Saturday, January 22, 2011

காவலன் - சோதனை ஓட்டம்


என்னய்யா விஜய் படம் இது, ஒரு ஓப்பனிங் சாங் இல்லை, குத்துடான்ஸ் இல்லை, பஞ்ச் டயலாக் இல்லை, பொறி பறக்கும் சண்டைகாட்சிகள் இல்லை, ஓவர் பில்ட் அப் இல்லை, இப்படி எதுவுமே இல்லாம ஒரு விஜய் படம், ரொம்பவே அடிபட்டுடாரு போல, மம்மிய பார்த்த எம் எல் ஏ கணக்கா ரொம்பவே இறங்கி வந்து நடிச்சிருக்காரு.

படத்தோட கதைதான் எல்லோருக்கும் தெரியுமே, ராஜ்கிரணுக்கு பாடிகார்டா வேலைக்கு வந்து அசினுக்கு பாடி கார்டா ஆகுறாரு விஜய், அவரு பின்னாடியே வரத விரும்பாத அசினு வழக்கம் போல ஆம்பிளைகளை கவுக்க பொண்ணுங்க பண்ற வேலைய பண்ணுராங்க, மொபைல்ல கடலை போட்டே விஜயை கவுக்கறாங்க, அதை தலைவரும் நம்பிடுராரு, இப்படி முரளி மாதிரியே விஜயும் பார்க்காத காதலிய நினைச்சு உருகுறாரு, படிக்க மாட்டேங்குறாரு, போற வர பொண்ணுங்களை பார்த்துட்டு ஒருவேளை இவ அவளா இருக்குமோ, அவ இவளா இருக்குமோன்னு தலைய பிச்சுகிட்டு இருக்காரு.

இவரு இப்படி அன்கண்டிசனா திரியறத பார்த்து அசினுக்கும் விஜய் மேல லவ்வு வந்துருது, ஆனா அசினுக்கு ஏற்கனவே நிச்சயம் ஆயிருச்சாம், அதுவும் இல்லாம ராஜ்கிரண் வேற தொடய தட்டிட்டு கிளம்பிருவாருன்னு பயம் வந்துருது, அதனால விஜய கழட்டி விட்டுடலாம்னு நினைக்கறாங்க, ஆனா பாருங்க படத்தோட கதை இந்தகால கதைன்னா கண்டிப்பா பொண்ணுங்க கழட்டி விட்டுடுவாங்க, இந்த கதை பழசுங்கறதால அசினால லவ்வ மறக்க முடிய மாட்டேங்குது, விஜயவே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கறாங்க, இப்படி இவங்க பேசிட்டு இருக்குறத கேட்டுட்டு வேலைக்காரி பட்டாபட்டி ராஜ்கிரண்கிட்ட போட்டு கொடுத்துடராங்க, கண்ணு சிவக்க கிளம்புறாரு ராஜ்கிரண், முடிவு யாருமே எதிர்பாராத, எதிர் பார்க்க முடியாத அக்மார்க் மலையாள படம் கிளைமேக்ஸ்.

கடைசியா நான் பார்த்த படங்களிலேயே யூகிக்க முடியாத வித்தியாசமான கிளைமேக்ஸ் இந்த படத்துலதான், இப்படி தன்னோட இமேஜ் எல்லாத்தையும் விட்டுட்டு கதைக்காக ரொம்பவே இறங்கி வந்து நடிச்சிருக்கற விஜயை கண்டிப்பா பாராட்டனும், ரொம்பவே அடிபட்டுடாரு போல, நடிக்கத் தெரியாதுன்னு இனி விஜய் பத்தி சொல்ல முடியாது, காதல், ஏக்கம், வலி, துக்கம்னு கலவையான முக பாவனைகளை அனாயசமா முகத்துல கொண்டு வந்து இருக்காரு.

