Saturday, January 8, 2011

பதிவுலகிற்கு ஒரு வேண்டுகோள்



தமிழகம்- சமூக சேவையாற்ற- பகுதி நேர அரசியல்வாதிகள் தேவை!


விவேகானந்தர் என்னிடம் 10 இளைஞர்களை கொடுங்கள்! வருங்காலத்தில் வளமான வலிமையான் இந்தியாவை உருவாக்கிக் காட்டுகிறேன் என்றார்! அப்போது இந்த அளவிலே சமூக சீர்கேடுகள் இல்லை, சமூகத்தை சீர்கெடச் செய்ய, மனசாட்சிக்கு, கடவுளுக்கு, மானம், மரியாதை போய்விடும் தெருவில் நடமாட முடியாது! என பயந்தார்கள்! ,
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் விளையும் என பயந்தார்கள்! 

இப்போ மக்களிடம் நேர்மையில்லை, நீதிக்கு பயப்படும், மனசாட்சிக்கு பயப்படும், கடவுளுக்கு பயப்படும் மனநிலையில்லை. எப்படியாவது ஒரே நாளில் பணக்காரனாகிவிடவேண்டும் அது எந்த வழியில் பணம் வந்தாலும் பரவாயில்லை என்ற மன நிலையே வேரூன்றி விட்டதால் சமூக சீர்கேடுகள் பெருகிவிட்டன. 

இவற்றையெல்லாம் சீராக்க, மக்களை நன்னெறிப்படுத்த விவேகானந்தர் இப்போதிருந்தால், வளமான வலிமையான இந்தியாவை உருவாக்கிக் காட்ட பத்துலட்சம் பேரை கேட்டிருப்பார்! 

எனவே அதில் ஒரு பங்காக,சுயநலத்துடன் கூடிய பொதுநலமாக, முதலில் வளமான வலிமையான் தமிழகத்தை உருவாக்கிக் காட்ட, மாற்ற சமூக சேவையாற்ற, பகுதி நேர அரசியல்வாதியாக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் தேவை!!! 

கல்வித்தகுதி & குணநலன்கள் : 

வயது 18 -க்குமேல் 45 வயதுக்குள் இருக்கும் குறைந்தபட்சம் பன்னிரெண்டாம் வகுப்பு முதல் MBA படித்தவர்கள், பல துறைகளிலே ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள், ஒவ்வொருவரும் தங்கள் வசிக்கும் தெரு, கிராமம் இவற்றிற்காக நாளொன்றிற்கு அல்லது வாரம் சில மணி நேரம் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், குறிப்பாக அரசு மற்றும் தனியார் யாருடைய பொருளையோ, பணத்தையோ செய்யும் உதவிக்காக (கைம்மாறாக) லஞ்சமாக பெறமாட்டேன்! என தன் மீதே சத்தியம் செய்யக் கூடிய, நேர்மையான சமூக அக்கறையுள்ள, முடிந்த வரை பிறருக்கு உதவுவேன் என்ற மனப்பான்மையுள்ள நல்லெண்ணம் கொண்டோர் முதலில் தமிழகத்திலும் படிப்படியாக இந்திய அளவிலும் சமூக சேவையாற்றும், தங்கள் பணி நேரம் போக,

மீதமுள்ள நேரத்தில் பகுதி நேர அரசியல்வாதியாக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் தேவை!!! 

( ஏற்கெனவே தமிழகத்தில் அரசியல் வியாதிகள்,சினிமாக்காரர்கள் நிறைய பேர் காசு கொடுத்து டாக்டர் பெற்றதால் அந்த வகையில் பட்டம் வாங்கியவர்கள் விண்ணப்பிக்க தவிர்க்கவும்!).

கூடுதல் தகுதிகள்/ அனுபவம்: 

தங்கள் ஆற்றிய, ஆற்ற விரும்பும் சமூக சேவை குறித்த விபரங்கள், அரசின் நலத் திட்டங்கள் மக்களை எந்த ஊழல், லஞ்சமின்றி மிக தேவையான, சரியான பயனாளிகளுக்கு மட்டும் சென்று சேர!, அரசு துறைகளில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், கூடுதல் அம்சங்கள், ஆலோசனைகள், அனுபவங்கள், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் எளிய வழிமுறைகள், சிக்கன மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த தங்களின் கனவுகள், எண்ணங்கள், (எழுத்துக்கள்) திட்ட அறிக்கைகள், ஆராய்ச்சி கட்டுரைகள், அனுபவ ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன! 

