Friday, January 14, 2011

கமர்சியல் பக்கங்கள் ...



எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி
எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்விதான் - ஹிட்லர்

உன் கண்ணீரை துடைப்பவனை விட
உனக்கு கண்ணீர் வராமல் பார்த்து கொள்பவனே நல்ல நண்பன்

முகத்தில் இருக்கும் பருக்களை பார்த்து
அவள் வேதனைப்படுகிறாள்

பாவம் அவளுக்கு தெரியாது

மானை விட புள்ளிமான் தான் அழகு என்று

ஒரு மனிதனுக்கு வெற்றியை கற்பிக்கும் குரு யார் தெரியுமா?

பெற்றோர்கள்?
உறவினர்கள்?
நண்பர்கள்?
ஆசிரியர்கள்?

இவர்கள் யாருமே இல்லை ‘ தோல்விதான்’’

ஜோக்குன்னாலே அது விஜய்தான், வேற வழி இல்லை, விஜய் ரசிகர்கள் மன்னிக்க

கஸ்டமர் : இந்த டிவி என்ன விலை
சேல்ஸ்மேன் : 1 லட்சம் ரூபாய்
கஸ்டமர் : இதுல அப்படி என்ன ஸ்பெசல்?
சேல்ஸ்மேன் : விஜய் படம் வந்தா அதுவா ஆப் ஆகிடும்
கஸ்டமர் : வாவ் !!!

விஜய் : காப்பி எவ்வளவு?
வெயிட்டர் : 5 ரூபாய்
விஜய் : எதிர்த்தாப்புல இருக்குற கடையில 1 காப்பி அம்பது பைசாதான்
வெயிட்டர் : சாவி கிராக்கி, அது ஜெராக்ஸ் காப்பிடா, உனக்கு படிக்கவும் தெரியல, நடிக்கவும் தெரியல

பையன் : டாக்டர் எவ்ளோ தண்ணி அடிச்சாலும் மப்பு ஏறவே மாட்டேங்குது
டாக்டர், டாய் மவனே, நீ இப்போ புல் மப்புலதான் இருக்க, நான் டாக்டர் இல்லை, உன் அப்பன்.

பெஸ்ட் பிரண்ட்சிப் கவிதை
கண்ணீரை துடைக்க உன்னை போல ஒரு பிரண்டு இருந்தால்
1000 விஜய் படம் வந்தாலும் துணிந்து பார்ப்பேன்


ஒரு சின்ன குட்டி கதை
 ஒருத்தன் ரோட்டுல போகும் போது ஆக்சிடண்ட் ஆகி இறந்து போயிட்டான், அவன எமதர்மனோட ஆளுக வந்து அவன மேலோலத்துகு கொண்டு போயிட்டாங்க, அங்க சித்ரகுப்தன் வந்து அவங்கவங்க செஞ்ச நல்லகாரியம், கெட்ட காரியம் பொறுத்து சொர்க்கத்துக்கும், நரகத்தும் அனுப்பி வச்சிட்டு இருந்தாங்க, நம்ம ஆளு டர்னும் வந்தது, இவன நரகத்துக்கு அனுப்புங்கன்னு சித்ரகுப்தன் சொல்லிட்டான், நம்ம ஆளு சித்ரகுதன்கிட்ட கதறினான், அய்யா திடீர்னு ஆக்சிடெண்ட் ஆகி செத்து போயிட்டேன், வீட்டுல புள்ளகுட்டியெல்லாம் எனக்காக காத்துகிட்டு இருக்கும், ஒரு போனாவது பண்ணிக்கிறேன், காசு வேணாலும் கொடுத்துடரேன், ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்கன்னு கதறுனான், சித்ரகுப்தனும் மனமிறங்கி போன் கொடுத்து பேசிட்டு வாடான்னு சொல்லிட்டாரு, நம்ம ஆளும் போன் பண்ணி வீட்டுல எல்லாத்துகிட்டயும் பேசினாரு, போன சித்திரகுப்தன்கிட்ட திருப்பி கொடுத்துட்டு காசு எவ்வளவுன்னு கேட்டாரு,
அதுக்கு சித்ரகுப்தன் என்ன சொன்னாரு தெரியுமா? நரகத்துல இருந்து இன்னொரு நரகத்துக்கு ப்ரீன்னாரு...

