நான் பிறந்து வளர்ந்தது இப்ப இருக்குறது எல்லாமே பல்லடம்னு சொல்ற ஊருதான், அதாங்க அமைதிபடை படத்துல சத்தியராஜ் தேர்தல்ல போட்டி போடுவாறே அதே தொகுதிதாங்க, அப்படி சொன்னாதான நிறைய பேருக்கு தெரியுது, பல்லடம் அப்படின்னா ஒரே ஊரு கிடையாதுங்க, பாளையம்கற பேரு முடியர மாதிரி ஒரு இருபது, முப்பது ஊரு சேர்ந்ததுதான் பல்லடம், ஒரு காலத்துல திருப்பூரே எங்க ஊர் கூடதான் சேர்ந்து இருந்ததுனா பார்த்துக்கோங்களேன், ரொம்ப வருசங்களுக்கு முன்னாடி எல்லாம் எங்க ஊருல பாதியளவு விவசாய பூமியா இருந்தது, ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவங்க முழுக்க விவசாயம் பண்ணிகிட்டு இருந்தாங்க, அதே மாதிரி ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவங்க விவசாய வேலை பார்க்க பயன்பட்டுகிட்டு இருந்தாங்க, அப்ப எல்லாம் பொங்கல் சீசன் டைம்ல எங்க ஊரு முழுக்க சோளம், கம்பு, மக்காச்சோளம், தக்காளி, வெங்காயம் இப்படி பல தரத்துலயும் வெளஞ்சுகிட்டு இருந்த காலமது, விவசாய வேலைக்கும் சல்லிசா ஆளுங்க கிடைப்பாங்க, அத விட்டா நெசவு தொழிலும் அதிகமா நடக்கும், 40 வயசுக்கு மேல இருக்குற ஆளுங்கெல்லாம் விவசாயமும் அத சார்ந்து இருக்குற தொழிலும் பண்ணுவாங்க, அதுக்கு கீழ இருக்குறவங்க எல்லாம் நெசவு, தறி, கோழிப்பண்ணைன்னு பொழப்ப ஓட்டிகிட்டு இருப்பாங்க, இப்ப காலம் மாறி சுல்சர் தறி அளவுக்கு வந்துருச்சி,
அந்த சமயத்துலதான் எங்க ஊருல இருந்து 15 கிலோமீட்டர் தொலைவுல இருந்த திருப்பூர் வழிகாட்டுச்சு, அப்ப திருப்பூர் வேகமா வளர்ந்துகிட்டு இருந்த காலமது, வயசானவங்கள தவிர்த்து மீதி இருக்குறவங்க கொஞ்ச பேரு திருப்பூருக்கு வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க, ஒரு நாள் முழுக்க வயக்காட்டுல உடம்பு வலிக்க வேளை செஞ்சா என்ன கூலி கிடைக்குமோ அதே கூலி திருப்பூர் பனியன் கம்பெனில 8 மணி நேரம் உட்கார்ந்து பனியன் பீசுகளை அடுக்கி கட்டி வச்சா கிடைச்சது, அதிக நேரம் வேலை செஞ்சா இன்னும் அதிகமா சம்பாதிக்கலாம், அதனால எங்க ஊருல இருந்து நிறைய பேரு திருப்பூர்க்கு வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க, அப்ப நிறைய கிராமங்களில சரியான பஸ் வசதி கிடையாது, டைம்முக்கு வர பஸ்ஸும் சில நாட்களில வராது, சில கிராமங்களுக்கு பஸ் வசதியே கிடையாது, அதனால பஸ் வசதி இருக்குற கொஞ்சம் கிராம மக்கள் மட்டுமே வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க, மிச்ச கிராமத்துல வாழ்ந்துகிட்டு இருந்த மக்கள் லாரிகள்ள மூட்டை தூக்கற வேலைக்கும், இன்ன பிற வேலைக்கும் போய் குடும்பம் நடத்தி சிரமப்பட்டுகிட்டு இருந்தாங்க.
இப்படி போய்கிட்டு இருந்த காலத்துலதான் அரசாங்கம் மினிபஸ் அப்படின்னு ஒரு திட்டத்த ஆரம்பிச்சாங்க, சும்மா சொல்ல கூடாது அந்த திட்டத்துக்கு அமோக வரவேற்பு, ஒவ்வொரு கிராமத்தோட இண்டு இடுக்குலயும், சந்து பொந்துகள்ளயும் புகுந்து புறப்பட்டுச்சு மினிபஸ், ஒவ்வொருத்தங்க வீட்டு வாசல்லயே கொண்டு போய் இறக்கி விட்டுச்சு மினிபஸ், இதுக்காகவே காத்துகிட்டு இருந்த மாதிரி 10 வயசு பசங்க மொதக்கொண்டு வேலை செய்ய திருப்பூருக்கு படை எடுக்க ஆரம்பிச்சாங்க, இங்க ஒரு பழக்கம் இருக்குங்க, ஸ்கூல் பசங்களுக்கு பள்ளிக்கூடம் லீவு விட்டா போதும் நேரா பனியன் கம்பெனில கொண்டு போய் விட்டுருவாங்க, ஸ்கூல் லீவு முடியற வரை வேலை செஞ்சா கொஞ்சம் பணம் கிடைக்கும், அது புஸ்தகம் வாங்க உதவும்னு, ஆனா பயபுள்ளகள பார்த்தீங்கன்னா லீவு முடிஞ்சு பாதி பேரு ஸ்கூலுக்கு போக மாட்டானுக, அப்படியே போனாலும் வாத்தியார் சொல்லி கொடுக்கற பாடம் புரியலைன்னா கவலையே படாம வேலைக்கு போக ஆரம்பிச்சிருவானுங்க,
