Thursday, January 6, 2011

நானும் கமர்ஷியல் பதிவர்தாங்கோ




24 வயதில் இதுதான் உலகம் என்று நினைத்த ஒன்று
42 வயதில் இதற்காகவா இப்படி இருந்தோம் என்று தோன்றும்
அதுதான் காதல்
- கமலஹாசன்


தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை
அவள் பெயரை விட அழகான ஒரு கவிதை


ஒன் சைடு லவ்
அவளை பார்க்காமல் நான் ஒருநாளும் இருந்தது இல்லை
ஆனால்
என்னை பார்க்க அவள் ஒருநாளும் நினைத்தது இல்லை


நெஞ்சை தொட்ட கவிதை
பசி என்ற ஒன்று மட்டும் இல்லை என்றால்
பிறந்த குழந்தையும் பெற்ற தாயை மறந்துவிடும்


பெஸ்ட் லவ் பெயிலியர் கவிதை
-
-
-
-
-
-
’’தப்பிச்சேண்டா சாமி’’


நபர் 1 : நேத்து என் பொண்டாட்டி இறந்துட்டா, ஆனா எனக்கு அழுகையே வரலை என்ன பண்றது?

நபர் 2 : ஒன்னும் பிரச்சனையில்ல, அவங்க திரும்பி வர மாதிரி நினைச்சு பாருங்க


கியூட் கவிதை

காதலுக்கு கண்ணில்லை என்பதெல்லாம் பொய்
அவள்
கண்ணுக்குள் காதல் இல்லை என்பதே உண்மை

பின்வரும் மெசேஜ் சத்தியமாக உங்கள் நெஞ்சை தொடும்.
-
-
-
-
-
-
-
ஸ்டெதஸ்கோப்


A NEW SIM IS RELEASED IN MARKET BY ''SPACE TEL''
(Indroduction Offer)
Buy Sim for Rs.59 and get Rs.999 Talk Time
Call Rats 10p/min.
Monthly 12,000 SMS Free
Unlimited free GPRS Browsing
Free Caller Tune for 3 Months,
Life Time Validity, But
-
-
-
-
-
-
-
-
--
-
--
-
-
1 Condition

TOWER NEENGATHAN NATTUKKANUM

என்ன பாக்குறீங்க, காமெடியா இருந்தாலும் வருங்காலத்துல நடந்தாலும் நடக்கும் இல்லையா?



சரி பதிவு போடறேன்னுடு SMS ல வந்தத எல்லாம் ஏன் போட்டு இருக்கேன்னா, அது ஒன்னும் இல்லைங்க, நம்ம பதிவுலகத்துல நிறைய பதிவர்கள் இருக்காங்க, சினிமா பதிவர்கள், விழிப்புணர்வு பதிவர்கள், கதை எழுதற பதிவர்கள், நகைச்சுவை பதிவர்கள், மொக்கை போடுற பதிவர்கள், நாத்திக பதிவர், ஆத்திக பதிவர்கள் இப்படி நிறைய வகையான பதிவர்கள் இருக்காங்க, ஆனா நான் இப்படி ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைய விரும்பல, அதனால நான் கமர்சியல் பதிவரா ஆகனும்னு முடிவு பண்ணிட்டேன், நானும் இதுவரைக்கும், கொஞ்சம் சினிமா விமர்சனம், விழிப்புணர்வு பதிவு, காமெடி, மொக்கைன்னு எல்லாம் எழுதிட்டேன், பேலன்ஸ் வேற என்னவெல்லாம் இருக்குன்னு ஒவ்வொரு பதிவரா எட்டி பார்த்த போதுதான் தெரிஞ்சது கவிதை எழுதணும், கதை எழுதணும், புரட்சி பண்ணனும்னு போய்கிட்டே இருக்குது, அதனால ஒன்னு ஒன்னா பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன், கதை ஆல்ரெடி ஒன்னு போய்கிட்டு இருக்குது, கவிதை எழுதலாம்னா சென்னை - 28 சிவா மாதிரி
மவுண்ட் ரோட்டுல அண்ணாசாலை
ரஜினிகாந்த் முரட்டுகாளை 
இந்த ரேஞ்சுலதான் வருது, சரி ரொம்ப ரிஸ்க் எடுக்க வேணாம்னுதான் SMS ல வந்த கவிதை எல்லாத்தையும் போட்டு இருக்கேன், இனி அப்படியே ஒரு எதிர்பதிவும் போட்டுட்டு, தமிழ்மணத்துல 20 பேருல ஒரு இடமும் புடிச்சு, அடுத்து வரப்போற பதிவுலக சண்டையில நானும் ஒரு கோஷ்டி பக்கம் நின்னன்னா முழுசா கமர்ஷியல் பதிவர் ஆகிருவன்னு நினைக்கிறேன், என்ன சொல்றீங்க?

