இன்று ஜனவரி 24 – தேசிய பெண் குழந்தைகள் தினம் ...
பணக்கார பெண்களோ, ஏழை பெண்களோ, அவர்களின் வாழ்க்கை பாதுகாப்பாக அமைய கல்வி அறிவு முக்கியம், கல்வி அறிவு உள்ள பெண்களால் எத்தகைய சூழ்நிலையிலும் சமாளித்து வாழ முடியும், காசு பணம் வரும் போகும், ஆனால் கல்வி வரும் போகாது, அத்தகைய கல்வியானது இப்பொழுது உள்ள சூழ்நிலைகளில் முழுக்க முழுக்க வியாபாரமாய் மாறி விட்ட பொழுதிலும் மிச்சம் மீதி உள்ள ஏழைக் குழந்தைகள் நம்பி இருப்பது அரசாங்க பள்ளிகளையும், அரசாங்க உதவி பெறும் பள்ளி கல்லூரிகளையும்தான், இந்த நாளில் கல்வி அறிவினை ஊட்டிக் கொண்டிருக்கும் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் இரவு வானத்தின் வாழ்த்துக்கள், குறிப்பாக மேட்டுப்பாளையம் நகரவை பள்ளி மாணவிகளுக்கும், பாரத் பாரதி அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு தெரிந்தவகையில் எந்த அரசாங்க பள்ளிகளிலும் சரியான வகையில் குறைந்தபட்சம் நல்ல முறையில் கூட கழிப்பிட வசதியினை செய்து தருவதில்லை, குறிப்பாக பெண்கள் பள்ளியில், அரசாங்க நிதியை பயன்படுத்தி பள்ளிகளில் கட்டிடம் கட்டிவிட்டு தன்னுடைய பெயரை போட்டுக் கொள்ளும் எம்,எல்,ஏக்கள் பிறகு பயன்பாட்டுக்கு வரும் பள்ளிகட்டிடங்களின் பராமரிப்பு பணியினை மேற்கொள்வதில்லை, அதையாவது தனியார் வசம் ஒப்படைத்து சிறிதளவாவது பராமரிப்பு பணியினை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன், மீண்டும் ஒருமுறை பெண் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.
இன்று ஆடுகளம் திரையிட்டுள்ள ஒரு தியேட்டர் வழியாக வரும் வாய்ப்பு கிடைத்தது, தியேட்டர் முன்னாடி பெரிய பேனர் ஒன்னு கட்டி இருந்தாங்க, ஒரு பத்து சில்வண்டு பசங்க போட்டோ போட்டு ஆடுகளம் வெற்றியடைய வாழ்த்துக்கள்னு போட்டு இப்படிக்கு கட்டுசேவல் குரூப்ஸ் அப்படின்னு போட்டு இருந்தாங்க, பாருடா பால் குடிக்கற வயசில ப்ளெக்ஸ் போட்டு வச்சிருக்கானுங்கன்னு மனசில நினைச்சுகிட்டேன், நல்ல வேளை தனுஷ் சேவல் சண்டை பத்தி படம் நடிச்சிருக்காரு, மாட்டு வியாபாரியா நடிச்சிருந்தா மாட்டுபசங்க குரூப்புன்னு வெச்சாலும் வெச்சிருப்பானுங்க, ஒருத்தனுக்கு கூட மீசை இல்லை, பத்து வயசிலயே பஞ்சு டயலாக்கு, வெளங்கிரும்......
இயக்குனர் பாலா விஷால், ஆரியாவ வச்சு அவன் இவன்னு படம் எடுத்துகிட்டு இருக்காரு, அதுல விஷால் ஒரு அரவாணியா நடிச்சுகிட்டு இருக்காரு, அந்த படம் வரதுக்கும், அந்த ஸ்டில்லு வரதுக்கும் ரொம்ப நாளாகும், அதுக்கு முன்னாடியே இங்க நான் ரிலீஸ் பண்றேன், பார்த்துக்கோங்க...