சரி மேட்டருக்கு வரேன், இந்த மினிபஸ் வந்தப்புறம் இன்னும் கொஞ்சம் பேரு அதிகமா வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க, இப்படி எத்தனை பேரு வந்தாலும் திருப்பூர் எப்படி தாங்குதுன்னு கேட்குறீங்களா? அங்கதான் இருக்குது சூட்சமம், நம்ம பசங்க முதல்ல அடுக்கி கட்டத்தான் போவாங்க, அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வேலை பழகி டெய்லராகிடுவாங்க, மத்த வேலைக்கு போனவங்க, கட்டிங் மாஸ்டர், அயனிங் மாஸ்டர், பேட்டர்ன் மாஸ்டர்னு ஆகிருவாங்க, மாஸ்டர் ஆனா அப்புறம் ஸ்கூல் பசங்க மாதிரி கைமடிக்கறது, அடுக்கிகட்டறதுன்னு செய்ய முடியுமா, கொம்பு முளைக்கறதுன்னு கேள்வி பட்டு இருக்கீங்கலா? இங்க வந்தா நேர்லயே பார்க்கலாம், திருப்பூர்ல டெய்லர் உத்தியோகம்னா கலெக்டர் உத்தியோகம் மாதிரி, அந்த அளவு அலம்பல் பண்ணுவாங்க, அது எல்லாத்தையும் முதலாளிக ஏன் பொறுத்துக்குறாங்கன்னா, அவங்க தைச்சு கொடுத்தாதான் டைம்முக்கு பனியன் துணியெல்லாம் பொட்டி போட்டு அனுப்ப முடியும், அதனால அவங்களுக்கு வேற வழி இல்லை, அதனால ஹெல்பர் வேலைக்கு புதுசா எத்தனை பேரு வந்தாலும் சேர்த்துகிட்டுதான் ஆகனும்,
இப்படி கொஞ்சம் கொஞ்சமா விவசாய வேலை பார்த்தவங்க எல்லாம் திருப்பூர் பக்கம் ஒதுங்கிட்டதால, பாரம்பரியமா விவசாயம் பார்த்தவங்க பசங்களும் திருப்பூர் பக்கமா ஒதுங்க வேண்டியது ஆகிபோச்சு, மிச்சம் மீதி இருக்குறவங்க மாட்ட வச்சு பால கறந்து பொழைக்க வேண்டியதாச்சு, இப்படியே போனா காசுக்கு என்ன வழி? அந்த டைம்ல வந்தது பாருங்க ஒரு புது புரட்சி ரியல் எஸ்டேட் பிசினஸ் அப்படின்னு, வந்த வேகத்துல செம பிக்கப், மாததவணை திட்டத்தால நிறைய பேரு நிலம் வாங்க ஆரம்பிச்சாங்க, காசுக்குதான் திருப்பூர் இருக்கே, வாரம் ஆனா சம்பளம், விவசாய நிலங்கள வச்சிருந்தவங்க காசுக்காக கொஞ்சம் கொஞ்சமா தன்னோட நிலங்களை ரியல் எஸ்டேட்டுக்கு விக்க ஆரம்பிச்சாங்க, இதனால எங்க ஊரு விவசாய நிலம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சுருங்கி இப்ப 80% நிலம் காணாம போச்சு, மீதி இருபது சதவிகித நிலத்துலதான் கொஞ்சமே கொஞ்சம் விவசாயம் நடக்குது, ஆனா அதுல வேலை செய்யவும் ஆள் கிடைக்குறது இல்லை, இப்ப திருப்பூர்ல இருக்குற பெரிய பெரிய நிறுவனங்கள் கம்பெனிக்கு பஸ்சு, டிராக்ஸ், ஜீப்பு, ஆம்னி ஏன் ஏசி பஸ்ஸு கூட வாங்கி விட்டுருக்காங்க, அந்த வண்டிக எல்லாம் நாய் புடிக்கற வண்டி மாதிரி காலையில எல்லார் வீட்டு முன்னாடியும் நின்னு ஆள் புடிச்சிட்டு போயிட்டு இருக்காங்க, முன்ன ஏக்கரா கணக்கா விவசாயம் பார்த்தவங்க இப்ப செண்டு கணக்கா விவசாயம் பாக்குறாங்க.
இப்ப வேலைக்கு ஆள் கிடைக்குதா? கூலி எவ்வளவு கேட்குறாங்கன்னு எனக்கு தெரிஞ்ச ஒரு தோட்டத்து நண்பருகிட்ட கேட்டேன், அதுக்கு அவரு சலிச்சிகிட்டே சொன்ன பதில், இப்ப யாருங்க வேலைக்கு வராங்க, வரவங்க எல்லாருமே 50 வயசு தாண்டுனவங்கதான், காலையில 7 மணிக்கு வேலைக்கு வராங்க, வேலை ஆரம்பிக்கறதுக்குள்ள 7.30 மணிக்கு டீ வாங்கி தரணும், டீ குடிச்சிகிட்டே 8 மணி வரைக்கும் ஓட்டிடுராங்க, அப்புறம் 8 மணிக்கு வேலை ஆரம்பிச்சா 9 மணி வரைக்கும் வேலை செய்வாங்க, 9 மணிக்கு காலை டிபன் அது 9.45 லிருந்து 10 மணி வரைக்கும் இழுப்பாங்க, அப்புறம் பத்து மணிக்கு வேலை ஆரம்பிச்சா 10.30 க்கு மறுபடியும் டீ டைம், டீ வாங்கி தரணும், டீ குடிச்சு முடிக்க 11 மணி ஆகும், 11 மணிக்கு மறுபடியும் வேலை ஆரம்பிச்சா 12.30 மணிக்கு சாப்பாட்டு நேரம், சாப்பிட்டுட்டு படுத்தாங்கன்னா மறுபடியும் 3 மணிக்குதான் வருவாங்க, அப்புறம் 3.30 க்கு டீடைம், அது முடிய 4 மணி ஆகிடும், மறுபடியும் 4 மணிக்கு வேலை ஆரம்பிச்சா 5 மணிக்கு கிளம்பிடுவாங்க, உடனே கூலி 350 ல இருந்து 400 வரைக்கும் கொடுக்கனும், விக்கிற விலைவாசியில டிராக்டர் வெச்சு உழுது, தண்ணி பாய்ச்சி, களை எடுத்து, உரம் போட்டு இவ்வளவு கூலி கொடுத்து விவசாயம் பாக்குறதுக்குள்ள நாக்கு தள்ளிடுது தம்பி, இப்ப சோளம் போட்டு இருக்கேன், இதோட நிறுத்திக்கலாம்னு இருக்கேன், அடுத்த வருசம் இத கூட செய்யுறதா ஐடியா இல்லைன்னு சொன்னாரு.
