பொங்கல் முடிஞ்சிருச்சு, வழக்கம் போலவே எல்லாரும் நல்லா கொண்டாடி இருப்பீங்க, நானும் வழக்கம் போலவே கம்பெனிக்கு போலாம்னு கிளம்பி வந்துகிட்டு இருந்தேன், எங்க ஊருல எப்பவுமே பொங்கல் முடிஞ்சிருச்சுன்னா ஒரு வாரத்துக்கு யாருமே இருக்க மாட்டாங்க, ரோடெல்லாம் வெறிச்சோடி போயிருக்கும், ஆனா இன்னைக்குன்னு பார்த்தா கொஞ்சம் பிசியாவே இருந்தது, நான் எப்பவுமே வண்டிய கொஞ்சம் ஸ்லோவாவே ஓட்டுவேன், 50 கிலோமீட்டர் தாண்டி ஓட்டுரதே இல்ல, அப்படி வந்துகிட்டு இருக்கும் போது ரோட்ட ஒரு ஆளு கிராஸ் பண்ணிட்டு இருந்தாரு, அவரு கிராஸ் பண்ணுன வேகத்த பார்த்தா ஒரு நாள் ஆகும் போல இருந்தது, சரி ஹாரன் அடிப்போம், சத்தம் கேட்டா வேகமா போயிருவாருன்னு நினைச்சேன், ஒரு 200 அடி தூரத்துல இருந்தே ஹாரன் அடிக்கிறேன், பயபுள்ள அவன் பாட்டுக்கு அப்படியே மெதுவா நடக்கறான், அவன் போயிருவான் போயிருவான்னு நானும் வேகத்த குறைக்கவே இல்லை, கடைசியா பக்கத்துல வண்டி போனப்பறம் இவன் சரிபட்டு வரமாட்டான்னுட்டு பிரேக் அடிச்சி அவன் பக்கத்துல போய் தட்டு தடுமாறி நிறுத்துனேன், கிறீச்சுன்னு சத்தம் வேற.
ஏங்க ரோட்ட கிராஸ் பண்ணும் போது வேகமா கிராஸ் பண்ணலாம்லன்னு கேட்டேன், அதுக்கு அவன் நான் அப்படித்தான் கிராஸ் பண்ணுவேன், அத கேட்க நீ யாருன்னான், நான் யாருங்கறதெல்லாம் முக்கியமில்லைங்க, வண்டியெல்லாம் வேகமா வந்துகிட்டு இருக்குதுல்ல, கொஞ்சம் சீக்கிரமா கிராஸ் பண்ணுனா என்னன்னு கேட்டேன், அதுக்கு அவன் ஏன் நீ வண்டிலதான வந்த, பிரேக் புடிக்க வேண்டியதுதான, நடக்கறவங்கள பார்த்தா உங்களுக்கு இளிச்சவாயனுகளா தெரியுதா? வண்டில வந்தா பெரிய ஆளுன்னு நினைப்பாங்கறான்,
நான் எத பேசுனாலும் அவன் சண்டை கட்டுறதுலேயே குறியா இருக்கான், சும்மாவே வண்டில போகும்போது எவனாவது குறுக்க வந்தா பயங்கர கோவம் வரும், ரொம்ப டென்சன் ஆனா கெட்ட வார்த்தை வாயில சாதாரணமாகவே வந்துரும், ஆனா அவன் சண்டை போடறதை பார்த்தா எனக்கு கோபம் வரல, சிரிப்புதான் வந்துச்சு, அப்புறம் அவன்கிட்ட சொல்லிட்டு வந்தேன், அண்ணே நீங்க சொல்றது சரிதான், வண்டில வரவங்க பிரேக் புடிச்சு வரணும், நீங்க அப்படித்தான் வருவீங்கன்னு சொல்றீங்க, வாஸ்தவம்தான், என் வண்டில பிரேக் புடிச்சதுனால நீங்க இப்ப இங்க நின்னு எங்கூட சண்டை போட்டுட்டு இருக்கீங்க, இதுவே பிரேக் புடிக்கலைன்னா மண்டை உடஞ்சு கீழே விழுந்து அடிபட்டு இருப்பீங்க, நம்ம ஊருல பலபேரு ஓட்டை வண்டி வச்சிகிட்டு பிரேக் இல்லாமதான் வண்டி ஓட்டிகிட்டு இருக்காங்க, அதனால ரோட்டை கிராஸ் பண்ணும்போது வேகமா கிராஸ் பண்ணுங்க, இல்லைன்னா வண்டில அடிபட்டிறுவீங்கன்னு சொன்னா, சரிதான் போடா அட்வைஸ் பண்ண வந்துட்டங்கறான், அப்புறம் எனக்கும் கோபம் வந்துருச்சு, நீ போடா @%#$#& நானும் வந்துட்டேன்.