இடைவேளைக்கு அப்புறம்தான் படமே இருக்குறதால இடைவேளை வரைக்கும் படத்த கொண்டு போறதுக்காக வடிவேலுவ யூஸ் பண்ணி இருக்காங்க, ஜோக்கெல்லாம் பெரிசா ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்லை, பாட்டும் சுமாராதான் இருக்கு, பட்டாம்பூச்சி பாட்டு ரொம்ப நல்லா இருக்கு, ரொம்ப நாள் கழிச்சு ராஜ்கிரணோட பட்டாபட்டி தரிசனம் கிடைச்சது, நிறைய இடத்துல லாஜிக் மிஸ்ஸாகுது, நிச்சயம் பண்ணி இருக்குற அசினுக்கு மாப்பிள்ளை ஒருதடவை கூடவா போன் அடிக்க மாட்டாரு,  நான் முக்கியமா அசின பார்க்கத்தான் போனேன், அசினும் ரொம்ப டல்லா தெரியுறாங்க, 29 வயசு ஆனது உண்மைதான்னு முகமே காட்டி கொடுக்குது, மொத்தத்துல இப்போ வந்த படங்கள்ள குடும்பத்தோட பார்க்க கூடிய படம்தான், விஜய் இதே மாதிரி கதை இருக்குற படத்துல நடிச்சா மறுபடியும் பிக்கப் ஆகிக்கலாம்.

காவலன் விஜய் ரசிகர்களுக்கு அவ்வளவா பிடிக்காது, ஆனா மக்களுக்கு பிடிக்கும், விஜய் ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி படம் எடுத்தா கண்டிப்பா மக்களுக்கு பிடிக்காது, இந்த படம் ஓடுனாதான் அவருக்கும் நல்ல படத்துல நடிக்கனும்னு ஆர்வம் வரும், அதனாலயாவது இந்த படத்த ஓட வைங்கப்பா....

தியேட்டர் கட்டிங்ஸ்

இந்த படத்த டயமண்ட் தியேட்டர்ல பார்த்தேன், ஆரம்பமே சரியில்லை, 40 ரூபா டிக்கட்ட 60 ரூபாய்க்கு விக்குறாங்க, விளைவு தியேட்டர்ல மொத்தம் 38 பேர் மட்டுமே, டூ வீலர்க்கு 10 ரூபாய், பாத்ரூம் மகா கொடுமை, தண்ணி ஊத்தி கழுவறதே இல்லை போல, ஒரே கப்பு, குடிக்க தண்ணி கூட வைக்கலை, ஒரு கருப்பு நிற சிண்டெக்ஸ் டேங்குல டம்ளர் இல்லாம மக்கள் கையாலயே குடிச்சிட்டு இருக்குறாங்க, பால்கனில இருக்குற தண்ணி பக்கெட்டுல இருந்த டம்ளர் உள்ள பாதி பச்சை கலர்ல பாசானம் புடிச்சு இருக்கு, தியேட்டர்ல சவுண்டும் சரியா கேட்கலை, பராமரிப்பும் சரியில்லை, மொத்ததுல ஒருதடவை படம் பார்க்க வரவங்க மறுதடவை கண்டிப்பா வர பிரியப்பட மாட்டாங்க...
இதைவிட கொடுமை வீட்டுல பார்க்கிற டிவிலதான் விளம்பரம் போட்டு கொல்றாங்கன்னா தியேட்டர்லயும் அதே வேலையதான் பண்ணராங்க, வீட்டுலயாவது ரிமோட் இருக்கும், அங்க என்ன பண்றது, அதுவும் அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவதுன்னு கவருமெண்டு விளம்பரம் சுத்தமா அஞ்சு நிமிசம், முடியல....

61 comments:

 1. அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவதுன்னு//
  மாப்பு இப்போ எல்லா தியேட்டர்லையும் இந்த விளம்பரம் போடறாங்க... தாங்க முடியல...

  ReplyDelete
 2. 40 ரூபா டிக்கட்ட 60 ரூபாய்க்கு விக்குறாங்க, விளைவு தியேட்டர்ல மொத்தம் 38 பேர் மட்டுமே, டூ வீலர்க்கு 10 ரூபாய், பாத்ரூம் மகா கொடுமை, தண்ணி ஊத்தி கழுவறதே இல்லை போல, ஒரே கப்பு, குடிக்க தண்ணி கூட வைக்கலை,//
  இதுக்குதான் அப்போவே சொன்னேன் சிவன் தியேட்டர் போங்க. டைமண்ட் வேண்டாம்னு... கேட்டீங்களா.... விதி வலியது..