இப்படி கொஞ்சம் நஞ்சமா விவசாயம் பார்த்துகிட்டு இருக்குற 50 வயசு தாண்டுனவங்களுக்கும் இப்ப வந்திருக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், வேலையே செய்ய வேண்டியதில்லை, சும்மா போய் கையெழுத்து போட்டா போதும், பணம் கொடுக்கறவரு கமிசன் 30 ரூபா போக 70 ருபா கைக்கு வந்திடும், கலைஞர் வேற 1 ரூபா அரிசி கொடுக்கறாரு, கூடவே கலர் டிவியும், அப்புறம் என்ன அரிசிய வாங்கி போட்டு சாப்பிட்டுட்டு களைப்பு தீர டாஸ்மாக்குல ஒரு கட்டிங் வாங்கி போட்டுட்டு இலவச டிவியில மானாட மயிலாட பார்த்தா போதாதா, விவசாயமாவது வெங்காயமாவது, ஏற்கனவே டிவி இருக்குறவங்க இலவச டிவிய வாங்கி 500 க்கும் ஆயிரத்துக்கும் வித்து சரக்கடிச்சிட்டு இருக்காங்க, ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்னு வேற சி.எம் சொல்லி இருக்காரு, அடுத்து இலவசமா வரப்போவது பம்பு செட்டு, டிவிக்கே 500 கிடைச்சா பம்பு செட்டுக்கு ஆயிரமாவது கிடைக்காதா என்ன? என்னெமோ போடா மாதவா....
இதை எல்லாம் பார்குறப்போ யாரோ எழுதின கவிதைதான் ஞாபகத்துக்கு வருது..
நெல்லு போட்டேன்
சோளம் போட்டேன்
அரிசி போட்டேன்
ஒன்னுமே
லாபம் தரலை
’’பிளாட்டு’’ போட்டேன்
அமோக லாபம்...!
[நண்பர்களே ஓட்டினை விட பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களையே நான் அதிகம் எதிர்பார்க்கிறேன், அதனால் ஒட்டளிக்க செலவிடும் நேரத்தில் பின்னூட்டம் இட்டு என்னுடைய நிறை குறைகளை சுட்டி காட்டுமாறு கேட்டு கொள்கிறேன், நன்றி...]
அன்புடன்
இரவு வானம்
ஆஹா! நீங்க பல்லடமா? :-)
ReplyDeleteநான் பல்லடம், திருப்பூர், பொள்ளாச்சி பக்கமெல்லாம் நிறையா சுத்தியிருக்கேனுங்கோ...!
நல்ல பகிர்வு...
இப்ப வடை . பின்னாடி கருத்து
ReplyDeleteதெளிவான பார்வையுடன் சிறப்பாக எழுதியிருக்கீங்க நண்பரே
ReplyDelete//நெல்லு போட்டேன்
ReplyDeleteசோளம் போட்டேன்
அரிசி போட்டேன்
ஒன்னுமே
லாபம் தரலை
’’பிளாட்டு’’ போட்டேன்
அமோக லாபம்...!//
இதுதான் இன்றைய நிலைமை....
//ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்னு வேற சி.எம் சொல்லி இருக்காரு, அடுத்து இலவசமா வரப்போவது பம்பு செட்டு, டிவிக்கே 500 கிடைச்சா பம்பு செட்டுக்கு ஆயிரமாவது கிடைக்காதா என்ன?//
ReplyDeleteஅப்ப ஒருநாளும் ஏழ்மை ஒழியபோவதுமில்லை ஒழிக்க போவதுமில்லை....
விவசாய நிலங்களெல்லாம் பிளாட்டாகி போனது வேதையான விஷயம். நல்ல பதிவு. அனைத்திலும் வாக்களித்துவிட்டேன் நண்பா
ReplyDeleteகவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்
ReplyDeleteகலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....
ReplyDeletehttp://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_27.html
நம்ம வூர பத்தி நல்லா விரிவா எழுதி இருக்கீங்க... சாட் வாங்க
ReplyDeleteநண்பா , விவசாயதொழில் சங்கு ஊதும் நிலைமை வந்துவிட்டது என்னவோ உண்மைதான் . அப்பறம் அந்த கவிதை நிதர்சனம்
ReplyDeleteஏழைகளை ஏழைகளாக வைத்திருந்தால்தான் அரசியல்வாதிகள் பிழைக்க முடியும் ,அதற்க்கு இந்த இலவசங்கள் துணை புரியும்
என்ன சுரேஷ் உங்க பங்காளிங்க எல்லாமே ஒன்னும் சொல்லாமலே நகர்ந்து போயிட்டு இருக்காங்க?
ReplyDeleteசமூக மாற்றம் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக இந்த மனித இனத்திற்கு சில பாடங்களை கொடுத்து விட்டு சென்று விடுகின்றது. ஆனால் எந்த நல்ல மாற்றமும் இந்தியாவிற்குள் அத்தனை சீக்கீரம் உள்ளே வந்து விடாது. சங்ககாலம் முதல் இன்று வரைக்கும் அப்படித்தான். காரணம் இந்தியாவில் உள்ள அடிப்படை மக்களின் மனோபாவம் தொடக்கத்தில் எப்படியும் செத்துப் போயிடப் போறோம்? என்னத்த கட்டிக்கிட்டு போகப்போறோம்ன்னு சொல்லிக்கிட்டே தானும் வாழாமல் தன்னுடைய தலைமுறைகளுக்கும் நல்ல பாதையைக் காட்டாமல் போய்ச் சேர்ந்தும் விட்டார்கள். காலப்போக்கில் ஆன்மிகம் என்ற ஒரு சொல்லுக்குள் அடுத்தடுத்த தலைமுறைகள் மணலுக்குள் தலையை கவிழ்த்துக் கொள்ளும் பிராணி போல அப்பிராணி வாழ்க்கையை வாழ அதுவே தான் இன்று வரைக்கும்..........
