Wednesday, April 6, 2011

சட்டப்படி குற்றம் சினிமா இல்லைங்கோ..!



இதோ எலக்சனுக்கு இன்னும் ஒருவாரம்தான் இருக்கு, எங்களுக்கு ஓட்டு போடுங்க, உங்களுக்கு ஓட்டு போடுங்க, அவங்களுக்கு ஓட்டு போடுங்கன்னு எப்பவுமே ஹைடெசிபல்ல அலர்ற சத்தம் இந்த வருசம் குறைவா இருக்கு, எங்க பார்த்தாலும், எந்த வீட்டு சுவத்த பார்த்தாலும் உதயசூரியன், இரட்டை இலை, மாம்பழம், கைன்னு வரைஞ்சு வச்சு நாஸ்தியாக்கி இருப்பாங்க, அந்த கொடுமையும் இந்த வருசம் இல்ல, எலக்சன் நடக்க போகுதுங்கறதே டிவிய பார்த்தாதான் தெரியுது, அந்தளவுக்கு எலக்சன் கமிசனோட கெடுபிடி இந்த வருசம் அதிகமா இருக்கு

நான் கூட என்னடா இது ஸ்கூல் பசங்க எக்சாமுக்கு படிக்கர நேரத்துல எலக்சன் வச்சிருக்காங்களே பிரச்சாரம் பண்ணியே தூங்க விடாமயும், படிக்க விடாமயும் பன்ணிருவாங்களே, பசங்க எப்படி படிப்பாங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன், தேர்தல் ஆணையத்தோட நடவடிக்கையால எந்த தொல்லையும் இல்லை, அதுக்கு முன்னாடியே ரெண்டு கூட்டணியிலும் பிச்சுக்கோ புடிச்சுக்கோங்கற நிலைமையில இருந்தது வேற விசயம், எப்படியோ நிம்மதியா சரியான முறையில தேர்தல நடத்திகிட்டு இருக்கற தேர்தல் கமிசனுக்கு வாழ்த்துக்கள்

சரி யாருக்கு ஓட்டு போடலாம்னு பார்த்தா எங்கயும் யாருக்கும் ஆதரவான அலையோ இல்லை எதிர்ப்பான அலையோ அடிக்க மாட்டேங்குது, தேர்தல் ஆரம்பிச்ச நேரத்துல ஸ்பெக்ட்ரம் பிரச்சனையால திமுகவுக்கு எதிர்ப்பான நிலைதான் அதிகமா இருந்தது, ஆனா அம்மா கூட்டணியவே கதிகலங்க வெச்சதும், வைகோவை போய்க்கோன்னு சொன்னதும் அதிமுக அணியையும் கதிகலங்க வெச்சிருச்சு

சரி எப்படியோ பெவிகால் எல்லாம் போட்டு ரெண்டு பக்கமும் கூட்டணியை ஒட்டி ஒப்பேத்தி பிரசாரத்துக்கு கிளம்புனாங்க, சரி நல்ல படியா பிரசாரம் பண்ணி எதிர் அணியை தோற்கடிப்பாங்கன்னு பார்த்தா நம்ம கேப்டன் சரக்க போட்டுட்டு சினிமா நினைப்புல அடிதடி ஆக்சன் காட்சிகள அரங்கேத்திகிட்டு இருக்கராரு, இதுதான் சான்சுன்னு வடிவேலும் போட்டு பொல பொலன்னு பொளக்கராரு நம்ம கேப்டன

சும்மா சொல்லக்கூடாது வடிவேலு பிரசாரத்த தேமுதிக கட்சி பேரயே அது என்ன பேரு நாக்க முக்காவா தேக்கமுக்காவான்னு ஆரம்பிச்சப்பவே தெரிஞ்சு போச்சு, இந்த எலக்சன்ல பலபேரோட மானமும் கப்பல் ஏறப்போகுதுன்னு, மக்களும் லைவ் ஷோ கலக்க போவது யாருன்னு பார்த்துகிட்டு இருக்காங்க

இப்படி ஆளாளுக்கு கேப்டன போட்டு கிழிகிழின்னு கிழிக்கறீங்களே, பாவங்க அவரு, அவரு என்ன வேணுமுன்னா செய்யறாரு, உச்சிவெயில்ல கட்டிங் அடிச்சிட்டு நின்னா மப்பேறாம என்ன பண்ணும்? இது தெரியாத எதிர்கட்சிகாரங்க புரியாம பேசிகிட்டு இருக்காங்க, சரி அவங்கதான் பேசுறாங்கன்னா நீங்களுமா கேப்டன் எடுத்து கொடுக்கறது? அண்ணா ஆவி, எம்ஜியார் பூமின்னு :-)