பாதுகாப்பான வேகம்னு எதுவாச்சும் இருக்காங்க, 10 கிலோமீட்டர் வேகத்துல போய் கீழே விழுந்து செத்தவனும் இருக்கான், 100 கிலோமீட்டர் வேகத்துல போய் அடிபட்டு பொழச்சவனும் இருக்கான், அவ்வளவு ஏன் நடந்து போய் அடிபட்டு செத்தவங்க எவ்வளவு பேரு இருக்காங்க, டிவில போடற பைக் விளம்பரத்துல DRAMATICAL STUNTS PERFORMED BY ONLY EXPERTS, DO NOT IMITATE னு போடராங்க, எக்ஸ்பர்ட் பண்ற வேலையெல்லாம் நம்ம பசங்க அனாயசமா ரோட்ல பண்ணிட்டு இருக்கானுங்க, இரயில்வே கிராஸ்ஸிங்ல மட்டும்தான் பார்த்து போவானுங்களா, ரோட்டுல போனா எருமை மாடு மாதிரியா போவானுங்க, எருமை மாடு கூட ஹாரன் அடிச்சா வழி விடுதுங்க, இந்த மனுசனுங்கதான் மாட்டவிட கேவலமா இருக்கானுங்க
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம்னு போன மாசம் கொண்டாடுனாங்க, அதுவும் எப்படி 100 நோட்டீஸ் அடிச்சிட்டு வந்து ரோட்டுல போற வர வண்டியெல்லாம் நிறுத்தி கொடுத்துட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு அப்படியே விட்டுட்டானுங்க, ஏன் வண்டில போறவனுக்கு மட்டும்தான் விழிப்புணர்வு ஊட்டனுனா? நடந்து போறவனுகெல்லாம் விழிப்புணர்வு வேண்டாமா? ஏஆர் ரஸ்மான் மியூசிக்ல செம்மொழியான தமிழ்மொழியேன்னு ஒரு பாட்ட மாநாட்டு டைம்ல அஞ்சு நிமிசத்து ஒருமுறை எல்லா டிவியிலயும் மாசக்கணக்கா போட்டாங்க, ஆனா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம்னு ஒரு வாரம்தான் கொண்டாடுறாங்க, ஒரு விழிப்புணர்வு படமாவது எடுத்தானுங்களா டிவியில போட்டானுங்களா? தமிழ்ல வளர்க்கறதுக்கு தமிழன் உயிரோட இருக்க வேணாமா?
அட பிரைவேட் பத்திரிகைகாரன் தினமலர் கூட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு படம் எடுத்து இருக்கான்யா, அந்த அறிவு கூட கெவருமெண்டுக்கு கிடையாதா? குறைந்தபட்சம் அந்த விளம்பரங்களையாவது வாங்கி டிவியில ஒளிபரப்பி இருக்க கூடாதா?
இனிமேல எவனாவது குறுக்க வந்தாங்கன்னா, சங்கு ஊதிட்டுதான் மறுவேலை பார்ப்பேன் .. காலையிலேயே கடுப்பேத்தறானுங்க...
இவங்க திருந்தவேமாட்டாங்க தலைவரே..இவங்களை நடுரோட்டில் வச்சு சுடனும்.
ReplyDeletekkarun09,010அப்படீன்னு ஓட்டு போடறது நான்தான்.
ReplyDeletehttp://tamizyan.blogspot.com/2011/01/blog-post_11.html
ReplyDeleteபிடித்து இருந்தால் ஆதரியுங்கள்
அப்புறம், குறுக்க வந்தவன் கிட்ட அடிதடி சண்டை போடாம வந்தீங்களே அது வரைக்கும் சந்தோஷம். ஆனா நீங்க ரொம்ப கோவக்காரர்-னு தெரியுது.