உங்கள் பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும் போது இடையில் படும் ரோட்ரோட கோவில்களைப் பாருங்க. பெரிய கோவில்களையும் பாருங்க? ஏன் இத்தனை கூட்டம். அத்தனை பேர்களும் அமைதிக்காக அலைக்கின்றவர்களா? ஈஸ்வரன் கோவில் முன்னால் ஒழுங்கற்று நிறுத்தி வைத்து மிகப் பெரிய இடைஞ்சல் ஏற்படுத்தி உள்ளே சென்றவர்கள் என்னத்தை பெரிய சாதித்து விடப் போகிறார்கள்? ஒரு வகையில் தன்னையும் ஏமாற்றிக் கொண்டு மற்றவர்களுக்கும் ஒரு அல்டாப்பு காட்ட ஒவ்வொருவருமே தெளிவாக நடிக்க கற்றுக் கொண்டு விட்டார்கள். கடைசியில் அரசியல்வாதிகளின் மேல் பழியைப் போட்டு விட்டு தன் உரிமை உழைப்பு பற்றி கவலைப்படாமல் யாருடா இலவசமா கொடுப்பார்கள் என்கிற சிந்தனைக்குள் வந்து விடுகிறார்கள். அதுவே தான் சமகாலம். போதுமா? சுரேஷ்.
ReplyDelete//பணம் கொடுக்கறவரு கமிசன் 30 ரூபா போக 70 ருபா கைக்கு வந்திடும்,//
ReplyDeleteஉங்க ஊருக்கு இந்த இந்தியன், அந்நியன் எல்லாம் வரல போல :-))
கலைஞருக்கு விவசாயம் நாசமாபோனா என்ன, விவசாயி நாசமா போனா என்ன? அவரும் அவர்தம் மக்களும் ஆட்சியில இருந்தா போதும், ஆட்சில்யில இருந்தா 'மட்டும்' போதும்
ஓட்டினை விட பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களையே நான் அதிகம் எதிர்பார்க்கிறேன், அதனால் ஒட்டளிக்க செலவிடும் நேரத்தில் பின்னூட்டம் இட்டு என்னுடைய நிறை குறைகளை
ReplyDeleteஇந்த வாசகத்திற்காகவே இம்மாம் பெரிய பதில். நீங்கள் செல்ல வேண்டிய தூரம் என் கண்களுக்கு நன்றாகத் தெரிகின்றது. வாழ்த்துகள்.
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க! தீர்வு கிடைச்சா நல்லா இருக்கும்!
ReplyDelete@ சேட்டைக்காரன் ...
ReplyDeleteஅப்படிங்களா தல, இனிமே வரும்போது கண்டிப்பா சொல்லுங்க, நாம சந்திக்கலாம், நன்றி தல...
@ ரஹீம் கஸாலி ...
ReplyDeleteஉண்மைதான் நண்பா, நான் சிறுவயதில விளையாடி மகிழ்ந்த என் ஊர் எங்கே, இப்போ இருக்கும் என்னோட ஊர் எங்கே என சிந்திக்கும் போது வருத்தம்தான் ஏற்படுகிறது, கருத்துக்கு நன்றி நண்பா ...
@ மாணவன் ...
ReplyDeleteநன்றி மாணவன் சார் ...
@ sakthistudycentre-கருன் ...
ReplyDeleteநன்றி கருன் சார், கொஞ்சம் வேலை, அதான் உடனடியா வரமுடியவில்லை, இதோ வருகிரேன் ...
@ karthikkumar ...
ReplyDeleteகொஞ்சம் வேலை இருக்கு மச்சி, கொஞ்சம் பொறுத்து வரேன் ...
@ நா.மணிவண்ணன் ...
ReplyDeleteஉண்மைதான் நண்பா, நிதர்சனம் மனதுக்கு பிடிக்கவில்லை, என்ன செய்ய? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா ...
பல்லடத்துல எங்க சார் ? பல தடம் அப்படிங்கறது தான் பல்லடம் ஆயிருச்சுங்க நான் பல்லடத்துல இருந்து பதினாலு கி.மீ தொலைவுல இருக்கேன் சொந்த (ஊர்)
ReplyDelete@ ஜோதிஜி ...
ReplyDeleteநன்றி சார், உங்களுடைய பின்னூட்டத்தினைதான் எதிர்பார்த்து இருந்தேன், நான் என்ன நினைக்கிறேன் என்றால், நல்லதோ கெட்டதோ த்னி ஒரு மனிதனால் எந்த அளவுக்கு மாற்றங்களை கொண்டு வரமுடியும் சார், நாம் அனைவரும் அரசாங்கத்தினையே சார்ந்து இருக்கிறோம், அந்த அரசாங்கத்தினை தேர்ந்தெடுப்பது மக்கள், அப்படி என்றால் அந்த மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது ஒரு அரசாங்கத்தின் கடமை அல்லவா, அந்த கடமையினை வெறும் ஓட்டுக்காக மேலும் மேலும் வரிப்பணத்தை செலவழித்து இலவசங்களை கொடுப்பதன் மூலம் என்ன சாதித்து விட முடியும், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் தொழில்நகரம் என தொழில்நகரத்தினையே உருவாக்கி கொண்டு சென்றால் மக்களுக்கு உணவினை கொடுக்க கடைசியில் யார்தான் இருப்பார்கள், அப்புறம் வழக்கம் போலவே உணவுக்கு பதிலாக விண்வெளி வீரர்கள் சாப்பிடுவது போல மாத்திரைதான் சாப்பிட வேண்டும், பிறகு அந்த மாத்திரையையும் இலவசமாக வழங்கி அதனையும் பெருமையாக சொல்லி கொண்டு ஓட்டு கேட்பார்கள், என்னை பொறுத்த வரையில் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரசாங்கமே பொறுப்பு, இது போன்ற இலவச திட்டங்களை நிறுத்தி விட்டு மறுபடியும் பசுமை புரட்சியை கொண்டு வர வேண்டும், மக்கள் என்ன செய்வார்கள் சார், கையாளாகாதவர்களுக்கு இறைவனே துணை என்று அவர்கள் கோவிலை தேடித்தான் செல்வார்கள், இதில் தவறேனும் இருப்பின் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன், நன்றி சார் ....