இந்த இயக்கத்தில் இணைவோர் விரும்பினால், வருங்காலத்தில் நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து பதவிகளுக்குமான தேர்தல்களிலும், கல்வித் தகுதி, வயது, சமூகப் பணியில், ஆற்றிய சேவைகள், ஆற்றவிருக்கும் சேவைகள் குறித்து மக்களின் கருத்து, ஆதரவு இவற்றை பொறுத்து போட்டியிடலாம்!

ஊதியம் விவரங்கள்: 

முக்கியமாய், இந்த இயக்கத்தில் இணைபவர்களுக்கு ஆற்றும் சேவைகள், ஆற்றவிருக்கும் சேவைகளுக்கு ஊதியம் கிடையாது! முழுக்க முழுக்க தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றும், நடத்த தன்னுடைய சொந்த வருமானத்தின் மூலமாகவே நிர்வகிக்க வேண்டும்! 

சரி சாப்பாட்டுக்கு என்ன வழி?:

வேலைவாய்ப்பற்றவர்களுக்கு தங்களையும் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள, தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்க வேலைவாய்ப்பு தகவல்கள், தேவைப்படின் சிபாரிசுகள் வலைத்தளம் மூலமும், மற்ற நண்பர்கள் மூலமும் வழங்கப்படும்!

தொடர்பு கொள்ள :

விருப்பமுள்ளவர்கள் பின்னூட்டத்திலும், கிழ்க்காணும் மின்னஞ்சல் முகவரியிலும் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய குறிப்புகளுடன் தொடர்பு கொள்ளவும்! 


ஆதரவாளர்கள் & பயனாளிகள்:

மேலும் தமிழகம், இந்திய நலனில் அக்கறை கொண்டுள்ள, சமீப காலமாய் நடக்கும் அரசியல், அதிகார, சட்ட, லஞ்ச முறைகேடுகளில் அதிருப்தி கொண்டு, விரக்தியாய் இவைகள் எப்பொழுது சீராகும், பூனைக்கு யார் மணியை கட்டுவது?, யாராவது ஒரு அவதார புருஷன் வர மாட்டானா? என ஏங்கி தவிப்பவர்கள்

ஏன் அந்த அவதார புருஷனாய் நாம், நம் சகோதரன், நண்பன் இருக்கக் கூடாது? என சிந்தித்து, அவர்களுடனும் இந்த தகவலை பகிர்ந்து கொண்டு, நாம் விரும்பும் மாற்றத்தை, எதையும் நம்மிலிருந்து முதலாய் துவக்கலாம் என்ற எண்ணத்தோடு இந்த இயக்கத்தில் இணைந்து பணியாற்ற வாருங்கள்! 

வாய்க்காளுயர.., வரப்புயரும், வயப்புயர.., நெல்லுயரும், நெல்லுயர ..., ஒளவையாரின் வாக்கிற்கிணங்க நம் தெருவும்,கிராமமும், பகுதியும் உயர நாடுயரும், நாடுயர நாம் தமிழர் உயர்வோம்! இந்தியர் உயர்வோம்! நாட்டிற்கும் நம்மை பெற்ற வீட்டிற்கும் பெருமை சேர்ப்போம்!

இந்த இயக்கத்தில் இணைந்து பணியாற்ற வாருங்கள்!