ஒரு காதல் கவிதை
நீ ஒருமுறை பார்த்தாய்
என் நெஞ்சில் முள் குத்தியது
எங்கே இன்னொரு முறை பார்
ஏனென்றால்
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டுமாம்...
ஒரு ஜோக்
ஒரு பையன் சூசைட் பண்ண போனான்
ஆனால் அவன் சாகல
ஏன்னா அவன் காதலிச்ச பொண்ணு
அப்பத்தான் அந்த வார்த்தைய சொன்னா
அந்த வார்த்தை...
எனக்கு ஒரு தங்கச்சி இருக்கு....
ஒரு பிரண்ட்சிப் கவிதை
நாம் பழகிய நாட்கள் மேகம் போல
கலைந்து சென்றாலும்
உன் நினைவுகள் என்றும்
வானத்தை போல நிலைத்து இருக்கும்
ஒரு தத்துவம்
பொய்யான உறவுகளுக்கு முன்னால் புன்னகையும் ஒரு பொய்தான்
உண்மையான உறவுகளுக்கு முன்னால் கோபம் கூட இனிமையான புன்னகைதான்...
அரசியல்...
வரும் தேர்தலில் கண்டிப்பாக தி.மு.கா கட்சிதான் ஜெயிக்கும்
இலவசமாய் கிடைக்க போவது
ஏழைகள் பயன் பெற
செல்போன்
டிவிடி பிளேயர்
வாஷிங் மெசின்
ஏர் கூலர்
எல்சிடி டிவி
ஆனால்
பெட்ரோல் லிட்டருக்கு 180 ரூபாய்
டீசல் லிட்டருக்கு 150 ரூபாய்
பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் 18 ரூபாய்
காய்கறிகள் ரூபாய் 70 – கிராம் ஒன்றுக்கு
மின்சார வெட்டு ஒரு நாளைக்கு 12 மணி நேரம்
2013 ல் 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூலம் இந்தியாவுக்கு இழப்பு 5 லட்சம் கோடிகள் இருக்கும்
அதனால என்ன கண்டிப்பா ஓட்டு போட்டுடுங்க நமக்கு ஓசி முக்கியம்ல...
எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி உதவி செய்த என்னுடைய நண்பர்களுக்கும், விஷால் படத்தினை இயக்குனர் பாலாவுக்கு தெரியாமலே படம் எடுத்து தந்து உதவிய என்னுடைய நண்பர் தளபதி சுதாகர் அவர்களுக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன், நான் ஊருக்கு செல்ல வேண்டி இருப்பதால் மீண்டும் இரண்டு நாளைக்கு என்னுடைய கடைக்கு லீவு, எனவே இரண்டு நாளைக்கு என்னுடைய தொல்லை உங்களுக்கு இல்லை...
GoodLightscraps.com
நண்பர்கள், சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என்னுடைய அட்வான்ஸ் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...
நன்றி, அன்புடன் - நைட் ஸ்கை...
ஒட்டு மட்டும் இப்ப போட்டுக்கிறேன். படிக்க அப்புறமா வாரேன்
ReplyDeleteஅந்த தத்துவம் அருமைங்கோ . அப்பறம் ஏதாவுது குஜிலி படம் போட்டிருக்கலாம் . ஏமாத்திபுட்டீங்களே நண்பா
ReplyDeleteகமர்சியல் கலக்குது மக்கா...
ReplyDeleteராசப்பா சமூக பதிவு எழுத அத்தனை திறமையும் இருக்கு. காக்டெயில் அற்புதம். கோடம்பாக்க மக்கள் அடிக்க வரப்போறாங்க. சூதனமா இருங்கப்பூ.