  ReplyDelete
 3. @ karthikkumar ...

  மச்சி வந்துட்டயா இரு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன்...

  ReplyDelete
 4. நேத்து டாக்டர்
  இன்னைக்கு நடிகன்
  நாளைக்கு அரசியல்வாதி
  இது அரசியலுக்கு வந்து மயிரவா புடுங்க போகுது

  ReplyDelete
 5. கொஞ்சம் ட்ராக் மாறியிருக்கார் பார்க்கலாம். இப்படியே தொடர்கிறாரா இல்லையா என்று!

  ReplyDelete
 6. விமர்சனம் நல்லாருக்கப்பு!

  ReplyDelete
 7. //////ராஜகோபால் said...
  நேத்து டாக்டர்
  இன்னைக்கு நடிகன்
  நாளைக்கு அரசியல்வாதி
  இது அரசியலுக்கு வந்து மயிரவா புடுங்க போகுது ///////

  நம்மளைப் புடுங்காம இருந்தா சரி

  ReplyDelete
 8. ////இந்த படத்த டயமண்ட் தியேட்டர்ல பார்த்தேன், ஆரம்பமே சரியில்லை, 40 ரூபா டிக்கட்ட 60 ரூபாய்க்கு விக்குறாங்க, விளைவு தியேட்டர்ல மொத்தம் 38 பேர் மட்டுமே, டூ வீலர்க்கு 10 ரூபாய், பாத்ரூம் மகா கொடுமை, தண்ணி ஊத்தி கழுவறதே இல்லை போல, ஒரே கப்பு, குடிக்க தண்ணி கூட வைக்கலை,/////

  தமிழ்னாட்டுல முக்கால்வாசி தியேட்டரு இப்படித்தான்யா இருக்கு, இந்த லட்சணத்துல எல்லோரும் தியேட்டர்லதான் படம் பார்க்கனுமாம். நாறப்பயலுக, அவனுகளுக்கு லாபம் வரனும்னா, மக்கள் எப்படி வேணும்னாலும் போயி படம் பார்க்கனுமா? சேட்டைக்காரன் இதைப்பத்தி சரியான சாட்டையடி கொடுத்திருக்கார், அவசியம் படிச்சுப்பாருங்க!

  ReplyDelete
 9. தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். உண்மையிலேயே அருமையான பதிவு இது வாழ்த்துக்கள் சார்.
  படம் மொக்கையா இருந்தாலும் உங்க விமர்சனமா சூப்பரா இருக்கு தலைவா...
  அப்டியே..
  http://sakthistudycentre.blogspot.com/

  ReplyDelete
 10. /////நான் முக்கியமா அசின பார்க்கத்தான் போனேன்,//////

  :(

  ReplyDelete
 11. லேட்டா வந்தாலும் ஓட்டு போட்டுடோம்ல்ல..

  ReplyDelete
 12. விமர்சனம் அருமை நண்பரே

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 13. @ karthikkumar ...

  என்ன பண்ரது மாம்சு, விதி வலியது...

  ReplyDelete
 14. @ ராஜகோபால்

  ஆகா முத முதலா குண்டு சார் வந்துருக்காரு, அதயெல்லாம் லூஸ்ல விடுங்க சார், அவங்க அப்பன் இருக்க்ற வரைக்கும் தான் இந்த பேச்செல்லாம் இருக்கும், அப்புறம் சைலன்ஸ்தான்...

  ReplyDelete
 15. @ எஸ்.கே ...

  பார்க்கலாம் சார் அடுத்து என்ன பண்ண போறாருன்னு...

  ReplyDelete
 16. @ பன்னிக்குட்டி ராம்சாமி ...

  வாங்க சார் ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க, வீட்டில மனைவிகள் குழந்தைகள் நலமா :-) ஹி ஹி சும்மா சொன்னேன் சார், நன்றி சார்

  ReplyDelete
 17. @ sakthistudycentre-கருன்,..

  நன்றி கருன் எல்லாருக்கும், எல்லா பதிவிலையும் போய் ஓட்டு போடறீங்க, பெரிய மனசுங்க உங்களுக்கு, ரொம்ப நன்றிங்க....