இன்னைக்கு கமர்சியல் பக்கங்கள் அவ்வளவுதான், வர வர யாருமே மெசேஜ் அனுப்ப மாட்டேங்கறாங்க, ஏன் நானே  யாருக்கும் மெசெஜ் அனுப்புறதில்லை, ஒரு மெசேஜ் அம்பது பைசா அதுக்கு போனே பண்ணிக்கலாம், அப்புறம் ஒரு முக்கியமான விசயம், என்னோட வீட்டுல கம்ப்யூட்டர் இல்லை, நெட் கனக்சனும் இல்லை, அவ்வளவு ஏன் என்னோட மொபைல்ல பேலன்ஸ் கூட இல்லை, நான் பிளாக் எழுதறது, கமண்ட் போடறது, ஓட்டு போடறதுன்னு இவ்வளவு அழிச்சாட்டியம் பண்றதும் ஆபிஸ்ல இருந்துதான், அதனால, நண்பர்களோட பதிவை உடனே படிக்கவும், ஒட்டு போடவும் முடியறதில்லை, கிடைக்கற கேப்புல படிச்சிட்டு கமண்ட் மட்டும்தான் போட முடியுது, ஆனா ஓட்டு போடறது இல்லைன்னு நினைக்காதீங்க, சாயங்காலம் ஏழு மணிக்கு மேல எல்லாரோட பதிவிலையும் ஒட்டு போட்டுட்டுதான் போறேன், அப்படி இருந்தும் பதிவு எழுதற டைம்ல மட்டும் ஓட்டு போடறது மிஸ்ஸாகுது, இதை ஏன் நான் சொல்றேன்னா ஒரு பழமொழியே இருக்கு, ஊரார் பிளாக்கை ஊட்டி வளர்த்தால் தன் பிளாக் தானே வளரும்னு அதனாலதான் சொல்றேன்,
இன்னும் ஆறு மாதத்திலோ ஒரு வருடத்திலோ நான் ஒரு கம்ப்யூட்டரை வாங்கி விடுவேன், அப்புறம் டெய்லியும் கேப்பு விடாமல் ஓட்டு போட்டு உங்கள் அனைவரையும் முதல்வனாக்குவேன், அதுவரை நண்பர்கள் கொஞ்சம் பொறுத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன், இண்ட்லியில் SURA என்ற பெயரிலும், மீதி உள்ள திரட்டிகளில் PLDMSURI என்ற பெயரிலும் ஓட்டு போடுவது நாந்தான், இன்னைக்கு ஏன் இவ்வளவு சுயபுராணம்னா இது என்னோட 50 ஆவது பதிவு.

கை தட்டுனது போதும்க, என்னுடைய பதிவினை படித்தும், பின்னூட்டம் இட்டும் எனக்கு ஆதரவளித்து வரும் நண்பர்கள், சகோதர, சகோதரிகள், அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள், படிக்கரவங்க எல்லாம் ஓட்டு போட்டா எல்லா திரட்டியிலும் நாந்தான் 6 மாசத்துக்கு முதல் பக்கத்துல இருப்பேன், ஆனா ஓட்டு போடறவங்க கம்மியா இருக்கரதால அந்த தெய்வங்களுக்கு என்னுடைய ஸ்பெசல் தேங்க்ஸ், இன்னையிலிருந்து 3 நாள் கம்பெனி லீவு, அதனால என்னோட கடைக்கும் லீவு, திங்கள்கிழமை முதல் கடை வழக்கம் போல் செயல்படும், அதுக்குள்ள என்னை மறந்துடாதீங்க,
உங்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

pongal scraps greetings images for orkut, facebook
v4orkut.com

நன்றியுடன்
இரவுவானம்



30 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பரே FIFTY அடிச்சிடீங்க.....:)

    ReplyDelete
  2. "ஊரார் பிளாக்கை ஊட்டி வளர்த்தால் தன் பிளாக் தானே வளரும்னு அதனாலதான் சொல்றேன்,"
    நல்ல தத்துவம் சகோ...:)

    அருமை தொடருங்கள்..
    உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. விஜய்க்கு நக்கலடிச்சே அவருக்கு விளம்பரம் தேடுறிங்க
    உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. விஜய் ஜோக்ஸ் நல்லா இருக்கு. பொன்மொழிகள் சிறப்பு.

    ReplyDelete
  6. அரைசதத்திற்கு வாழ்த்துக்கள் . உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்தாருக்கு பொங்கல் வாழ்த்துக்கள்

    .நண்பா நமக்கும் இது போல் நிறைய sms வருது .அதுல ஒன்னு எடுத்து விடுறேன்


    MY FEELING'S

    என் மரணம் கூட
    உனக்கு தெரியாமல்
    பார்த்து கொள்வேன் ....!