ReplyDeleteகாரம், மணம், குணம் நிறைந்த கமறல் இல்லாத கமர்சியல்! :-)
ReplyDeleteஅனைத்து பெண் குழந்தைகளுக்கும் மாணவிகளுக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteதகவல்கள் அனைத்து அருமை நண்பரே மொத்தத்தில் கம்ர்சியல் பக்கங்கள் களைகட்டுது தொடர்ந்து கலக்குங்க நண்பா.....
ReplyDeleteமென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
//காசு பணம் வரும் போகும், ஆனால் கல்வி வரும் போகாது,//
ReplyDeleteசெம மேட்டரு.
கமர்சியலா நல்லாயிருக்கு.
ஒரு பையன் சூசைட் பண்ண போனான்
ReplyDeleteஆனால் அவன் சாகல
ஏன்னா அவன் காதலிச்ச பொண்ணு
அப்பத்தான் அந்த வார்த்தைய சொன்னா
அந்த வார்த்தை...
எனக்கு ஒரு தங்கச்சி இருக்கு....//
தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம பக்கம் வந்துட்டு போங்க..
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_24.html
நான் ஊருக்கு செல்ல வேண்டி இருப்பதால் மீண்டும் இரண்டு நாளைக்கு என்னுடைய கடைக்கு லீவு///
ReplyDeleteஎன்னய்யா எப்ப பாத்தாலும் கடைக்கு லீவு விட்டுர்றே.... இதுக்குதான் என்ன மாதிரி மாசகணக்கா எழுதாம இருக்கணும். யாருக்கும் நான் லீவுன்னு சொல்ல வேண்டியதில்ல பாருங்க...:)
கமர்சியல் தரமான அக்மார்க் மசாலா......!
ReplyDeleteஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள் சார்!
ReplyDeleteதொகுப்பு உண்மையிலேயே அருமையா இருக்கு!
ReplyDeleteKALAKKAL
ReplyDeleteகுடியரசு தின வாழ்த்துக்கள்!!!!!
ReplyDeleterepublic day logo wonderful!!
ReplyDeleteநீங்க சொன்னமாதிரி இன்னும் பச்சை புள்ளைங்க பால் அபிஷேகம் பண்ணிக்கிட்டு தான் இருக்காங்க அவர்கள் தலைவனுக்கு....அந்த முள் கவிதை சூப்பர்...
ReplyDelete//எந்த அரசாங்க பள்ளிகளிலும் சரியான வகையில் குறைந்தபட்சம் நல்ல முறையில் கூட கழிப்பிட வசதியினை செய்து தருவதில்லை//
அக்கறையான விஷயம் தான்...அரசாங்கம் சார்ந்தது எல்லாமே குப்பைக்கு சமமாய் தானே பாவிக்கும் நிலைமை...அதான் பரிதாபம்...:(((
நல்ல பதிவு இரவு வானம்...
தேசிய பெண் குழந்தைகள் தினம் குறித்த தகவலை அறிந்து கொண்டேன். பெண் குழந்தைகளுக்கு வாழ்த்துகள்.
ReplyDeletegood post..
ReplyDelete@ ரஹீம் கஸாலி ...
ReplyDeleteஒன்னும் அவசரம் இல்லை நண்பா, மெதுவா வாங்க, இன்னும் ரெண்டு நாளைக்கு இதேதான் ....
@ நா.மணிவண்ணன் ....
ReplyDeleteநன்றி நண்பா, டெய்லியும் குஜிலி படத்துக்கு நான் எங்க போறது, பேசாம கூகிள்ள குஜிலின்னு போட்டு சர்ச் பண்ணி பாருங்களேன் ஹி ஹி ...
@ வெறும்பய ...
ReplyDeleteஉண்மையாவா சொல்றீங்க, ரொம்ப ரொம்ப நன்றி சார்...
@ ஜோதிஜி ...
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி சார், கோடம்பாக்க மக்களுக்கு நம்ம பிளாக்கெல்லாம் தெரியாதுன்னு நினைக்கிறேன் சார், அதான் தைரியமா போட்டு இருக்கேன், ஆனா யாருமே விசாலை பத்தி ஒரு கமெண்டும் போடலை ...