டிஸ்கி 1 : குறைகளை என்னிடம் சொல்லுங்கள், நிறைகளை மற்றவர்களிடம் சொல்லுங்கள், இது என்ன ஹோட்டலா என்று கேட்பவர்களுக்கு, ஆம் இதுவும் ஹோட்டல் மாதிரிதான், அங்கே சோறு போடுவார்கள், இங்கே பதிவு போடுகிறோம், சரியில்லைன்னா வர மாட்டீங்கள்ள :-)

டிஸ்கி 2 : மேல சொன்ன மேட்டர் எல்லாம் சும்மா லுலுலாயிக்கு, எங்கயாவது சண்டை ஆரம்பிக்கற மாதிரி இருந்தா சொல்லுங்க 2 வாரத்துக்கு கடைய இழுத்து மூடிட்டு ஓடிடறேன்.

டிஸ்கி 3 : நிறைய பேரு பாட்ட மாத்தலையான்னு கேட்டாங்க, அவங்களுக்காக பாட்ட மாத்தி இருக்கேன், புடிச்சிருக்கா இல்லையான்னு கேட்டுட்டு சொல்லுங்க, புடிக்கலைன்னா மறுபடியும் மாத்திரலாம்.

அன்புடன் 

- நைட் ஸ்கை


29 comments:

  1. ஒவ்வொரு பதிவிலும்.. நகைச்சுவையில கலக்கறீங்க நண்பா..

    பொண்டாட்டி ஜோக் சூப்பர்.. பார்வேர்டு மெசேஜா இருந்தாலும் இப்போதான் படிக்கறேன்..

    கமர்ஷியல் பதிவராயிட்டீங்க.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. //டிஸ்கி 2 : மேல சொன்ன மேட்டர் எல்லாம் சும்மா லுலுலாயிக்கு, எங்கயாவது சண்டை ஆரம்பிக்கற மாதிரி இருந்தா சொல்லுங்க 2 வாரத்துக்கு கடைய இழுத்து மூடிட்டு ஓடிடறேன்.//

    பதிவுலக போர்வாளே இப்டி பேசுனா .....

    ReplyDelete
  3. உங்கள் எழுத்துக்களில் நல்ல நகைச்சுவை மிளிர்கிறது.

    ReplyDelete
  4. //நிறைய பேரு பாட்ட மாத்தலையான்னு கேட்டாங்க, அவங்களுக்காக பாட்ட மாத்தி இருக்கேன், புடிச்சிருக்கா இல்லையான்னு கேட்டுட்டு சொல்லுங்க, புடிக்கலைன்னா மறுபடியும் மாத்திரலாம்.//
    ஐயையோ...அந்த பாட்டுக்காக தாங்க பலவாட்டி உங்க ப்ளோக்குக்கு வந்துருக்கேன்...:(((
    இந்த நியூ சாங் கும் கேட்டேன்..டபுள் ஓகே...என் செம fav சாங்..:)))

    ReplyDelete
  5. //டிஸ்கி 2 : மேல சொன்ன மேட்டர் எல்லாம் சும்மா லுலுலாயிக்கு, எங்கயாவது சண்டை ஆரம்பிக்கற மாதிரி இருந்தா சொல்லுங்க 2 வாரத்துக்கு கடைய இழுத்து மூடிட்டு ஓடிடறேன்.//
    ஹ ஹ..