சரி வடிவேலுதான் ஓவரா பேசுறாருன்னு அவருக்கு ஆப்போசிட்டா சிங்கமுத்துவ இறக்குனாங்கப்பா, அவரும் முடிஞ்சவரைக்கும் பேசிபார்க்குறாரு, ஆனாலும் வடிவேல் அளவுக்கு ரீச்சாக முடியலேங்குறது நிதர்சனம், ஏன்னா வடிவேல் பேச்சை சன் டிவி, கலைஞர் டிவில பிளாஸ் நியூஸ் ரேஞ்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கறாங்க, ஜனங்ககிட்ட அதிக ரீச்சே இந்த ரெண்டு டிவியும்தான், ஆனா ஒன்னுங்க இந்த ரெண்டு காமெடியங்களும் ரொம்ப உசாருங்க, ரெண்டு பேருமே கலைஞரயோ ஜெயாவையோ திட்டுறது இல்லை, ஒருவேளை நாளைக்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் பிரச்சனை இல்லை பாருங்க, இந்த ரெண்டு காமெடியங்களாலயும் உண்மையிலேயே காமெடியங்களா மாறிப்போனது இரண்டு கழகங்களும்தான்

ஆனாலும் ஜெவுக்குதான் தலைவலி ஜாஸ்தி போல, கூட்டணி தலைவரோட மானத்த காப்பாத்த இன்னொரு பேச்சாளர இறக்கிவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுடுச்சு, சரி யாரோ எக்கேடு கெட்டு போகட்டும் கலைஞருதான் ஸ்பெக்ட்ரம் ஊழல் பண்ணிட்டாரேன்னு அம்மாவுக்கு ஓட்டு போடலாமான்னு யோசிச்சா, போன பத்து வருசமா எங்க தொகுதியில எம் எல் ஏவா இருந்த செ.ம. வேலுச்சாமியோட ஞாபகம் வருது, நான் அவரோட மூஞ்சிய கடைசியா பார்த்ததே அம்மா ஆட்சியில சட்டசபைல கைகட்டி வாய் பொத்தி அதிமுககாரங்களோட இன்னபிற யோகாசனங்களும் செஞ்சுகிட்டு இருந்த சமாதி நிலையிலதான்

அதுக்கப்புறம் அவர நான் பார்த்ததே இல்லை, ஒவ்வொரு ஊருலயும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்னு ஒன்னு இருக்கும், அது எந்த மண்ணுக்கு கட்டி வச்சிருக்காங்களோ தெரியல, எந்த எம் எம் ஏயும் அங்க வந்து உட்கார்ந்து பார்த்ததா சரித்திரமே இல்லை, ஒவ்வொரு தொகுதியிலயும் போட்டியிடறது யாருன்னு பார்த்தா அடுத்த தொகுதி ஆளா இருப்பான் இல்லைன்னா அடுத்த மாவட்டத்து ஆளா இருப்பான், இப்படி சம்பந்தமே இல்லாத ஆளுகளா பார்த்து நிறுத்துனா அவன் எப்படி தொகுதிக்குள்ள வருவான், சும்மாவே எந்த எம் எல் ஏவும் தொகுதிப்பக்கமே வரதில்லை, சொந்த ஊரா இருந்தா வீட்டுக்காவது வருவான், ஆனா எங்க ஊரு எம் எல் ஏவ பார்த்தீங்கன்னா எங்க பக்கத்து ஊரு சூலூர்க்காரர், பத்து வருசம் எட்டி பார்க்கவே இல்லை, ஒரே ஒரு தடவை வந்தாரு