இரவு வானம்...நிஜமா ரொம்ப அருமையான பதிவை கொடுத்திருக்கிங்க..உங்கள் ஊரை பத்திய அலசலில் நிறைய விஷயங்கள் தெரிஞ்சுகிட்டேன்..நீங்க பல்லடமா...ம்ம்..என் அத்தை அங்கே தான் அரசு பள்ளியில் டீச்சர் ஆ வேலை பார்த்தாங்க..இப்போ கோவை மாறி போய்ட்டாங்க...திருப்பூர் பற்றிய கருத்துக்கள் நிறைய புதுசு எனக்கு ..
ReplyDelete@ எப்பூடி..
ReplyDeleteநன்றி தல, உங்க மட்டும்கறதிலையே எல்லாம் விளங்குது, இது கலைஞர் ஆட்சியில மட்டுமில்லை, யார் வந்தாலும் இதே நிலைமைதான், உண்மையாகவே, மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிற நல்ல திட்டங்களை தீட்ட கூடிய ஒருவரை காண்பதென்பது கனவாகவே போய் விடும் போல இருக்கிறது ....
@ எஸ்.கே ...
ReplyDeleteமிகவும் நன்றி எஸ்.கே சார் ...
@ செந்திலான் ...
ReplyDeleteதியேட்டர் பக்கம்தான், அப்புறம் நீங்க எந்த பக்கம், பொள்ளாச்சி ரோடா இல்லை உடுமலை ரோடா ...
@ ஆனந்தி..
ReplyDeleteநன்றி மேடம், நானும் அரசுபள்ளியில்தான் படித்தேன், உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம் ...
கொஞ்சம் மிஸ் பண்ணிட்டீங்க தாராபுரம் -மதுரை சாலை. பல தடம் இருக்கிறதால வர்ற பிரச்சினை :)
ReplyDeleteஉங்க மின்னஞ்சல் முகவரி கிடைக்கவில்லை என்பதால் பின்னூட்டத்தில் கூருகிறேன், படித்ததும் அளித்து விடுங்கள்
ReplyDeleteஒவ்வொரு பந்தியும் மிகவும் பெரிதாக உள்ளதால் வாசிப்பவர்களில் சிலர் சலிப்பில் வாசிக்க மாட்டார்கள் என்பதால் ஒவ்வொரு பந்தியிலும் அதிகளவு சொற்கள் வராமல் நீங்கள் எழுதும் ஒரு பந்தியை 2 அல்லது 3 பந்திகளாக பிரித்து எழுதினால் வாசிப்பதற்கு இலகுவாக இருக்கும். (இது என் கருத்து மட்டும்தான்)
[நண்பர்களே ஓட்டினை விட பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களையே நான் அதிகம் எதிர்பார்க்கிறேன், அதனால் ஒட்டளிக்க செலவிடும் நேரத்தில் பின்னூட்டம் இட்டு என்னுடைய நிறை குறைகளை சுட்டி காட்டுமாறு கேட்டு கொள்கிறேன், நன்றி...]
ReplyDeleteஅன்புடன்
இரவு வானம்
முடியாது பாஸ்! நாங்க ஓட்டும் போடுவோம், கமெண்டும் போடுவோம்!! எப்புடீ?
@ எப்பூடி..
ReplyDeleteஎனக்கும் புரிஞ்சது தல, ஆனா நான் எழுதியது இதைவிட பெருசு, முடிஞ்ச அளவுக்கு சுருக்கி இருக்கேன், அடுத்த பதிவுல சரி பண்ணிக்கிறேன்,உங்க கமெண்டும் இருக்கட்டும், நீங்க என்னோட வெல்விஷர்னு எனக்கு தெரியும் தல, என்னோட மெயில் ஐடி என்னை பற்றிக்கு கீழ இருக்கு, நீங்க சரியா பார்க்கலைன்னு நினைக்கிறென், அதனால pldmsuri@gmail.com இந்த மெயில் ஐடிக்கு வாங்க தல ...
@ செந்திலான் ....
ReplyDeleteஅட நானும் அதே ரோடுதான், அப்ப நீங்க குண்டடமா இல்லை கள்ளிப்பாளையமா ?
@ மாத்தி யோசி ...
ReplyDelete//முடியாது பாஸ்! நாங்க ஓட்டும் போடுவோம், கமெண்டும் போடுவோம்!! எப்புடீ?//
சூப்பருங்க, நீங்க மாத்தி யோசிக்கறவரு எப்படி வேணாலும் பண்ணுங்க பாஸ் ...
மறுபடியும் கொஞ்சம் மிஸ்.. ரெண்டுக்கும் இடையிலே தி கிரேட் ரிபப்ளிக் ஒப் புத்தரச்சல். இதை புத்தரச்சல் நாடுன்னு பெருமையா சொல்லிக்குவோம் (நக்கலுக்குத்தான் :)
ReplyDelete@ செந்திலான் ...
ReplyDeleteஓ புத்தரச்சலா பாஸ், எங்க பிரகாஷ்னு எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருந்தார், இப்ப இருக்காரான்னு தெரியாது, ஆமா உங்க ஊர்ல ஒரு கோவில் ரொம்ப பேமஸ் இல்லை ?
கூலி வேலைக்கு வருபவர்கள் பற்றி சொன்னது அநேகமாக எல்லா இடத்திற்கும் பொருந்தும்! சும்மாவே அப்பிடீன்னா 'இலவசங்கள்' நிறைந்த பூமியில் இது தவிர்க்க இயலாததுதானே!
ReplyDeleteபதிவும்,எழுத்துநடையும் அருமை.....
ReplyDeleteநறுக்குன்னு நாலு ஒட்டு குத்தியாச்சு...
//ஸ்கூல் லீவு முடியற வரை வேலை செஞ்சா கொஞ்சம் பணம் கிடைக்கும், அது புஸ்தகம் வாங்க உதவும்னு, ஆனா பயபுள்ளகள பார்த்தீங்கன்னா லீவு முடிஞ்சு பாதி பேரு ஸ்கூலுக்கு போக மாட்டானுக,//
ReplyDeleteஉண்மைதான் ஒரு தடவை பணம் சம்பாரிச்சு, பணத்தோட ருசி தெரிஞ்சுருச்சினா அப்பறம் ஸ்கூல் போக புடிக்காது..
