அண்ணன் சிங்கம்னா தம்பி சிறுத்தையாதான இருக்கனும், அதுதான லாஜிக்கு, சும்மா சொல்லக்கூடாது கார்த்திக்குக்கு எங்கயோ மச்சம் இருக்குது, இல்லைன்னா தொடர்ந்து வெற்றிப்படமா கிடைக்குமா என்ன? படம் சும்மா பரபரன்னு பறக்குது,
படத்தோட கதை என்னன்னா ஆந்திராவுல டகால்டி காட்டுற இரண்டு ரவுடி பசங்கள விஜயகாந்து மாதிரி நேர்மையான போலீசு ஆபிசரான கார்த்தி நம்பர் 1 போட்டு பிரிச்சு எடுக்குறாரு, ஆகா வந்துட்டாருய்யா நாயகன் கமலுன்னு மக்கள் தலையில தூக்கி வச்சு கொண்டாடுராங்க, சும்மா இருப்பாளா சுகுமாரின்னு அந்த ரவுடியோட தம்பி முதுகுல குத்தி கார்த்தி நம்பர் 1 அ கொன்னுடராரு, கொன்னுட்டு சும்மா இருப்பாரா, பார்த்தீங்களா உங்க நம்பிக்கை நாயகன இனிமேல் யாராவது என்னை எதிர்தீங்கன்னா அதே கதிதான்னு மிரட்டிட்டு போயிடராரு, ரவுடிகல்லாம்தான் மக்கு பசங்களாச்சே கொன்னவன் உண்மையிலேயே செத்தானா பொழச்சானான்னு கூட பார்க்க மாட்டாங்களே
அப்புறம் தமிழ், மலையாளம், கன்னடம், ஆந்திரா சினிமா வழக்கப்படி செத்துட்டாங்கன்னு நினைச்ச போலீஸ் ஆபிசரு உயிரோடதான் இருக்காரு, உடனே மத்த போலீசு ஆபிசருங்க எல்லாம் சென்னையில இருக்குற ஆஸ்பத்திரியில சேர்த்து பொழைக்க வச்சிடுராங்க, அவரு ஆஸ்பத்திரியில இருக்குறத பார்த்த ஒரு ஆந்திராக்காரன் போன் போட்டு ரவுடி பசங்ககிட்ட சொல்லிடுறான், உடனே கார்த்தி நம்பர் 1 அ கொல்ல கொல்டி குரூப் கிளம்பி வருது,
இங்க சென்னையில கார்த்தி நம்பர் 2 ஒரு திருட்டு பய, அவரு பிரண்டு சந்தானம் என்கிற காட்டு பூச்சியோட ஜாலியா திருடிட்டு இருக்காரு, சும்மா சொல்லக்கூடாது பாண்டியராஜனுக்கு அப்புறம் அந்த திருட்டு முழி கார்த்திகிட்ட அப்படியே இருக்கு, திருடிட்டே இருந்தா என்னவாகும், அடுத்து லவ் வரணும்ல, அப்ப வராங்க தமன்னா, தமிழ்சினிமா இலக்கணப்படி திருட்டுபய, மொள்ளமாரி பய, முடிச்சவிக்கி பயலுகள காதலிக்கணும்ல, அதன்படியே கார்த்தி நம்பர் 2 வ காதலிக்கிறாங்க, அதுவும் எப்படி இடுப்பை காட்டி மயக்கியே, தமன்னாவுதெல்லாம் ஒரு இடுப்பாங்க, ஒரிஜினல் தெலுங்கு படத்துல அனுஷ்கா காட்டுவாங்க பாருங்க அதுதான் இடுப்பு, இடுப்ப பார்த்தா அடுப்பு மாதிரி சூடாக வேண்டாமா? புரோட்டா போட மைதா மாவு பினைஞ்சு வச்ச மாதிரி ஒரே வெள்ளையா இருக்கு, வேற ஒன்னும் தோணல.
சரி கதைக்கு வருவோம், காதல் வந்துருச்சுன்னா அடுத்து என்ன ஆகணும் பிரச்சனை ஆகணும்ல, அதன்படியே திடீர்னு ஒரு குழந்தை வந்து கார்த்தி நம்பர் 2 வ அப்பாங்குது, தமன்னா ஷாக்காகுறாங்க, காதல வேணாங்கறாங்க, அதுக்குள்ள ஆந்திரா கோஷ்டியும் களத்துல இறங்குது, அப்புறம் என்ன அடிதடி, வெட்டு குத்து, கொலைதான், முடிவு என்னங்கறதை படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.