@ சேட்டைக்காரன் ...
ReplyDeleteசார் பெரியவங்க நீங்க எல்லாம் சொல்றதை கேட்கும் போது சந்தோசமா இருக்கு, ரொம்ப தேங்க்ஸ் சார் ...
@ மாணவன் ...
ReplyDeleteஉங்களின் வாழ்த்து மிகவும் சந்தோசத்தை கொடுக்கிறது, நன்றி மாணவன் சார் ...
@ எப்பூடி..
ReplyDeleteதல இவ்வளவு சீக்கிரமே வந்துட்டீங்க, எதிர்பார்க்கவே இல்லை, ரொம்ப நன்றி தல ...
@ sakthistudycentre-கருன் ...
ReplyDeleteகருன் சார் சமூக பதிவுகளை மட்டுமே எழுதறீங்க, அதுக்கே உங்களுக்கு ஸ்பெசலா தேங்க்ஸ் சொல்லனும், ஓட்டும் போட்டதுக்கு ரொம்ப நன்றி கருன் சார் ...
@ karthikkumar ...
ReplyDeleteஹா ஹா ஹா உண்மைதான் மச்சி, ஆனா நீங்க கும்மி அடிச்சு நிறைய நண்பர்களை சேர்த்து வைச்சிருக்கீங்க, ஆனா நான் இப்பத்தான புதுசா வந்திருக்கேன், சரக்கு தீர்ந்து போச்சுன்னா, அப்புறம் மாசத்துக்கு என்ன வருசத்துக்கே ஒரு பதிவுதான போட முடியும் .... :-)
@ பன்னிக்குட்டி ராம்சாமி ...
ReplyDeleteபன்னிக்குட்டி சார் பெரியவங்க எல்லாம் சீக்கிரமே வந்துருக்கீங்க, அதுக்கே ஸ்பெசல் தேங்க்ஸ் சார் ...
@ எஸ்.கே ....
ReplyDeleteநன்றி எஸ்.கே சார், உங்களுக்கும் என்னுடைய அட்வான்ஸ் குடியரசுதின வாழ்த்துக்கள் சார் ...
@ சி.பி.செந்தில்குமார் ...
ReplyDeleteதல நீங்களும் சீக்கிரமே வந்துட்டீங்க, ரொம்ப நன்றி தல ...
@ Madurai pandi ...
ReplyDeleteநன்றி மதுரை பாண்டி சார், உங்களுக்கும் அட்வான்ஸ் குடியரசு தின வாழ்த்துக்கள் ...
@ ! சிவகுமார் ! ...
ReplyDeleteஹி ஹி ஓசியில கிடைச்சது சிவா, ரொம்ப நல்லா இருக்குல்ல, எனக்கும் ரொம்ப புடிச்சது, நன்றி சிவா ...
@ ஆனந்தி..
ReplyDeleteநன்றி ஆனந்தி மேடம், உங்களின் ஒவ்வொரு பின்னூட்டமும் எனக்கு நல்ல ஊக்கத்தினை தருகிறது, பின்னூட்டம் என்றால் எவ்வாறு போடுவது என உங்களை பார்த்துதான் நான் பல விசயங்கள் அறிந்து கொண்டேன், தொடர்ந்த உங்களின் ஆதரவிற்கு மிகவும் நன்றி, ஆமா விஷால் போட்டோவை பத்தி நீங்க ஒன்னும் சொல்லலையே, அந்த படம் கொடுத்த என் பிரண்டு யாருமெ போட்டோவை பத்தி ஒன்னும் சொல்ல மாட்டேங்குறாங்கன்னு கேட்டுட்டு இருக்காறாப்ல ...
@ தமிழ் உதயம் ...
ReplyDeleteநன்றி தமிழ் உதயம், உங்களுக்கு என்னுடைய அட்வான்ஸ் குடியரசு தின நல்வாழ்த்துக்கள் ...