  ReplyDelete
 18. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////நான் முக்கியமா அசின பார்க்கத்தான் போனேன்,//////

  :(

  ஹி ஹி ரொம்ப நாள் ஆயிருச்சுல்ல அதான் :-)

  ReplyDelete
 19. @ மாணவன் ...

  நன்றி மாணவன் சார்...

  ReplyDelete
 20. //அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவதுன்னு கவருமெண்டு விளம்பரம் சுத்தமா அஞ்சு நிமிசம், முடியல....//

  அட...இது எனக்கு தெரியாதே..நம்ம பேருல வேற இருக்கு...:)))

  படம் நல்லா இருக்குனு தான் சொல்றாங்க...

  ReplyDelete
 21. என்னய்யா விஜய் படம் இது, ஒரு ஓப்பனிங் சாங் இல்லை, குத்துடான்ஸ் இல்லை, பஞ்ச் டயலாக் இல்லை, பொறி பறக்கும் சண்டைகாட்சிகள் இல்லை, ஓவர் பில்ட் அப் இல்லை, இப்படி எதுவுமே இல்லாம ஒரு விஜய் படம், ரொம்பவே அடிபட்டுடாரு போல, மம்மிய பார்த்த எம் எல் ஏ கணக்கா ரொம்பவே இறங்கி வந்து நடிச்சிருக்காரு.
  இப்படியெல்லாம் நடித்ததால்தான் காவலன் ஓடுதுன்னு பேசிக்கிறாங்க நண்பா...

  ReplyDelete
 22. @ ஆனந்தி..

  என்ன மேடம் இப்படி சொல்லிட்டீங்க, தமிழ்நாட்டுல அதுவும் மதுரைல இருந்துட்டு அண்ணன்கிட்ட சொல்லிட போறாங்க :-)))))0

  ReplyDelete
 23. @ ரஹீம் கஸாலி ...

  உண்மைதான் நண்பா, படம் பார்க்கலாம், ரொம்ப மோசமில்லை...

  ReplyDelete
 24. ஜி.. விமர்சனம் நல்லாயிருக்கு. இந்த மாதிரியான மக்களை கொள்ளையடிக்கும் தியேட்டர்களை பற்றி நீங்க ஒரு பதிவு போட்டா என்ன?

  ReplyDelete
 25. ராஜகோபால் said...
  நேத்து டாக்டர்.இன்னைக்கு நடிகன்.நாளைக்கு அரசியல்வாதி இது அரசியலுக்கு வந்து மயிரவா புடுங்க போகுது//

  என்னண்ணே, பொசுக்குனு இப்படி சொல்லிபுட்டீங்க.இரவுவானம் வேற தீவிர ரசிகர். என்ன ஆக போகுதோ???

  ReplyDelete
 26. அட, ரொம்ப நாளைக்கப்புறம் விஜய் படத்தைப் பத்தி நிறைய பாசிடிவா வாசிக்க முடியுதே...! பார்த்துர வேண்டியது தான்....! :-)

  ReplyDelete
 27. @ Ding Dong ...

  அதுதான் ஒவ்வொரு பதிவிலேயும் போடலாம்னு முடிவு பண்ணிட்டேன்...

  ReplyDelete
 28. @ சிவகுமார் ...

  என்ன சிவா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க, உண்மையிலேயே இடைவேளைக்கு அப்புறம் படம் பரவாயில்லைன்னு எனக்கு தோணுச்சு, அதான் எழுதி இருக்கேன், அதுக்காக விஜய் ரசிகர்னு முடிவு பண்ணிடுறதா? ஒன்னும் ஆகாது பாஸ், நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லை...

  ReplyDelete
 29. @ சேட்டைக்காரன் ...

  ஆமாங்க பாஸ், ஒருதடவை பார்க்கலாம்...

  ReplyDelete
 30. சும்மா ஒரு தமாசு நண்பா. // நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லை// don’t say like that.