அது எப்பன்னா போன எலக்சனுக்கு ஓட்டு கேட்குறதுக்கு, முதல்ல அவரு யாருன்னே யாருக்கும் தெரியல, விசயம் தெரிஞ்சதும் எங்க பொண்டு புள்ள முதக்கொண்டு குஞ்சு குளுவான்களும் வரைக்கும் கையில தொடப்பகட்ட, செருப்பு, சீமாரு எல்லாம் எடுத்துட்டு வந்துட்டாங்க அடிக்கறதுக்கு, தலைவரு பயந்து போய் பிரச்சார வேனுக்குள்ளயே உட்கார்ந்துட்டாரு, அப்புவும் ஜனங்க விடல, அவரோட வேனு மேல தொப்பு தொப்புன்னு அடி விழுது, விட்டா போதும்னு யூ டர்ன் அடிச்சிட்டு கிளம்புச்சி பிரச்சார வேனு,பின்னாலயே சினிமால காட்டற மாதிரி ஹேன்னு கத்திகிட்டே சில்வண்டு பசங்க முக்கு வரைக்கும் தொறத்தி விட்டுட்டு வந்தாங்க

அப்புறம் எப்படி அவரு ஜெயிச்சாருன்னு கேட்குறீங்களா? அது ரொம்ப சிம்பிள், ஒரு தென்னந்தோப்புல மீட்டிங், கேஸ் கேஸா குவாட்டர், கொஞ்சம் கரண்சி, மண்ணின் மைந்தர்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிட்டாங்க, அந்தளவு ஜாதிப்பாசம் கொஞ்சம் ஜாஸ்தி எங்காளுங்களுக்கு, இப்ப அதே ஜாதிப்பாசத்தை நம்பிதான் கலைஞரும் கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு சீட் கொடுத்திருக்காரு, சரி பத்து வருசம் எம் எல் ஏவா இருந்து ஒரு சாதனையும் பண்ணலையான்னு கேட்குறீங்களா? கண்டிப்பா பண்ணி இருக்காரு, அது என்னன்னா அம்மா ஆட்சியில அஞ்சு வருசம் முழுசா கால்நடைதுறை அமைச்சரா இருந்தாரு, அப்ப ஒவ்வொரு அமைச்சரோட டவுசரையும் புடிங்கி விட்டுகிட்டு இருந்த காலமது, அவரோட டவுசரை அஞ்சு வருசம் காப்பாத்தி இருக்காரே இதைவிட பெரிய சாதனை வேணுமா என்ன?
நல்லவேளை இந்த தடவை சூலூர தனி தொகுதியா அறிவிச்சுட்டாங்க, ஜெவும் வழக்கம் போல நம்ம தலைவர சூலூர் வேட்பாளரா அறிவிச்சாங்க, நாம தப்பிச்சோம், சூலூர்க்காரங்க மாட்டிகிட்டாங்கன்னு நினைச்சா கடைசியில அந்த தொகுதிய கேப்டன் வாங்கிட்டாரு, சரி பக்கத்தூர்காரங்கதான நல்லா இருக்கட்டும்

கலைஞருதான் இலவசத்த கொடுத்து நாட்ட கெடுக்க்றாருன்னு நினைச்சா, இப்ப ஜெவும் ஆரம்பிச்சிட்டாங்க, நிலம், வீடு, டிவி, கேஸ்சுன்னு ஆரம்பிச்சு, இப்ப மிக்சி, கிரைண்டர், பேனு, இலவச பஸ் பாசு, தாலிக்கு, தங்கம், ஆடு மாடு இப்படி போய்கிட்டே இருக்கு, ஏன் இவ்வளவு கஷ்ட்டப்பட்டு ஒவ்வொரு எலக்சனுக்கும் ஒவ்வொன்ன குடுத்துகிட்டு இருக்கணும், பேசாமா காலையில இட்லி, மத்தியானம் சாப்பாடு, ராத்திரிக்கு குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்துட்டா பிரச்சனையே முடிஞ்சது, கொடுமைடா சாமி அவங்கவங்க செய்ய வேண்டிய கடமைக்கு பேரு சாதனையாம்

ஆனா அதிலயும் ஒரு சின்ன பிரச்சனை வரும் போல, கலைஞர் வாரத்துக்கு ஒரு நாள் பிரியாணி போட்டா, அம்மா நான் ஆட்சிக்கு வந்தால் வாரத்துக்கு ஐந்து நாட்கள் பிரியாணி போடுவேன்னு போட்டி பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க, மொத்தத்துல தமிழ்நாடே புழல் ஜெயில் மாதிரி ஆகப்போகுதுன்னு வடகாசி ஜோசியர் சொல்லி இருக்காருங்க, ஒரே ஒரு சின்ன வேண்டுகோள் மட்டும்தாங்க என் தரப்புல இருந்து, பேனோ மிக்சியோ கிரைண்டரோ எத வேணாலும் கொடுங்க ஆனா தயவுசெஞ்சு கலைஞர் அஞ்சு விரல காட்டுற மாதிரியும், ஜெயா இரண்டு விரல காட்டுற மாதிரியும் மட்டும் போட்டோ போட்டுடாதீங்க, ஏண்ணா ராத்திரி தூங்கலாம்னு படுத்துட்டு விட்டத்துல சுத்துற பேனுல இவங்க மூஞ்சிய பார்த்தா தூக்கம் வருமாங்க?