படத்துலேயே ரொம்ப நல்லா இருக்குற விசயம் சந்தானம் காமெடிதான், அவரு வாய தொறந்தாலே ஜனங்க சிரிக்கிறாங்க, சிங்கிள் டயலாக்ல சிரி சிரின்னு சிரிக்க வக்கிறாரு, ஒரு ரெண்டு பாட்டு தேறும் போல இருக்கு, கார்த்தி வழக்கம் போலவே கேணத்தனமா சிரிச்சு பெண்களை கவருகிறாரு, அவரும் மார்க்கெட்ல ஒரு இடம் புடிச்சிட்டாருங்கறது பொங்கல் டிவி நிகழ்ச்சிகள்லேயே தெரியுது, படத்தோட சண்டை காட்சிய பத்தி சொல்லனும், அண்ணனுக்கு இரத்த சரித்திரம்னா, தம்பிக்கு ஒரு சிறுத்தை, இரத்தசரித்திரம் பத்தி தெரிஞ்சுக்கனும்னா என்னோட பழைய விமர்சனம் பார்த்துக்கோங்க, விஜய்க்கு ரொம்ப புடிச்ச கதைல கார்த்தி நல்லாவே நடிச்சு ஜெயிச்சும் இருக்காரு.
மொத்தத்துல சிறுத்தை - சீறும்
தியேட்டர் கட்டிங்ஸ்
இந்த படத்த எங்க ஊரு ஜோதி தியேட்டர்லதான் பார்த்தேன், பாடாவதி தியேட்டருக்கு பெயிண்ட் அடிச்சிருக்கானுங்க, முன்னால ரொம்ப மோசமா இருக்கும் இப்ப பரவாயில்லை, அது என்ன மாயமோ தெரியல ஜோதின்னு பேர வச்சாங்கன்னாலே ஒரு மார்க்கமாத்தான் இருக்குது, குடிக்க தண்ணி கூட வைக்க மாட்டானுங்க, புதுபடம் ரிலீசுங்கறதால தண்ணி வச்சுருந்தாங்க, பாத்ரூம் ரொம்ப கேவலமா இருக்கும், இப்ப கொஞ்சம் பரவாயில்லை, முன்னயெல்லாம் அட்டன் டைம்ல ஒரு நூறு மூட்டை பூச்சியாவது நம்ம மேல படை எடுக்கும், இப்ப குறைச்சிருச்சு,
1.45 க்கு படம்னு சொல்லிட்டு 2 மணிக்கு படம் போட்டாங்க, முதல்ல வெல்கம்னு சிலைடு போட்டதுக்கு பத்து நிமிசம் ரசிக சிகாமணிகள் கத்திகிட்டு இருந்தானுங்க, அது எனக்கு புடிக்கலை, அப்புறம் முன் சீட்டில் காலை வைக்காதீர்கள்னு சிலைடு போட்டாங்க, உடனே பக்கத்துல இருந்து நாலு பேரு முன் சீட்டுல காலை வச்சானுங்க, அது எனக்கு புடிக்கலை, அப்புறம் எச்சில துப்பாதீர்கள்னு சிலைடு போட்டாங்க, உடனே ஒரு பத்து பேராவது காறி துப்புனாங்க, அதுவும் எனக்கு புடிக்கலை, இது உங்கள் திரையரங்கு, இதனை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்னு சிலைடு போட்டாங்க, உடனே சிப்ஸ், பாப்கார்ன் சாப்பிட்டவங்க பேப்பரை எல்லாம் தூக்கி போட்டாங்க, அதுவும் எனக்கு புடிக்கலை, இப்படி மக்களே மறந்திருந்த விசயங்களை சிலைடு போட்டு ஞாபகப்படுத்தி படம் பார்க்க வந்தவங்களை நெளிய வச்ச தியேட்டர்காரங்களை எனக்கு சுத்தமா புடிக்கலை.
