின்களே .... நல்ல காமெடி போங்க
ReplyDeleteபதிவ படிக்காமலேயே ஏதாவது ரெண்டு லைன காப்பி பண்ணி ஹா ஹா ஹா போடனும்’
ReplyDelete//வெளம்பரமா? நீ எழுதற ஒண்ணு ரெண்டு மொக்கைக்கு எதுக்கடா இந்த விளம்பரம், அந்த சினிமாக்காரங்கதான் ஆ வூன்னா தனக்குதானே போஸ்டர் ஒட்டி செவுத்த நாறடிக்கறாங்க ஒன்னுமே கிடைக்கலீன்னா பொறந்த நாள் கொண்டாடுரானுங்க, அதுவும் 33 வயசுக்கு மேல போறாங்களான்னா போக மாட்டேங்குறாங்க, 33 லயே நிக்குறானுங்க, நாட்டுல இவனுங்க மட்டும்தான் பொறந்தானுங்களா? நாம எல்லாம் தேவையில்லாம பொறந்துட்டமா?
//
ஹா ஹா ஹா
ஆமா இந்த செந்தில் நம்ம செந்திலா???????????????????????????
ReplyDelete