பல்லடத்துக்கு சத்தியராஜை வைச்சுதான் அறிமுகம் செய்ய வேண்டிய நிலமையாயிடிச்சே..
ReplyDeleteகிராமங்களை இதுவரை நேரில் கண்டது இல்லை நீங்கள் உங்க ஊரை பற்றி சொல்லும் பொது கற்பனையில் ஒரு திரைப்படமே ஒட்டி விட்டேன்
ReplyDeleteவிவசாய நிலங்கள் எல்லாம் பிளட் போட்டு விற்றால் நமது எதிர்கால சந்ததிகளின் நிலைமையை யோசிக்க வைக்கும் பதிவு
புத்தரச்சல் அப்படீங்கறது ஒரு ஊர், ஒரு பஸ் ஸ்டாப் ரெண்டுக்கும் சேர்த்து தான்.அந்த பஸ் ஸ்டாப் வந்து சுத்தி இருக்கிற பத்து ஊருக்கும் சேர்த்து ஒரே பஸ் ஸ்டாப் அதான் சுத்தி இருக்கிற ஊர சேர்ந்தவங்க கூட ஒரு லேண்ட்மார்க் மாதிரி புத்தரச்சல் நே சொல்வாங்க எனக்கு தெரிஞ்சு பிரகாஷ் நு நெறைய பேர் இருக்காங்க ஆனா புத்தரச்சல் ல யாரும் இருக்கிறதா தெரியல.நான் ப்ராப்பர் புத்தரச்சல் தான். ஆமா இங்கே ஒரு கோவில் ரொம்ப பேமஸ் தான் என்ன உள்ளூர் மக்களை விட வெளியூர் காரங்க தான் அதிகமா வந்து போறாங்க. கருப்பு பணம் வெச்சுருக்கிற பனியன் பெரு முதலாளிக பணத்தை வாரி எரச்சுருக்காங்க பிராயசித்தம் நு நெனக்கிறேன் (சாயத் தண்ணிய விட்டு பல ஏக்கர் நிலத்தை அழிச்சதுக்கு )
ReplyDeleteவிவசாயத்தின் அழிவு இப்போது நடந்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அதனை இன்றைய நவீன மனிதன் உணர்ந்தமாதிரி தெரியவில்லை..
ReplyDeleteஉங்க புரிதல் ல சில குறைகள் இருக்குது. ஏதோ பல்லடம் மக்கள் பெரும்பகுதி திருப்பூருக்கு போன மாதிரி எழுதி இருக்கீங்க ஆனா இது முழுக்க சரி அல்ல பல்லடம் மக்கள் விசைத்தறி பக்கம் அதிகம் ஒதுங்குனாங்க.இன்னிக்கி விசைத்தறி வேலைக்கு கூட ஆள் கிடைக்கிறது இல்ல.
ReplyDeleteஅப்பறம் கோழிப் பண்ணை.இது சுத்தி இருககிற சோமனூர், கருமத்தம்பட்டி,உள்ளடங்கிய கிராமாங்கல்ல இப்பவும் தறி தான் மெயின் தொழில். திருப்பூர் ஒரு ஸ்பெஷல் கேஸ்.அதைப் பத்தி நெறைய எழுதலாம் ஆனா ஒரு பதிவு அளவுக்குப் போகும் அதனால எஸ்கேப் ..
இன்றைய நிலவரத்தை - நுணுக்கமாக விளக்கி சொல்லி இருக்கும் இந்த பதிவு மூலம், பல விஷயங்களை தெரிந்து கொண்டோம்.
ReplyDelete@ ஜீ...
ReplyDeleteஅந்த இலவசங்களை நிறுத்தி விட்டு இயங்க வேண்டும் என்பதுதான் ஆசை, நன்றி ஜீ ...
@ NKS.ஹாஜா மைதீன் ...
ReplyDeleteவாங்க அதிரடி சார், ஓட்டு போட்டதற்கு நன்றி சார் ...
@ பாரத்... பாரதி..
ReplyDeleteஉண்மைதான் பாரதி சார், பணத்தின் ருசி கண்டு அதன் பின் போய் தறுதலைகளாக மாறிய பையன்கள் இங்கு நிறைய பேரை நான் கண்டிருக்கிறேன் :-(
விவசாயத்தின் அழிவு நாட்டின் அழிவுக்கு சமம் என்பதை அரசாங்கமே உணர்ந்ததாக தெரியவில்லை ...
@ செந்திலான் ...
ReplyDeleteஇல்லை செந்திலான், கோழிப்பண்ணையிலும், விசைத்தறியிலும் இயங்குபவர்களை பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை, விவசாயம் பார்த்து கொண்டு இருந்தவர்கள் இப்பொழுது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை பற்றி கூறவே விரும்பினேன், அந்த வேலைக்கும் இப்பொழுது ஆள் கிடைப்பதில்லை என்பதும் உண்மைதான், மற்றபடி திருப்பூரை பற்றி முழுமையாக எழுத நினைத்தால் அது போய்கொண்டேதான் இருக்கும், உங்களின் எண்ணங்களையும் எழுதுங்களேன், புரிதலுக்கு நன்றி ...
@ Chitra ....
ReplyDeleteநன்றி சித்ராக்கா, உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் ...
@ FARHAN ,...
ReplyDeleteசாரி நண்பா, அவசரத்துல மிஸ் பண்ணிட்டேன், நீங்க கிராமத்தயே பார்த்தது இல்லையா? இப்பவே இந்த நிலைமைன்னா, வருங்காலத்த நினைச்சு பார்க்கவே ரொம்ப பயமா இருக்குது, இனிமே கொஞ்சம் இருக்குற வயலையும் தோட்டத்தையும் படம் புடிச்சுதான் வைக்கனும் அடுத்த தலைமுறைகளுக்கு காட்டறதுக்கு, உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி நண்பா ...