இதுக்கும் மேல கூட்ட நெருக்கடியில சீட் கிடைக்காம பக்கத்துல வந்து உட்கார்ந்த பொண்ணை பார்த்து பல் இளிச்சு, தியேட்டர் ஊழியரே வந்து கிளப்பிட்டு போய் வேற இடத்துல உட்கார வெச்சும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம இளிச்சுட்டு இருந்த அந்த சொட்டை மண்டையனை சுத்தமா புடிக்கவே புடிக்கலை ....
விமர்சனம் பிடிச்சிருக்கு.
ReplyDeleteஉண்மையான வார்த்தைகள், உண்மையான பதிவு
ReplyDeleteடைட்டில் பெயர்காரணம் கடைசில தான் புரிஞ்சது !!
ReplyDelete--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
நண்பா முதல் பாதி வரைக்கும்தான் பார்த்தேன் . இன்னும் டவுன்லோட் பண்ணி வச்ச இரண்டாம் பாதிய இனிமேதான் பார்க்கணும் .பார்க்கலாமா ?
ReplyDelete//சும்மா சொல்லக்கூடாது பாண்டியராஜனுக்கு அப்புறம் அந்த திருட்டு முழி கார்த்திகிட்ட அப்படியே இருக்கு,//
ReplyDeleteஅட...
தலைப்பும், தலைப்புக்கான விளக்கமும்..... ஓ.கே..
ReplyDeleteதமிழ் உதயம் said... நன்றி தமிழ் உதயம்
ReplyDeletesakthistudycentre-கருன் said... நன்றி கருன்
Madurai pandi said... நன்றி மதுரை பாண்டி
நா.மணிவண்ணன் said... கண்டிப்பாக ஒருதடவை பார்க்கலாம் நண்பா
பாரத்... பாரதி... said... நன்றி பாரத் பாரதி சார்
iduppu varnanai super
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇப்ப எதுக்கு தமன்னா இடுப்பு காட்டுற ஸ்டில் போட்டு டென்ஷன கெளப்புறீங்க!!
ReplyDeleteparangimalai Jothi theatre??
ReplyDeleteகலக்கலான எழுத்துநடை உங்களுக்கு நண்பா....படத்தை விமர்சனம் பண்ணிய விதம் அருமை. தமிழக வலையுலக வரலாற்றில் தியேட்டரையும் விமர்சனம் பண்ணியது நீங்கள் ஒருவராத்தான் இருப்பீங்க
ReplyDeleteஏமாத்திப்புட்டீகளே
ReplyDeleteபுடிக்கலைன்னு தலைப்பை பாத்துட்டு படம் மோசம்னு சொல்லப்
போறீங்களோன்னு நெனச்சேன்.
ஐத்ருஸ் said...
ReplyDeleteஏங்க படம் முழுக்க விமர்சனம் பண்ணிருக்கேன், உங்களுக்கு இருப்பு மட்டும்தான் ஞாபகம் இருக்கா :-)
சிவகுமார் said...
ReplyDeleteடென்சன் ஆகாதீங்க பாஸ், கூல் கூல்,
//parangimalai Jothi theatre// ஒரு விதத்துல அதே மாதிரிதான் இருக்கும்.
ரஹீம் கஸாலி said...
ReplyDeleteஇனிமே இப்படித்தான் எழுதனும்னு முடிவு பண்ணிட்டேன் நண்பா, நாம யாரு பதிவர் இல்லையா? சினிமாவுக்கு போனாலும் அங்கயும் குத்தம் கண்டுபுடிச்சு விழிப்புணர்வு பதிவு எழுதுவோமில்ல...
சிவகுமாரன் said...
ReplyDeleteஎன்ன பாஸ் பண்றது, 18+ ந்னு டைட்டில் வைச்சாலும் பிரச்சனை, மொட்டையா டைட்டில வச்சாலும் ஒரு கெத்து இருக்கறதில்லை, அதான் இப்படி வித்தியாசமா இருக்கட்டுமேன்னு...
/தெலுங்கு படத்துல அனுஷ்கா காட்டுவாங்க பாருங்க அதுதான் இடுப்பு, இடுப்ப பார்த்தா அடுப்பு மாதிரி சூடாக வேண்டாமா? புரோட்டா போட மைதா மாவு பினைஞ்சு வச்ச மாதிரி ஒரே வெள்ளையா இருக்கு, வேற ஒன்னும் தோணல.//
ReplyDeleteஹலோ...பத்து டஜன் கொழுப்புங்கிறது இது தான்...ரோடு இல் அந்த ஆளு திட்டியது சரி தான் போலே...ஹ ஹ...