  ReplyDelete
 31. @ சிவகுமார்

  ok boss cooooooool :-)))))

  ReplyDelete
 32. அசின்க்காக தான் போனீங்களா . ரொம்ப பழைய பிகர் ஆச்சே நண்பா

  ReplyDelete
 33. நல்ல படத்துக்கு பப்ளிசிட்டி தேவை இல்ல
  -விஜய்

  நல்ல படத்துக்கு விஜய் தேவை இல்ல
  - பப்ளிக்

  இப்படிக்கு

  சற்றுமுன் வந்த sms

  ReplyDelete
 34. @ நா.மணிவண்ணன் ...

  என்ன இருந்தாலும் முன்னாள் பிகர் இல்லையா, அப்புறம் பழைச மறந்திட்டு பேசரான்னு யாரும் நாளைக்கு சொல்லிடக்கூடாதுல்ல அதான் ஹி ஹி

  அந்த SMS பழசு நண்பா...

  ReplyDelete
 35. காவலன் விஜய்யை கொஞ்சம் காப்பாற்றிவிட்டது....நல்ல விமர்சனம்...

  ReplyDelete
 36. காவலன் பார்த்த உங்க ஒரே மன தைரியத்தை பாராட்டி நாங்க உங்களுக்கு தரும் சிறிய பரிசு 'சுறா' திரைப்பட டீவீ டி

  ReplyDelete
 37. உங்க எல்லா விமர்சனமும் வாசிச்சிருக்கிறன், முதல்முறையா வாசிக்காம கமன்ட் போடும்படி வச்சிட்டீங்களே :-))

  ReplyDelete
 38. @ NKS.ஹாஜா மைதீன் ...

  நன்றி சார்...

  ReplyDelete
 39. ஒரு கருப்பு நிற சிண்டெக்ஸ் டேங்குல டம்ளர் இல்லாம மக்கள் கையாலயே குடிச்சிட்டு இருக்குறாங்க, பால்கனில இருக்குற தண்ணி பக்கெட்டுல இருந்த டம்ளர் உள்ள பாதி பச்சை கலர்ல பாசானம் புடிச்சு இருக்கு, தியேட்டர்ல சவுண்டும் சரியா கேட்கலை, பராமரிப்பும் சரியில்லை, மொத்ததுல ஒருதடவை படம் பார்க்க வரவங்க மறுதடவை கண்டிப்பா வர பிரியப்பட மாட்டாங்க..


  HA HA KALAKKAL COMENT

  ReplyDelete
 40. @ எப்பூடி..

  சுறா டிவிடியா அது மட்டும் வேண்டாம் தல, இந்த ஒருதடவை மன்னிச்சு விட்டுடுங்க ப்ளீஸ்,...

  ReplyDelete
 41. @ எப்பூடி..

  படிக்காமயே கமெண்ட் போட்டீங்களா ஏன் பாஸ்?????

  ReplyDelete
 42. @ சி.பி.செந்தில்குமார் ...

  ஏன் தல நீங்க வேற படம் பார்க்க போய் தண்ணிகூட கிடைக்காம நான் பட்ட பாடி இருக்கே, அப்பப்பா.. அதனாலதான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையா இறங்கிட்டேன்...

  ReplyDelete
 43. நல்லாவே விமர்சித்துள்ளீர்கள். தாமத்திற்கு மன்னிக்கவும்.
  சாதித்த சித்திக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 44. //படிக்காமயே கமெண்ட் போட்டீங்களா ஏன் பாஸ்????? //

  விஜய் படம், விஜய் பட விமர்சனம் எல்லாம் பாக்கிற அளவுக்கு வலிமையான மனம் எனக்கு இல்லைங்க :-)))

  ReplyDelete
 45. Me too. அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவதுன்னு//
  மாப்பு இப்போ எல்லா தியேட்டர்லையும் இந்த விளம்பரம் போடறாங்க... தாங்க முடியல...

  ReplyDelete
 46. படம் நல்லா இருந்தாலும், நல்லா இல்லாட்டினாலும் படம் பார்ப்பவர் எண்ணிக்கை 50ஐ தாண்ட மாட்டேங்குது. பாவம் தான் திரை உலகம்.