அற்புதமான பதிவு..இவ்வளவு ஆழமான பதிவை எதிர்பார்க்கவேயில்லை..உங்கள் ஊரைப்பற்றி அருமையாக எழுதி உள்ளீர்கள்..100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் மக்களை மிகவும் சோம்பேறி ஆக்கியுள்ளது. நானும் அதைப் பற்றி எழுதலாம் என்றிருந்தேன்..நண்பர் எப்பூடி சொன்னமாதிரி கொஞ்சம் பிரித்துப் போடுங்கள்..விவசாயத்தை அழித்துவிட்டு சோற்றுக்கு என்ன செய்யப்போகிறோம் எனத் தெரியவில்லை..கால ஓட்டத்தில் பலவிஷயங்கள் மாறுகின்றன. சோறில்லா நிலை வந்தபின் வருங்காலத்தில் விவசாயம் பணம் கொழிக்கும் பிஸினஸாக மாறலாம்..யார் கண்டது.
ReplyDeleteஇல்லை இரவு. (இ.வா நு எழுதுனா வேற மாதிரி அர்த்தம் வருது :) விவசாயம் பாத்துக்குட்டு இருந்தவங்க தான் தறி தொழில்ல இறங்குனாங்க. சுத்தி இருக்கிற சேடபாளையம்,பனபாளையம்,கொசவம் பாளையம், வடுக பாளையம் இப்படி எல்லா ஊர்களிலும் தறி குடோன்கள் நெறைய இருக்குது.எல்லா கிராமதுளையும் ஒவ்வொரு தோட்டத்துளையும் தறி குடோன்கள பாக்கலாம்.விவசாயத்தை தறி தான் ரிப்ளேஸ் பண்ணியது.அது எல்லா தொழிள்ளருக்கும் பத்தல அதனால தொழிலாளர்கள் கொஞ்சம் திருப்பூர் பக்கம் நகர்ந்தாங்க .திருப்பூர் டாலர் தந்த பகட்டு வாழ்வு பல்லடம் மக்களையும் சீக்கிரம் பணக்காரனாகி விடலாம் என்று (தறி கொஞ்சம் ஸ்லொவ் பட் இஸ்டெடி) உள்ளே இழுத்தது ஆனால் அது புதை குழின்னு தெரிஞ்சு சில பேர் திரும்பி வந்தாங்க பலர் அதிலேயே மூழ்கிட்டாங்க இது தான் உண்மை. மேல குறிப்பிட்ட எல்லா ஊர்களிளையும் எனக்கு நண்பர்கள் உண்டு எல்லோரும் தறி தொழிலில் இருக்கிறார்கள்.ஆனா அப்படி தறி தொழில் செஞ்சவங்க நல்ல நிலைக்கு வந்தாங்க ஆனா எங்க ஊர் பக்கம் pap பாசன வசதி இருந்தது விவசாயம் தான் தொழில்.எல்லாத்தையும் விளைவிச்சு நட்டத்துக்கு வித்து நாசமா போனது தான் மிச்சம்.என்னோட பார்வையில தண்ணி இல்லாத ஏரியாக்கள் வளர்ந்த அளவு தண்ணி இருக்கிற விவசாய பகுதிகள் வளரல. ஏன்னா தொழில் ல ஒரு குறிப்பிட்ட அளவு லாபம் நு வந்துட்டே இருந்தது ஆனா விவசாயம் ஒரு சூதாட்டம் மாதிரி இருந்தது. இன்னும் நெறைய சொல்லலாம் நேரமின்மை தான் காரணம். சரி உங்க ஊர சொல்லவே இல்ல நீங்க எந்த ஊர் ?
ReplyDeleteவிவசாயம் குன்றுவதை நல்லா சொல்லியிருக்கீங்க .நல்லா பகிர்வு
ReplyDeleteசமுதாய அக்கறையுடனான் உங்கள் பதிவுக்கு நன்றி நம்ம நாடு கெட்டுபோச்சு எனும் ஆதங்கம் தெரிகிறது...
ReplyDelete...மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.
சமுதாய பதிவு அருமை...
ReplyDeleteஉங்க பதிவு உண்மையில என்ன ரொம்ப பாதிச்சது........அதே நேரத்துல வெறும் அரசாங்கத்த குறை கூறும் நாம் நம் சுய முகத்த இழந்தது எதனால் - 'மூணு வேல சோறு வேலை செய்யாம கிடைக்கும்னா ரொம்ப நாள் தேவையில்ல இந்த விவசாய விஷயம் அழிய" - இதற்க்கு சமூக பொறுப்பு என்று வாய் கிழிய நாம் கத்தினாலும் அது பயன் பெறாது. இது ஒரு இப்போதைக்கு முற்றுப்பெறாத விஷயம்..............
ReplyDelete@ செங்கோவி ...
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் நண்பா, உங்களின் பின்னூட்டத்தைதான் எதிர்பார்த்தேன், கண்டிப்பாக அப்படி ஒரு நிலை வந்தபிறகுதான் எல்லாவற்றிக்கும் தீர்வு கிடைக்கும் போல இருக்கிறது ...
@ செந்திலான் ...
ReplyDeleteநண்பா நான் கூறியவற்றைதான் நீங்களும் கூறுகிறீர்கள், உங்களின் கருத்தினை நான் வழிமொழிகிறேன், நானும் வேறு யாரும் தறி தொழிலோ, கோழிப்பண்ணை தொழிலோ பார்க்கவில்லை என்று கூறவில்லை நண்பா, விவசாய தொழில் பார்த்தவர்கள், தறி தொழிலும் பார்த்தனர், இப்பொழுதும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் இந்த தொழில் விவசாய தொழில் போன்று உண்வினை கொடுக்குமா, அப்படி உணவினை கொடுக்க கூடிய விவசாயம் கால மாற்றத்தால் எவ்வாறு மாறி இருக்கிறது, மற்றும் அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் எதிர்மறையாக சில விசயங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதையே கூற விரும்பினேன், மற்றபடி இது முழுக்க முழுக்க விவசாய தொழில் மட்டும் பார்த்தவர்கள் இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி மட்டுமே, தொடர்ந்த உங்களின் பாலோ அப் எனக்கு சந்தோசத்தை கொடுக்கிறது, நல்ல விவாதம் மேலும் தொடருங்கள், அப்புறம் நீங்கள் குறிப்பிட்ட ஊர்களில் ஒன்றுதான் என்னுடைய ஊர் ....
@ thirumathi bs sridhar ...