    ஏன்னா நீ அதுக்கும் ட்ரீட்
    கேப்ப

    ReplyDelete
  7. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி
    எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்விதான் - ஹிட்லர்//

    super நான் இதற்க்கு முன் இந்த வரியை படித்ததில்லை

    ReplyDelete
  8. விஜய் படம் வந்தா அதுவா ஆப் ஆகிடும்
    ///////////////////

    ஹஹாஹா...........

    ReplyDelete
  9. உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. fifty அடிச்சதுக்கு என் வாழ்த்துக்கள்.....தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. உன் கண்ணீரை துடைப்பவனை விட
    உனக்கு கண்ணீர் வராமல் பார்த்து கொள்பவனே நல்ல நண்பன்..............!

    அருமையான வரிகள்! நல்ல ஜோக்குகள்! மூணு நாள்தானே தாராளமா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க பாஸ்! நாங்க மறந்துட மாட்டோம்! ஆனா வரும் போது சூப்பர் மேட்டரோட வாங்க!

    ReplyDelete
  12. karthikkumar said... நன்றி பல்சர் மாம்சு

    தோழி பிரஷா said... நன்றி மேடம்

    யாதவன் said... நன்றி சார்

    தமிழ் உதயம் said... நன்றி சார்

    நா.மணிவண்ணன் said... அதயெல்லாம் பதிவா போடுங்க

    THOPPITHOPPI said... நன்றி சார்

    sakthistudycentre.blogspot.com said... நன்றி சார்

    Pari T Moorthy said... நன்றி சார்

    மாத்தி யோசி said... கண்டிப்பா நன்றி சார்

    நண்பர்கள் மற்றும் உங்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள், நன்றி...

    ReplyDelete
  13. அம்மா கூட விஜய் கூட்டணி அமைச்சி வெற்றியும் பெற்றுவிட்டால் இந்த பதிவை அவருக்கு அனுப்பு வச்சி உங்களுக்கு "ஸ்பெசல்" விருந்து ஏற்பாடு செய்ய சொல்லலாம். போவீங்களா??

    ReplyDelete
  14. ஆளாளுக்கு லீவ் எடுத்தா என்ன அர்த்தம்... யார் உங்களுக்கு பெர்மிஷன் கொடுத்தது...

    ReplyDelete
  15. adeengkappaa அடேங்கப்பா எவ்வளவு பெரிய பதிவு?

    சூப்பர்.

    ReplyDelete
  16. பிரபா சொன்னது சரிதான் . நோ லீவ்

    ReplyDelete
  17. இனம் மறந்து இயல் மறந்து
    இருப்பின் நிலைமறந்து
    பொருள் ஈட்டும் போதையிலே
    தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
    நினைவூட்டும் தாயகத் திருநாள்

    உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. முதல் விஜய் ஜோக்கையும்.. சித்திரகுப்தனோட கமெண்ட்டையும் ரசிச்சேன்..

    50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே..

    ReplyDelete
  20. பொங்கல் வாழ்த்துக்கள் நண்பா..

    ReplyDelete
  21. என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. என் இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  23. 50க்கு வாழ்த்துகள்..பொங்கலுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  24. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

    என்னுடைய தளத்தில் கருத்துப் பொங்கல் வைத்திருக்கிறேன்... வந்து சுவைத்துப் பார்க்கவும்...
    http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_15.html

    ReplyDelete
  25. சுரேஷ் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    14.1.2010

    ReplyDelete
  26. //////எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி
    எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்விதான் - ஹிட்லர்///////

    //super நான் இதற்க்கு முன் இந்த வரியை படித்ததில்லை//

    repedduuuuuuuuu................


    உங்கள் குடும்பத்தினருக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களும் உங்களுக்கு மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  27. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. //"ஊரார் பிளாக்கை ஊட்டி வளர்த்தால் தன் பிளாக் தானே வளரும்னு அதனாலதான் சொல்றேன்,"//
    Super! :-)

    ReplyDelete
  29. //ஊரார் பிளாக்கை ஊட்டி வளர்த்தால் தன் பிளாக் தானே வளரும்னு//

    ஓகே...ஓகே...கூல்...இதுக்கு இவ்வளவு பில்ட் அப் ஆகாது...:))

    உங்கள் 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சுராஜீ :)))

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் கூறிய நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள், உங்களின் அன்புக்கு தலைவணங்குகிறேன்.

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!