ReplyDeleteநண்பா இவிங்க எப்பவுமே இப்படித்தான் நாமாதான் ஜாக்கிரதையாக ஓட்டனும் . என்ன பண்றது சப்போர்ட் அவிங்களுக்கு தான் கிடைக்கும் நம்ம மேல தப்பே இல்லாட்டி கூட . நான் பலதடவ மெயின் ரோடுனு பாக்காம கேவலமா கெட்டவார்த்தையில் திட்டிவிட்டு போய்டுவேன்
ReplyDelete/ஏன் வண்டில போறவனுக்கு மட்டும்தான் விழிப்புணர்வு ஊட்டனுனா? நடந்து போறவனுகெல்லாம் விழிப்புணர்வு வேண்டாமா? //
ReplyDeleteஅட செம பதிவு தான்...எங்களுக்கும் இப்படி நிறைய கடுப்படிக்கிற அனுபவம் இருக்கு :(( ஒரு முறை செங்கல்பட்டு தாண்டி இரவில் வந்துட்டு இருக்கோம்..ஒரு கிராமத்து அம்மா NH ரோடு இல் ஆடி அசஞ்சு நடந்துட்டு இருக்கு..இருட்டில் ஒரு மண்ணும் தெரில...பக்கத்தில் வரும்போது தான் தெரிஞ்சது...செம பிரேக் அடிச்சு...ம்ம்..அன்னைக்கு அந்த அம்மாக்கு பாலு தான் ஊத்திருப்பாங்க...திட்டினால்...நீங்க பாத்து போகோனும் சாமி னு சொல்லிட்டு கூல் ஆ போச்சு....)ரோடு இல் அசமந்தமா....அவங்க போட்ட ரோடு மாதிரி நடந்து போற நிறைய ஆளுங்க இருக்காங்க...
பதிவு எங்கெங்கோ போய், கடைசியில் சாலை பாதுகாப்பு வாரம் அப்படிகிற சொல்லுவதில் முடிஞ்சுருக்கு..
ReplyDeleteசாலை பாதுகாப்பு வாரம் பத்தி நீங்க சொன்ன விஷயம் யோசிக்க வைக்கிறது.
sakthistudycentre-கருன் said... hi hi வேணாங்க அப்புறம் யாரு ஜெயிலுக்கு போறது, ஓட்டு போட்டதுக்கு நன்றிங்க
ReplyDeleteநிலா said...
ReplyDeleteகண்டிப்பாங்க, கொஞ்சம் வேலை வரேன்.
பாரத்... பாரதி... said...
ReplyDeleteஹி ஹி நான் கோவக்காரன் இல்லைங்க, ஆனா சில சமயம் கோபப்பட வேண்டி இருக்குங்க, என்ன பண்றது, நம்ம நேரம் அப்படி, சனியன் ஸ்ரெயிட்டா நம்மகிட்டயே வரான் :-)
நா.மணிவண்ணன் said...
ReplyDeleteநானும் திட்டிட்டுதான் வந்தேன் நண்பா, வேற என்ன பண்ண முடியும்?
ஆனந்தி.. said...
ReplyDeleteஹா ஹா நிறைய பேரு பாதிக்கப்பட்டு இருப்பீங்க போல, வருகைக்கு நன்றி மேடம்.
இது போன்ற சமயங்களில் நம்முடைய இரத்தம் சூடாகி மண்டைக்குள் சென்று குழம்பாகி மாறி விடாமல் இருக்க எல்லாம் வல்ல நம்ம ஆத்தாளை பிரார்த்தனை செய்து அமைதி காப்போம் என்று இன்று முதல் இளரத்தம் சுரேஷ் முன்னிலையில் உறுதியேற்போம். எப்போதும் போல சங்கு ஊத வேண்டும் என்று தானும் செத்து அடுத்தவர்களை சாகடிப்பவர்களை கழக உடன்பிறப்புகள் கவனித்துக் கொள்வார்களாக. ஆமேன்..
ReplyDeleteஜோதிஜி said...
ReplyDeleteசார் நல்லாவே புரியுது, மாட்டி விட்டுடாதீங்க :-)
கடுப்பாகாதீங்க. அந்தாளுக்கு வீட்டுல என்ன பிரச்சனையோ?
ReplyDeleteஉண்மையில் சொல்லப்போனால் நம்மில் பலருக்கு
இந்த மனநிலை இருக்கிறது. உங்களை ஒரு கார்காரன் திட்டினால் கோபம் வரும். கார் வச்சுருந்தா நீ என்ன பெரிய லார்டா என்று கேட்பீர்கள். அதே போலத்தான். வெளிநாடுகளில் நடந்து செல்பவர்களுக்குத்தான் அதிக முன்னுரிமையாம். ஆனால் இங்கே நிலைமை தலைகீழ்.
பிரீயா விடுங்க பாஸ்
coooooooooooooooooooooooool
ReplyDeleteபிரேக் எல்லாம் புடிக்காதீங்க. அது உங்கள காப்பத்ததான் வச்சிருக்கு,இந்த மாதிரி expiry date ஆனதை காப்பாத்த அல்ல. நீங்கபாட்டுக்கு மக்கள் தொகையை குறைப்பதில் உங்க பங்கை செய்யவும்
ReplyDeleteபாலா said... இல்ல பாஸ் வீட்டுல பிரச்சனை அதனால சுத்துறவங்கன்னா நல்லாவே தெரியும், ஆனா இந்த ஆளு வேணும்னே பண்ணுறவந்தான்னு தெரிஞ்சது, காலங்காத்தால இப்படி போற வரவங்கள டென்சன் பண்ணக்கூடாதல்ல பாஸ்
ReplyDeleteNagasubramanian said...