பத்திரிக்கைகாரங்க ஸ்பெக்ரத்துக்கு கொடுக்கற முக்கியத்துவம் அளவுக்கு கலைஞர் காப்பீடு திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கலையேன்னு வருத்தமா இருக்கு, ஸ்பெக்ட்ரத்துல அதிகபட்சமா கமிசனா ஒரு பத்தாயிரம் கோடி இல்ல இருபதாயிரம் கோடி வாங்கியிருப்பாங்களா, அதுல கூட்டணி கட்சிகளுக்கெல்லாம் பிரிச்சு கொடுத்தது போக மிச்சம் எவ்வளவுங்க எஞ்சி இருக்க போகுது? ஆனா கலைஞர் காப்பீடு திட்டம் பார்த்தீங்கன்னா ஒரே ஸ்ட்ரோக்குல 500 கோடி ஆயிரம் கோடின்னு பிரிமீயம் கட்டுறாங்க, மொத்தமா அஞ்சு வருசத்துல எவ்வளவு கட்டி இருப்பாங்க, இந்த திட்டம் தொடர்ந்து நடைபெறும் போது எத்தனை கோடி கிடைக்கும், எவ்வளவு கமிசன் கிடைக்கும்?

இப்படி பல ஆயிரம் கோடிகளை தனியார் காப்பீடு நிறுவனத்துக்கு கொடுக்கறதுக்கு பதிலா அந்த பணத்த வச்சு தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்கி அரசு மருத்துவமனையவே மேம்படுத்துனா எவ்வளவு நல்லா இருக்கும்? அரசு மருத்துவமனை இல்லாத இடங்கள்ள தேவையான சுகாதார மையங்களை அமைச்சும் கொடுத்தா ஜனங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதா இருக்கும்? எதுக்கு தேவையில்லாம தனியார் நிறுவனத்த ஊக்குவிக்கனும், கேட்டா ஏழை மக்களும் தனியார் மருத்துவமனையில சிகிச்சை எடுக்கறதுக்காமாம், அரசாங்க மருத்துவமனைய நல்லா பராமரிச்சு பணக்காரங்களும் அரசு மருத்துவமனைக்கு வர மாதிரிதான செய்யனும்? பன்றிகாய்சல் வந்த போது வேற வழி இல்லாம வந்தாங்கள்ள? இப்பவே பாதி தனியார் மருத்துவமனைகள் காப்பீட்டு திட்டத்துல இருந்து விலகிருச்சாம், தினமலர்ல போட்டு இருந்தாங்க, இன்னொன்னு ஸ்டார் நிறுவனமே கனிமொழியிதுன்னு பேசிக்கிறாங்க, உண்மையான்னு தெரியல

மொத்தத்துல ஜனங்க யார் நல்லவங்க, யார் நல்லாட்சி தருவாங்கன்னு யோசிக்க முடியாது, இருக்கற கொள்ளைகூட்டதுல எவன் நம்மளை அடிக்காம காசு புடுங்குவான்னு பார்த்துதான் ஓட்டு போட வேண்டி இருக்கு, யார் வந்தாலும் நம்ம கதி அதே கதிதான், இதுல நம்மாளுங்க பண்ற கூத்தும் தாங்க முடியல,

என் நண்பர் ஒருத்தரு எப்படி ஓட்டு போடுவாருன்னா யார் ஜெயிக்கப்போறாங்கன்னு எல்லாரும் சொல்றாங்களோ அவருக்குதான் ஓட்டு போடுவாரு, ஏன்னு கேட்டா இவனோட ஓட்டு வேஸ்டாகிட கூடாதாம், என்னமோ நாம போடப்போற ஒரு ஓட்டுனாலதான் அங்க ஆட்சியே அமைக்கற மாதிரி, அது உண்மையாவே இருந்தாலும் நாம என்ன சிஎம் போஸ்டுக்கா ஓட்டு போடறோம், நம்ம தொகுதியில யாரு எம் எல் ஏவா வரணும்தானே ஓட்டு போடறோம்