@ Sathishkumar ...
ReplyDeleteநன்றி சதீஸ்குமார் சார், உங்களுக்கு என்னுடைய அட்வான்ஸ் குடியரசு தின நல்வாழ்த்துக்கள் ...
இன்று ஆடுகளம் திரையிட்டுள்ள ஒரு தியேட்டர் வழியாக வரும் வாய்ப்பு கிடைத்தது, தியேட்டர் முன்னாடி பெரிய பேனர் ஒன்னு கட்டி இருந்தாங்க, ///
ReplyDeleteஎந்த தியேட்டர் அது?
@ karthikkumar ...
ReplyDeleteஸ்ரீனிவாசா தியேட்டர்தான் ...
குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சி மாதிரி, கதம்ப பதிவு தந்தாச்சு! நல்லா இருக்குதுங்க!
ReplyDeleteதாமதத்திற்கு மன்னிக்கவும், ஜனவரி 24 – தேசிய பெண் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வந்தனங்கள். பெண்குழந்தைகள் நிறைய சிரமங்களைத் தாண்டியே பள்ளிப்படிப்பை நிறைவு செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
ReplyDeleteசில பெண்குழந்தைகளுக்கு பெற்றோரே தடைகளை உருவாக்குகிறார்கள் என்பது நாங்கள் நேரடியாக காணும் நிலை.
தாங்கள் நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.
நல்லாயிருக்கு நன்றிகள்.. அன்புச் சகோதரன்
ReplyDelete"பொய்யான உறவுகளுக்கு முன்னால் புன்னகையும் ஒரு பொய்தான் உண்மையான உறவுகளுக்கு முன்னால் கோபம் கூட இனிமையான புன்னகைதான்..."
ReplyDeleteசூப்பர்....
எனது வாழ்த்துக்களும் சகோ...
engeaa machi vootu pakkam varathea illea romba busyyyoooo
ReplyDeleteபெண்கள் கல்வி பற்றிய பார்வை அருமை..பாரத்-பாரதிக்கும் பாராட்டுகள்.
ReplyDeleteஎல்லாமே அருமையா அழகாயிருக்கு...
ReplyDeleteஅப்டியே நம்ம கடைப்பக்கமும் வாங்க
காமர்சியல்ல கலக்கறீங்க........நமக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க......
ReplyDeleteவிஷாலின் எக்ஸ்க்ளுசிவ் ஸ்டில்ஸ் அருமை...
ReplyDeleteபக்கா கமர்சியல் :)
ReplyDeleteவிஷால் படம் சூப்பர் ..படத்தை பற்றிய எதிர்பார்ப்பு எகிறுது ..
தத்துவம் -நன்றாக இருக்கிறது ..
அப்புறம் ப்ளெக்ஸ் கலாச்சாரம் -ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல ..என்னையா விளம்பரம் ?!
காதல் கவிதை நன்றாக இருந்தது. மேட்டரை படிக்கும் முன் அந்த படத்தை பார்த்த போது விஷால் என்று அடையாளம் தெரியவில்லை.
ReplyDeletevishal stils super nanba
ReplyDelete//
ReplyDeleteமனசில நினைச்சுகிட்டேன், நல்ல வேளை தனுஷ் சேவல் சண்டை பத்தி படம் நடிச்சிருக்காரு, மாட்டு வியாபாரியா நடிச்சிருந்தா மாட்டுபசங்க குரூப்புன்னு வெச்சாலும் வெச்சிருப்பானுங்க, ஒருத்தனுக்கு கூட மீசை இல்லை, பத்து வயசிலயே பஞ்சு டயலாக்கு, வெளங்கிரும்......//
இந்த கொடுமைய எங்க போய் சொல்லுறது ?
கவிதை , ஜோக் எல்லாமே நல்லா இருக்கு , ஜோக் ஏற்கெனவே கேட்டிருக்கேன் .