    ReplyDelete
  6. உண்மைலே நீங்க கமெர்சியல் பதிவர்தான் நண்பா .அப்பறம் க்யூட் கவிதை என்னவோ உண்மைதான் நண்பா . எல்லாம் ஒரு அனுபவம் தான்

    ReplyDelete
  7. துணுக்குகள் மிக ரசனையோட இருக்கு.....

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. பதிவுலகில் பாபு said... நன்றி நண்பா

    வார்த்தை said... //பதிவுலக போர்வாளே இப்டி பேசுனா// ஆகா புலிகேசி மறுபடியும் வெள்ளைக்கொடிக்கு வேலை வந்திடும் போல இருக்கே

    ரஹீம் கஸாலி said... உண்மையாவா சொல்றீங்க

    ஆனந்தி.. said... அப்படிங்களா, சரி விடுங்க அடுத்தவாரம் மறுபடியும் பழைய பாட்டே போட்டுடலாம், நான்கூட நல்லா பாடுவேன் நீங்கதான் நம்ப மாட்டீங்க

    நா.மணிவண்ணன் said... ஹி ஹி நீங்க என்ன ரொம்ப புகழ்றீங்க :-)

    சி. கருணாகரசு said... மொத மொதலா வந்துருக்கீங்க கொடுக்க வடை கூட இல்ல என்கிட்ட, ரொம்ப ரொம்ப நன்றி சார் :-)

    ReplyDelete
  9. முதல் பாட்டோட youtube லிங்க் சொல்ல முடியுமா ?

    ReplyDelete
  10. அட கடவுளே.... உங்களுக்குமா கமர்சியஸ் பதிவராக மாற வேண்டிய அவசியம். சரி, வாங்க ஜோதியில் ஐக்கியமாகுங்கள். இனி வரும் பதிவுகள் இந்த பதிவு போல கலக்கலா இருக்கும் என நம்பலாமா?

    இந்த புது பாட்டும் நல்லாயிருக்குங்க.

    ReplyDelete
  11. டிஸ்கி 3 : நிறைய பேரு பாட்ட மாத்தலையான்னு கேட்டாங்க, அவங்களுக்காக பாட்ட மாத்தி இருக்கேன், புடிச்சிருக்கா இல்லையான்னு கேட்டுட்டு சொல்லுங்க, புடிக்கலைன்னா மறுபடியும் மாத்திரலாம்.

    .... SMS jokesu - commercial பதிவரு - புது பாட்டு - கலக்குற சந்துரு!

    ReplyDelete
  12. நானும் கமர்ஷியல் பதிவர்தாங்கோ



    //

    ஒத்துக்கிறேன் .,. இப்ப ஒத்துக்கிறேன் நீங்க பதிவர் கமர்ஷியல் தானுன்னு ...

    ReplyDelete
  13. //இனி அப்படியே ஒரு எதிர்பதிவும் போட்டுட்டு, தமிழ்மணத்துல 20 பேருல ஒரு இடமும் புடிச்சு, அடுத்து வரப்போற பதிவுலக சண்டையில நானும் ஒரு கோஷ்டி பக்கம் நின்னன்னா முழுசா கமர்ஷியல் பதிவர் ஆகிருவன்னு நினைக்கிறேன், என்ன சொல்றீங்க?//

    அடுத்து வரப்போற பதிவுலக சண்டையா? :-))

    ஒரு முடிவோட தான் இருக்கீங்க போலிருக்கு! வாழ்த்துக்கள்! உங்க அப்ரோச் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!

    ReplyDelete
  14. முதலில் பின்புலத்தில் கோர்த்துள்ள இசையை தெளிவாக சேர்க்கவும்.

    ReplyDelete
  15. நல்ல பதிவு...
    ஒரு சிறிய வேண்டுகோள்.
    அந்த Youtube பாடல் widget -ஐ தயவு செய்து நீக்கி விடவும்.
    உங்கள் தளம் திறக்க நேரம் வெகு பிடிக்கிறது..
    அதிக வேகம் இணைய கொண்ட சிலருக்கு அது தெரியாது ....
    அனால் மெதுவான வேகம் கொண்டவருக்கு, உங்கள் தளம் ஓபன் ஆகவே இல்லை..