அப்ப நம்ம தொகுதியிலயே நிக்குறதுள்ள யார் நல்ல வேட்பாளர், யாரு படிச்சவர், யாரு நல்லவரு, நாளைக்கு தொகுதி பக்கம் எட்டி பாப்பாரா? தொகுதி பிரச்சனைய பத்தி தெரிஞ்சு வச்சிருக்காரா? தொகுதிக்கு ஏதாவது செய்வாரான்னு யோசிச்சு போடாம, யார் சிஎம்னு பார்த்து ஓட்டு போட்டா விளங்குமா? இன்னும் சிலபேரு அம்மாவுக்கு போட்டு அய்யா வந்துட்டாலும், இல்ல அய்யாவுக்கு போட்டு அம்மா வந்துட்டாலும் பீல் பண்றது, ஓட்டு வேஸ்ட்டா போச்சாம்

ஓட்டு வேஸ்ட்டா போனா என்னங்க? போனா போகட்டும் ஒரு நல்ல வேட்பாளருக்கு ஓட்டு போட்டேனு மனநிம்மதியாவது கிடைக்கும், இந்த தடவையாவது உங்க தொகுதியில நிக்குறவங்கள்ள யார் சிறந்த வேட்பாளர்னு பார்த்து ஓட்டு போடுங்க, கட்சி பாகுபாடோ, ஜாதி பாகுபாடோ, சுயேட்சைன்னோ பார்க்காதீங்க, முக்கியமா காசுக்கு ஒட்ட அடகு வைக்காதீங்க, நீங்க போட போற ஓட்டுதான் அடுத்த அஞ்சு வருசம் உங்க தொகுதியோட வளர்ச்சியவே நிர்ணயிக்க போகுது

எலக்சன் கமிசனுக்கு ஒரு சின்ன வேண்டுகோள், எலக்சன் நடக்கும் போது யாரோ சிஎம் சீட்டுல உட்காரருதுக்காக கால் கடுக்க நாள் பூரா நின்னு ஓட்டு போடுவாங்க நம்ம ஜனங்க, அவஙகள மகிழ்விக்கறதுக்காக, கலைஞர் அய்யாவுக்கு சொந்தமா கார் இல்லை, ஜெயலலிதா அம்மையார் பரம எழைன்னு அவங்க கணக்குல காட்டுன சொத்து மதிப்பையும், நிக்குற வேட்பாளர் பேருல எத்தனை கேசு இருக்கு, அது எந்த நிலைமையில இருக்குன்னும் டீடெயில்ஸ் எல்லாத்தையும் ஒட்டி வச்சீங்கன்னா ஜனங்களும் படிச்சு சிரிச்சுக்குவாங்க, இத ஏன் சொல்றன்னா கால்கடுக்க நின்னுகிட்டு இருக்கறவங்களுக்கு கால்வலி தெரியாது பாருங்க, அதுக்குதான்..!

26 comments:

  1. கலைஞர் காப்பீட்டுத்திட்டம் பற்றிய உங்கள் கேள்வி சிந்திக்க வைக்குதே..

    ReplyDelete
  2. நிக்குற வேட்பாளர் பேருல எத்தனை கேசு இருக்கு, அது எந்த நிலைமையில இருக்குன்னும் டீடெயில்ஸ் எல்லாத்தையும் ஒட்டி வச்சீங்கன்னா ஜனங்களும் படிச்சு சிரிச்சுக்குவாங்க -- நடக்குமா?

    ReplyDelete
  3. அந்த காப்பீட்டு திட்டம் மேட்டர் நல்லாத்தான் இருக்கு.. பார்ப்போம் :)

    ReplyDelete
  4. சூப்பர் கட்டுரை பாஸ்...............!

    ReplyDelete
  5. யார் வந்தாலும் நம்ம கதி அதோ கதிதான் இதுதாங்க
    இதுதாங்க உன்மை.