  ReplyDelete
 47. காவலன் விஜய காப்பதிட்டான்
  அருமையான விமர்சனம்

  ReplyDelete
 48. என்னது விஜய் ‘நடிச்சிருக்காரா’..என்னப்பா இது நாம கடல் தாண்டுனதும் தாய்மண்ணுல என்னன்னவோ நடக்குதே..விமர்சனம் நடுநிலையுடன்...அருமை.

  ReplyDelete
 49. "நடிக்கத் தெரியாதுன்னு இனி விஜய் பத்தி சொல்ல முடியாது"
  உண்மை திறமையுள்ளவர்களை வீழ்த்த முயற்சிக்கலாம் ஆனால் திறமை வீழாதல்லவா?
  அருமை சகோ...

  ReplyDelete
 50. அரசியல் வியாதிகளுக்கு சோனியா காலை நக்க வேண்டிய சுய நலம் இருந்தது.

  அனால் இவனுக்கு என்ன அப்படி ஒரு தேவை? எதற்காக அந்த உளறுவாயனைப் போய் சந்தித்து வாழ்த்து சொன்னான்? ராஜபக்ஷே மனைவியுடன் விருந்து சாப்பிட்ட அசினைத்தான் சதை நாயகியாகப் போடவேண்டும் என்று அடம் பிடித்தான்?

  இவனுடைய படம் நல்ல படமோ, மொக்கை படமோ - வெளிவந்து இணையத்தில்கூட எவ்வித புறக்கணிப்பும் இன்றி ஓடுவது நம்முடைய சொரணையற்ற நிலையையே காட்டுகிறது.

  -----------------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன'2011)

  ReplyDelete
 51. சினிமாவை பற்றி உங்கள் கருது சிறந்த விமர்சனம்.
  தியேட்டர் பற்றியது இன்றைய நிதர்சனம்.

  ReplyDelete
 52. //இந்த படம் ஓடுனாதான் அவருக்கும் நல்ல படத்துல நடிக்கனும்னு ஆர்வம் வரும், அதனாலயாவது இந்த படத்த ஓட வைங்கப்பா...//
  Super! :-)

  ReplyDelete
 53. IPPATI OVERRA OTTURINGHA INTHA PATHUKKU APPURAM PARUGGHA VIJAY TOPLA THAEN VARA PORARRU

  ReplyDelete
 54. மென்மையான விமர்சனம்..

  விஜய் தன்னைச் சுற்றி இருப்பவர்களின் ஜால்றாக்களிலேயே மூழ்கி இராமல் வெளியில் வந்து இந்த முயற்சியை எடுத்துப் பார்த்ததற்கு விஜய்க்கு முதல் சல்யூட்.. படம் ஓடுகிறதோ இல்லையோ, விஜய் ஜெயித்து விட்டார்... எப்போதும் விஜய் படம் வரும்போது வரும் தாறுமாறான விமர்சனகள், குறுஞ்செய்திகள், கேலி கிண்டல்கள் சுத்தமாக அடங்கி இருப்பதை உணர முடிகிறது.. இதுவே அவருடைய அடுத்த சினிமா மறுமலர்ச்சிக்கு வித்திடப் போகிறது.. ரசிகர்களும் இதை நினைத்து சந்தோஷப் படுவார்கள் என்றே நம்புகிறேன்..

  மென்மையான விமர்சனம்.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 55. தியேட்டர்கள் பண்ணும் அளும்பு தாங்க முடிவதில்லை.. கேஜி தியேட்டரில் ஏர்போர்ட்டில் சோதனை போடுவதைப் போல சோதனை செய்கிறார்கள்.. கேட்டால், வேடு குண்டு சோதனை இல்லையாம்.. வெளியில் இருந்து தின்பண்டங்கள் உள்ளே கொண்டு வந்து விடக் கூடாதாம்.. அவர்கள் இடைவேளையில் விற்கும் 'மலிவு' விலை தின்பண்டங்களை மட்டுமே வாங்க வேண்டுமாம்.. விலை ஒன்றும் அதிகமில்லை.. ஒரு சின்ன டப்பா பாப்கார்ன் வெறும் எண்பது ரூபாய்தான்..