    ReplyDelete
  16. கமர்சியல் பதிவர்களிலும் சூப்பர் ஸ்டாராக வாழ்த்துகள்.(எப்பூடி)...குறையே இல்லையே, என்ன பண்றது..Empty பின்னூட்டம் அனுமதிக்கப்படுமா?

    ReplyDelete
  17. Most of readers authorised you as a Commericial Blogger!
    But I agreed a society care Blogger!
    Then the song also Good!

    Pl visit,
    http://saigokulakrishna.blogspot.com/2011/01/blog-post_05.html

    ReplyDelete
  18. //
    எங்கயாவது சண்டை ஆரம்பிக்கற மாதிரி இருந்தா சொல்லுங்க 2 வாரத்துக்கு கடைய இழுத்து மூடிட்டு ஓடிடறேன்.
    //
    ha ha ha

    ReplyDelete
  19. பாட்ட மாத்தலையான்னு கேட்டவங்களை விடுங்க... பாட்டை நிறுத்த யாருமே சொல்லலையா...

    ReplyDelete
  20. அந்த இடயாப்பத்த பிச்சு போட்ட மாதிரி எழுத்து விளங்கல, தமிழ்ல இருக்கிறது எல்லாமே நல்லாயிருக்கு :-)

    ReplyDelete
  21. THOPPITHOPPI said... சொல்லிட்டேன் தல

    பாரத்... பாரதி... said... வாங்க பாரதி, அது எனக்கு வர எஸ்.எம்.எஸ்ஸ பொறுத்தது :-)

    Chitra said... ஹி ஹி நன்றிக்கா

    வெறும்பய said... தல நீங்க என்னமோ சொல்ல வரீங்க, என்னன்னுதான் புரியல ஹி ஹி

    சேட்டைக்காரன் said... சார் பெரிய பெரிய ஆள் எல்லாம் நம்ம பிளாக்குக்கு வந்துருக்கீங்க ரொம்ப சந்தோசம் சார், நன்றி.

    ஜோதிஜி said... சரியாத்தான் இருக்குன்னு நினைக்கிறேன் சார்.

    Sathishkumar said... யோசிக்க வேண்டிய விசயம், பண்றேன் சார்.

    ஜீ... said... நன்றி சார்

    செங்கோவி said... எம்ப்டி பின்னூட்டம் வராதே தல

    Sai Gokula Krishna said... நண்பா உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கு, உங்களை பற்றி விரைவில் பதிவிடுகிறேன்.

    வழிப்போக்கன் - யோகேஷ் said... ஹி ஹி ஹி நன்றி சார்.

    Philosophy Prabhakaran said... நீங்க சொன்னீங்களே பிரபா, யோசிக்கிறேன் நன்றி.

    எப்பூடி.. said... தல இங்கிலீசு உங்களுக்கு இடியாப்பம் மாதிரி இருக்கா இந்த கிண்டல்தானே வேணாங்கறது :-)

    ReplyDelete
  22. ஆட்டம் ஆரம்பம் ஆகட்டும்....:)

    ReplyDelete
  23. எதாவது கட்சில சேரப்போரிங்கன்னா சொல்லுங்க இதோ ரெடி.....

    ReplyDelete
  24. டைரி -2010 பற்றி தொடர் பதிவெழுத உங்களை அழைத்துள்ளோம், விருப்பமிருந்தால் ஏற்றுக்கொள்ளவும்.
    அன்புடன் ரோஜாப்பூந்தோட்டம்.
    http://bharathbharathi.blogspot.com/2011/01/15.html

    ReplyDelete
  25. karthikkumar said... ஹி ஹி நன்றி நண்பா

    விக்கி உலகம் said... அததான் நானும் பார்த்துகிட்டு இருக்கேன் நண்பா

    பாரத்... பாரதி... said... கண்டிப்பாக எழுதுகிறேன் நண்பா

    ReplyDelete
  26. உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
    http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html

    ReplyDelete
  27. சபாஷ்.. சரியான போட்டி!!

    ReplyDelete
  28. @ இராஜராஜேஸ்வரி

    நன்றி மேடம்

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!