பாரபட்சமற்ற முதுகலை வரை அனைவருக்கும் இலவச கல்வி & வேலைவாய்ப்பு, மனித உரிமைகள்&நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள், சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் கணக்கெடுப்பு மற்றும் முன்னேற்ற திட்டங்கள்!, மழைநீர் சேகரிப்பு மற்றும் வடிகால் வசதிகள், குளங்கள், ஏரிகள், அணைகள் பராமரிப்பு & மேலாண்மை, சாலை பராமரிப்பு & நீர்வழி போக்குவரத்து மேலாண்மை, கழிவு நீர் மற்றும் திட, மின்னணு, பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி,சுத்திகரிப்பு மற்றும் மேலாண்மை, e -Governance - வெளிப்படையான நிர்வாகம், ஊழல் வழக்குகளில் சிக்குவோர் உடனடி பணிநீக்கம், கடுமையான சட்டம், அதிவிரைவு விசாரணை நீதிமன்றங்கள், காவல் துறை நவீனமயமாதல் & சுதந்திரம், சாலை, ரயில், விமான,கப்பல் மற்றும் சரக்கு போக்குவரத்தில் அதிநவீன, விரைவான, பாதுகாப்பான சேவைகள்!, வனம் & சுற்று சூழல், தொழிற்சாலை, தொழிலாளர் பாதுக்காப்பு, உள்ளாட்சி முதல் ஜனாதிபதி வரை நன்கு படித்த,நேர்மையானவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்துதல், குறிப்பாய் ஜாதி மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை ஒழித்து, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வாய்ப்பளித்து முன்னேற வழி செய்தல் மூலம் காலப் போக்கில் சாதி மதத்தை ஒழித்தல்..., போன்ற திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வர தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

குறிப்பு: (அரிதாரம் பூசும் நடிகர்களின் & ஜாதி பின்னால் ஓடுபவர்கள் தவிர்க்கவும்! ஓடியது போதும்!) 



பதிவின் மூலம் :
http://saigokulakrishna.blogspot.com/2011/01/blog-post_05.html

படித்து விட்டீர்களா நண்பர்களே, இந்த பதிவினை எழுதியவர் எனது நண்பர் கோகுல கிருஷ்ணா, அவரை இந்த வலையுலகிற்கு வந்தபிறகுதான் எனக்கு தெரியும், வலையுலகில் ஒரு இடம் பெற எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும், ஆனால் நண்பர் இதுவரையிலும் அனைவருக்கும் பயன்படக்கூடிய வகையில் வேலை வாய்ப்பு செய்திகளையும், சமூக விழிப்புணர்வூட்டும் கட்டுரைகள் மட்டுமே எழுதி வருகிறார், திரட்டியில் இணைத்தாலும் வோட்டு பட்டையினை இணைக்காததால் அவருடைய நல்ல பல பதிவுகள் பெரும்பாலானவர்களிடையே செல்லாமலே போய்விட்டன, அவரை அறிமுகம் செய்யுமளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது, எனினும் என்னுடைய இந்த பதிவினை படிக்கும் நண்பர்கள் அவருடைய தளத்திலும் இணைந்து தோள் கொடுத்தால் அவருக்கு ஒரு புது உத்வேகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இதனை பதிவிடுகிறேன், 


மற்றவர்களை குறை கூறுவதை விட நீங்கள் ஏன் ஒரு அவதார புருசனாக இருக்க கூடாது என்ற அவரின் கேள்விக்கு பல கேள்விகளை போல இதற்கும் விடை சொல்ல முடியவில்லை, எனினும் நண்பரின் முயற்சிக்கு என்னுடைய பங்கினை முடிந்த அளவு அளிக்க உள்ளேன், படிக்கும் நண்பர்கள் உங்களால் முடிந்தால் நீங்களும் நண்பரின் கரத்தினை வலுப்படுத்துங்கள்.


சிறு துளி பெருவெள்ளம் என்பார்கள், நண்பரின் இந்த சிறு முயற்சி பெரு வெள்ளமாய் பெருகட்டும், மாற்றம் என்ற ஒன்று மட்டுமே மாறாதது, வாருங்கள் மாற்றத்திற்கு உட்படுத்துவோம் வலையுலகை இந்த ஆண்டு ஒரு புது மாற்றத்திற்கு...


நன்றி 
அன்புடன் - இரவு வானம்


19 comments:

  1. அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
    நான் ஓட்டு போட்டுட்டேன்..