  ReplyDelete
 56. பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
  http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

  ReplyDelete
 57. நேத்து தான் பத்து டாலர் கொடுத்து படம் பார்த்தேன். படத்தில பாடல் வரும் போது எல்லாம் நானும் என் நண்பனும் சிரித்துக் கொண்டே இருந்தோம். கொஞ்ச நேரம் கழித்து மத்தவங்களும் அடுத்தடுத்த பாடல்களுக்கு சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. லொள்ளு சபா-ல போக்கிரி படத்தை கலாய்ச்ச ஞாபகம் வந்தது எனக்கு.

  தியேட்டர் அற்புதம். இருக்கைகள் அம்சமா இருக்கு. நம்ம ஊரு மல்டிப்ப்லேக்சில் இது போன்ற இருக்கைகள் வர இன்னும் கொஞ்சம் நாள் ஆகலாம்.

  விஜய் அருமையா நடிச்சு இருக்காரு.என்ன இன்னும் கொஞ்சம் அண்டர்ப்ளே பண்ணி இருந்தார்னா நல்லா இருந்திருக்கும் என்பது என் கருத்து.

  ReplyDelete
 58. பாரத்... பாரதி... நன்றி சார்

  எப்பூடி.. ஹா ஹா ஹா, ஓகே தல

  siva2791.. என்னை மாதிரியே நிறைய பேரு பாதிக்கப்பட்டி இருப்பீங்க போல இருக்கு ...

  தமிழ் உதயம்... உண்மைதான் சார், தியேட்டரை சரியா பராமரிப்பதே கிடையாது, டிக்கெட் விலை மட்டும் அதிகமா வச்சு வித்தா எவன் படத்துக்கு வருவான்? எப்படியோ போகட்டும் விடுங்க...

  FARHAN... நன்றி சார்

  செங்கோவி... ஒருவேளை நீங்க வெளிநாட்டுக்கு போனதாலதான் இந்த மாற்றமோ என்னமோ ஹி ஹி, அதுசரி எப்ப வருவீங்க?

  தோழி பிரஷா... உண்மைதான் மேடம், இப்படியே தொடருவாரா விஜய் என பார்க்கலாம்...

  tharuthalai... அவரின் அரசியலை பற்றிய உங்களது கருத்து உண்மைதான் நண்பா ...

  ஜீவன்சிவம்.. நன்றி சார்

  ஜீ... நன்றி ஜீ

  ABDULMALIK... வரட்டும், வரட்டும்,,,

  சாமக்கோடங்கி... நன்றி சார், கேஜிலயும் இப்படித்தான் அக்கிரமம் பண்ணுராங்களா?

  Philosophy Prabhakaran.. ஓசியில சரக்கு கிடைக்குமா?

  டக்கால்டி... உண்மைதான் இடைவேளை வரை படம் தொய்வாகதான் போகிறது ...

  ReplyDelete
 59. நல்ல விமர்சனம்!!! தேட்டர் கட்டிங்க்ஸ் அதை விட சூப்பர்!!

  --
  மதுரை பாண்டி
  http://maduraipandi1984.blogspot.com

  ReplyDelete
 60. அய்யா நான் படம் பார்பதில்லை, ஆனாலும் நீங்க எழுதிய விமர்சனம் அருமை

  ReplyDelete
 61. படம் பார்த்தேன். திரைக்கதையில் மிகவும் குழப்பம். மலையாளத்தில் ஹீரோயிசம் இல்லாத ஹீரோவால் செய்யப்பட கதாபாத்திரம். இங்கே விஜய்க்காக கொஞ்சமா மாஸ் கலக்க நினைக்கையில் சித்திக் கொஞ்சம் இடறி இருக்கிறார். மற்றபடி அனைத்துப் பிரச்சினைகளையும் தனியாளாக தூக்கி நிறுத்துகிறார் விஜய் என்றே சொல்லலாம். அசின் கண்ணில் கொஞ்சம் கூட காதல் இல்லை.
  வடிவேலு வரும் ஒவ்வொரு காட்சியிலும் வயிறு வலிக்கும் அளவுக்குச் சிரிக்க வைக்கிறார்.
  மற்ற படங்களை விட விஜயின் இந்தப் படத்தை ஜாலியாகப் பார்க்கலாம்.

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!