//கிளப்பிட்டு போய் வேற இடத்துல உட்கார வெச்சும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம இளிச்சுட்டு இருந்த அந்த சொட்டை மண்டையனை சுத்தமா புடிக்கவே புடிக்கலை ..//
ReplyDeleteha haaaaaaa..:))
எங்க ஊரு ஜோதி தியேட்டர்லதான் பார்த்தேன், ///
ReplyDeletesame blood nanum jothilathaan pathen.. :(
காமெடியா விமர்சனம் எழுதுறீங்க.
ReplyDeleteநீங்க சிறுத்தையாய் சீறிட்டிங்க
ReplyDeleteஆனந்தி.. said...
ReplyDeleteமேடம் அதுக்கும் இதுக்கும் முடிச்சு போடாதீங்க, நான் ரொம்ப நல்லவன், நல்லவன், நல்லவன்னு சொல்லிக்கிறேன் :-)
karthikkumar said...
ReplyDeleteஎன்ன மச்சி காதுல ரத்தம் எல்லாம் வந்துருச்சா?
Chitra said...
ReplyDeleteநன்றிங்க மேடம்
NKS.ஹாஜா மைதீன் said...
ReplyDeleteஹா ஹா ஹா நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லைங்க சார்
பிரஷண்ட்
ReplyDelete//புரோட்டா போட மைதா மாவு பினைஞ்சு வச்ச மாதிரி ஒரே வெள்ளையா இருக்கு, வேற ஒன்னும் தோணல//
ReplyDeleteவர்ணனை சூப்பர்! :-)
நான் இன்னமும் ஒரு படமும் பார்க்கல, உங்க விமர்சனம் வழமைபோல சூப்பர். அனாலும் தியேட்டர்காரன் பாவம் :-))
ReplyDeleteSame Blood!!!
ReplyDeleteஸாதிகா said... நன்றி மேடம்
ReplyDeleteஜீ... said... நன்றி ஜீ
எப்பூடி.. said... தல எங்க போனீங்க இவ்வளவு நாளா, நீங்க வருவீங்க வருவீங்கன்னு காத்துகிட்டு இருந்தேன்.
டக்கால்டி said... வாங்க டக்கால்டி சார் பேரே அமர்களமா இருக்கு, வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்
ReplyDeleteவிமர்சனம் சூப்பர்....
ReplyDeleteதியேட்டர் விமர்சனம் சூப்பர்
ReplyDelete>>>படத்துலேயே ரொம்ப நல்லா இருக்குற விசயம் சந்தானம் காமெடிதான், அவரு வாய தொறந்தாலே ஜனங்க சிரிக்கிறாங்க, சிங்கிள் டயலாக்ல சிரி சிரின்னு சிரிக்க வக்கிறாரு
ReplyDeleteசூப்பர். அப்புறம் நீங்க திருப்பூரா..ஈரோடு வந்தா வாங்க..ஒரு மீட்டிங்க் போட்டுடுவோம்
சங்கவி said... நன்றி சார்
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... வாங்க தல, கண்டிப்பா ஈரோடு வந்தா கூப்பிடுரேம், நீங்க திருப்பூர் வந்தாலும் சொல்லுங்க..
//கண்டிப்பா ஈரோடு வந்தா கூப்பிடுரேம்//
ReplyDeleteமேட்டுப்பாளையம் வந்தாலும் கூப்பிடுங்க..
கூப்பிட வேண்டிய அவசியமே இல்லை... பஸ் ஸ்டாண்ட் பக்கம் தான் ஸ்கூல்... வருவீங்களா?
விமர்சனம் சூப்பர்...
ReplyDeleteபாரத்... பாரதி... said...
ReplyDeleteஅடடா மிஸ் பண்ணிட்டனே, போன வாரம் ஞாயித்துகிழமைதான் ஊட்டி போனேன், உங்க ஸ்கூல் வழியாதான், நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா வரேன், ஆமா வந்து யாருன்னு கெட்கிறது, பாரத் பாரதி சாருன்னு சொன்னா போதுங்களா?
தோழி பிரஷா said...
ReplyDeleteநன்றி மேடம்