    ReplyDelete
  2. கட்டாயம் இந்த மாதிரி பதிவெல்லாம் பிரபலம் அடையணும் சகோ....நான் எப்பவும் போலே வோட்டு போட்டு போறேன்...

    ReplyDelete
  3. sakthistudycentre.blogspot.com said...

    ஆனந்தி.. said...

    நண்பர்களே உங்களுக்கு நன்றி, படிக்கும் நண்பர்கள் அவருடைய தளத்தில் இணைந்து உங்களின் ஆதரவினை வெளிக்காட்டுமாறு கேட்டுக் கொள்கிரேன்.

    ReplyDelete
  4. நன்றி அருமை சகோதரர் இரவு வானம் அவர்களே!

    மேலும் நண்பர் கருண் குமார் (sakthistudycentre.blogspot.com) அவர்களுக்கும் அன்பு சகோதரி ஆனந்தி அவர்களுக்கும் கருத்திட்டமைக்கு நன்றி!
    தங்கள் வலைத்தளத்தில் இந்த பதிவை இட்டு, பெரும்பாலான வாசகர்களை சென்றடைய, சிந்திக்க தூண்டியமைக்கு நன்றியும் தங்களின் சமூக அக்கறைக்கும் வாழ்த்துக்கள்!

    நேர்மையான, நல்லொழுக்கம் கொண்ட வருங்கால தலைமுறையை உருவாக்குவோம்! கரம் கொடுங்கள்! சிறு துளி பெருவெள்ளம்! நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்!


    அவன் சரியில்லை!,
    இவன் சரியில்லை!சரி நாம் என்ன செய்தோம்?.., யாராவது இளிச்சவாயன் வரமாட்டானா? நமக்கும் மக்களுக்கும் நல்லது பண்ண.., ஏன்? அவனும் நம்மைபோல தான் அவங்க அப்பா அம்மாவிற்கு புள்ள.!
    யாராவது வந்து நல்லது பண்ணனும்..,!
    ஆனா அது நான் இல்ல??? என் புள்ள இல்ல!,
    ஏன் இந்த சுயநலம்??? வக்கிர புத்தி???
    நம்மை போலவே எல்லாரும் சிந்திப்பதால்,
    நாட்டில் நல்லவன் எவனும் அரசியலுக்கும் வரதில்லை,
    நல்லதும் பண்றதில்லை!
    விளைவு?????????????????????????

    நம்ம பணத்தையும், நேரத்தையும், வாசகர்கள், ஆபீஸ் நேரத்தையும் வீணடித்த, விசிலடிச்சான் குஞ்சுகளை நம்பி, கேடுகெட்ட- சாக்கடை புழுக்கள் சினிமாக்காரர்கள், நடிகர்-நடிகைகள் அரசியலுக்கு வந்து அரசியலை சாக்கடையாக்கியது தான் மிச்சம்!!

    நம் வளர்ச்சிக்கு, நம் குடும்ப வளர்ச்சிக்கு, ஊர்- நாட்டு வளர்ச்சிக்கு நாம் என்ன செய்யலாம்? என என்றாவது யோசித்ததுண்டா? உங்கள் விமர்சனம் எழுதும் கற்பனைவளத்தையும், க்ரியேடிவிடி -சிந்தனையையும் புகுத்தி, இந்த துறையில் இவ்வாறு சில மாற்றங்களை அல்லது இந்த பிரச்சினைக்கு இப்படி செய்தால் துறையும், நாடும் முன்னேறும் என ஏன் நினைக்கவில்லை??
    ஏன் பதிவெழுதக் கூடாது??? சும்மா உங்க கற்பனை வளத்தை சிந்தனையை தட்டிவிடுங்கள்!

    ReplyDelete
  5. Sai Gokula Krishna said... நல்லதே நடக்கும் நம்பிக்கை கொள்ளுங்கள் நண்பா.

    வெறும்பய said... ரொம்ப ரொம்ப நன்றி சார், உங்களுடைய தளத்திலும் அறிமுகப்படுத்துங்கள் சார்.

    ReplyDelete
  6. அருமையான முயற்சி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இணைத்துவிட்டேன் விட்டேன் நண்பா .