ReplyDeleteஓகே பாஸ் கூல் :-)
இனியவன் said...
ReplyDeleteஹி ஹி இதுவரை குறைச்சதில்லை, இனிமே எப்படினு தெரியல :-)
ADA .. R U AN ANGRY MAN?
ReplyDelete1ST CUT I CANT, BUT DONE 1ST VOTE
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteவாங்க தல, நான் கோபக்காரன் எல்லாம் கிடையாதுங்க, நமக்கெல்லாம் ஓட்டுங்கரது ரஜினி மாதிரி ஆகி பல நாள் ஆச்சுங்க, ஓட்டு போட்டதுக்கு நன்றிங்க
கடுப்பேதுறாங்க மை லார்ட்!!! எனக்கும் இந்த மாதிரி அனுபவம் அதிகம்...
ReplyDelete--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
ரோட்டுல நடந்து போகும்போது வழி விடாம போறதுல ஒரு கெத்து
ReplyDeleteஅதுக்கு அவன் ஏன் நீ வண்டிலதான வந்த, பிரேக் புடிக்க வேண்டியதுதான, நடக்கறவங்கள பார்த்தா உங்களுக்கு இளிச்சவாயனுகளா தெரியுதா?
ReplyDeleteஇதே வார்த்தையை ஒரு தண்ணி லாரி வரும்போதும், ட் ரெயினுக்கு முன்னாடியோ போயி சொல்லுவானா அந்த நாதாரி...
Madurai pandi said...
ReplyDeleteவாங்க மதுரை பாண்டி நிறைய பேர்க்கு இந்த அனுபவம் இருக்கு, எனக்கே இதுக்கு முன்னாடியும் இதே போல நிறைய சம்பவங்கள் நடந்துருக்கு, இப்ப பிளாக் இருக்குறதால பகிர்ந்துக்க முடியுது, உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
THOPPITHOPPI said...
சாகும்போதும் அதே கெத்து இருந்தா சரிதான் :-)
ரஹீம் கஸாலி said...
சொல்ல அவன் உயிரோட இருக்க முடியாதுல்ல :-) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
கடைசி வரிகளை படித்துவிட்டு சிரிப்பை அடக்க முடியவில்லை.....
ReplyDeleteஇனிமேல எவனாவது குறுக்க வந்தாங்கன்னா, சங்கு ஊதிட்டுதான் மறுவேலை பார்ப்பேன் ..
ReplyDeleteal the best machchiiiiiiiiiiiiiiiii
10 கிலோமீட்டர் வேகத்துல போய் கீழே விழுந்து செத்தவனும் இருக்கான், 100 கிலோமீட்டர் வேகத்துல போய் அடிபட்டு பொழச்சவனும் இருக்கான், ///
ReplyDeletethatthuvam number 102457.
vinu said...
ReplyDeleteஇனிமேல எவனாவது குறுக்க வந்தாங்கன்னா, சங்கு ஊதிட்டுதான் மறுவேலை பார்ப்பேன் ..
al the best machchiiiiiiiiiiiiiiiii ///////
aama ungakita irunthu innum edhirpaarkiren maapu seekiram ....:)
இனிமேல எவனாவது குறுக்க வந்தாங்கன்னா, சங்கு ஊதிட்டுதான் மறுவேலை பார்ப்பேன் .. காலையிலேயே கடுப்பேத்தறானுங்க...
ReplyDelete..... WARNING!!!!!!!!!!!!!!!!!!
// 10 கிலோமீட்டர் வேகத்துல போய் கீழே விழுந்து செத்தவனும் இருக்கான், 100 கிலோமீட்டர் வேகத்துல போய் அடிபட்டு பொழச்சவனும் இருக்கான் //
ReplyDeleteபன்ச் டயலாக்கா...
உங்களுடைய நகைச்சுவை கலந்த விழிப்புணர்வு அருமை... தொடரட்டும்...
ReplyDeleteNKS.ஹாஜா மைதீன் said... ரொம்ப நன்றிங்க
ReplyDeletevinu said.. தேங்க்ஸ் மச்சி.
karthikkumar said... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமா ஆக்கிட்டீங்களே மாம்சு
Chitra said... ஆமாங்க வார்னிங்தான், நான் எனக்கு சொன்னேன் :-)
Philosophy Prabhakaran said... நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லைங்க பிரபா, நன்றிங்க
I liked your comment for my post. ha,ha,ha,ha,ha.... Good one.
ReplyDelete