ReplyDeleteநன்றி சகோதரி, முதன் முதலான தங்களின் வருகைக்கு மிகவும் நன்றி ...
@ நிலாமதி ...
ReplyDeleteநன்றி மேடம், கண்டிப்பாக எழுதுகிறேன் ...
@ தோழி பிரஷா ...
ReplyDeleteநன்றி றோஜாக்கள் மேடம் ...
@ விக்கி உலகம் ...
ReplyDeleteஅரசாங்கத்திற்கு பொறுப்பு இல்லை என்று கூற முடியாது நண்பா, கோர்ட்டு, போலீஸ் அது இது என்று சட்டம் போட்டு கட்டுபடுத்தும் அரசாங்கம் இதற்கும் மாற்றாக எதையாவது செய்யலாம், இங்கு மக்களுக்கு எல்லாமே சட்டம் போட்டு சொன்னால்தான் பயப்படுகிறார்கள் வேறு என்ன சொல்ல, உங்களின் கருத்தினையும் விரிவாக தனிப்பதிவாக போடுங்கள் நண்பா ...
"விளை"நிலமெல்லாம், "விலை"நிலங்களாக மாறுவதை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteகடைசியா இருக்குற கவிதை நல்ல தெரிவு. உங்கள் பதிவுக்கு வலிமையூட்டுகிறது.
ReplyDeleteஎன்னத்த சொல்ல? இப்படி ஆயிடுச்சே?
ReplyDeleteநண்பரே வணக்கம்
ReplyDeleteநல்லதொரு பதிவு. இன்றைய உண்மை நிலை.
நானும் பல்லடம் பக்கம் தான் . செஞ்சேரி புத்தூர் . பல்லடம் to உடுமலை போற வழியில் உள்ளது.
என்னுடைய 10 ம் வகுப்பு பொது தேர்வினை பல்லடம் அரசு மேன்நிலை பள்ளியில் தான் எழுதினேன்.
நண்பரே
திரு செந்திலான் அவர்கள் தங்களின் ஊர் பெயரை கேட்டதற்கு தாங்கள் பதில் சொல்லவில்லையே ?
செந்திலான் said...
உங்க ஊர சொல்லவே இல்ல நீங்க எந்த ஊர் ?
இரவு வானம் said...
@ செந்திலான் ...
அப்புறம் நீங்கள் குறிப்பிட்ட ஊர்களில் ஒன்றுதான் என்னுடைய ஊர் ....
பதிவை படிக்கும் பொழுது பழைய நினைவுகள் வந்தது.
நன்றி.
ஆனந்த்
பமாகோ,மாலி.
இந்திய நிலங்களிலே
ReplyDeleteவீடுகள் பயிராகிறது...
என் செய்ய காலம் தான் இவைகளுக்கு தீர்வு சொல்ல வேண்டும்
" நண்பர்களே ஓட்டினை விட பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களையே நான் அதிகம் எதிர்பார்க்கிறேன், அதனால் ஒட்டளிக்க செலவிடும் நேரத்தில் பின்னூட்டம் இட்டு என்னுடைய நிறை குறைகளை சுட்டி காட்டுமாறு கேட்டு கொள்கிறேன் "
ReplyDeleteரொம்ப பிடிச்ச விஷயம் இதுதான் , எழுத்து நடை நல்ல இருக்கு , எதார்த்த உண்மைகள் நானும் விவசாயம் பற்றிய பதிவு போட்டிருக்கேன் , ஆனால் படிப்பவர்கள் குறைவு ,
அதை பற்றி கவலை படுவதில்லை
வேறு தொழில்களுக்கு..............
http://redhillsonline.blogspot.com/2011/01/blog-post_23.html#comments
நண்பரே, தயவு செய்து தங்கள் அலைபேசி எண்ணை தரவும். கண்டிப்பாக இப்பதிவு குறித்து பேச வேண்டும். pls mail you number to madrasminnal@gmail.com. mention your name also in the mail.
ReplyDelete@ ரமீஜா ...
ReplyDeleteநன்றி மேடம் ...
@ Kavi ...
ReplyDeleteநன்றி கவி, கண்டிப்பாக தங்களுடைய தளத்திற்கு வருகிறேன், சிறிது வேலை பொறுத்து கொள்ளுங்கள் நன்றி ...
@ பாரத்... பாரதி..
ReplyDeleteநன்றி பாரதி, ஆனால் அது என்னுடைய கவிதை அல்ல, எங்கோ படித்தேன் ஞாபகம் இல்லை, பாராட்டுக்கள் முழுவது அவரையே சாரும் ....
@ பன்னிக்குட்டி ராம்சாமி ...
ReplyDeleteஎன்னது ராம்சாமி அண்ணனே சீர்யஸ் மூடுக்கு போயிட்டாரா ....
@ baba ...
ReplyDeleteநன்றி நண்பா நான் அதே அரசுபள்ளியில்தான் படித்தேன், ஊர் பெயரினை பற்றி சொல்லி என்ன ஆகப்போகிறது என நினைத்தேன் அதுதான் சொல்லவில்லை, வேறு ஒன்றும் பெரிய காரணமில்லை, இருந்தாலும் நண்பர்களாகிய நீங்கள் திரும்ப திரும்ப அதையே கேட்பதனால், பனப்பாளையம் அதுதான் என் ஊர் போதுமா நண்பரே :-)
@ # கவிதை வீதி # சௌந்தர் ...
ReplyDeleteநன்றி சார், உங்கள் கவிதை அருமையாக உள்ளது ...
@ bala ...
ReplyDeleteஉண்மைதான் நண்பா, உங்களுடைய பதிவினையும் படித்தேன் மிக அருமையாக எழுதி உள்ளீர்கள், காலம்தான் இதற்கெலாம் பதில் சொல்ல வேண்டும் ...
@ ! சிவகுமார் ! ....
ReplyDeleteமெயில் அனுப்பி உள்ளேன் நண்பரே ...
இப்பிடியே தொடர்ந்தால் நம் வருங்கால சந்ததியினர் நிலைமை தான் கவலை... இப்பவே எல்லா விலைவாசியும் ஏறி போச்சு !!
ReplyDelete--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
ரசிக்கும்படியாக இருந்தது
ReplyDelete