    ReplyDelete
  8. அவசியம் நம் கரத்தினை தருவோம.

    ReplyDelete
  9. அருமை யான பதிவு. எங்கள்கரம் கொடுப்போம்.

    ReplyDelete
  10. முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. இந்த பதிவை உங்களிடம் சேர்த்து நம்மை ஒருங்கிணைத்த அன்பு சகோதரர் இரவு வானம் அவர்களுக்கு மிக்க நன்றி!

    அன்பு சகோதரி தேனம்மை லெஷ்மணன், லக்ஷ்மி(Laksmi) , சகோதரர் நா.மணிவண்ணன், வெறும்பய, தமிழ்உதயம்,எப்பூடி? ஆகியோருக்கும் நன்றியும் வணக்கமும்!

    நம்மை போல ஒருமித்த கருத்து கொண்ட ஆயிரக்கணக்கானோர், தங்கள் உள்ளக் கிடக்கையை வெளியிட முடியாமல், வாய்ப்பில்லாமல் நம் தமிழகமும் இந்திய திருநாடும் வளம் மிக்க வல்லரசாக மாறாதா? நல்ல நேர்மையான அரசியல் தலைவர்களும், தியாக சீலர்களும், தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய அறிவியல், நவீன தொழில் நுட்பங்கள் சார்ந்த நல்ல அரசை ஏற்படுத்த மாட்டார்களா? என ஏங்கி தவித்துக் கொண்டுள்ளனர்.

    சிறு துளி பெருவெள்ளம்!

    எதையும் நம்மிலிருந்து துவக்குவோம்!

    வாருங்கள்! கரம் சேருங்கள்!

    நல்ல எண்ணங்களால், எழுத்தால், சிந்தனையால், சீரிய செயலால்..,

    தூய்மையாக்கப் பட வேண்டியது நிறைய உள்ளது..,

    வலைத்தளம் முதல்... வடகோடி இமயம் வரை!!!

    வாய்ப்புகள் நம்மை தேடி வராது., நாம் தான் அதை அமைத்துக்கொள்ளவேண்டும்!

    இனிதே துவங்கியுள்ள இந்த சீரமைப்பு பயணம் சிறப்பாய் தொடர ..,

    தங்களின் நல் ஆதரவும், முயற்சியும், சிந்தனையும், செயலும் வலு சேர்க்கட்டும்..,!!!

    ReplyDelete
  12. சிந்திக்கத் தூண்டும் சிறந்தப் பதிவு . கோகுல கிருஷ்ணா, நண்பருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்...
    எனது முகவரி
    onely1@gmail.com
    www.aagaayamanithan.blogspot.com

    ReplyDelete
  14. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  15. தேனம்மை லெக்ஷ்மணன் said...

    நா.மணிவண்ணன் said...

    தமிழ் உதயம் said...

    Lakshmi said...

    எப்பூடி.. said...

    Sai Gokula Krishna said...

    Geetha6 said...

    !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

    ஆகாயமனிதன்.. said...

    விக்கி உலகம் said...

    நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள், என்னுடைய பங்கு இதில் ஒன்றுமே இல்லை, இந்த பதிவும் சிந்தனையும் நண்பர் கோகுலகிருஷ்ணன் அவர்களுடையது, நமது பதிவுலகில் எத்தனையே விசயங்களுக்கு ஆதரவினை கொடுத்துள்ளோம், நண்பரின் இந்த புது முயற்சிக்கும் ஆதரவினை கொடுப்போம், இங்கு வருகை தந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக் கொள்கிறேன், நன்றி.

    ReplyDelete
  16. Anbu Sagotharar Sura,"Iravuvaanam", Vanakkam.
    Pathivai aayirakkanakaana per padikka, avargalidam samooga, arasiyal vizhippunarvai thoonda uthaviyatharkku nandri!
    Naan muyarchithum , thamizhmanathil inakka mudiyavillai., matravatrai muyarchikkiren!

    ReplyDelete
  17. இப்பதான் பார்த்தேன்..

    நல்ல முயற்சி.. கண்டிப்பா வெற்றி பெறணும்..

    வாழ்த்துகள்.

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!