    ReplyDelete
  6. அப்ப நம்ம தொகுதியிலயே நிக்குறதுள்ள யார் நல்ல வேட்பாளர், யாரு படிச்சவர், யாரு நல்லவரு, நாளைக்கு தொகுதி பக்கம் எட்டி பாப்பாரா? தொகுதி பிரச்சனைய பத்தி தெரிஞ்சு வச்சிருக்காரா? தொகுதிக்கு ஏதாவது செய்வாரான்னு யோசிச்சு போடாம, யார் சிஎம்னு பார்த்து ஓட்டு போட்டா விளங்குமா?


    .......இந்த மாதிரி எல்லோரும் யோசிக்க ஆரம்பித்து விட்டால், நிச்சயம் ஒரு மாறுதல் வருமே.

    ReplyDelete
  7. நானும் வந்தேன். வாக்கிட்டேன். வருகிறேன்.

    ReplyDelete
  8. பிரிச்சி மேஞ்சிட்டீங்க போங்க...

    ReplyDelete
  9. //FOOD said...
    நானும் வந்தேன். வாக்கிட்டேன். வருகிறேன்.//

    யோவ் ஆபீசர் பதிவை கொஞ்சம் படிச்சுட்டு போங்கய்யா...

    ReplyDelete
  10. ஆழமான அலசல்..காப்பீட்டுத் திட்டம் பற்றிய வித்தியாசமான பார்வை அருமை!

    ReplyDelete
  11. @ சி.பி.செந்தில்குமார்

    நன்றி தல...

    ReplyDelete
  12. @ !* வேடந்தாங்கல் - கருன் *!

    அது நடக்கவே நடக்காது கருன், உங்கள் வருகைக்கும் கருத்துகும் நன்றி...

    ReplyDelete
  13. @ karthikkumar

    பாரு பாரு நீ நல்லா பாரு மச்சி...

    ReplyDelete
  14. @ பன்னிக்குட்டி ராம்சாமி

    மிக்க நன்றி பன்னிக்குட்டி சார்...

    ReplyDelete
  15. @ வலிபோக்கன்

    அதே பீலிங்தாங்க எனக்கும், நன்றி சார்...

    ReplyDelete
  16. @ Chitra

    அப்படி யாரும் நினைக்கறது இல்லைன்னுதான் வருத்தமே மேடம் ...

    ReplyDelete
  17. @ FOOD

    நன்றி சார்...

    ReplyDelete
  18. @ MANO நாஞ்சில் மனோ

    நன்றி மனோ சார்...

    ReplyDelete
  19. @ செங்கோவி

    நன்றி செங்கோவி...

    ReplyDelete
  20. ம்.. கலக்கல் பதிவுங்கோ...

    ReplyDelete
  21. Dear Friend..,

    kadaisi varaikkum neenga yarukku "Vote" podap poreengannu sollave Illaye???
    April-14-il aavathu solveengalaa???
    ethirpaarkkum..,

    ReplyDelete
  22. Ungal Manam Pola Nalla Aatchi Amaya VAAZHTHTHUKKAL!!!

    Athaanga..,
    Kuzhappamillaama..,
    Thongu satta sabai amaiyaama..,(Oosalaadaama)

    ReplyDelete
  23. @ பாட்டு ரசிகன்

    நன்றி பாட்டுரசிகன்...

    ReplyDelete
  24. @ Sai Gokul - வேலைவாய்ப்பு தகவல்கள்

    நண்பா, உங்கள் கமெண்டை பார்த்தால் ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவாளராக இருப்பீர்கள் என நினைக்கிரேன், தவறாக எண்ண வேண்டாம், எனக்கு இரண்டு பேர்களின் ஆட்சியினையும் பிடிக்க வில்லை, இதுவரை மாற்று அரசியல் சக்தி எதுவும் தமிழகத்தில் அமையவில்லை, நான் இந்த பதிவில் கூற விரும்புவது தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான், அந்த வேட்பாளர் எந்த கட்சியாக இருந்தாலும் சரி, நான் என்னுடைய தொகுதியில் நிற்பவர்களில் யார் தகுதியான வேட்பாளர் என பார்த்துதான் ஓட்டு போடுவேன், அவர் எந்த கட்சியாக இருந்தாலும், எந்த ஜாதியாக இருந்தாலும், தோற்பவராக இருந்தாலும் சரி, அம்மாவை நான் மிகவும் கேட்டதாக சொல்லவும், உங்கள் கருத்துக்கும், அன்புக்கும் நன்றி நண்பா :-)

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!